பிறர் புரிந்துக்கொள்ள இயலாத பப்புவின் சில பேச்சுக்கள் எனக்கு மட்டும் புரிவது எப்படி?!
பப்புவை கண்ணாடிக்கு அருகில் கொண்டு சென்றால், நான் பப்புவை மட்டுமே பார்க்கிறேனே, என்னை பார்க்க மறப்பதெப்படி?!
என் ஆயாவின் மாத்திரைகள் கீழே விழுந்த இடம் பப்புவின் கண்களுக்கு மட்டும் தெரிவது எப்படி??
உறவினர்கள் போனில் பேசும்போது கூப்பிட்டால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச மறுக்கும் பப்பு, என் மொபைலில் யாரும் பேசாத பொழுது, அவர்கள் பேசுவதுபோல் தானாக கற்பனை செய்து மணிக்கணக்கில் பேசுவது ஏன்?
Saturday, August 23, 2008
ஏன்/எப்படி ??
Labels:
ஏன்னு கேட்குறேன்,
பப்பு,
லைஃப்
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


8 comments:
1. ஏன்னா நீங்க அவளோட அம்மா.
2. " " "
3. எல்லா குட்டீஸும் இப்படித்தான் . என் பெண் சின்னவளா இருக்கும் போது கீழ மொசைக் மாதிரியே இருக்கும் சில பொருள்களையும் தேடி தந்துவிடுவாள்..இப்ப 10 வயது. எதாவது கண் முன்னே பெரிசா தூரத்தில் இருந்து தெரியும் அள்வு இருந்தாக்கூட எங்கருக்கும்மா நீயே எடுத்துக்கொடுன்னு கேட்பா.. :)
3. அவர்களிடம் பேசும் போதுஇவங்களுக்கு அவர்களை இமேஜினேஷன்செய்வதும் பதில் சொல்வதும் ஒரே நேரத்தில் செய்யமுடிவதில்லையோ என்று தோன்றுகிறது. மகனுக்கு நம்மைபோலவே நடந்துகொண்டே பேசவேண்டும். இல்லாவிட்டால் போன் ஒயரில் விளையாடவேண்டும் அதை செய்யும் போது அவ்னால் சரியாக பதில் சொல்லமுடியாமல் சில சம்யம் முழிப்பான். :)
1) ஏன்னா நீங்க அவளோட அம்மா
2) வயிற்றின் உள்ளே இருக்கும் போதே அவளை ஊடுருவிப் பார்த்தவர் நீங்க
3) காரணம் சீரியல்,சினிமா,பேப்பர்,பிளாக் போன்ற சிந்தனைச் சிதறல்கள் அவளுக்கு இல்லை.
4) நம்முடைய உலகத்தில் அவர்கள் இருப்பதைவிட்ட அவர்களுடைய உலகத்தில் நாம் இருப்பதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்கும்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலெட்சுமி மற்றும் அப்துல்லா!!
:-)
1. ஏன்னா அவள்தான் உங்க உலகம்.
அவளுக்காகவே ஒரு ப்ளாக் வைத்து அவளது ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக அன்பு மிகக் கவனித்து அத்தனையையும் பதிந்து வரும் ஒரு அபூர்வ அம்மா.
2.இதற்கும் முந்தைய விடையே சரியாகப் பொருந்தது.
3.இது குழத்தைகள் உலகத்துக்குள் குழந்தையா நாம போய் பார்த்தால்தான் புரியும்:)))!
4.என் தங்கை பெண் நடந்து கொண்டு அப்படியே அவள் அம்மாவை இமிடேட் செய்தபடி பேசும் அழகு இருக்கே காண கண் கோடியும் கேட்க காது கோடியும் வேணும்ங்க:))!
ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும் . இன்றைய குழந்தைகள் நம்மைவிட புத்திசாலித்தனம் மற்றும் குறும்புத்தனத்தில் ஒரு ஸ்டெப் அதிகம் தான் .
அதனால் கூட இருக்கலாம் !!!!!
இங்கே என்ன கேள்வி பதிலா நடத்திக்கொண்டிருக்கிறார் சந்தனமுல்லை? வாழ்வின் அத்தனை ரகசியங்களையும் தெரிந்துகொண்டுள்ள போற்றுதலுக்குரிய ஒருவர் சந்தனமுல்லை. பப்புவுக்கு அவரும், அவருக்கு பப்புவும் வரம். வாழ்த்துகள் அம்மா.!
சரிதான் நீங்கள் சொல்வது, பாஸ்கர்!!
சுட்டித்தனமும், புத்திசாலித்தனமும் இன்றைய குழந்தைகளுக்கு அதிகம்தான்!!
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி!!
//வாழ்வின் அத்தனை ரகசியங்களையும் தெரிந்துகொண்டுள்ள போற்றுதலுக்குரிய ஒருவர் சந்தனமுல்லை//
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே!? :-))
Post a Comment