Tuesday, January 20, 2009

சகுனத்திற்குப் பின் ”உலகம்”

சினிமாவில் காட்சி முடியும் நேரம்.சீனிவாசனும் அவரது நண்பர் பரந்தாமனும் பார்த்துக் கொண்டிருந்தனர். கதாநாயகியை அவளது தந்தை அடித்துக்கொண்டிருந்தார், அவள் காதலித்தக் குற்றத்திற்காக. சீனிவாசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அழுதுழுது கண்கள் வீங்கிப் போயிருந்தன.

கதாநாயகனை, கதாநாயகியின் தந்தை ஆள் வைத்து அடிக்கும் காட்சி. அதற்கும் கண்கலங்கினார் சீனிவாசன். கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டபின் கூறினார், “பாவம் அந்த சின்னஞ்சிறுசுக, என்ன தப்பு பண்ணுச்சுங்க? இப்படிக் கொடுமைப் படுத்தறானுங்களே! இவன மாதிரி அப்பாவையெல்லாம் நிக்கவைச்சு சுடணும்” என்றார்.


சினிமா முடிந்தது. முடிவு...நாயகனும், நாயகியும் தங்கள் கதையை முடித்துக் கொள்கின்றனர். வரும் வழியில் பரந்தாமனிடம், “பாவம்டா, அதுங்க இப்படியா வக்கையை முடிச்சுக்கணும், எங்கேயாவது ஓடிப் போய் இருக்கலாமில்ல” என்று புலம்பிக்கொண்டே வந்தார். வீடு வந்து சேர்ந்தார்.

சாப்பாடு போடும் போது அவ்ரது மனைவி சொன்னார், “என்னங்க, நம்ப பொண்ணு யாரையோ லவ் பண்றாளாம், ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்ததா வேலைக்காரி சொன்னா”.

எங்கே அவ, கூப்பிடு”

வந்து நின்றவளைப் பார்த்து “என்ன அம்மா என்னவோ சொல்றாளே, உண்மையா”?

”ஆமாப்பா”

“எனண்டி, என்னையே எதிர்த்து பேசறியா(எங்கே எதிர்த்து பேசினாங்கன்னு கேட்கப்பிடாது!!!ஏதோ அப்போ எழுதிட்டேன்)நாளையிலேர்ந்து நீ எங்கயும் போக வேணாம். வீட்டிலேயே இரு. மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடறேன். காதலாம், கத்தரிக்காயாம்” (யப்பா என்னா வசனம்!!) என்றார், சினிமாவில் மட்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தந்தை!!


குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)

28 comments:

அபி அப்பா said...

ஏக்!

அமுதா said...

:-))

ஆயில்யன் said...

கதையை விட டைட்டில் செலக்‌ஷன் சூப்பரூ! :)))

ஆயில்யன் said...

டைட்டிலை விட கதை ரொம்ப கிர்ர்ர்ர்ன்னு வேகமா போய் சோகமா முடியுது :)

ஆயில்யன் said...

அபி அப்பா மீ த பர்ஸ்ட்டுக்கு வந்துட்டு வேற யாராச்சும் வந்திருப்பாங்களோன்னு ஒரு சந்தேகத்துல ஏங்கி போட்ட ஏக் அது!

அபி அப்பா நீங்கதான் மீ த பர்ஸ்ட்!!!!

ஆயில்யன் said...

// அமுதா said...
:-))
///

அக்கா ஏன் சிரிக்கிறாங்க கதைக்கா இல்ல கதை எழுதுன எங்க அக்காவ பார்த்தா.....????

ஆயில்யன் said...

ஓவர் கும்மியா போயிடுச்சுன்னு நினைக்கிறேன் மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்!

நட்புடன் ஜமால் said...

\\சினிமாவில் மட்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தந்தை!!\\

ஆமாம் ஆமாம்.


சில பல வருடங்கள் கழித்து நாம் எப்படியோ ...

நசரேயன் said...

மறுக்க முடியாத உண்மை

Divyapriya said...

என்ன உலகம் இது? :)

சென்ஷி said...

//குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)//

தலைப்பு எல்லாம் சரி. ஏதோ கதை எழுதி பதிவுல போட்டிருக்கேன்னு சொன்னீங்களே அது எங்க இருக்குது.. சொன்னா நாங்களும் படிப்போமுல்ல..

சென்ஷி said...

//Divyapriya said...
என்ன உலகம் இது? :)
//

யாருக்குத் தெரியும். ஏதாவது விண்வெளியில பெயர் வைக்காத கிரகத்துல நடக்குற கதையா இருக்க அதிக வாய்ப்பு இருக்குது.

சென்ஷி said...

//ஆயில்யன் said...
டைட்டிலை விட கதை ரொம்ப கிர்ர்ர்ர்ன்னு வேகமா போய் சோகமா முடியுது :)
//

ஹா ஹா ஹா...

சென்ஷி said...

ஹைய்யா கிடைச்சுடுச்சு..

//குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)//

இங்க தங்கச்சி ரெண்டு கதை எழுதியிருக்காங்க...

குடுகுடுப்பை said...

சின்ன வயசில ரொம்பதான் கதை எழுதியிருக்கீங்க..

குடுகுடுப்பை said...

இந்தக்கதை எழுதனுக்கு உங்க வீட்ல உங்கள அடிக்கலையா?

அன்பு said...

குமுதம் ஒரு பக்கக்கதை ஃபார்மேட் இல்ல:)

ஆனால்... உங்கள் நோட்டின் எல்லாப் பக்கத்திலும் வெளிப்படுகிறது: 'உண்மை'.

கோபிநாத் said...

நீங்க தமிழ் படம் அதிகம் பார்ப்பிங்க போல!!! ;))

புதுகை.அப்துல்லா said...

குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)
//

ஆச்சி....இதெல்லாம் ரொம்ப ஓவரு :)

கவிதா | Kavitha said...

//இங்க தங்கச்சி ரெண்டு கதை எழுதியிருக்காங்க...//

ரீப்பீட்டு..டு..டு..

வித்யா said...

அப்பா என்ன ஒரு ஸ்டோரி. ஆச்சி கலக்குறீன்ங்க போங்க:)

சின்ன அம்மிணி said...

//ஆயில்யன் said...
கதையை விட டைட்டில் செலக்‌ஷன் சூப்பரூ! :)))
//
ரிப்பீட்டேய்

KVR said...

வர வர உங்களையும் சேர்த்து வலைப்பதிவுல ரெண்டு மூணு பேர் எழுத்தாளர் சுஜாதா ரேஞ்சுக்கு போயிட்டிங்க. சுஜாதா லாண்டரி பில்லை அனுப்பினாலும் அதை பிரசுரிக்க பத்திரிகைகள் தயாராக இருந்ததாம். அது மாதிரி நீங்க என்ன எழுதினாலும் ஆகா ஓகோ சொல்லவும் ஒரு கூட்டமே இருக்கு!!!

//அப்பா என்ன ஒரு ஸ்டோரி. ஆச்சி கலக்குறீன்ங்க போங்க:)//

இதெல்லாம் கொஞ்சமில்ல, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஓவரு....

பழைய நோட்டுன்னு சொன்னிங்க, எத்தனை வருஷத்துக்கு முந்தின நோட்டுன்னு சொல்லவே இல்ல!!!

வித்யா said...

\\//அப்பா என்ன ஒரு ஸ்டோரி. ஆச்சி கலக்குறீன்ங்க போங்க:)//

இதெல்லாம் கொஞ்சமில்ல, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஓவரு....
\\

KVR இதுல இருக்க உள்குத்து உங்களுக்கு புரியல போலருக்கு.ஆச்சி என்னை மன்னிப்பாராக:)

சந்தனமுல்லை said...

//KVR இதுல இருக்க உள்குத்து உங்களுக்கு புரியல போலருக்கு.//

வித்யா, KVR-க்கே உள்குத்தா!! தாங்க முடியலைடா சாமி! :-))

ராமலக்ஷ்மி said...

//என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)//

கதையை விட இந்த பாயிண்ட் ரொம்பப் பிடித்திருந்தது:)))!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆச்சி உங்களுக்கு என்ன ஆச்சி?

எங்கயாவது அஸிஸ்டெண்ட் டைரக்டரா ட்ரெயினிங் போறீங்களா.

இப்படி கதை சொல்லியிருக்கீங்க.

ஆனா, டைட்டில் செம...

rapp said...

ha ha ha:):):)