Friday, January 30, 2009

ஜனவரி மாதத்தின் வெதர் ரிப்போர்ட் !
பப்புவிற்கு டெர்ம் ஹாலிடேஸ் தொடங்கியபோது ஆரம்பித்தோம். அவர்கள் பள்ளியிலும் இதைச் செய்வார்களாயிருக்கும்! Juz to keep her engaged for some time! வானத்தைப் பார்த்துவிட்டு என்னத் தெரிகிறது, எப்படி இருக்கிறது என்று சொல்லி அதற்கேற்ற படத்தை தெரிந்தெடுத்து ஒட்டவேண்டும். வானத்தைப் பார்த்து "என்னத் தெரிகிறது" என்று கேட்கும்போது சொல்வாள் குறும்புசிரிப்போடு, "தவளை தெரியுது", சிங்கம் தெரியுது" என்று கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டு, சில சமயங்களில் "கொய்யாக்கா தெரியுது" என்று பக்கத்து வீட்டு கொய்யாமரத்தை பார்த்து்! அவள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனக்கு இரண்டாம்பட்சமே தவிர, செய்யும் செயலை அனுபவித்து ரசித்து செய்யவேண்டுமென்பதே! And looks like my baby got my point right! :-)

மாத காலண்டர் இங்கேயிருந்து!
இணையத்திலிருந்து குட்டி கிளிப் ஆர்ட்ஸ் கிடைத்தது,நன்றி டூ இணையம்!!

பள்ளி ஆரம்பித்த பின்னர், இதை செய்வது நின்றுபோயிற்று!உருளைக்கிழங்குக்காவது அவ்வப்போது தண்ணீர் கிடைக்கிறது..பார்ப்போம் பெப்ரவரியிலாவது முழுமையான ரிப்போர்ட் செய்ய முடிகிறதாவென!

14 comments:

நட்புடன் ஜமால் said...

\\பெப்ரவரியிலாவது முழுமையான ரிப்போர்ட் செய்ய முடிகிறதாவென!\\

முயற்சியுங்கள்

அமுதா said...

நல்ல ஐடியா.

நட்புடன் ஜமால் said...

\\தவளை தெரியுது", சிங்கம் தெரியுது" என்று கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டு, சில சமயங்களில் "கொய்யாக்கா தெரியுது"\\

ஹா ஹா ஹா

வாழ்க பப்பு

அமிர்தவர்ஷினி அம்மா said...

! அவள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனக்கு இரண்டாம்பட்சமே தவிர, செய்யும் செயலை அனுபவித்து ரசித்து செய்யவேண்டுமென்பதே! And looks like my baby got my point right! :-)

உங்களுக்கு மகளா இருக்க பப்பு கொடுத்து வச்சிருக்கணுமா இல்லை பப்புவுக்கு அம்மாவா இருக்க நீங்க கொடுத்துவச்சிருக்கனுமா தெரியலை

பெருமையா இருக்குங்க உங்க ரெண்டு பேரையும் நெனச்சா

கவிதா | Kavitha said...

அடுத்த முறை கண்டிப்பா கவிதா ஆன்ட்டி தெரியறாங்கன்னு சொல்ல போறா பாருங்க.. :)

தாரணி பிரியா said...

ஒரு குழந்தையை எப்படி ரசித்து நம்மோட எண்ணங்களை எல்லாம் அதன் மேல திணிக்காமல் வளர்ப்பது அப்படின்றதை உங்ககிட்ட இருந்துதான் கத்துக்கணும் முல்லை. கர்ப்பமாக இருக்கும் என் தங்கைக்கு குழந்தை பிறந்தவுடன் உங்க பதிவுகளின் PDF தொகுப்புதான் பரிசா தரப்போறேன். உங்க சம்மதத்தோட :) நன்றி.

ராமலக்ஷ்மி said...

மேகக் கூட்டத்தில் தவளை தெரியுது சிங்கம் தெரியுதா? கொய்யாக் காயுமா? பக்கத்து வீட்டில் கொய்யா மரமும் இருக்கிறதா? எப்படி பப்பு? இது எல்லாவற்றைப் பற்றியும் நான் எழுதிய கவிதை இன்றைய திண்ணைய இணைய இதழில் வந்திருக்கிறது:)! அடுத்த வாரம் வலையேற்றுகையில் அம்மாவை அனுப்பி வை, சரியா? பை:)!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல கற்பனா சக்தி ...:)பப்பு

தீஷு said...

சுப்பர் ஐடியா

Divyapriya said...

இந்த ஐடியா சூப்பரா இருக்கே :))

சின்ன அம்மிணி said...

//"தவளை தெரியுது", சிங்கம் தெரியுது" என்று கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டு//

நான் இன்னும் கூட இப்படி நினைப்பதுண்டு.

ஆயில்யன் said...

:))

தாமிரா said...

என்ன ஸ்டைலான எழுத்து உங்களுடைய‌து.! வாழ்த்துகள்.!

rapp said...

ஹை சூப்பர் விளையாட்டு:):):) நான் கூட இதை சுவாரசியமா விளையாடி இருக்கேன். சின்ன வயசுல சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனா மாடியில் எல்லா சின்ன பசங்களும் சேர்ந்து இந்த வெள்ளாட்டு தான் :):):)

இப்போ திரும்ப ஆரம்பிச்சாச்சா ?