Wednesday, August 06, 2008

பப்பு டைம்ஸ்

பாட்டு மாதிரி - பப்புவுக்காக


அப்பாக் கரடி ஒன்று
வேகமாய் வந்து
பப்புக்குட்டியை தூக்கிக்கொண்டது!!

அம்மாக் கரடி ஒன்று
மெதுவா மெதுவா வந்து
பப்புவுக்கு முத்தம் குடுத்தது!

குட்டி கரடி ஒன்று
ஓடு ஓடி வந்து
பப்புவுக்கு
கிச்கிச் பண்ணுது!!

பாடல் வரிகள், இசை - நானேதான்!!
(இந்த பாட்டுக்கு ஓடி வந்து, பின் மெதுவாக வந்து, கிச்கிச் பண்ண வேண்டும், she will start giggling)!!

கதையில்(தற்போது கோல்டிலாக்ஸ்) , பாப்பா வந்தால் அது அவள்தான் என நினைத்துக் கொள்கிறாள் :-)!

பள்ளி மற்றும் நண்பர்கள் :


(ஸ்கூலுக்கு ரெடி!!)


பள்ளி, சேர்ந்த இரண்டாம் நாளிலிருந்து பிடித்துப் போனது!
பள்ளி சென்றதிலிருந்து தானாக பல் துலக்குவது, சாப்பிடுவது, செருப்பு அணிவது என
அவள் வேலையை செய்கிறாள்..எவ்வளவு நாள் என தெரியவில்லை!!
பள்ளியில், "ஒரு அண்ணா தண்ணி கேட்டான், அவன் கையை பிடிச்சி அடிச்சிட்டேன்" என்றாள்.


நண்பர்கள் பெயர்கள் : வெண்மதி தான் அவள் சொன்ன முதல் பெயர். பின்னர் அந்த லிஸ்ட் தற்போது சாந்தி, விஜய், தனுஷ், ஆகாஷ் (இன்னும் சினிமா நடிகர்கள் பெயர் தெரியவில்லை..கமல் தவிர)என்று வளர்ந்து வருகிறது!!


கிரியேட்டிவிட்டி கார்னர் :

1 :

என் அம்மா சமையல் செய்யும்போது கிடுக்கி உபயோகிப்பதை பார்த்த பப்பு,
அவள் சமையலுக்கு உபயோகித்த கிடுக்கி இது!! முதலில் எனக்கு புரியவில்லை..
என்னா பப்பு இது என்றால், சுடுது இல்ல, அதுக்குதான் என்றாள்...



2 :

பாயை சுவரில் சார்த்தி வைத்து பேபி பொம்மையை சறுக்க வைக்கிறாள்.
அப்படியே இருந்தால் பரவாயில்லை..பொம்மை வேகமாக சறுக்குவதை பார்த்து,
அவளுக்கும் சறுக்க ஆசை வர, எங்கள் பாடு பெரும்பாடாகியது!! பாயை இருவர்
பிடித்துக் கொள்ள, அவளை ஒருவர் பிடித்துக் கொள்ள...


3 :



இப்படித்தான் நாங்கள் (நானும் பப்புவும்) டீவி பார்ப்போம்..புத்தகம் படிப்போம்!!

2 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பப்பு நாலுவிசயம் தெரிஞ்சுகிட்டா..
தனக்குன்னு பாணி வேறயா ... :)

கானா பிரபா said...

;) பப்பு பின்னீட்டே