Friday, January 23, 2009

O Sanam...teri yadoon ki kasam - லக்கி அலி!!

லக்கி அலி!1996-ல் வெளிவந்த சுனோ (Sunoh) தான் இவரது முதல் ஆல்பம். இவரது ஆல்பங்களில் தெரிந்த தனித்துவமும், பாடும் விதத்தில் இருந்த ஸ்டைலும்..இவரது அடையாளம். அடுத்து முக்கியமாக சொல்லவேண்டியது அவரது பாடல்கள் காட்சியமைக்கப் படும் விதம்! ஒருவித wanderness, தனிமை..எதையோ தேடியலையும் நாடோடித்தனம்...இந்தமாதிரி தான் தீம்! சுனோ-வில் என் மனம் கவர்ந்த.. எனக்கு மட்டுமல்ல..அப்போது V-channel-ல் எப்போதும் போடும் பாடல், O sanam!
பிரமிடுகளிடையே தேடியலையும் காட்சிகள்..ஒரு பெரிய வளையத்துடனான சாவி..ஹஸ்க்கி வாய்ஸில் பாடல்..இதுதான் ஓ சனம்!எனது பெரும்பான்மையான் சாயங்கால/பின்னிரவுப் பொழுதுகளை நிரப்பியது இப்பாடலே! சொல்வதைவிட, கேட்டலே நன்று!!

Get this widget | Track details | eSnips Social DNAஓ சனம் பாடலில் வரும் புர்க்கா அணிந்தப் பெண் இவரது மனைவி! லக்கி அலியின் தந்தை ஹிந்தி படவுலகில் முக்கியமானவ்ர். விக்கிபீடியாவில் தேடினால் மேற்செய்திகள் கிடைக்கலாம்! ஹிந்திப்படங்களிலும் பின்னனி பாடியிருக்கிறார். கஹோ நா பியார் ஹே - ஹ்ரித்திக்-கின் படமென்று நினைக்கிறேன்!

எனது டாப் 10 பாப் பாடல் பட்டியலில் ஓ சனம் என்றும் இடம் பெற்றிருக்கும்!! More on Lucky Ali later!

11 comments:

ஆயில்யன் said...

//சொல்வதைவிட, கேட்டலே நன்று!!
//

கேட்டதை சொல்வதும் நன்று :))

நல்லா இருக்கு பாட்டு :)

Divyapriya said...

ஓ ஓ...ஓ சனம் பாட்டுக்கு பின்னாடி இருக்கற கதை இப்ப தான் தெரியுது...

Josh said...

Hi.

லக்கி அலி எனக்கும் மிகவும் பிடித்த பாடகர். ஆத்மார்த்தமாக பாடும் வெகு சில பாடகர்களில் அவரும் ஒருவர்.

கஹோ நா ப்யார் ஹே-யில் அற்புதமான பாடல் ஒன்றை அவர் பாடியிருப்பார். நீங்கள் கூறியதுபோல் நாடோடி தன்மை அவர் பாட்டில் உண்டு. ஒருவித சூஃபி தன்மை என்று கூட சொல்லலாம்.

என் மனங்கவர் பாடகரை மீண்டும் நினைவுபடுத்தியதற்காக நன்றிகள் பல.

viji said...

சித்திரக்கூடம் அருமை. www.newspaanai ல் சேர்க்கவும். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்.

அபி அப்பா said...

pop padalai pootathukku pappu patalai poottirukkalam:-))

மிஸஸ்.டவுட் said...

சும்மா இந்தப் பக்கம் வந்ததுக்கு ஒரு ப்ரெசென்ட் போட்டுக்கறேன் .

என் கணினியில் சவுண்ட் divice நாட் வொர்க்கிங் பா

கவிதா | Kavitha said...

ஹோ..ஆப்கா ஹிந்தி மாலும் ஹே?!! முஜே அச்சா மாலும் ஹே..!!

முல்லை... நல்லா..ரசிச்சி எழுதி இருக்கீங்க..

//பின்னிரவுப் பொழுதுகளை நிரப்பியது இப்பாடலே! சொல்வதைவிட, கேட்டலே நன்று!! //

இதற்காகவே இந்த பாட்டு வேண்டும்..:) வரும் போது மொபைல் ல காப்பி செய்துக்குறேன்..

thevanmayam said...

பாடல் நல்லா இருக்கு!
லக்கி அலி
சிறந்த பாடகர்

கானா பிரபா said...

கலக்கல்ஸ்

ஆகாய நதி said...

எனக்கும் பிடித்தமான பாடல் :)
நானும் அவரது குரலுக்கு அடிமை :)

வெண்காட்டான் said...

எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று. எம்டிவி வி சனல் களில் 1998களில் பிரபலமான பாடல். அந்ந வரிகளை தமிழில் பொழிமாற்றி வைத்திருந்தேன்.
காதலின் மேல் சத்தியம் என்றவாறு வரும். மீண்டும் பழைய நினைவுகளை மீட்டதற்கு நன்றி