Sunday, January 18, 2009

ப்ராஜக்ட் பப்பு - I

பப்புவிற்காக வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கிறேன். அவளது அறையென்று சொல்ல முடியாமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், அவளது ஆக்டிவிட்டிஸ்-க்காக ஒரு இடம் தேவை, மேலும் பழக்கங்களில் ஒரு ஒழுங்கினை ப்ராக்டிஸ் செய்யவும்!! நான் ரொம்ப ஒழுங்கெல்லாம் கிடையாது,(எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்!!;-)

சுவாரசியமாக்குவதற்காகவும், அந்த இடத்தை பப்புவிற்கு பிடித்தமானதாக்குவதற்காகவும்(she is into wilflife nowadays!!) சில ஐடியாக்கள்!!

முதல் கட்டமாக, அறையின் ஒரு பக்க சுவரில் இரண்டு மூலைகளிலும் இரு மரங்களை வரைந்திருக்கிறேன், பொந்து உட்பட! இந்த தளத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டேன்!! (நன்றி : இணையம்! )

முதலில் பென்சிலால் இந்த மரங்களை வரைந்துக்கொண்டேன். 15-20 நிமிட வேலை!!
நன்றி டூ ஏசியன் பெயிண்ட்ஸின் சின்ன டப்பா!! இது இரண்டாவது நாள். 45-55 நிமிடங்களானது!!
இது மூன்றாம் நாள். இலைகள் வண்ணம் தீட்டும்போது கொஞ்சம் ஒழுகிவிட்டிருக்கிறது.
சரி செய்யும் வேலை பாக்கி. இதுவும் ஒரு மணி நேர வேலை!! (.- இ-திருஷ்டி பொட்டு-என் திறமையைப் பார்த்து யாராவது கண்ணு வச்சிட்டா :-)) !!)மரங்கள் ரெடி, இப்போது அவள் மரங்களின் கீழே உறங்கலாம், கதைகள் படிக்கலாம்...மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு அவளது நண்பர்களோடு பேசி விளையாடலாம்!!

அடுத்து, அவள் படுத்துறங்க தேவை ஒரு மெத்தை!! மீதி அடுத்தப் பாகத்தில்!!


உதவிய உபகரணங்கள்:

46 comments:

கவிதா | Kavitha said...

Wow! Wonderful Mother, Excellent Artist.. Appadi podu podu podu!!

Realy Great !! Need more time to do na... Keep it up!! Really superb..

Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))

நட்புடன் ஜமால் said...

\\சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்\\

வாழ்த்துக்கள் ...

நட்புடன் ஜமால் said...

\\அடுத்து, அவள் படுத்துறங்க தேவை ஒரு மெத்தை!! மீதி அடுத்தப் பாகத்தில்!!\\ஆவலுடன் ...

ராமலக்ஷ்மி said...

பொங்கல் விடுமுறையில் பப்புவுக்காக விதை விதைத்து செடியாக்கி மரமாக வளர்த்தும் கொடுத்து விட்டீர்கள். அருமை அருமை. அதன் மேல் அமர்ந்து குயில்கள் அவளுக்காகப் பாடட்டும். கிளிகள் கதை சொல்லட்டும். மயிலும் வந்து நடனமாடட்டும்.

வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

Wow! Wonderful Mother, Excellent Artist.. Appadi podu podu podu!!

Realy Great !! Need more time to do na... Keep it up!! Really superb..

Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))

இதையே அப்படியே காப்பி அடிச்சு கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்.

கொடுத்து வச்ச பப்பு + ஆச்சி.

வித்யா said...

நான் கூட இந்த மாதிரி பண்ணனும்னு பார்க்கிறேன். ஹவுஸ் ஓனர நினைச்சா தான் பயமா இருக்கு;)

ஆயில்யன் said...

பாஸ் கலக்குறீங்க பாஸ்!

செம சூப்பரான ஐடியா! :))

ஆயில்யன் said...

//வித்யா said...

நான் கூட இந்த மாதிரி பண்ணனும்னு பார்க்கிறேன். ஹவுஸ் ஓனர நினைச்சா தான் பயமா இருக்கு;)//


அப்படி ஒண்ணும் பயப்பட தேவையில்ல!
திரும்ப ரிடர்ன் பழைய மாதிரி திருப்பி தந்துடுவோம்ன்னு சொல்லிடுங்க அம்புட்டுதான் :))))

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

Wow! Wonderful Mother, Excellent Artist.. Appadi podu podu podu!!

Realy Great !! Need more time to do na... Keep it up!! Really superb..

Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))

இதையே அப்படியே காப்பி அடிச்சு கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்.

கொடுத்து வச்ச பப்பு + ஆச்சி.//


நான் இங்கீலிசுல படு மோசம் அதனால அ.அ பாஸ் ரிப்பிட்டிய கன்னா பின்னாவை நான் ரிப்பிட்டிக்கிறேன் :))))))))

குடுகுடுப்பை said...

நான் என் பொண்ணுதான் பெரிய ஓவியர்னு தலைக்கணத்தோட திரியறேன்.நீங்க ரொம்ப நல்லா வரையறீங்க.

நானானி said...

//,(எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்!!;-)//

அப்படிப் போடு!!!

நானானி said...

ஏஷியன் பெயிண்ட் காரர்களிடம் சொல்லி பப்புவின் அறையை இரவில்
வெட்டவெளியில் வானில் நிலா, நட்சத்திரங்கள் ஆகியவற்றை பார்த்தபடி உறங்க சீலிங்கில் அந்த எஃபக்ட் வருமாறு பெயிண்ட் அடித்துத்தரச் சொல்லுங்கள். பப்புவுக்கு மிகவும் பிடிக்கும், சுகமாக தூங்குவாள்!!!!

KVR said...

அந்த மரங்களுக்கு பக்கத்திலே வேற என்னவெல்லாம் வேணுமோ அதையெல்லாம் பப்புவை வரையச் சொல்லுங்க.

//Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))//

முல்லை ஜாக்கிரதையா இருங்க, உங்க மடியிலேயும் உட்காரணும்ன்னு அடம் பிடிக்கப் போறாங்க :-)

நானானி said...

ராமலக்ஷ்மி சொன்னா மாதிரி கிளி, குயில் அவற்றின் கூடுகள் முதலியவற்றை த்ரி-டி எஃபக்டில் வெள்ளை சிமெண்ட், ஃபெவிக்கால் கலந்து மாவு பதத்தில் பிசைந்து கொண்டு பறவைகள் செய்து கலரடித்து மரக் கிளைகளில் ஒட்ட வைத்துவிடுங்கள். சூப்பராயிருக்கும்!!
இவ்வளவும் செய்து விட்டீர்கள்...இதை செய்ய மாட்டீர்களா?

கவிதா | Kavitha said...

//Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))//

முல்லை ஜாக்கிரதையா இருங்க, உங்க மடியிலேயும் உட்காரணும்ன்னு அடம் பிடிக்கப் போறாங்க :-)//

ஹ்ம்ம்..நக்கலு...!! பழிக்குப்பழி ரத்தத்திற்கு ரத்தம்.. பாக்காம ஓயமாட்டேன்.. :)

அமுதா said...

சூப்பர். நானும் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேன். ஆனால் பயமா இருந்தது. இப்ப ஒரு நம்பிக்கையோடு ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.

smile said...

இப்ப தான் நான் ஆசைபட்டேன்
நீங்க வரைஞ்சிட்டிங்க

சின்ன அம்மிணி said...

உங்க ஆசையெல்லாம் சுவர்ல வரையறது. பப்புவை சாக்கா வைச்சு உங்க ஆசையை தீத்துக்கிட்டீங்களா.(நான் சின்னதில சுவத்தில கிறுக்கி அடி வாங்குவேன்)

புதுகைத் தென்றல் said...

அருமையா வரைஞ்சிருக்கீங்க. ராமலக்‌ஷ்மி, நானானி சொன்ன மாதிரி 3டி எபக்ட் கொடுங்க.

பேப்பர் மேஷில் செஞ்சு ஃபெவிகாலால் ஒட்டினாலும் அழகா இருக்கும்.

கோபிநாத் said...

அழகாக வந்திருக்கு....அருமை ;)

சின்ன வயசுல இந்த மாதிரி எல்லாம் செய்தால் அடி தான் ;)

சென்ஷி said...

//கோபிநாத் said...
அழகாக வந்திருக்கு....அருமை ;)

சின்ன வயசுல இந்த மாதிரி எல்லாம் செய்தால் அடி தான் ;)
//

repeatey :))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

Wow! Wonderful Mother, Excellent Artist.. Appadi podu podu podu!!

Realy Great !! Need more time to do na... Keep it up!! Really superb..

Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))

இதையே அப்படியே காப்பி அடிச்சு கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்.

கொடுத்து வச்ச பப்பு + ஆச்சி.//


நான் இங்கீலிசுல படு மோசம் அதனால அ.அ பாஸ் ரிப்பிட்டிய கன்னா பின்னாவை நான் ரிப்பிட்டிக்கிறேன் :))))))))/

ரிப்பீட்டேய்..!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆகா உங்க ஐடியா சூப்பர்.. அதோட இப்ப மத்தவங்க ஐடியாக்களும் சேர்ந்தா தீம் சூப்பரோ சூப்பர். ...

அன்பு said...

ஆஹா கலக்கிட்டீங்க...
இது போன்ற சுவரோவியம் இங்கு நூலகங்கள், சிறுவர் பகுதியில் பார்த்திருந்தாலும் அதே நாமே வரையமுடியும் என்பதை புரிய வைத்து, இப்படியொரு அம்மாவா... என மீண்டும் ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்.

இன்னும் கொஞ்சம் ஐடியா இங்க‌

நட்புடன் ஜமால் said...

\கவிதா | Kavitha said...

Like to be your child pa.. do u mind? Ennai thatthu eduthukka mudiyuma plz.. :))))))))\\

பப்பு ஆச்சிய காப்பாத்து

3:6 aunty கிட்டேயிருந்து ...

தாமிரா said...

அற்புதம்.. ரசனை.. வாழ்த்துகள்.!

வித்யா said...
நான் கூட இந்த மாதிரி பண்ணனும்னு பார்க்கிறேன். ஹவுஸ் ஓனர நினைச்சா தான் பயமா இருக்கு;)// ROTFL...!

சுரேகா.. said...

என்னங்க நீங்க எங்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குறீங்க!

' இப்படி ஒரு அம்மா கிடைக்க
பப்புவாகப்பிறத்தல் வேண்டும்'

வாழ்த்துக்கள்!

ஏதாவது பண்ணனும்! ம்.......

தீஷு said...

நல்லா இருக்கு. நானும் இதே ஐடியா தான் வைச்சிருக்கேன். Fencing போடுங்க முல்லை. போடுறது ஈசி. இன்னும் அழகாக இருக்கும்.

தமிழன்-கறுப்பி... said...

அடடா...

தமிழன்-கறுப்பி... said...

பப்பு குடுத்து வச்சிருக்கா...

தமிழன்-கறுப்பி... said...

சின்ன வயசுல நாங்க படம்வரைஞ்சா அடிதான் விழும்...:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சென்ஷீ கோபி சொன்னது நானும் யோசிச்சேன்..உங்க வீடு .. உங்க கணவரும் எதிர்ப்பு செய்யல .. இஷ்டத்துக்கு கிறுக்கறீங்கன்னு .. ஹிஹி.. அடிக்காதீங்க..

இராம்/Raam said...

ஒரு காலத்திலே பென்சில்'லா சுவத்திலே கிறுக்கி வைச்சதுக்கு எங்க அப்பா விரட்டி விரட்டி அடிச்சாரு... உங்களை எல்லாம் யாரு அப்பிடி அடிப்பா?? :))

பிரேம்குமார் said...

wow ! what an idea :)

அடுத்த பாகத்துக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்

Divyapriya said...

wow!!! Superb…ரெண்டு மரங்களுமே அருமை…அதை விட மரம் வரைஞ்சிருக்கற கான்செப்ட் தான் இன்னும் அருமை :)

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா! ஓ..சந்தோஷமா தத்தெடுத்துக்கலாமே!! :-)) ஜாலியா என்கூட விளையாடணும்..ஓக்கே! ஆனா, கேவிஆர் சொல்றதைப்பார்த்தா கொஞ்சம் பயமாக்கூட இருக்கு!!! lol

நன்றி ஜமால்!! விரைவில் மீதியையும்!!

நன்றி ராமலஷ்மி!! அணில் வரையத்தான் நினைத்தேன்..சரி எதுக்கு அணில் பிடிக்க வேறு ஏதோ வந்தால் என்ற எண்ணத்தில் விட்டு விட்டேன்! ஆனா, இதில் என் பாட்டியும் உதவியிருக்கிறார்கள் மற்ற பகுதியில்!!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! கொஞ்சம் இருங்க அமித்து வளர்ந்ததும்..எங்களுக்குத் தெரியும், யார் கொடுத்து வச்சதுன்னு!! அமித்துவும் நீங்களும்!! :-)

நன்றி வித்யா! இங்கமட்டும் என்ன..அதேதான்!! :))

நன்றி ஆயில்ஸ் அண்ணா!
உங்க பாராட்டுக்கள் உற்சாகத்தைத் தருது!!

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார்! ஹரிணியோட வண்ணத்துபூச்சிகள் முன்னாடி இதெல்லாம் ஒன்னுமேயில்லை!! சூப்பர் ஆர்டிஸ்ட் அவங்கதான்!!

நன்றி நானானி! அவுட்சோர்ஸிங் பண்ற ஐடியா கிடையாது! ஆனா, ஏற்கெனவே அந்தஹ் செட் வீட்டில் உண்டு..அதான் ஸ்டிகக்ர் விக்குதே எல்லா இடத்திலயும்! அதுல மீதி இருக்கு! நிலா தவிர! ஆனா, தூங்குவது எங்களோடுதான்! அதனால, அது எங்க பெட்ரூமில இருக்கு!! நன்றி ஐடியாவிற்கு!

சந்தனமுல்லை said...

நன்றி கேவிஆர்! ஆமா, பெடல் போடத்தான் சொல்லிக்கொடுக்க முடியும்,! அப்புறம் மீதியெல்லாம் அவங்கதான் கத்துக்கணும்! :-) இப்பொ இல்லை, இன்னும் கொஞ்சநாள் கழிச்சு சொல்றேன்! இப்ப வரைஞ்சு வச்சிருக்கா சுவத்தில!!நன்றி நானானி, கண்டிப்பா செஞ்சுடலாம்! இதுல பப்புவையும் இன்வால்வ் ஆக்கி கூடிய விரைவில் செட் செய்யலாம்!!இப்போ லீவ் முடிஞ்சு பள்ளி திரந்துடுச்சு! சோ, ரெண்டு பேருமே பிசி!! :-))

நன்றி அமுதா! குட்டீஸ் தான் பெரிய குட்டீசாகிட்டாங்களே..அவங்ககிட்டே கொடுத்துடுங்க..வரையறதுக்கு!!

நன்றி smile, அதனாலென்ன, நீங்களும் வரைங்க!!

சந்தனமுல்லை said...

நன்றி சின்ன அம்மிணி!! :-))) இருக்கலாம்! ஆனா, நானும் என் தம்பியும் யார் எவ்ளோ ஹைட்ட்டுன்னு சுவரில் ஸ்கேல் வச்சு குறிச்சு வச்சிக்குவோம்..:-))


நன்றி புதுகை! நல்லா ஐடியா கொடுத்திருக்காங்க இல்ல, ராமலஷ்மியும் நானானியும்!!

நன்றி கோபிநாத்! ஆமா, சின்னவ்ங்க செஞ்சாதான் தப்பு, பெரியவங்க செஞ்சா அது தப்பில்லை...இல்லையா!! :-))

சந்தனமுல்லை said...

நன்றி சென்ஷி! ஆனா, பப்புவிற்கு சுவரில் வரையாதேயென்று சொன்னதேயில்லை! ஆனா, நோட் புக், ட்ராயிங் நோட் வாங்கிக்கொடுப்போம் நிறைய! அவளாகவே நிறுத்தியிருந்தாள். இப்போ என்னைப் பார்த்து ஸ்டார்ட் பண்ணியிருக்கா! lol


நன்றி நிஜமா நல்லவன்!! :-))

நன்றி முத்துலெட்சுமி!

//சென்ஷீ கோபி சொன்னது நானும் யோசிச்சேன்..உங்க வீடு .. உங்க கணவரும் எதிர்ப்பு செய்யல .. இஷ்டத்துக்கு கிறுக்கறீங்கன்னு//

ஆமா முத்துலெட்சுமி, கிறுக்கலோ..நல்லதோ..எப்பவுமே நாமா செய்றதைத்தான் சந்தோஷத்தைக் கொடுக்கும்! இதே ஏசியன் பெயிண்ட்-ல கொடுத்து செஞ்சிருந்தா எங்களுக்கு இந்த ஜாலியும், சந்தோஷமும் ஒண்ணா டைம் பண்ண திருப்தியும் கண்டிப்பாக் கிடைச்சிருக்காது! சொல்லப்போனா, அவ்ளோ காசுக்கொடுத்து பண்ணியிருக்கோம், அழுக்காக்காதேன்னுதான் சொல்லிக்கிட்டிருந்திருப்பேன்!! lol

சந்தனமுல்லை said...

நன்றி அன்பு!! உங்கள் வார்த்தைகளுக்கு நான் தகுதியானவள்தானா எந்த் தெரியவில்லை! ஆனால், பாராட்டினால் மகிழ்ச்சியாக்த்தானிருக்கிறது! இதில் பப்புவுக்கும் பங்கிருக்கிறது, அவளது பள்ளி விடுமுரையில் ப்ளான் செய்த ஆக்டிவிட்டீஸ் இவை!! :-)
நீங்கள் கொடுத்த லிங்க..செம!! அமேஜிங்!! நன்றி பகிர்ந்தமைக்கு!!


நன்றி தாமிரா!!

நன்றி சுரேகா! :-) குழந்தைகளுக்காக நாம் செய்யும் சின்ன சின்ன விஷய்ங்கள்தான் எவ்வள்வு சந்தோஷத்தைத் தருகிறது!!


நன்றி தீஷு!! ம்ம்..உங்க வெர்ஷனைப் பார்க்க ஆவலாயிருக்கேன்!பார்க்கறேன், வேலி வரைய!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி தமிழன்-கறுப்பி!! பப்பு இல்லை..நாந்தான் கொடுத்து வச்சவ! ஏன்னா, இபடி நான் வரைஞ்ச ரூம்ல பயமில்லாம விளையாடணுமே!! ;-)))


நன்றி ராம்! ஹஹ்ஹா!

நன்றி பிரேம்! மிக விரைவில்!!

சந்தனமுல்லை said...

நன்றி திவ்யாப்ரியா! முழுக்க என்னோட கான்செப்ட இல்லை..நெட்-லேர்ந்து சுட்டதுதான்! அதை கொஞ்சம் எங்க வெர்ஷனாக்கிட்டேன்!! :-)

அபி அப்பா said...

super! romba nalla idea!

rapp said...

நல்ல ஐடியாவா இருக்கே. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு:):):) ஆனா தென்னை மரத்தடில கயித்துக்கட்டில்ல மெத்தயில்லாமத்தான தூங்கனும்:):):) ஹி ஹி ஏதோ என்னாலான சேவை