Monday, July 14, 2008

முதல் நாளின்று....

எந்த குழந்தையுமே ரொம்ப adjustable-தான்!
எதையுமே, நாம் முன்கூட்டியே சொல்லி அவர்களை மனதளவில் தயார் படுத்திவிட்டால் போதும்! இந்த உத்தி எனக்கு, பப்புவின் 9 மாதங்களான போதிலிருந்தே உதவியிருக்கிறது!!
(இதை உத்தி என்று சொல்வதை விட, குழந்தைக்கு விளக்கி சொல்வது நமது கடமை!! )
அதாவது, நாம் சொல்லி அவர்கள் புரிந்துக்கொள்ள ஆரம்பிக்கும்போதிலிருந்து!
அதற்காக எல்லாவற்றிலும் இதை எதிர்பார்ப்பது நிச்சயம் கைக் கொடுக்காது!!

நாங்கள் வேலைக்கு செல்லும்போது, அவளை விட்டு செல்கிறோம் என அவள் அழுவாள்.
அவளிடம் பொறுமையாக, வேலைக்கு போய்ட்டு அம்மாவும்,அப்பாவும் சாயங்காலம் வந்துடுவோம், லைட் போடும்போது வந்துடுவோம். ஆயா கதவு சாத்தும்போது, நாங்க வந்துடுவோம்,ஆபீஸ் போனாதான் பப்புவுக்கு சாக்லேட் வாங்க முடியும். ஜூ-வுக்கு கூட்டிட்டு போக முடியும். ...என்று சொல்ல சொல்ல அழுவதை நிறுத்தினாள். ஆனால், ஒருநாள் சொல்லிவிட்டால் அதற்குபின் அழவே மாட்டார்கள் என்று பொருள் அல்ல!! இது ஒரு routine process! ஆனால் நல்ல ரிசல்ட் இருந்தது! ஒரு வயதிலிருந்து 2 வயது வரை தொடர்ந்தது! சில சமயம் போகும்போது அழுவாள். நாங்கள் சென்றபின், அதை மற்ந்துவிட்டு, விளையாட தொடங்குவாள்!!

அதேபோல் தடுப்பூசி போட டாக்டரிடம் செல்வதற்கு முன்னும் சொல்லி தயார் படுத்த வேண்டும். அதற்கும் நல்ல பலன் இருந்தது! ஊசி போடும் போது, அல்லது டாக்டர் அறைக்கு செல்ல மறுப்பேதும் காட்ட மாட்டாள்! ஊசி போடும்போது, ஒரு சிறு சத்தம் தவிர அழுகையும் கிடையாது!! எனக்கே ஊசி என்றால் பயம். ஆனால் அவள் காட்டும் மெச்சூரிட்டி, என்னை ஆச்சரியப்படுத்தும்!! காயத்தின் தையல் பிரிக்க சமீபத்தில் நேற்று டாக்டரிடம் அழைத்து சென்றோம். "டாக்டர், உன்னை மேலே பாருன்னு சொல்லுவாரு! நீ மேலே அண்ணாந்து காட்டினாத்தான், அந்த பிளாஸ்டர் எடுக்கமுடியும். அப்புறம் காயம் ஆறிப்போய்டும்! ஜாலியா ஸ்கூல்-ல போய் விளையாடலாம்" என்று பொறுமையாக பலமுறை சொன்னேன். எங்கே, கை வைக்க விடமாட்டாளோவென்று எனக்கு பயம். அதனால் "டாக்டர் காயத்தை காட்டுன்னு சொன்னதும், என்ன பண்ணுவே? எப்படி காட்டுவே?"- என்றுப்ராக்டிஸ் வேறு!! எங்களுக்கு முன்னால் சென்ற குழந்தை, உள்ளே செல்ல மறுத்து அழுகை! எங்கே அதை பார்த்து இவளும் அழுவாளோ என நினைத்தேன்.ம்ம்..இல்லை! உள்ளே சென்றதும், டாக்டர் ஹலோ சொல்ல, வணக்கம் சொன்னாள். அண்ணாந்து காட்டினாள். டாக்டர், அவளை பிடித்துக்கொண்டு அவளது கண்களை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு தையலை வெட்டினார்! ஒரு சிறு சத்தம்..சிறு அழுகை..இரண்டு செகண்ட்ஸ்..! முடிந்த பிறகு, "பை, தேங்க் யூ"!! டாக்டர் கண்களை மூடிக்கொள்ள சொன்னது, கூரான வெட்டும் கருவியை பப்பு பார்க்காமலிருக்கவாம்!!


இன்று பப்புவின் முதல் நாள் பள்ளியில்.
கடந்த இரு நாட்களாகவே மனதளவில் தயார்படுத்த தொடங்கியிருந்தேன்.
"காலையில வேன் வரும். குளிச்சுட்டு ட்ரெஸ், தொப்பி போட்டுகிட்டு வேன்ல ஏறிக்கணும்! வேன்ல யார்ல்லாம் இருப்பாங்க?" - நான்!

"ஒரு ஆயா, அப்புறம் நெறைய்யா குட்டி பாப்பாங்க, தம்பில்லாம் இருப்பாங்க!! " - பப்பு!!

(ம்ம்..நல்லா ட்ரெய்னா ஆகிட்டா!! )

இன்று காலை எழும்போதே அழுகை!!
என்ன பப்பு, ஏன் அழறே?
" ஸ்கூல் போ மாட்டேன்!! "

படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூட இல்லை!!!
இத்தனைக்கும், யாரும் அவளிடம் ஸ்கூல் செல்வதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை!

சிறிது நேரம் சிணுங்களுக்குப் பின் ரெடியாகி பள்ளிக்கு சென்றாள்.
உள்ளே செல்வதற்குமுன் ஒரு சிணுங்கல்!
ஆனால், உள்ளே சென்றபின்,, ஒரு சத்தமும் காணோம்...என் குட்டிப்பெண்ணுக்கு,
பள்ளிக்கூடத்தில் இருப்பது பிடித்துபோயிருக்குமாயிருக்கும் :-)!!


பி.கு : Pappu needs all your blessings today as she started going school today!!

7 comments:

மணியன் said...

இன்றைய நாள் இனிய நாளாகவும் நல்ல ஆரம்பமாகவும் அமைய வாழ்த்துகள் !!

நந்து f/o நிலா said...

பப்புகுட்டிக்கு வாழ்த்துக்கள்

கயல்விழி முத்துலெட்சுமி said...

all the best

லக்கிலுக் said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்!

நல்ல ஸ்கூல்லா சேர்த்துட்டீங்களா? வேளச்சேரி ஏரியாவில் எந்த ஸ்கூல் பெஸ்ட்?

பிரேம்குமார் said...

பப்பா எந்த பள்ளிக்கு போறாங்க? பப்புவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

மணியன்,நந்து f/o நிலா, கயல்விழி முத்துலெட்சுமி,லக்கிலுக், பிரேம்குமார் : வாழ்த்துக்களுக்கு நன்றி!!

லக்கிலுக் : நிறைய நல்ல ஸ்கூல்ஸ் இருக்கு! எந்த சிலபஸ் தேர்ந்தெடுக்கறீங்கன்றதை பொறுத்து தரம் மாறுபடுது..Metric/CBSC/ICSE etc!


பிரேம்குமார் : தற்போதைக்கு அருகில் உள்ள மாண்டிசோரி பள்ளிக்கு செல்கிறாள்!!

rapp said...

பப்புவுக்கு என்னோட வாழ்த்துக்கள். நீங்க எழுதுவதை படிக்கும்போது அப்படியே என் சகோதரியை ஞாபகப்படுத்தறீங்க. அவங்க அப்படியே உங்கள மாதிரித்தான் என் நெவ்யூ கிட்ட நடந்துப்பாங்க. அவனும் அப்படியே அவங்ககிட்ட அப்படி ஜாலியா, பொறுமையா, சொன்னத கேட்டு நடந்துப்பான். அதே நாங்க வேற மாதிரி சொன்னாக்கா பயங்கரமா அடம் பண்றது இல்லை வாலுத்தனம் பண்றதுன்னு, செம குறும்பு செய்வான். ரொம்ப நல்ல பதிவு :):):)