Tuesday, January 27, 2009

பட்டாம்பூச்சி - பப்புவிடமிருந்து!

குடுகுடுப்பையாரின் புதிய வண்ணத்துப் பூச்சியைத் தொடர்ந்து...!



இது பப்பு செய்த பட்டர்பிளை, சாக்லேட் காகிதத்திலிருந்து. இரண்டு முறை செய்துக் காட்டியபிறகு, அதைத் தொடர்ந்து இதை செய்தாள். முதல் முறை கீழ்பாகம் மேலே வந்திருந்தது,மடிப்புகளில்லாமல். திரும்பத் திரும்பச் செய்ததில், வசப்பட்டது பட்டாம்பூச்சி கைகளில்!!

இந்த பட்டர்பிளை விருது பப்புவிடமிருந்து பறந்துச் செல்கிறது நன்றிகளுடன், பப்பு @ சித்திரக்கூடத்தை வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்! உங்கள் அனைவரது ஆசிகளும், வாழ்த்துகளும், ஊக்கமும் பப்புவை என்றும் சூழ்ந்திருக்கும்!

Special Thanks to her friends who made an effort to visit her over the weekend!!
எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு அவர்கள், ஞாயிறன்றும், "பார்வைகள்" கவிதா அவர்கள், திங்களன்றும் பப்புவைச் சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தனர். உங்களது பரிசுகளும், அன்பும், உங்களுடன் தனது உலகத்தை பகிர்ந்துக் கொண்டதிலும் பப்புவுக்கு மிக்க மகிழ்ச்சி! அவள், உங்களிருவரையும் தனது நண்பர்கள் என்றுதான் அடையாளப் படுத்துகிறாள். அவளோடு பொறுமையாய், அவளுக்குச் சமமாய், பேசி, பேச்சைக் கேட்டதற்கு நன்றிகள் பல!!

18 comments:

நட்புடன் ஜமால் said...

நன்றி பப்பு.

அன்புடன்.

அமுதா said...

வாழ்த்துக்கள் பப்பு..

ராமலக்ஷ்மி said...

பச்சை வண்ணத்துப் பூச்சி பரவசப் படுத்தியது. சிவப்பு சிலிர்க்க வைத்து விட்டது எங்களை எல்லாம்.

பப்புவின் குட்டிக் கைகளால் விருது.

நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.

எல்லாம் உனக்குதான் பப்பு!

அன்பு said...

என்னங்க பப்பு... “செம தலைவலி”ல்லாம் போயிடுச்சா!?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அழகா இருக்கு பட்டாம்பூச்சி..

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் பப்பு!

ஆயில்யன் said...

//எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு அவர்கள், ஞாயிறன்றும், "பார்வைகள்" கவிதா அவர்கள், திங்களன்றும் பப்புவைச் சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தனர்.//

பப்பு பேரவை தன் நன்றிகளையும் விருந்தினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது :)

Thamira said...

ரசித்தேன்.!(அதற்குள் எவ்ளோ.. எழுதிட்டீங்க இனிதான் படிக்கணும்..)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி பப்பு

திரும்பத் திரும்பச் செய்ததில், வசப்பட்டது பட்டாம்பூச்சி கைகளில்!!

வானமும் வசப்படும் விரைவில், அவளது கைகளில்

வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

அட இந்த பட்டாம்பூச்சியை பார்க்கலையே! சூப்பர் பப்பு!கவிதா வந்தாங்கலா, சொல்லவேயில்ல:-))

Divyapriya said...

cute butterfiles :)

ச.பிரேம்குமார் said...

மிக அழகான பட்டாம்பூச்சி பப்பு :)

குடுகுடுப்பை said...

பப்பு கலக்கல் ஹரிணிகிட்ட இந்த பட்டாம்பூச்சிய பிரிண்ட் எடுத்து கொடுக்கிறேன்.

தாரணி பிரியா said...

அழகான பட்டாம்பூச்சி வாழ்த்துக்கள் பப்பு.

எம்.எம்.அப்துல்லா said...

நன்றி பப்பு

சீக்கிரமே உன்னைப் பார்க்க நானும் வர்றேன் :))

Dhiyana said...

பட்டாம்பூச்சி அழகா இருக்கு. பாராட்டுக்கள் பப்பு.

ஆகாய நதி said...

நன்றி பப்பு... :)
உன் பட்டாம்பூச்சி கண்டு மகிழ்ச்சியில் என் உள்ளமும் பட்டாம்பூச்சியானது! :)
கடவுள் கூட இத்துணை அழகான பட்ட்டாம்பூச்சிகளைப் படைத்திருக்க மாட்டார்! :)

rapp said...

நான் பப்புவை பாத்துட்டு வந்தப்புறம், பப்பு கமெண்ட்ஸ் எப்டி இருக்கும்னா. 'ஏம்மா வீட்ல இத்தன நாளா என்னை சாப்ட வெக்க அவ்ளோ கஷ்டப்படுவீங்களே, அதுல பாதி உழைப்பை, அந்த 'அக்கா'(ஹி ஹி ) சாப்டறதை நிறுத்த கொடுத்திருக்கலாமே' , அப்டின்னு இருக்கும்.