Monday, July 14, 2008

பப்புவுக்கு ஒரு கடிதம்

பப்புக்குட்டி,

இன்றுமுதல் உனது மாண்டிஸோரி பள்ளிக்கு போகத் தொடங்கியிருக்கிறாய்.
ஓராயிரம் எண்ணங்களோடும், பல்வேறு உணர்ச்சிகளும் என்னுள்!!
படுக்கையிலிருந்து எழுமுன்னே "போ மாட்டேன்" என அழத் தொடங்கியிருந்தாய்.அதை பார்த்ததும். "நான் ரொம்ப கொடுமைக்காரியோ?" என்று தோன்றியது!!
ஆனால், பப்பு... வெளியில் ஒரு பெரிய உலகம் காத்திருக்கிறது, for you to conquer!! பப்பு..எனக்குத் தெரியும், பள்ளிக்கூடத்திற்கு செல்ல நீ அழவில்லை..
வீட்டை/எங்களை விட்டு செல்வதற்குதான் அழுகிறாயென!!
பள்ளிக்கூடம் உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது..
நீ வகுப்பிற்கு சென்றவுடன் accommodate-ஆகி விட்டாயென்று கேட்டதும்!!
இனி உனக்கு அம்மா,அப்பா, வீடு மட்டுமே உலகம் இல்லை!!
உலகம் சுவாரசியங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்ததுவென விரைவில் கண்டுக்கொள்வாய்!

ஆனால், என்னை ஆச்சரியப்படுத்துவது எதுவெனில்...பப்பு..
நீ வளர்ந்துவிட்டாய்..பள்ளி செல்வதற்கு...தனியாக வேனில் செல்வதற்கு!!
எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது....உன்னோடு மருத்துவமனையிலிருந்து
முதன்முதலாய் வீட்டிற்கு வந்தது..என் கைகளுக்குள் இருந்த நீ இறங்கி தவழ
ஆரம்பித்தாய்..பின் என் விரல்கள் பிடித்து நடக்க ஆரம்பித்தாய்..இன்று என் சொற்களில்
எல்லைகளில் இருக்கிறாய்!! சில காலங்கள் என் மேலும், உன் அப்பாவின் மேலும் படுத்துறங்கினாய்..பின் எங்கள் கைகளில்..இப்போது தலையணையில்!!
இங்கு நீ என் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை பற்றி சொல்லவில்லை...
நீ சுதந்திரமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி..!! நான் சொல்ல வருவது,
உனக்கும் எனக்குமான இடைவெளி ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பற்றி!! இது இன்னமும் அதிகரிக்கும் என அறிந்திருகிறேன்..எனக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும்!!

மேலும் நேற்று நடந்ததைப் பற்றி.....
கிளினிக்-கில் இருந்த சறுக்குமரத்தில் விளையாடிகொண்டிருந்தாய்.
உன்னைவிட சிறுகுழந்தைகள் வரும்போது பொறுமைக் காத்தாய்!! (பெருமையாய் இர்ந்தது!!)
உன் வயதைவிட பல வருடங்கள் பெரிய ஒரு பெண்ணும், அவளது சகோதரனும்
அந்த இடத்தையே இரண்டு படித்திகொண்டிருந்தார்கள்..அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, சாயும் நாறகாலிகளை இழுத்துக்கொண்டு! பின் சறுக்கு மரத்தில் அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல் வேகமாகவும் விளையாடினார்கள்..உன்னையும் சேர்த்து!! ஆனால், நீ அவர்களுக்கு முன் சென்று சறுக்கு மரத்தின் படிகளில் ஏற முயற்சித்தாய்!! அவர்கள் வேகத்திற்குமுன், உன் வேகம் எடுபடவில்லை!! ஆனால், அவர்கள் செய்வது உனக்கு பிடிக்கவில்லை! முகம் சுளித்தாய்!! அவர்களோடு போட்டியிட்டாய்!
உனக்குத் தெரியுமா பப்பு, உலகம் இப்படிப்பட்டவர்களாலும் நிறைந்ததுதான்!!
நான் வந்து உனக்கு சறுக்க வழி செய்திருக்கமுடியும்....எப்போதும் நீ என்னை எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டால்..அதேபோல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் என்னால் வர முடியாதே....!! அந்த இடத்தில் உன்னருகில் வந்து சமாதானப்படுத்தி, divert-செய்து வேறு விளையாட்டிற்கும் அழைத்து சென்றிருக்கலாம்தான்!!! அந்த சிச்சுவேஷனை நீயாகவே கையாளவேண்டுமென நினைத்தேன்..பப்பு, உன்னுடைய அந்த instinct, அந்த இயல்பான போட்டி மனப்பான்மை நான் பார்த்திராத ஒன்று!


பள்ளிக்கூடம் உனக்கு நிறைய கற்றுக்கொடுக்கக் கூடும்...வாழ்க்கையையும்!!!

வாழ்த்துக்களுடன்..
அம்மா!!

8 comments:

பிரேம்குமார் said...

பொக்கிஷமாய் காக்கப் பட வேண்டிய ஒரு கடிதம். பின்னாளில் உங்கள் மகள் இதை படிக்கும் போது கட்டாயம் உணர்ச்சிவசப்படக்கூடும்.

வாழ்த்துக்கள் பப்பவுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்

தாமோதர் சந்துரு said...

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
சந்துரு.

நந்து f/o நிலா said...

//உனக்கும் எனக்குமான இடைவெளி ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பற்றி!//

இதற்கு முதல் போஸ்ட்டில் கமெண்ட் போடும்போதே இதைப்பற்றி சொல்ல நினைத்தேன் :)

இளவஞ்சியின் இந்த பதிவு நீங்கள் படித்திருக்கலாம். இருந்தாலும் இங்கே அதுவும் பொருத்தமாக இருக்கிறது
http://ilavanji.blogspot.com/2007/06/blog-post.html

sudar mani said...

I don't know what happen? When i read this letter few drops of water
came from my eyes....

PAPPU GOT GREAT MOM...

சுரேகா.. said...

ஆஹா...
மனம் முழுக்க அழகுணர்ச்சியும், அன்பும் ததும்ப எழுதப்பட்ட
கடிதம்.!

என்னையறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்..!

என் மகனும் இப்போதுதான் பள்ளி செல்கிறான். !

அழகுற எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

அன்பு said...

சுரேகாவிடம் கடன்வாங்கி:)
ஆஹா...
மனம் முழுக்க அழகுணர்ச்சியும், அன்பும் ததும்ப எழுதப்பட்ட
கடிதம்.!


உனக்குத் தெரியுமா பப்பு, உலகம் இப்படிப்பட்டவர்களாலும் நிறைந்ததுதான்!!
நான் வந்து உனக்கு சறுக்க வழி செய்திருக்கமுடியும்....எப்போதும் நீ என்னை எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டால்..அதேபோல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் என்னால் வர முடியாதே....!! அந்த இடத்தில் உன்னருகில் வந்து சமாதானப்படுத்தி, divert-செய்து வேறு விளையாட்டிற்கும் அழைத்து சென்றிருக்கலாம்தான்!!! அந்த சிச்சுவேஷனை நீயாகவே கையாளவேண்டுமென நினைத்தேன்..பப்பு, உன்னுடைய அந்த instinct, அந்த இயல்பான போட்டி மனப்பான்மை நான் பார்த்திராத ஒன்று!


அருமையான அம்மா, அதற்கேற்ற பப்பு!
வாழ்த்துக்கள்.

Anonymous said...

Hi friend,

Its really nice to go through your blog. I like smooth flow of love between mother and daughter.

Enjoy your life.

Warm regards,
Krishna Prabhu,
lngkitcha@gmail.com
Chennai

Anonymous said...

என்னை மிகவும் நெகிழ வைக்கின்றன உங்கள் பதிவுகள் (குறிப்பாக பப்புவைக்குறித்த..)! யாருக்கும் எதன் மீதும் ஆசையோ பொறாமையோ இதுவரை கொண்டவனில்லை நான்,‌ தொடர்ந்து உங்கள் பதிவுக்கு வருவதா, வேண்டாமா என்று சிந்திக்கிறேன், இப்போது பொறாமையில் நான் நிறைந்து வழிகிறேன்.! ஏதோ புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இவற்றை எழுதியிருந்தால் இவ்வளவு தூரம் இது பாதிக்காது என்றே நம்புகிறேன். அருமை என்று பாராட்டிவிட்டு விலகிவிடலாம். ஆனால் பதிவர்களின் பதிவுகள் நிஜத்திற்கு மிக அருகில் இருப்பதாலும், நம் நட்பிற்கும் நம்பிக்கைக்கும் மிக அருகில் இருப்பதாலும் இது நேர்கிறது. கடவுள் நம்பிக்கையில்லாதவன் நான். முதன்முதலாக இந்த வார்த்தைகளை எழுதுகிறேன். உங்கள் பப்புவும், கணவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.!