Tuesday, August 26, 2008

நீ கொழந்தையா இருக்கச்சே....ஆவிதான் கொடுத்தேன்!!



படம் : http://vikatangroup.blogspot.com


ஆனந்தவிகடனை பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தபோது பப்பு அதை பிடுங்கினாள்.
அவளிடம் கொடுத்து விட்டு, சின்ன புத்தகத்தை படிக்கத்துவங்கினேன். பப்பு பெரிய புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு பக்கம் கிழிந்து விட்டது!!

பப்பு ஏன் புக்கை கிழிச்சே??

நான் கிழிக்கலே..அது கிழிச்சிகிச்சி!!


பாத்து திருப்பனும். இப்படியா கிழிப்பாங்க??

அதுதான் கிழிச்சிகிச்சி..ஏன் கிழிச்சிகிச்சி??

ம்ம்ஹூம்!!

இப்போதெல்லாம், நான் சின்ன எடிஷனைப் படிக்கிறேன். பப்பு, பெரிய எடிஷனை படிக்கி(!)றாள்!!

I love the way she pronounces "ஆனந்த விகடன்”!!

ஃப்ளாஷ்பேக்:

எனது பெரிம்மா சொல்வார்கள், நான் எனது 5ஆவது வயதில் ஆனந்த விகடனை படிக்க ஆரம்பித்தேன் என்று!!மெரினா எழுதின ஒரு நகைச்சுவை தொடர் விரும்பிப் படித்த நினைவு!!எங்கள் குடும்பமே ஒரு ஆனந்த விகடன் குடும்பம். பழைய ஆனந்த விகடன்களை சேர்த்து வைத்திருந்து, அடிக்கடி அவற்றிலிருந்து சிறுகதைகள், தொடர்கதைகள் என பிரித்து தொகுப்புகளாக தைத்து வைக்கும் பழக்கம் சமீப காலம் வரை தொடர்ந்தது.
ஸ்டெல்லா புருஸின் “அது ஒரு நிலாக்காலம்” தொடர்கதை அப்படித்தான் பொழுதுபோகாத ஒரு மதியவேளையில் புத்தக அலமாரியை நோண்டிக் கொண்டிருந்த போது கிடைத்த தொகுப்பிலிருந்து அறிமுகமாயிற்று! அந்தத் தொடர் வந்தபோது
நான் பிறந்திருக்கவில்லை.இப்போது வரும் சின்ன விகடனின் கதைகள் ஒருவேளை அந்தத் தொகுப்புகளில் தேடினால் கிடைக்கலாம்! ஓரிரு வருடங்கள் நான் பொதுத்தேர்வு எழுதிய வருடங்கள் மட்டும் வீட்டில் ஆனந்த விகடன் பார்த்த நியாபகம் இல்லை!!

குப்பை என திட்டினாலும், ஆவி படிக்கும் பழக்கத்தை யாராலும் விடமுடியவில்லை எங்கள் வீட்டில் பப்புவிலிருந்து எனது பாட்டிவரை!!

3 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\அதுதான் கிழிச்சிகிச்சி..ஏன் கிழிச்சிகிச்சி??//

:))

சந்தனமுல்லை said...

வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி!!

ராமலக்ஷ்மி said...

பப்புவை மட்டுமின்றி தலைப்பையும் ரொம்ப ரசிச்சேன்.

நான் கல்லூரியில் இருந்தப்ப ஆவி, குமுதத்தில் வந்த பல தொடர்களை சேகரித்து பைண்ட் பண்ணிய கலெக்ஷன் என்னிடமும் உண்டு. அவை எல்லாம் ஊரில் உள்ளன. அவற்றை திரும்ப இங்கு கொண்டுவர உள்ளேன் இதைப் படித்ததும்:)! நன்றி.