Thursday, January 08, 2009

வண்ணத்துப் பூச்சி விருது


"சித்திரக்கூடம் சந்தனமுல்லை: இவங்களுடைய பதிவை தவறாமல் படிப்பதுண்டு. இவங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கும். பப்புவின் அசைவுகளையும், குரும்புகளையும் அவர் மட்டும் ரசித்து ஆனந்தபடுவது மட்டும் அல்லாது, பதிவில் இவை அனைத்தையும் எழுதி எங்களை ரசிக்கவும் ஆனந்தப்படுத்தியும் சந்தோஷப்படுபவர்." என்றுத் தமிழ்தோழி பட்டர்பிளை விருது கொடுத்திருக்கிறார்!

தமிழ்தோழி, இது எனக்கொரு எதிர்பாராத சர்ப்ரைஸ்! இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம்! (மாட்டிக்கிட்டீங்களா?!!) நான் ரொம்ப புவர், மறுமொழியளிப்பதில்! இனி அப்படி இருக்கக்கூடாதென எண்ணிக்கொள்கிறேன்!"சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)"
என்று சொல்லி பட்டர்ப்ளை அவார்டுவிருதுக் கொடுத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள். சொல்லப்போனால், அமித்து அம்மாதான் நான் முதலில் தொலைபேசிய பதிவர்!

கொடுத்த விருதினை விதிமுறைகள்படி ஏழுபேருக்கு அளிக்கிறேன்! பெற்றுக்கொண்டவர்கள் 7 பேருக்கு அளிக்கும்படி விதிமுறை சொல்கிறது!

கானாஸ் - கானாவின் றேடியோஸ்புதி பதிவுகள். ஒருமுறையும் மிஸ் செய்ததில்லை. விடை கண்டிப்பாக தெரியாது என்றாலும்!
அதிலும், சுவாரசியமாக இசையோடு இணைந்த பழைய நிகழ்ச்சிகளை எப்படிதான் திரட்டுகிறாரோ!!


சிநேகிதி
- சிநேகிதின் எல்லாப் பதிவுகளும் எனக்கு விருப்பம். அதிலும் சைக்காலஜி பதிவுகள், மிக அருமையாக எழுதுவார். அப்படியே, ஈழத்து நினைவுகளும்!!

ஆகாயநதி - பொழிலோடு இவர் செலவிடும் நேரங்களை பற்றிய பதிவுகளுக்காக!

குடுகுடுப்பை - இவரின் நாஸ்டால்ஜிக் காலேஜ் பதிவுகள் மற்றும் அவரது மகள் ஹரிணியை பற்றி அவ்வப்போது எழுதுவதற்காக!!


சின்ன அம்மிணி
- மௌயினின் சாகசக் கதைகள் சமீபத்தில்தான் படித்தேன்! அப்புறம் அவரது நகைச்சுவைப் பதிவுகளுக்கும்!

நிலாவும் அம்மாவும் - நிலா எழுது கடுதாசிக்காக!

தமிழன் -கறுப்பி - இவரின் கவிதைகளும், கவிதை நடையில் இருக்கும் பதிவுக்களுக்கும்....மிக அருமையான கவிதைகள்..!


உண்மையில் தமிழ்தோழிக்கும்,அமித்து அம்மாவிற்கும் கொடுக்க ஆசை. ஆனால், என்னை முந்திக்கொண்டார் ஜமால்!
ராமலஷ்மி-க்கும், சீனா ஐயாவுக்கும் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்களின் கடல் போன்ற எழுத்துலகிற்கு முன்,
நான் எம்மாத்திரம். பெரியவர்களுக்கு சிறியவளான் நான் விருது கொடுப்பது நல்ல பண்பன்று என்று தோன்றியது.
ஆயில்ஸ்-கு கொடுக்க சொல்லி பப்பு உத்தரவு. ஆனால், அமித்து அம்மா முந்திக்கொண்டார்! :-)

25 comments:

cheena (சீனா) said...

அன்பின் சந்தன முல்லை,

விரூது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் நல்வாழ்த்துகள்.

என் பெயர் பிரீசீலிக்கப்பட்டதா - ஆச்சரியம் - ம்ம்ம்ம்

பப்பு விடம் இந்தத் தாத்தாவை ப் பத்தி சொல்லலியா

ஆயில்யன் said...

விருது கொடுத்த ஆச்சிக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் பேரவையின் சார்பிலும் என் சார்பிலும் கூறி மகிழ்கிறேன்!


பப்பு பேரவை
கத்தார்
(நானே தான் தலைமையா!?)

ராமலக்ஷ்மி said...

எனக்கும் கொடுக்க நினைத்த அன்புக்கு கடமைப் பட்டிருக்கிறேன் முல்லை. மிக்க நன்றி. ஹூம், வாங்கிய விருதை யாருக்கென்று கொடுப்பது என்பதில்தான் வருகிறது பெரும் குழப்பமே, இல்லையா? கடையம் ஆனந்த் எனக்கு இந்த விருதை வழங்கியிருதார். வாங்கிய கையோடு அவர் பதிவிலேயே எப்படிப் பிரித்துக் கொடுத்து விட்டேன் பாருங்களேன்:

//மிக்க நன்றி ஆனந்த்! மூன்று பேருக்குதானா? சரி மூன்று வகையினருக்கு கொடுத்து விடுகிறேன். கடந்த வருடம் நான் பதிவெழுத வந்த போது நான் பார்த்து வியந்த ரசித்த மூத்த பதிவர்களுக்கும்; தங்கள் நினைவுகளை.. கருத்துக்களை.. அனுபவங்களை பல்வேறு வடிவங்களில் பதிந்து வரும் அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும்; இவ்வருடம் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து பதிவுலகில் அடியெடுத்து வைக்கவிருக்கிறவர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!//

சாதுர்யமாய் பிரித்துக் கொடுத்து விட்டேன் என்கிறார் ஆனந்த்:)! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்:)?

தாமிரா said...

விருது கிடச்சவங்களுக்கு வாத்துகள்.! நான் மட்டும் :-(

கானா பிரபா said...

ஆஹா வண்ணாத்துப்பூச்சி விருது எனக்குமா, மிக்க நன்றி சிஸ், கூட வருவோருக்கும் நன்றி ;)

கானா பிரபா said...

உங்க பப்பு பதிவுகளை பலர் இனம் காண்கிறார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம், வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

பப்பு உனக்கும்

ஆச்சிக்கும்.

இவரிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் ...

கணினி தேசம் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

விருது வாங்குவது சந்தோசம் என்றால்.. அதை பகிர்ந்தளிக்கும்போது இன்னும் மழிச்சியாக இருக்கிறது...

பப்புவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

விருதுக்கு நன்றி சந்தன முல்லை.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

பிரேம்குமார் said...

எல்லோருக்கும் வாழ்த்துகள் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

நானும் ராம் மேடத்தை நினைத்தேன், ஆனால் அவரின் மொழிப்புலமையின் முன்னால் இந்த விருதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று பட்டது.

தமிழன்-கறுப்பி... said...

அட என்ன இது ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டா விருதெல்லாம் கொடுத்து வச்சிருக்கிறிங்க..:)

தமிழன்-கறுப்பி... said...

விருது பெற்ற,கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

உங்ககிட்ட இருந்து விருது பெற்ற எல்லோருக்கும் பாராட்டுக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நன்றிங்க...

மிஸஸ்.டவுட் said...

என்ன சந்தனமுல்லை என்னை மறந்துட்டிங்க இல்ல? (விருது கொடுக்கற அளவுக்கு எந்தப் பதிவும் நான் இதுவரை போடலேனு சொல்லி ஆட்டையக் க்ளோஸ் பண்ணிடாதிங்கப்பா! :(

ஆகாய நதி said...

வாழ்த்துகள் பப்பு அம்மா! :)
எனக்கும் விருதா?!!!
இப்போதானே எழுதவே துவங்கினேன் அதற்குள் விருது கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :)

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :)

தமிழ்நதி said...

எனக்கில்லையா விருது:( பப்புவோ அமித்துவோ கொடுத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி:) குழந்தைகள் எச்சில் வழிய கன்னத்தில் கொடுக்கும் விருதுக்கு இணையுண்டோ...!

சின்ன அம்மிணி said...

பப்பு குடுக்கும் விருது இனிக்குது. நன்றி பப்புவுக்கும் சந்தனமுல்லைக்கும்.

சின்ன அம்மிணி said...

//
பப்பு பேரவை
கத்தார்
(நானே தான் தலைமையா!?)//

இப்படி ஒண்ணு எப்ப இருந்து ஆரம்பிச்சுது :)

SanJaiGan:-Dhi said...

விருது வாங்கின எல்லாருக்கும் வாழ்த்துக்கள். எப்போ விருந்து வைக்கப் போறிங்க? :))

சந்தனமுல்லை said...

நன்றி சீனா! கண்டிப்பாகச் சொல்கிறேன்!

நன்றி ஆயில்ஸ்!!
ஆகா, பெரிய பாண்டி வரட்டும், முடிவு பண்ணிடலாம்!! :-))


நன்றி ராமலஷ்மி, என்ன இருந்தாலும் அந்தக் காலத்து ஆட்களை அடித்துக் கொள்ள முடியுமா என்ன?!! :-)

நன்றி தாமிரா, இது சின்ன பசங்க டைம்பாஸுக்கு விளையாடறது, உங்களுக்கு தமிழ்மணம் விருதே காத்திருக்கு இல்லையா!!

நன்றி கானாஸ்!!

நன்றி ஜமால், நீங்கதானே இதுக்கெல்லாம் காரணம்!! :-))

நன்றி கணினிதேசம்!! ஆமா, வாழ்த்துகளை பப்புக்கு சொல்லிவிடுகிறேன்!!

நன்றி குடுகுடுப்பை, நசரேயன், பிரேம்!!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! ஆமா, அதேதான்!!

நன்றி தமிழன் - கறுப்பி!!

நன்றி மிஸஸ்.டவுட்! நீங்களும் இருக்கீங்களா இந்த விளையாட்டுக்கு...:-))

நன்றி ஆகாய நதி, பொழிலை பற்றி இன்னும் எழுதுங்கள்!!

நன்றி தமிழ்நதி, என்ன இப்படி சொல்றீங்க, விருதுக்கே விருது கொடுக்கறதா, தமிழ்மணம் என்னை இழிவா பேசிடுமே மேடம்!! :-), கண்டிப்பா, ப்ப்புகிட்டேயிருந்து உங்களுக்கு விருது உண்டு!!

நன்றி சின்ன அம்மிணி! அது பாண்டிகளோட வேலை!!


நன்றி சஞ்சய்!

Nilavum Ammavum said...

நன்றி முல்லை அத்தை.....பொங்கலுக்கு ஊருக்கு போயிருந்ததுனால பதிவுகள் எதுவும் பார்க்க நேரம் கிடைக்கல........

நீங்க குடுக்க நினச்சவங்களுக்கு எல்லாம் குடுக்க முடியாம போனதுனால தான் எனக்கு குடுத்தீங்களா?.....ஹா ஹா....சும்மாச்சுக்கும் ...