Monday, January 12, 2009

ஒரு வெள்ளிக்கிழமை மாலை...(இந்த கைகளுக்குச் சொந்தமான வலைப்பூ எது?!)

எங்கள் டீமை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பெண்மணியைச் சந்திக்க பப்புவும், நானும் எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றோம். போய்க்கொண்டிருக்கும்போது ஒரு போன். “நான் முத்துலெட்சுமி பேசறேங்க”, என்றதும் எனக்குத் தெரிந்த 4 முத்துலெட்சுமிகளில் யார் என்று ஒரு குயிக் சர்ச் ஓடியது. பள்ளியில் கூடப் படித்த முத்துலெட்சுமியா, ஆனால் குரல் அப்படி இல்லை, ஜூனியர் முத்துவா கொஞ்சம் குரல் ஒத்துபோகுது, இல்லை இப்போ ரீசண்டா
திரும்ப மெயிலில் சந்தித்த முத்துஅக்காவா என்று கடக்டவென்று ஒரு பேட்டர்ன் & வாய்ஸ் மேட்ச். இதற்குள் 20-40 செகண்டுகள் கடந்துவிட்டிருந்தன. திரும்ப “நாந்தாங்க முத்துலெட்சுமி பேசறேன், எங்க இருக்கீங்க” என்றதும், அட இந்தம்மணியை பார்க்கத்தானே போய்க்கிட்டிருக்கோம்னு பொறி தட்டியது!!யெஸ்..அந்த பெண்மணி கயல்விழி-முத்துலெட்சுமி! அந்த டீம் - டாக்கிங் குரூப் டீம்!(சிறுமுயற்சி முத்துலெட்சுமி, இல்ல முத்துலெட்சுமி கயல்விழி-ன்னா உடனே புரிஞ்சுருக்குமோ!!)அறிமுகம், தயக்கம் எதுவுமே இல்லை..பேசுவதற்கு டாபிக்குகள் தானாக வந்துக் கொண்டேயிருந்தன! முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!


(The famous Kids of blogdom )

அப்படிப்பேசிக்கொண்ட்டேயிருந்த போது, this friendly lady made an entry. மேலே இருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரர்! அதிகம் மறுமொழிவதில்லையென்றாலும், தவறவிடாத பதிவு கவிதாவின் “பார்வைகள்”. தெரியுமா, என்ற போது, ”ஓ தெரியுமே” என நான் சொன்னதும் ஜெர்க்கானவர், ”இல்லல்ல, உங்க பதிவுகள் மூலம்தான்”, என்றதும் கொஞ்சம் ஆசுவாசமானார்.

Pappu remained quiet! ட்ரெயினை பார்த்துக் கொண்டேயிருக்க விரும்பினாள், அவள்!
பப்புவும் சபரியும் பரிசுகள் பரிமாறிக்கொண்டார்கள்! And, pappu thank muthu aunty
for the Bhindis!! கவிதா ஆன்ட்டியுடன் சொப்பு விளையாட வெயிட்டிங்

22 comments:

குடுகுடுப்பை said...

போட்டோக்கள் அருமை. அப்படியே உங்க விருதுக்கு பதில் பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க பப்புவோட.

நட்புடன் ஜமால் said...

பெண் பதிவர் சந்திப்பா ...

gkavithain said...

கை காலுன்னு பார்ட்'ஸ் பார்ட்'ஸ் ஆ பிச்சி போட்டுடீங்க.. நன்றி.. நான் ரொம்ப அழகா இருக்கேன்..! :)

சரி பப்புவோட நானும் சீக்கிரம் சொப்பு விளையாடனும்னு வெயிட்ங் ..ஆனா அங்க வந்து எனக்கும் பப்புவுக்கும் சண்டை வந்துட்டா நீங்க தலையிடப்படாது நாங்களே தீத்துக்குவோம்.. :)) சரியா

தாமிரா said...

முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!
/// அழகா சொன்னீங்க.. முன்பின் பார்த்திராத பிளாக் நண்பர்களுடன் இயல்பாக பேச ஆரம்பித்துவிடமுடிகிறது.. ஆனால் இதே வேறு புதிய நண்பர்கள் அறிமுகமானால் என்ன நடக்கிறது? கை கொடுத்துவிட்டு ஹாய் சொல்லிவிட்டு 'பேந்த பேந்த' விழித்துக்கொண்டு இருக்கவேண்டியதாகிறது.

சின்ன அம்மிணி said...

முத்தக்காவை நீங்களும் பாத்து பேசீட்டீங்களா :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

போட்டோக்கள் அருமை.

அமுதா said...

nice :-)

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி வந்திருக்காங்களா. எங்கள எல்லாம் சந்திக்கலையா??

கோபிநாத் said...

சுருக்கமாக சொன்னாலும் நன்றாக இருந்தது பதிவு ;)

கானா பிரபா said...

ஆஹா டெல்லி எக்ஸ்பிரஸ் எக்மோரில் சந்திப்பா ;)

ராமலக்ஷ்மி said...

தாமிராவை வழி மொழிகிறேன்:))!

PoornimaSaran said...

பெண்கள் பதிவர் சந்திப்பா?? நல்ல படியா முடிஞ்சுதாங்க??

Thooya said...

குட்டிஸ் ரொம்ப அழகு :)

தீஷு said...

போட்டோஸ் சூப்பர். பப்புவுக்கும் சபரிக்கும் நல்ல டைம் பாஸாக இருந்திருக்கும்.

சென்ஷி said...

//முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!
//

சூப்பர்... :-)))

பேச பல டாபிக்குகள் இருந்தன. அதனால முத்துக்கா மாத்திரம்தான் பேசியிருக்க நிறைய்ய வாய்ப்பு இருக்குது. நீங்க நிறைய்ய டாபிக்க கேட்டுட்டு மாத்திரம்தான் இருந்திருப்பீங்க :-)))))

ஹரிணி அம்மா said...

பேசுவதற்கு டாபிக்குகள் தானாக வந்துக் கொண்டேயிருந்தன! முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!///

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார்!

நன்றி ஜமால், இல்லையே..சபரியும் இருந்தானே!!

நன்றி கவிதா!! self affirmation!! lol! நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை...கண்டிப்பா! நான் நிம்மதியா இருப்பேன் கொஞ்ச நேரம்!!

நன்றி தாமிரா! ஆமா, நானும் இதை உண்ர்ந்திருக்கிறேன்!!

ஆமா, சின்ன அம்மிணி!! நீங்க?

நன்றி அமித்து அம்மா, அமுதா!

சந்தனமுல்லை said...

ஆமா வல்லியம்மா, உங்களை சந்திக்காமலா? தனி அஜெண்டாவோட வருவாங்களா இருக்கும்!!

நன்றி கோபி!!

நன்றி கானாஸ்!! இதுதான் ரேடியோ ஜாக்கின்றது..இந்த கேப்ஷன் என்க்குத் தோணாம போச்சே!!

நன்றி ராமலஷ்மி!!

நன்றி பூர்ணிமாசரண்!!

நன்றி தீஷூ! ஆமா, தூக்கக் கலக்கத்தோட!!

நன்றி சென்ஷி!! ஆமா, பேசினாங்க, கேப்ல நாம பேச ஆரம்பிச்சதும், திரும்ப பேசினாங்க..அடுத்த கேப்-ல கொஞ்சம் பேசினா, திரும்ப திரும்ப பேசினாங்க....lol!

நன்றி ஹரிணி அம்மா!!

ஆகாய நதி said...

//
முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல
//

எளிதில் அன்பு காட்டி பழகிப் பேசுவது பெண்களின் இயல்பல்லவா! :)
பெண்கள் பதிவர் சந்திப்பா? நானும் பெண்தான் எங்க வீட்டுக்கு எப்போ வருவீங்க?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

@வல்லி உங்களைப்போல பெரியவங்களை நான் இங்க வாங்க அங்க வாங்கன்னு இழுக்கறது முறையாகுமா.. இன்னொருமுறை நிதானமா நடத்தலாம் பெண்கள் சந்திப்பு.. இது எக்மோர் ஸ்டேஷன் சந்திப்பு.. :)

மங்களூர் சிவா said...

/
அறிமுகம், தயக்கம் எதுவுமே இல்லை..பேசுவதற்கு டாபிக்குகள் தானாக வந்துக் கொண்டேயிருந்தன! முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!
/

மிகச் சரி!!

விக்னேஷ்வரி said...

முல்லை, நானும் முத்துலட்சுமி கயல்விழி அக்காவும் டெல்லியில் பதிவர் சந்திப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். முடிந்தால், கூடிய விரைவிலேயே சந்திக்கலாம்.