Monday, August 18, 2008

பப்புவின் பாட்டிகளும் ஒரு வாரயிறுதியும்

எனது பாட்டி ஒரு மாறுதலுக்காக ஆம்பூர் சென்றுவிட, முகிலின் பாட்டி
பப்புவை பார்த்துக் கொள்ள வந்திருந்தார்கள். டிபிகல் கிராமத்துப் பாட்டி..
புடவை பின் கொசுவம் வைத்துக் கட்டி, மூக்குத்தி அணிந்து வெற்றிலை போட்டிருப்பார்கள்.
பப்புவுக்கு அவர்கள் இரு பக்கத்திலும் மூக்குத்தி அணிந்திருந்தது மிகவும் வித்தியாசமாயிருந்தது போல!எப்போதும் அதையே கேட்டுக்கொண்டிருந்தாள்.
மேலும், அவர்கள் வந்து தங்குவது இதுவே முதல் தடவை. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருப்பதால், பப்பு சுண்ணாம்பை எடுத்து விடுவாளோவென்று பயத்தில் தங்குவது இல்லை! இப்போது கொஞ்சம் புரிந்துக்கொள்வதால் தயக்கம் இல்லை!
ஆனால், பப்பு அவர்களிடம் நன்றாக மழகினாள்..புத்தகத்தை எடுத்து சொல்லித் தருவது,
அவர்களிடம் கதை கேட்பது, சாமான் வைத்து விளையாடுவது என்று நன்றாக ஒட்டிக் கொண்டாள். இந்த மூன்று நாட்கள் விடுமுறைக்கு எனது அம்மா, பெரிம்மா வந்தபின் அவர்கள் ஊருக்குக் கிளம்பினார்கள்! அவர்கள் வந்த பின் அவர்களிடம் அவளது புது விளையாட்டுச் சாமான்கள், கதை என்று தொடர்ந்தது!!இப்போது அவர்களும் சென்றபின், எனது ஆயாவிடம் அவளது விளையாட்டுகள், கதைகள் தொடர்கின்றன...
”பெரிய ஆயா எங்க எங்கன்னு கேட்டேன்” என்று !!

ம்ம்..எனது செல்ல தேவதை, இரு வீட்டாரிடமும் நேசமுடன் பழகுவது மனதுக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது!!

***********************************************************************
ஆண்பாவம் என்ற படத்தினை பார்த்தேன். அதில் வரும் அந்த பாட்டி காமெடி, முட்டுதா காமெடியை முன்னரே பார்த்திருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாக முழு படத்தினையும் பார்த்தேன். என்ன காமெடி..கிராமத்துச் சூழல், அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் போல எல்லாரும்..சீதா அடக்கமான அழகோடு...அனைவரது இயல்பான் நடிப்பு என கலக்கல் படம்!!அதுவும் அந்த பாட்டி பாட்டு..சான்சே இல்லை! இப்போ வர்றதெல்லாம் என்ன படம் என்று எண்ன வைத்தது!!இன்றைக்கு பார்த்தால், கானா பிரபா அந்தப் படத்தின் இசையை தொகுத்திருக்கிறார். அதில், பின்னூட்டங்கள் பார்த்தால்,
ஆயில்யன் மனப்பாடமாய் சொல்கிறார்!! :-)

***********************************************************************


ஏன் அம்மாக்கள் மட்டும் எப்போதுமே நாம மூணு தோசை போதும்னு சொன்னா, நாலாவதா ஒரு தோசை சுட்டு வச்சிட்டு "சாப்பிட்டுடுமா, செஞ்சிட்டேன்" என்கிறார்கள்??

19 comments:

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

மழகினாள்//

இதை எழுதும் போது தெரிந்தே எழுதினீர்களா அல்லது டைப்பிங் மிஸ்டேக்கா என எனக்குத் தெரியவில்லை.ஆனால் ஓரு மழலை பழகுவதற்கு சரியான வார்த்தை.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அஞ்சலை அம்மாள் எம்.எல்.ஏ உங்க பாட்டியா?

வல்லிசிம்ஹன் said...

பப்பு குட்டி பாட்டியோட பாழகுவது ஆனந்தமே. அதுக்கு இந்தப் பாட்டி அந்தப் பாட்டின்னு தெர்யாதே யார் அதுகிட்ட அன்பா இருக்காங்களோ விளையாடுகிறார்களோ அவர்களிடம் ஒட்டிக் கொள்ளும்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில தானே;0)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஏன் அம்மாக்கள் மட்டும் எப்போதுமே நாம மூணு தோசை போதும்னு சொன்னா, நாலாவதா ஒரு தோசை சுட்டு வச்சிட்டு "சாப்பிட்டுடுமா, செஞ்சிட்டேன்" என்கிறார்கள்??
//

innum 15 varusham appuram pappu vum ithee question keekkum :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பாட்டிக்கூட விளையாடறதுன்னா குழந்தைகளுக்கு குஷிதானே.. என் பொண்ணு சின்னதா இருக்கும் போது வளையல் கடை,, ட்ரெஸ் க்டை எல்லாம் விளையாடுவா..பாட்டி்கூட.. :)
ஆண்பாவம் சான்ஸே இல்ல.. பாண்டியராஜனே நினைச்சாலும் இப்ப அது மாதிரி படம் எடுக்க முடியலயே...

சந்தனமுல்லை said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா : நன்றி..எழுத்துப் பிழைதான்.

//அஞ்சலை அம்மாள் எம்.எல்.ஏ உங்க பாட்டியா? //

ஆமாம்..என்னோட அம்மாவோட பாட்டி!


//innum 15 varusham appuram pappu vum ithee question keekkum :))//

இருக்கலாம் :-))

சந்தனமுல்லை said...

வல்லிசிம்ஹன் : ஆமா உண்மைதான்!!
ஆனா எனக்கு ஏன் தயக்கம்னா, எப்பபவாவது வர்றவங்க..எப்படி பழகுவாளோன்னுதான்!! :-)

சந்தனமுல்லை said...

முத்துலெட்சுமி : பாட்டிங்கதான் பெஸ்ட் ப்ளேமேட்ஸ்!! என்ன சொன்னாலும் கேட்பாங்க!! :-)

கானா பிரபா said...

//அதில், பின்னூட்டங்கள் பார்த்தால்,
ஆயில்யன் மனப்பாடமாய் சொல்கிறார்!! :-)//

இல்லையா பின்னே, ஆயில்ஸின் வாழ்க்கை தானே படமாச்சு

சந்தனமுல்லை said...

ஓ..:-)))
ஆயில்ஸ் எந்த " பாண்டி "??

தாமிரா said...

பப்புவைப் பற்றி படிக்கும் போதெல்லாம் மனது இறகைப்போல லேசாகிறது. நன்றி சந்தனமுல்லை, வாழ்த்துகள்.!

ஆயில்யன் said...

//ஏன் அம்மாக்கள் மட்டும் எப்போதுமே நாம மூணு தோசை போதும்னு சொன்னா, நாலாவதா ஒரு தோசை சுட்டு வச்சிட்டு "சாப்பிட்டுடுமா, செஞ்சிட்டேன்" என்கிறார்கள்??//

அருமை!

என் பாட்டி கேட்ட சொற்கள் மீண்டும் வந்து ஒலிக்கிறது!

ஆயில்யன் said...

/கானா பிரபா said...
//அதில், பின்னூட்டங்கள் பார்த்தால்,
ஆயில்யன் மனப்பாடமாய் சொல்கிறார்!! :-)//

இல்லையா பின்னே, ஆயில்ஸின் வாழ்க்கை தானே படமாச்சு
//

அ(ட)ப்பாவி அண்ணா எல்லா மேட்டரையும் சொல்லிபுட்டீகளா??????

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
ஓ..:-)))
ஆயில்ஸ் எந்த " பாண்டி "??
/


கானா பெரிய பாண்டி !

ஆக்சுவலா நான் சின்ன பாண்டி!

பட் கிளைமேக்ஸ்ல பெரிய பாண்டியை ஊரைவிட்டு அடிச்சு தொரத்திடுவாங்க ஏன்னா சின்ன பாண்டிதான் ரொம்ப நல்லவன் அப்பாவின்னு தெரிய வந்துடும்ல!

தமிழன்... said...

அடடா...
இப்படி பதிகிற விசயங்களும் சுவையாகத்தான் இருக்கிறது..:)

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா!! :-)

சந்தனமுல்லை said...

ஆயில்யன் said...
/கானா பிரபா said...
//அதில், பின்னூட்டங்கள் பார்த்தால்,
ஆயில்யன் மனப்பாடமாய் சொல்கிறார்!! :-)

இல்லையா பின்னே, ஆயில்ஸின் வாழ்க்கை தானே படமாச்சு


அ(ட)ப்பாவி அண்ணா எல்லா மேட்டரையும் சொல்லிபுட்டீகளா??????//


கள்ளக் கவுன்டர், திருட்டு பேட்டரி..அப்புறம் திருட்டு முழி எல்லாமே. :-)))))

சந்தனமுல்லை said...

ஆயில்யன் said...// கானா பெரிய பாண்டி !

ஆக்சுவலா நான் சின்ன பாண்டி! //

ஓ...பெரிய பாண்டியை அடிச்சு துரத்திற்கான எல்லா ஏற்பாடும் நீங்கதானா??

சந்தனமுல்லை said...

தமிழன் : நன்றி!!