Friday, January 09, 2009

பழசும் புதுசும்!

இது புதுசு :

அதிரவைத்தக் கணங்களையும்
இசைத்துச் சென்ற நொடிகளையும்
ஒரு பேழைக்குள்
சேமிக்கத்
தொடங்கினேன் நோவாவைப் போல்!
தரைதட்டியபோது
கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!

இது பழசு: சகுனம்

”ச்சே!ச்சே”! நான் நல்லக் காரியமா பொறப்படற போதுதான் இவன் வந்துத் தொலைப்பான். ச்சே, ஏந்தான் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறான்களோ!

நீங்களே சொல்லுங்க சார்! ஒருநாள, ரெண்டுநாள்னா பரவாயில்லே! தெனமுமா?வெவஸ்தையில்லே, இந்த மனுஷனுக்கு!இவன் எதிர்லே வந்து தொலையறதுனாலே நான் போற காரியம் எதுவும் ஒழுங்கா உருப்படியா முடிய மாட்டேங்கறது சார்!

ஒரு நியாயம் சொல்லுங்க சார், எனக்கு! நேத்தும் இப்படிதான், பக்கத்துத் தெரு கோபலன் கிட்டே போய் ஐம்பது ரூபாய் கடன் வாங்கலாம்னா இவன் எதிர்ல வந்துட்டான்! போன காரியம் அவ்ளோதான்!

என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!

26 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!


புதுக்கவிதை /
புரியுது ஆனா புரியலை..
ஆனா வார்த்தைகளால்
அசத்தறீங்க ஆச்சி

குடுகுடுப்பை said...

கோபாலன் சார் ஒரு 25 ரூபாய் கமிசன் வெட்டுங்க சார், பூனை 50 வாங்கிட்டு போயிருக்கும் நாந்தான் அக்காவை குறுக்கால அனுப்பி வைச்சேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

புரிதலுக்குப் பின்
இந்தக் கவிதை
இன்னமும் இனிக்கிறது
ஆழமான அர்த்தத்துடன்...

இப்போது
நானும் ..

// கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..//

வாழ்த்துக்கள்
( பப்பு உங்க ஆச்சி கவிதாயினி ஆகிட்டாங்க.)

KaveriGanesh said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

மிஸஸ்.டவுட் said...

//எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!//

நல்லா இருக்கு முல்லை உங்க கவிதை

மிஸஸ்.டவுட் said...

i thing me the first today

ஆயில்யன் said...

:)

அன்பு said...

பழசோ புதுசோ
நீங்க எப்போதும் அப்படியே...
என்பதை மட்டும் மறு உறுதிசெய்கின்றீர்கள்!

(எப்படியே‍!?ன்னல்லாம் கேக்கப்படாது:)

புதுகை.அப்துல்லா said...

பழசு பெரிசா பிடிக்கல எனக்கு. ஆனால் தயவு செய்து கவிதையை தினமும் தொடருங்கள்.

நேற்று முந்தினம் சரவணகுமார், இன்னைக்கு நீங்கன்னு நல்ல நல்ல கவிதையில் நான் மகிழ்ச்சியில் திளைக்கும் வாரம் போல :)

நட்புடன் ஜமால் said...

\\என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!\\

மிக மிக மிக அருமை.

விளங்கவேயில்லை இந்த பத்திக்கு வரும் வரை.

பப்பு விருது கிடைத்தவுடன் வெளுத்து கட்ட தொடங்கிவிட்டார் உன் ஆச்சி

சென்ஷி said...

:-))

நல்லாயிருக்குது

அமுதா said...

உங்கள் எழுத்துக்கள் அபாரம்... அன்றும் இன்றும்...

ராமலக்ஷ்மி said...

பழசு புன்னகைக்க வைத்தது.
புதுசு எழுதிய கையைக் குலுக்கச் சொல்லுகிறது. இன்றைய நோட்டுக்களும் நிரம்பட்டும் முல்லை. வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

பழசும் புதுசும்

அருமையா இருந்துச்சு

தாமிரா said...

கவிதை அழகு.! கதையில் பூனை கடன் வாங்கப்போகுமா? என்ன ரீல் விடுறீங்க? பப்புவுக்குச் சொல்ற கதையா?

நசரேயன் said...

பழசு நல்லா புரிந்தது,
புதுசு ஒண்ணுமே புரியலைனாலும் நல்லா இருக்கு

சின்ன அம்மிணி said...

எல்லாருக்கும் கவிதை எழுதுனப்பறம் விருது கிடைக்கும். உங்களுக்கு விருது கிடைச்சப்பறம் கவிதை . :)

தாரணி பிரியா said...

//எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்//

இந்த வரிகள் ரொம்பவே பிடிச்சு போச்சு சந்தனமுல்லை

:)

பிரேம்குமார் said...

ஆகா! முல்லை.... என்ன இது பிந்நவீனத்துவ கவிதை எல்லாம் எழுதுறீங்க??

கானா பிரபா said...

ஆகா pinநவீனத்துவக் கவிதாயினி ஆயிட்டீங்களே பலே பலே ;-)

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! இது அறிவுஜீவிகளுக்கான கவிதை..நாம சாதாரணக் கவிதை எழுதிடுவோமா என்ன?lol!

ஆகா, குடுகுடுப்பையார், இந்த வேலை வேற செய்றீங்களா?

நன்றி அமித்து அம்மா, நான் நோவாக் கதையை மட்டும்தானே சொன்ன்னேன்! புரிதலுக்கு நன்றி!!

நன்றி காவேரி கணேஷ், விரைவில் படிக்கிறேன்!


நன்றி மிஸஸ்.டவுட்,ஆயில்ஸ்!!

சந்தனமுல்லை said...

நன்றி அன்பு!!
ஆகா, கேக்கக்கூடாது சொல்லிட்டீங்க, இப்போதான் எனக்கு நிறையக் கேக்கத் தோணுது!! நீங்க என் கல்லூரி சீனியரா/சீனியருக்கு வேண்டியவரா..இல்லை ஆம்பூரா-ன்னு மட்டும் கேக்கறேனே??:-)) ஆனா இதுவும் சுவாரசியமாத்தான் இருக்கு, தெரிந்தவர்கள் படித்து கமெண்ட் போடுவது..

நன்றி அப்துல்லா, நீங்க அறிவுஜீவிதான், ஒப்புக்கொள்கிறேன்!!
எழுத முயற்சி செய்கிறேன்!!


நன்றி ஜமால்!! ஹாஜர் அப்டேட்ஸ் இல்லையே?!!

நன்றி சென்ஷி, அமுதா!!

நன்றி ராமலஷ்மி, உங்கள் வார்த்தைகள் இன்னும் எழுதத் தூண்டுகின்றன்!!

நன்றி தென்றல்!!

சந்தனமுல்லை said...

நன்றி நசரேயன்.

நன்றி சின்ன அம்மிணி, :-))
விருது பப்புவுக்காக-ன்னு நினைக்கிறேன். என் கவிதையெல்லாம் படிச்சா எனக்கு யாராவது விருது கொடுப்பாங்கன்னு நினைக்கறீங்க??lol!

நன்றி தாரணிபிரியா!!

நன்றி பிரேம், புரியலைன்றதை இப்படிக்கூட சொல்ல முடியும்னு நிரூபிச்சதுக்கு! :-)

நன்றி கானாஸ், கவிதைக் குத்துதா??lol!

நானானி said...

சந்தனமும் முல்லையும் சேந்து மணக்குது. சகுனக் கவிதை மனுஷனுக்கு நல்ல நெத்தியடி!!!!

நானானி said...

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கும் பப்புவுக்கும்!!

தமிழன்-கறுப்பி... said...

நீங்க இப்படில்லாம் கூட எழுதுவிங்களா...!!