Sunday, January 04, 2009

பப்பு 2009புது வருடம் பற்றியொன்றும் பெரிதாக புரிதலில்லையென்றாலும், பப்புவிற்கு அது ஏதோ ஒரு
சிறப்பான நாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. “ஹேப்பி நியூ யர்” என்றும் “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்றும் அவளை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் திருப்பி வாழ்த்திக் கொண்டிருந்தாள். தீபாவளிதான் அவளுக்கு தெரிந்த, நன்கு புரிந்த பண்டிகை, ”ஹேப்பி பர்த் டே”வுக்குப் பிறகு.

முழுதாக படங்கள் பார்த்ததில்லை இதுவரை, ரைம்ஸ் சிடிகள், கதை சிடிகள் நீங்கலாக! அதனால், படங்களை, குழந்தைகளுக்கான படங்களை பப்புவிற்கு அறிமுகப்படுத்த விரும்பினோம், புதுவருட பரிசாக என்றும் கூட கொள்ளலாம்! ஜங்கிள் புக் டிவிடி-தான் வாங்குவதாகதான் பிளான், ”george of the jungle"-ஐ பார்க்கும் வரை! (அவள் கண்டிப்பாக இதை ரசிப்பாள் என்று அனுமானம் பொய்க்கவில்லை.) கெட் ஒன் ஆஃபர் இருந்ததால், "thomas and friends" -யை தேர்வு செய்தேன். அவளது ட்ரெய்ன் விளையாட்டுக்கு உதவலாமென்று!!(movies + chocolate - Not a bad idea to spoil a kid, huh!)அந்த யம்மி ப்ளம் கேக், எங்கள் பக்கத்துவீட்டு ஆன்ட்டியின் கைமணம்! Thanks, Eva aunty!

இரண்டுமே ஹிட்!! முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், கடைசிவரை பார்த்தாள். ஜார்ஜின் காட்டுப்பகுதி-தான் இஷ்டம்! பேசும் குரங்கு, தாவும் மனிதன், சிங்கத்துடன் சண்டை, மரவீடு, நாயாக தன்னைக் கருதிக்கொண்டிருக்கும் யானை என்று முதல் பகுதிதான் அடிக்கடி பார்க்கிறாள்! தாமஸ் தனியாக பயணம் செய்துக்கொண்டிருக்கிறார், ஜார்ஜ் போரடிக்கும் வரை தாமஸ் காத்திருக்கத்தான் வேண்டும் போல!!

சென்ற வருடம், apple tree ரைம்ஸ் சிடிகளும், பெபிள்ஸ் சிடிகளும், ஜாதகா டேல்ஸ் (நன்றி வல்லியம்மா!)-மாக ஓடியது. அனிமேஷன் கதாபாத்திரங்களிலிருந்து இப்போது நிஜ உலகிற்கு எட்டிப் பார்க்கிறாள் பப்பு!

25 comments:

வித்யா said...

சூப்பர். என் பையனுக்கு இனிமே தான் ரைம்ஸ் சொல்லிக்குடுக்க ஆரம்பிக்கனும்:)

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :)

ஆயில்யன் said...

//சென்ற வருடம், apple tree ரைம்ஸ் சிடிகளும், பெபிள்ஸ் சிடிகளும், ஜாதகா டேல்ஸ் (நன்றி வல்லியம்மா!)-மாக ஓடியது.//

அந்த லிங்க் போய் பார்த்தேன் ஹ்ய்ய்ய் சூப்பரா இருக்கு!

நானும் லீவுக்கு ஊருக்கு வரச்ச வாங்கணும் எனக்கு ....! :))))))

கணினி தேசம் said...

உங்கள் புத்தாண்டு பரிசுகள் அனைத்தும் குழந்தை மிக விரும்பும் பொருட்கள்தான்.
திணிக்கப்படுவதாக எதுவும் இல்லை.. நல்ல செலக்சன்!! :-)))

பிரேம்குமார் said...

நிறைய அருமையான குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இருக்கின்றன. பற்பல நல்ல விசயங்களை அவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்ளக்கூடும்.

ஆனால் சமயத்தில் அது வெறும் திரைப்படம் தான் என்பதையும், வெறும் பொழுதுபோக்கு என்பதையும் கொஞ்ச நாட்கள் கழித்து சொல்ல வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு இருக்கிறது :)

அதிரை ஜமால் said...

\\"பப்பு 2009"\\

துவங்கிவிட்டது பயணம்

அதிரை ஜமால் said...

\\ஜங்கிள் புக்\\

இப்பொழுதும் எனக்கு மிகவும் பிடித்த படம்.

ஹையா பப்புவுக்கும் பிடிக்கும்.

அதிரை ஜமால் said...

\\அனிமேஷன் கதாபாத்திரங்களிலிருந்து இப்போது நிஜ உலகிற்கு எட்டிப் பார்க்கிறாள் பப்பு! \\

வாழ்க.

எங்கள் பிரார்த்தனைகள் உனக்கு உண்டு பப்பு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தாமஸ் த ட்ரையின் என் பொண்ணுக்கும் ரொம்ப பிடிச்ச கார்டூன்.. அப்பறம் இப்ப பையனுக்கும் ./.. அவனும் நெட்ல் அதோட கேம்ஸ் விளையாடுவான்.. ஜார்ஜ் எப்பவும் முட்டிக்கிட்டு கீழ விழுவான்ல.. ஹஹ்ஹா..

Anonymous said...

\\ வித்யா said...
சூப்பர். என் பையனுக்கு இனிமே தான் ரைம்ஸ் சொல்லிக்குடுக்க ஆரம்பிக்கனும்:)//

naanee inimee than raims padikkanum, pinna thaan nattukku solli kudukkanum:-))

abiappa

ராமலக்ஷ்மி said...

HAPPY NEW YEAR TO YOU DEAR PAPPU:)!

குடுகுடுப்பை said...

டிவிடி பாக்க ஆரம்பிச்சிட்டா உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.கூடவே பெயிண்ட் பிரஷ் வாங்கி கொடுங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

“ஹேப்பி நியூ யர்” என்றும் “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்றும் அவளை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் திருப்பி வாழ்த்திக் கொண்டிருந்தாள்

choo chweeeet pappu

தீபாவளிதான் அவளுக்கு தெரிந்த, நன்கு புரிந்த பண்டிகை, ”ஹேப்பி பர்த் டே”வுக்குப் பிறகு
பட்டாசுக்கு பயப்படலியா...

, குழந்தைகளுக்கான படங்களை பப்புவிற்கு அறிமுகப்படுத்த விரும்பினோம், புதுவருட பரிசாக என்றும் கூட கொள்ளலாம்//
பரிசு பப்புவுக்கு மட்டும்தானா
எங்களை மாதிரி சின்னக்குழந்தைகளுக்குன்னு எதுவும் இல்லையா///


தாமஸ் தனியாக பயணம் செய்துக்கொண்டிருக்கிறார், ஜார்ஜ் போரடிக்கும் வரை தாமஸ் காத்திருக்கத்தான் வேண்டும் போல!!
அடுத்த கட்டத்திற்கு நாங்கள் காத்திருப்பது போல

இப்போது நிஜ உலகிற்கு எட்டிப் பார்க்கிறாள் பப்பு!
welcome pappu, wishes.
நீ புரிந்து கொள்வதற்கும்,உன்னைப் பிறர் புரிந்து கொள்வதற்கும் நிறைய இருக்கிறது இந்த உலகில்....
வா மகளே, உன் அன்னையின் அரவணைப்போடு,
அக்காக்களும், மாமாக்களும், அத்தைகளும் நிறையப் பேர் இருக்கிறோம், உன்னை வரவேற்க...

கானா பிரபா said...

kalakkals

Thooya said...

so cute...

அமுதா said...

happy new year pappu :-)

தமிழன்-கறுப்பி... said...

ப்புவுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

Happy New Year Pappu...

மங்களூர் சிவா said...

Good girl.

தீஷு said...

//தாமஸ் தனியாக பயணம் செய்துக்கொண்டிருக்கிறார், ஜார்ஜ் போரடிக்கும் வரை தாமஸ் காத்திருக்கத்தான் வேண்டும் போல!! //

எனக்கு தாமஸ் போர் அடிக்கிற மாதிரி தெரியும் முல்லை. குழந்தைகளுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

ஆகாய நதி said...

நல்ல விஷயம் பப்பு :)வாழ்த்துகள்!
அப்படியே அம்மாகிட்ட கேட்டு பெயிண்ட் பிரஷ் வாங்கி நீயா எதாவது பண்ணி வரைய கத்துக்கோடா செல்லம் :)

தாமிரா said...

நாட்குறிப்பின் அடுத்தடுத்த பக்கங்கள்.! அர்த்தமுள்ள குறிப்புகள்.!

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா, ஆரம்பிங்க, நல்லா ஜாலியா பொழுது போகும்!!

நன்றி ஆயில்ஸ்..ஜாலிய இருக்கும் வாங்கிட்டு சொல்லிங்க!!

நன்றி கணினிதேசம்!!:-)

நன்றி பிரேம்! கண்டிப்பா,இப்போதானே ஆரம்பிச்சிருக்கோம்!!

நன்றி ஜமால், பிரார்த்தனைகளுக்கு!!
உங்கள் பிரார்த்தனைகளும், ஆசிகளும் பப்புவிற்கு என்றும் தேவை!!


நன்றி முத்துலெட்சுமி! :-)

சந்தனமுல்லை said...

நன்றி அபிஅப்பா, பாவம் நட்டு விட்டுடுங்க, அபி கிட்டேயே கத்துக்கட்டும்!! :-))

நன்றி ராமலஷ்மி!!

நன்றி குடுகுடுப்பை..வீட்டில் இறைந்து கிடைப்பவை க்ரேயான்களும், வண்ண பாட்டில்களும் தான்! இதுக்கும்மேலேயா!! ஏற்கெனவே சுவர் எல்லாம் முடிச்சாச்சு!:-))

நன்றி அமித்து அம்மா, அன்பான வரவேற்புக்கு!!

நன்றி கானாஸ், தூயா, அமுதா!!

நன்றி தமிழன் - கறுப்பி, சிவா!!

சந்தனமுல்லை said...

நன்றி தீஷு!! அவள் அதைப் பார்த்து கொஞ்சம் ட்ரெயின் விளையாடுவதுப் போல இருக்கிறது. ஆனால், ஜங்கிள் தான் அவளது பேவரிட்!!

நன்றி ஆகாயநதி!!

நன்றி தாமிரா! நல்ல வார்த்தைக் கோர்வை!!

சுரேகா.. said...

பப்புவுக்கு 2009ல் நிறைய நல்ல படங்கள் கிடைக்க சந்தனமுல்லை அம்மாவின் அருள் கிடைக்கட்டும் :))