Tuesday, July 01, 2008

"அக்கம்-பக்கம் அக்கா" வும் குர்-குரே ஆன்ட்டியும்

பப்புவிற்கு அக்கம் பக்கம் பாட்டு மிகவும் பிடிக்கும்.
த்ரிஷாவையும்!! "அக்கம்-பக்கம் அக்கா" என்பது த்ரிஷாவுக்கு பப்பு வைத்திருக்கும் பெயர்.

akkam_pakkkam-1.mp3 -

பப்பு குரலில் "அக்கம் பக்கம்" !!


ஃப்ளாஷ்பாக்

சிறுவயதில் (பள்ளி நாட்களில்) என்னை கவர்ந்த நடிகை ஜூஹி சாவ்லா! 90களில் மிஸ்.இந்தியாவாக வலம் வந்தவர். ஷாருக்-ஜூஹி காம்போ ம்ம்..!! ஆனால் இப்போது, ஜூஹியை குர்-குரே விளம்பரத்தில் பார்க்கும்போது...ம்ம்..
எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!! (பிடித்த நடிகையை மார்க்கெட் போனபிறகு சீரியலில் பார்ப்பது போல) Dar படத்தில் இந்தப் பாடலில் ஜூஹியை எத்தனை முறை வேண்டுமானால் பார்க்கலாம்.





எதிர்காலத்தில் த்ரிஷாவும் குர்-குரேயை விளம்பரப்படுத்தலாம், யார் கண்டது!!

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பப்புவின் பாட்டு கேட்க இயலவில்லையே..?

Udhayakumar said...

பப்பு பாட்டு சூப்பர். அதுல முடிஞ்சிருச்சின்னு வேற சொல்லறாங்க... so cute!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருக்கு சந்தனமுல்லை.. அவங்க பாட்டுக்கு முன்னால எதப்பாடனும்.. முடிஞ்சிருச்சி இல்லாட்டி அப்பறம்ன்னு எல்லாம் சொல்றதும் அழகு தான்ப்பா.. பப்பு இசையில் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்.. நல்ல பாட்டுன்னு தெரிஞ்சு அத பாடறதுன்னா இசைஞானம் இருக்குன்னு தானே அர்த்தம்.

rapp said...

பப்பு பாட்டு சூப்பர். நீங்க என் சகோதரியோட செட்டுன்னு நினைக்கிறேன். அவங்க அப்படியே உங்கள மாதிரியான விஷயங்களை ரசிப்பாங்களா, அவங்களுக்குக் க்ளோஸ் ஆகணும்னு(உங்க செட்ல எல்லாம் தங்கச்சிங்கள ஒரு விசிறி கணக்கா வெச்சிக்கறதுல ஒரு ஆனந்தம்) இவைகளையே நானும் ரசிச்சுப் பழக ஆரம்பிச்சேன். அப்புறம் தானா இதெல்லாமும் ரொம்ப பிடிச்சி போயிடுச்சி. உங்களோட bally sagoo பதிவெல்லாம் படிச்சப்போ நான் அந்தக் காலக்கட்டத்துக்கே போயிட்டேன்.