Wednesday, July 23, 2008

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!

கொஞ்சம் நாஸ்டால்ஜிக்...!!

இப்போ எத்தனையோ சானல்கள் வந்தாலும், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான் எல்லாவற்றிலும்!!
இசையருவியில் ஒரு பாட்டு போட்டா, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அதே பாட்டு ஜெயாவின் ம்யூசிக் சானலில்!! ஆனா, தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நாட்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள்..மற்றும் வெரைட்டியான நிகழ்ச்சிகள்!! தமிழில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், பெரும்பாலானவை இந்தியில்தான் இருக்கும்! எங்க பாட்டி இந்தி-யை எழுத்துக் கூட்டி படிக்கற லெவல்ல இருந்தவங்க, DD பார்த்து நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பார்த்துக்கோங்க!!

புதன் கிழமை என்ன வகுப்புன்னு ஞாபகம் இருக்காது..ஆனா சித்ரஹார் போடுவாங்கன்னு மட்டும் ஞாபகம் இருக்கும். அந்த நேரம் பார்த்து யாரவது கெஸ்ட் வந்துடக்கூடாதுன்னு வேற வேண்டிப்பேன். ஏன்னா, வீட்டுல யாராவது விருந்தினர் இருக்கும்போது டீவீ பார்க்கக்கூடாதுன்னு ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன். ஏன்னா, வந்திருக்கறவங்களை அவமதிக்கற மாதிரியாம் அது...சோ அவங்களை மதிச்சு பேசனும் அப்படி இப்படின்னு!!நானோ, அவங்களையும், கடிகாரத்தியும் மாறி மாறி பாத்துக்கிட்டிருப்பேன்! ஓக்கே..ஓக்கே..எங்கேயோ போய்ட்டேன்!!அதேமாதிரி,வெள்ளிக்கிழமைன்னா ஒளியும் ஒலியும்,கடைசி பாட்டு மட்டும் புதுப் பாட்டு போடுவாங்க!! ஞாயித்துகிழமை ரங்கோலி, மத்தியானம் பிராந்திய மொழி படங்கள்!! சாயங்காலம் நம்ம தமிழ்படம்..ஆனா படம் பார்க்க அனுமதி கிடையாது!

சீரியல்லாம் நிஜமாவே பார்க்கும்படியா இருக்கும்! ரொம்ப இன்ஃபோர்மேட்டிவாவும் சில
நிகழ்ச்சிகள் இருக்கும். சுரபின்னு ஒரு ப்ரொக்ராம்..அதை மிஸ் பண்ணியதேயில்லை!

அந்த டீம் இந்தியா முழுக்க சுத்தி, கலைகள், கலாச்சார நிகழ்வுகள், இன்னொரு கலாச்சாரத்தோட இருக்கும் தொடர்புகள், அந்தந்த இடத்தில் ஃபேமஸா இருக்கும் கைவினை பொர்ருட்கள்,அதை எப்படி செய்கிறார்கள், வரலாற்று பின்னனி எல்லாவற்றையும் கொஞ்சம் கூட போரடிக்காம சொல்லுவாங்க!!அதை விட அந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த சித்தார்த் கக் மற்றும் ரேணுகே சஹானி.....நிகழ்ச்சி பார்ப்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ளும் திறமையும், சுண்டியிருக்கக்கூடிய பேச்சுத்திறமையும் இருந்தது, நிகழ்ச்சியின் ஒரு வெற்றிக்கு காரணம்!! அதுவும் இல்லாம அதுல ஒரு குவிஸ் வரும்..யாஷ் பால் என்னும் ஒரு பேராசிரியர் விளக்கத்தோட விடையளிப்பார்!! திரும்பவும் ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும்!!


அடுத்து லிஸ்ட்ல இருக்கறது, வாக்லே கி துனியா திங்கள் இரவு ஒளிபரப்ப்பாகும்! ஒரு குடியிருப்பில வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரான மிஸ்டர் & மிஸஸ் வாக்லே தமபதியினரின் வாழ்க்கையை நகைச்சுவையோடு சொல்லும் நிகழ்ச்சி!!
வாரம் ஒரு எபிஸோடு. இஅது புரிந்துக்கொள்ள தொடர்ச்சியாக பார்த்திருக்க
வேண்டுமென்ற தேவையில்லை!!


ஜஸ்பால் பட்டி-யின் நகைச்சுவை சீரியல். அதில் என்ன ஸ்பெஷல் என்றால், டைட்டில் கார்டு போடுவது ரொம்ப க்ரியேடிவாகவும் காமெடியுடனும் இருக்கும்!!ஃபாஜி, சர்க்கஸ்- பாஜிகர் பார்ப்பத்றகு முன்பே என்னை ஷாருக்கின் விசிறியாக்கியதற்கு இவை இரண்டிற்க்கும் முக்கிய பங்குண்டு!

ஓஷின் - ஒரு ஜப்பானியசிறுமி வீட்டு வேலை செய்ய அனுப்பபடுவதும், அவளுடைய வாழ்க்கையைப் பற்றியதும்.


குவிஸ் கான்டெஸ்ட் - சித்தார்த் பாசு நடத்தியது.
இன்னொருத்தர், டெரிக் ஓ ப்ரியென். போர்ன்விட்டா குவிஸ் கான்டெஸ்ட்(ஜீ டீவிலன்னு நினைக்கிறேன்!!).அவர் கேள்வியை என்னவோ அங்கே பங்கேற்பாளர்களிடம்தான் கேட்பார், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள்..அப்போதான், பாத்ரூம் போவதும், தண்னீர் குடிப்பதும் என்று செம காமெடியா இருக்கும்!!


கின்னஸ் ரெக்கார்ட்ஸ் - கணப்பு அடுப்பு பின்னால் எரிய, ஒருவர் நாற்கலியில் அமர்ந்துகொண்டே, பேசிவார். ஆனால், அதற்குப்பின் காண்பிக்கப்ப்டும் கிளிப்பிங்ஸ் ஜாலியா இருக்கும்!!

இன்னொரு நிகழ்ச்சி...அதை பத்தி சொல்லன்னா தெய்வ குத்தம் ஆகிடும்
ஹாட் ஸ்பாட்..ன்னு பார்வதி கான்-ன்னு ஒரு பாப் சிங்கர் தொகுத்து வழங்குவாங்க.நம்ம தேசி பாப்லாம் அதுலதான் வரும்...ரெமோ மட்டும்தான் ஞாபகம் இருக்கு!இதை பார்த்தவங்க யாராவது ஞாபகமிருந்தா சொல்லுங்களேன்!

இதெல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கும்போதுதான், கேபிள் டீவி-ன்னு ஒண்னு வந்தது. அதாவது, விட்டில் ஆண்டெனா இல்லாமலேயே, கேபிள் கனெக்ஷன் இருந்தா DD மட்டுமல்ல..நிறையச் சேனல்கள் வரும்னு ஒரு லிஸ்ட் வேறே..ஸ்டார், பிபிசி, எம் டீவி, அப்புறம் வீ சேனல் இதெல்லாம்!! அது மட்டும் இலலாம ஊர்ல எந்த ஸ்கூல்லயாவது ஆண்டு விழா நடந்தா, அதுல கல்சுரல்சஸ் எல்லாத்தையும் ரெக்கார்ட் செஞ்சு, அப்பப்ப அதை போட்டுகாட்டுவாங்க!! செம கலாட்டாவா இருக்கும்..அந்த கேபிள் டீவிகாரர்களுக்கு தெரிந்த/உறவின பசங்களை ஏதாவது பார்க் நடுவுல பாட்டு போட்டு ஆட விட்டு, அதை ரெக்கார்ட் செஞ்சு அடிக்கடி ஒளிபரப்பி ஒரே புதுமைல்லாம் செஞ்சிக்கிட்டிருந்தாங்க எங்க ஊர்ல!!

இது மட்டும் இல்லாம, இல்லாம தினமும் மத்தியானம் ஒரு தமிழ் படம் போடுவார்கள்
டெக்-ல இருக்கற பழைய படமெல்லாம் போடுவாங்க, அப்பப்ப புதுசும். உடனே ஆபீஸ் போகிறவர்கள் சும்மா இல்லாம, பகல்லா போட்டா லேடிசஸ் மட்டும்தான் பாக்கிறாங்க,நைட்ல
போடுங்கன்னு! அப்புறம் நைட்டும் போட ஆரம்பிச்சாங்க..எங்க ஏரியால முஸ்லீம் மக்கள் அதிகம்..அவங்க உடனே , எலலம் தமிழாதான் போடறீங்க, ஒருநாளாவது இந்திபடம் வேணும், இல்லன்னா கேபிள் வேணாம்னு சொல்ல, வெள்ளிகிழமை இரவு இந்திபடம் போட ஆரம்பிச்சாங்க! ஸ்கூல்லாம் லீவு விட்டா, வீட்டில இருக்க குட்டீஸ்ல்லாம் சேர்ர்ந்து, அண்ணா, அண்ணா, காலையிலே படம் போடுங்க..மத்தியானம் வேணாம்னு சொல்ல, டெக்ல படம் போடறதுக்குனே ஒரு லோக்கல் சேனல் உருவாகி, இப்போ ஊருக்கு போனா,
அந்த சேனல்ல ஒரு பொன்னு வாயை சுத்தி லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு போன்ல பேசிகிட்டிருக்கு..”ஓக்கே..ந்ல்லாயிர்க்கிங்கலா?
என்ன பண்றீங்க..எந்த ஸ்கூல்..ஓக்கே...டெடிக்கேட் பன்றீங்களா
-ன்னு!! ம்ம்..பேக் டூ த பாயிண்ட்!!


கேபிள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டிருந்தப்போதான், திடீர்னு ஒரு சேனல்..சன் ன்னு!!ஆரம்பத்தில இ.மாலா-ன்னு ஒரு ஆண்ட்டி வருவாங்க!! அழகா இருப்பாங்க அந்த ஆண்ட்டி. இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியல!அப்புறம் வார்த்தை விளையாட்டு..கேம்ஸ் ஷோ, சினிமா குவிஸ், ரபி பெர்னார்டின் நேருக்கு நேர், பிரபலங்களின் பேட்டி என்று புதுப் புது நிகழ்ச்சிகள்!! ஆனா அப்ப பார்த்து நான் பப்ளிக் எக்ஸாம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன்!

இப்போ எத்தனையோ சேனல்கள்..நிறைய நிகழ்ச்சிகள்..
பார்க்க நேரமுமில்லை...பார்க்கும்படியாய் எந்த நிகழ்ச்சியுமில்லை!
விளம்பரங்கள் மட்டுமே ரசிக்கும்படியாயிருக்கிறது இப்பொழுதும் அப்போழுதும்!!


ஒரே வித்தியாசம், நாங்கள் எது பார்த்தாலும், பெற்றோரும் கூடவே இருப்பார்கள். அல்லது அவர்கள் அனுமதியோடு! (டீவிக்கு சென்சார்) அதுவும் குறிப்பிட்ட நேரம் வரைதான்.
பொதுவாக எல்லார் வீடுகளிலும் (அல்லது டீச்சர் வீடுகளில் மட்டுமோ??) கடைபிடிக்கப் பட்டு வந்தது! ஆனால் இப்போது ?

14 comments:

ambi said...

சரியா சொன்னீங்க. சுரபி மாதிரி இன்னோரு புரோகிராம் இதுவரக்கும் எந்தவொரு சேனலிலும் வந்ததில்லை, தரத்திலும் சரி, எத்தனை வாரங்கள் ஆனாலும் அந்த டீமின் டேடிகேஷனும் சரி குறையவே இல்லை.

விஜய் டிவியில் வந்த யாத்திரை (தீப்தி பட்னாயக்) ஒரளவுக்கு ஓகே!

கயல்விழி முத்துலெட்சுமி said...

மலரும் நினைவுகள்.. அதே அதே எங்களுக்கும்..

வினையூக்கி said...

நட்சத்திர வாழ்த்துகள். 15 வருடம் பின்னோக்கிப் போக வைத்துவிட்டீர்கள். ஏக் சே பட்கர் ஏக் நினைவு இருக்கா.. அதுல தமிழ் பேசுற கேரக்டர் வரும். டாப் டென் நிகழ்ச்சி மாதிரி. ஒரே ஒரு தமிழ்பாட்டு போடுவாங்க.. சந்திரகாந்தா, அலிப்லைலா.. எண்டமூரி வீரேந்திரநாத் கதையில் வந்த நிலவைத்தேடி, ரவிராகவேந்தர் லதா,வேனு அரவிந்த நடிச்ச தொடர் கடைசி எபிசோட் வரை செம திரில்லா போனது. செவ்வாய் கிழமை போடுறா டிராமா

rapp said...

மலரும் நினைவுகளா???? :):):)

மங்களூர் சிவா said...

what about super dooper வயலும் வாழ்வும்???

மங்களூர் சிவா said...

/
இப்போ ஊருக்கு போனா,
அந்த சேனல்ல ஒரு பொன்னு வாயை சுத்தி லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு போன்ல பேசிகிட்டிருக்கு..”ஓக்கே..ந்ல்லாயிர்க்கிங்கலா?
என்ன பண்றீங்க..எந்த ஸ்கூல்..ஓக்கே...டெடிக்கேட் பன்றீங்களா-ன்னு!!
/

ஆமாமாம் இப்பல்லாம் எல்லா சானல்லயும், லோக்கல் சானல்லயும் இதேதான்!

தாங்கமுடியலைடா சாமி!

(Except Hema Sinha)

:))

லக்கிலுக் said...

செவ்வாய்க்கிழமை போடுற ட்ராமாவெல்லாம் பார்த்து அந்த காலத்துலேயே எனக்கு தாவூ தீர்ந்தது. எப்படித்தான் ரசிச்சுப் பாத்தீங்களோ தெரியலை :-)

தாமிரா said...

/அவர் கேள்வியை என்னவோ அங்கே பங்கேற்பாளர்களிடம்தான் கேட்பார், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள்../

அருமையான .:பிளாஷ்பேக் காட்சிக‌ள். வாழ்த்துக‌ள் சந்த‌ன‌முல்லை.!

/(Except Hema Sinha)/
யோவ்.. மங்களூர், ஏதாவது சொல்லிரப் போறேன்!

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

/(Except Hema Sinha)/
யோவ்.. மங்களூர், ஏதாவது சொல்லிரப் போறேன்!
/

சொல்லுங்க மாப்பி சொல்லணும்னுதானே இப்பிடியெல்லாம் கமெண்டறது!!

ச்ரியா
(சரியான்றது ஹேமா சின்ஹா ஸ்டைல்ல ச்ரியா ச்ரியா)
:)))

மகேஸ்வரன் S said...

"ஸ்டோன் பாய் " தொடர் பார்த்ததிலையா?...மிஸ்டர் இந்தியாவும் my favorite .. :)

ராமலக்ஷ்மி said...

ரொம்ப அருமையான பதிவு! அப்படியே அந்தக் காலத்துக்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள். அருமையான நிகழ்ச்சிகள் அளவாக வந்த காலம். இப்போ எங்கே நல்ல நிகழ்ச்சிகள் எனத் தேடும் பொறுமை கூட இல்லை, அதனால் அதிகம் பார்ப்பதேயில்லை. சித்ரஹார்,ஒலியும் ஒளியும்,பிராந்தியப் படங்கள் (பலவை வித்தியாசமான கதையம்சத்துடன் சூப்பரா இருக்கும். பிற மொழி அனுபவம் அந்தக் காலத்தோடு போச்சு...), சுரபி,வாக்லே கி துனியா (நுக்கட் பாத்திருக்கீங்களா?),ஓஷின் (நான் ஒன்றிப் பார்த்தது), பாசுவின் க்விஸ்..ஹ்ம்ம் மறக்க முடியுமா?

ஆமா, ஈ.மாலா இப்போ எங்கே?

Arun Nishore said...

Ariel Mr. Gold பார்த்தது இல்லையா முல்லை....cable TV வந்த பிறகும் நான் DD யில் தொடர்ந்து பார்த்த ஒரு நிகழ்ச்சி...

தென்றல் said...

அழகா தொகுத்திருக்கீங்க... சுரபி, சித்தார்த் பாசு..வாவ்!
மலரும் நினைவுகள்!!

ரங்கோலில எப்படா தமிழ் பாட்டு போடுவான் பார்த்துகிட்டு இருக்கிறது..
துக்ளக்கில மகாபாரதம் தமிழ்ல படிச்சிட்டு அடுத்த நாள் DD பார்த்த நாட்கள்... அது ஒரு கனாகாலம்!!

கைப்புள்ள said...

அடடா! நல்ல ஒரு பதிவை இவ்வளோ நாள் மிஸ் செஞ்சிருக்கேன் போலிருக்கே. நல்ல மலரும் நினைவுகள்.

//சுரபி// அருமையான ப்ரோக்ராம். சுருக்கமாச் சொல்லனும்னா இது அந்த காலத்து ஒரு மணி நேரத்து டிஸ்கவரி சேனல். சித்தார்த் காக், ரேணுகா ஷஹானே அவங்க ரெண்டு பேரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விதமே அழகு. அதோட ரேணுகாவின் ஸ்மைலும் ரொம்ப க்யூட்டா இருக்கும்.

//வாக்லே கி துனியா// நல்ல நகைச்சுவை தொடர்.

ஜஸ்பால் பட்டியின் Flop Show - சான்ஸே இல்லை. மறக்க முடியாதது. இப்போ நாம மேனேஜரை டேமேஜர்னு சொல்றதை அவர் 20 வருஷத்துக்கு முன்னாடியே டைட்டில்ல போட்டிருப்பார். Production Manager-ஐ Production Damagerனு போட்டிருப்பாங்க.

//கின்னஸ் ரெகார்ட்ஸ்// நான் ஆ-ன்னு வாயைப் பிளந்துக்கிட்டே பார்த்த ஒரு நிகழ்ச்சி. அதை தொகுத்து வழங்குனவரு பேரு டேவிட் ஃப்ராஸ்ட்.

//பார்வதி கான்// ஞாபகம் இருக்கு. Peenaz Masaniனு ஒரு பாடகி வருவாங்க நியாபகம் இருக்கா?

Didi's Comedy Show, Giant Robot, Telematch - இதெல்லாம் ஞாபகம் இருக்கா?

நல்ல பதிவுங்க. நோஸ்டால்ஜிக் ஆயிட்டேன்.