Monday, August 11, 2008

பப்பு டாக்கீஸ்

"எனக்கு புழுதிவாக்கம் வேணும்" என்று பப்பு சொன்னபோது
ஐய்யயோ..அட்ரஸ் சொல்லிகொடுத்தது தப்பா போச்சே என்றுதான் தோன்றியது!!
அதுவும் டீவிக்கு பின்னால் கைக்காட்டியபோது எதை சொல்கிறாள் எனபதை உணர சில நிமிடங்கள் ஆயிற்று எனக்கு!!

பப்புவுக்குத் தெரியாமல் வைக்க வேண்டிய பொருட்களை அங்கு ஒளித்து வைப்பது வழக்கம்.
பார்த்தால், ஏதோ நீட்டிக் கொண்டிருந்தது....ஓ..அதுதான் புழுதிவாக்கமா..
சோழிகள் தொலைந்து போகின்றனவென்று மறைத்து வைத்திருந்த பல்லாங்குழிதான் புழுதிவாக்கமாகியிருக்கிறது மறைந்திருந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக!!


வாழ்த்துக்கள்...பல ப்ளாக்குகளையும், வரலாற்றையும் இனி ஆக்கிரமிக்கபோகிற இவருக்கு!!!

5 comments:

லக்கிலுக் said...

புழுதிவாக்கம் மடிப்பாக்கத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. பப்பு எப்படி பல்லாங்குழியை ‘புழுதிவாக்கம்' என்று சொன்னாள் என்று யோசித்து யோசித்து மண்டை காய்கிறது :-)

சந்தனமுல்லை said...

எனக்கு அதுதான் புரியல..:-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ ஓ.. இது மாதிரி என் பையனும் வித்தியாச வித்தியாசமா சிலதுக்கு பேரு வைக்கிறான்.. கல்கண்டுக்கு கட்லெட்.ன்னு பேராக்கும்...

லக்கிலுக் said...

//எனக்கு அதுதான் புரியல..:-)//

பப்பு க்ளாஸில் புழுதிவாக்கத்திலிருந்து வரும் குட்டீஸ் யாராவது இருக்கலாம்!

நித்யகுமாரன் said...

பப்புவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

உங்களின் அத்தனை பப்பு பதிவுகளையும் வாசித்தேன். என் பையன் ஹரீஷ் (14 மாதம்) பற்றி நிறைய எழுதி வைக்கலாமென்று தோன்றுகிறது.

குழந்தைகளின் உலகம் நம்மை ஆட்கொள்ளும் விதம் அபாரம்.

மிக்க நன்றி.

அன்புடன் நித்யகுமாரன்