Monday, July 28, 2008

என் அம்மா எனக்கு செய்ததில்...

எதை நான் பப்புவுக்கு செய்யமாட்டேன்.....??

பப்புவின் அனுமதியில்லாமல் காது குத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம்.
இன்று வரை அவளுக்கு காது குத்தவில்லை. ஒருவேளை எங்கள் ஆசைக்காக
இப்பொழுது குத்திவிட்டு பிற்காலத்தில் அவளுக்கு பிடிக்கவில்லையென்றால்!!
அவளாக எப்பொழுது ஆசைப்படுகிறாளோ அப்பொழுது காதுக் குத்திக் கொள்ளட்டுமென்று விட்டு விட்டோம். இந்தியாவில் காது குத்திக்கொள்ளாத பெண்கள் யாருமுண்டா...
பப்புவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அந்த லிஸ்டில்! ஆனால் என்னுடய இந்த முடிவை விரைவில் மாற்றி கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது..இந்த அலங்கரப் பொருட்களில் அவள் காட்டும் ஆர்வம்...அதுவும், நான் கம்மல் மாற்றினால், முதலில் கவனிப்பவள் அவள் தான்!!


இந்த லிஸ்ட் இன்னும் வளரலாம்...!!

9 comments:

rapp said...

காதுகுத்தலை ஆசியாவைத் தவிர மற்ற இடங்கள்ல குழந்தைகள் கொஞ்சம் நல்லா பெருசானாதான் குத்தறாங்க. ஆனா மருத்துவ ரீதியா நாம சின்ன வயசுல குத்தறதுதான் ரொம்ப நல்லதுன்னு சொல்ராங்களேங்க. நான் கேள்விப்பட்டதை சொல்றேன், நீங்களும் விசாரியுங்கள். ஆனா குட்டி பாப்பாவுக்கு அழகா பட்டுப்பாவாடை போட்டு, காதில் குட்டியூண்டு தோடுள்ள கம்மல் போட்டா எவ்வளவு அழகா இருக்கு, அதால நான் பப்பு சைட்தான் :):):)

நானானி said...

அம்மாவைப் பார்த்தே பெண்குழந்தைகள் தங்களையும் அழகு

செய்து பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ராப் சொல்வது போல் சின்ன வயசில் குத்துவதுக்கு விஞ்ஞான
ரீதியாக ஒரு காரணமும் சொல்வார்கள்.
(என்னனு மறந்து போச்சே!)
//குட்டிப் பாப்பாவுக்கு அழகா பட்டுப் பாவாடை போட்டு, காதில் குட்டியூண்டு தோடுள்ள கம்மல் போட்டா எவ்வளவு அழகா இருக்கு, அதால நான் பப்பு சைட்தான்//
இதே நானும் ரிப்பீட்டு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலங்க.. இப்ப நிறையபேரு இப்படித்தான் யோசிக்கறாங்க.. காது குத்தரதா இருந்தாலும் வலிக்காம இருக்க க்ரீம் தூக்கிக்கிட்டு... டென்சனாகிகிட்டு.. இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கறேன்னா எனக்கும் வயசாகிடுச்சுன்னு நினைக்கிறேன்..

ஆனா சின்னவயசில் குத்தினா வலி இருக்காது சீக்கிரம் புண் ஆறிடும் குழந்தை கீழ விழுந்தா அழுகிற மாதிரி அது அடுத்த நிமிசம் மறந்து விளையாடுன்னு தான் நினைச்சுக்கிட்டு என் பிள்ளைங்க ரெண்டுபேருக்கும் குத்தினேன்..பையனுக்கு மட்டும் 2 மாசத்துலயே கழட்டிட்டேன். ஏன்னா அவன் இழுத்தான் ..

சந்தனமுல்லை said...

ஆமா ராப் & நானானி..அப்படிதான் சொல்றாங்க!! முத்துலெட்சுமி...உண்மைதான்...வலிமறந்துடும்..பிஞ்சு காது இல்லையா!
சீக்கிரமே என் முடிவை மாத்திக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்!!
:-)

ARUVAI BASKAR said...

காது குத்துவதால் கோபம் குறையும் என்பது ஐதீகம் !
அதுமில்லாமல் காது குத்தி பல வருடம் கழித்து கூட காதில் கம்மல் மாட்டுவதை நிறுத்தினால் அந்த ஓட்டை அடைந்து விடும் .
ஆகவே தைரியமாக அதனை செய்யலாம் !
பிற்காலத்தில் தேவை இல்லை என்றால் பப்பு அடைத்து கொள்ளட்டும் !

ARUVAI BASKAR said...

காது குத்துவதால் கோபம் குறையும் என்பது ஐதீகம் !
அதுமில்லாமல் காது குத்தி பல வருடம் கழித்து கூட காதில் கம்மல் மாட்டுவதை நிறுத்தினால் அந்த ஓட்டை அடைந்து விடும் .
ஆகவே தைரியமாக அதனை செய்யலாம் !
பிற்காலத்தில் தேவை இல்லை என்றால் பப்பு அடைத்து கொள்ளட்டும் !

babu said...

நீங்கள் உங்கள் முடிவை கூடிய சீக்கிரம் மாற்றிகொள்வது நல்லது.
காது குத்துவதால் எந்த பிரச்னையும் இல்லை மாறாக அது ஒரு நல்ல விஷயம் என்று அறிவியல் பூர்வமாக நிருபித்திருக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் குழந்தயை துன்புறுத்துவதாக நினைத்துகொண்டிருக்கிறீர்கள் அது அவ்வாறு இல்லை ,ஒரு சில நிமிடங்களிலேயே குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.
நான் என் மகனுக்கு போன வருடம் காது குத்தினேன் ,நாம் காதணி அணியாமல் விட்டால் தானாகவே அந்த ஓட்டை அடைத்துக்கொண்டு விடும்.

தமிழ்நெஞ்சம் said...


I like this post.. piercing ear..

uma kumar said...

என் மகனுக்கும் காது குத்தவில்லை. நிறைய‌ பேர் காதில் pressure point உள்ளது. குழ‌ந்தைக்கு ந‌ல்லது என்று.கேட்கவில்லை.
so ur daughter has company