Tuesday, August 26, 2008

தேவதைக்கதைகளைத் தேடி


பப்புவுக்கு ஃபெய்ரி டேல்ஸ் சொல்லலாமென்று புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்!!
திகைப்புதான் மேலிட்டது!! ஏனெனில், நான் பார்த்த எல்லா கதைகளிலும் ஏதாவதொரு நெகடிவ்
அம்சம் இருக்கிறது!!

புத்தகத்தில் முதலில் இருந்தது ஸ்நோவொய்ட் கதை.
அதை சொல்லவதற்கு எனக்கு சற்றும் விருப்பமில்லை!
"who is the fairest of them all"
வெண்ணிறம்/சிவப்பு தான் உயர்ந்தது என்று சொல்ல தோன்றவில்லை!
மேலும், stepmother/சித்தி கேரக்டரும்..அதுமில்லாமல் பப்புவுக்கு ஒரு
உறவு முறையில் (முகிலின் தம்பி மனைவி!) சித்தி இருக்கிறார். அந்த சித்தியையும்,
witch சித்தியயும் ரிலேட் செய்துக் கொண்டால்...குழந்தைகளின் சிந்திக்கும் திறனை
நாம் குறைத்து மதிப்பிட முடியாது!!

அடுத்ததாக, சின்ரெல்லா!!
இதுவும் நெகடிவ் கதைதான்..அம்மா இல்லாமல் குழந்தை தனித்து விடப்படுதல்..
அப்பாவின் அரவணைப்பு இல்லாமை, சித்திக் கொடுமை!!
ஓ..மை காட்!! இந்த கதையும் சொல்லவதற்கு ஏற்றதல்ல தற்சமயத்திற்கு என்னை பொறுத்தவரை!!இவை மட்டுமல்ல..எந்த தேவதைக்கதைகளை எடுத்தாலும் ஏதாவதொரு நெகடிவ் இருக்கத்தான் செய்கிறது!! சில கதைகளில் அது குறைவாயிருக்கும்....ஸ்லீப்பிங் ப்யூட்டி போல்! அதில் நாம் சொல்லும் விததில் அந்த நெகடிவிட்டியை போகஸ் செய்யாமலிருக்கலாம்!!

தற்சமயத்திற்கு எனக்கு கை கொடுப்பது கோல்டிலாக்ஸ் மற்றும் தவளை மாமா (The frog prince!!), jungle book கதைகள்! ஆனால் பப்புவிற்கு தவளையை கிஸ் செய்வது கற்பனைக்கு அப்பாற்பட்டதாயிருக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடாததாயிருக்க வேண்டும்!

ஆனால் எவ்வளவு நாள் கோல்டிலாக்ஸ் கதை ஓடும்!!
சிங்கம்/நரி கதைகள் என்றாலும் அதிலும் வன்முறைதான் தலைவிரித்தாடுகிறது!!
Jataka tales CD வாங்கினால் வேடன் அம்பு எறிவதும் சிங்கம் விலங்குகளை அடித்துக் கொல்வதுமாயிருக்கிறது!!

பப்புவிற்கு ஒரு அழகான கற்பனை உலகத்தை கண்முன் விரிக்கக்கூடிய அன்பான கேரக்டர்கள், விந்தை மனிதர்களுடன் கூடிய மாய உலகத்தை பற்றியக் கதைகள், ஆச்சர்யங்கள் நிறைந்த கதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்!!

15 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அண்ணாவின் பெண்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்த போது நானும் நினைத்தேன்..ஆனால் அவர்கள் விடுமுறையில் வந்ததால் சும்மா ஏதோ என் கற்பனையில் கதை சொல்லிச் சமாளித்தாயிற்று. நீங்களும் முயற்சிக்கலாம்.

ரஷ்யக் கதைப் புத்தகங்கள் கிடைக்கிறதாவென்று பாருங்கள். இங்கே சில கதைகளுண்டு.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

scroll down to "CHILDREN'S BOOKS" (abt 2/3 down the page)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நீங்க சொல்றமாதிரி நானும் யோசிச்சிருக்கேன்..சிண்ட்ரெல்லா கதை சொல்லும்போது எல்லாரும் அப்படி இருக்கமாட்டாங்கன்னு ஒரு வரி சேர்த்துப்பேன்.. கோல்டிலாக்ஸ் கதை சொல்லும்போது சேட்டைய பாரு இந்த பொண்ணுக்கு யாரோ வீட்டில போய் யாரும் இல்லாதப்ப இவ எல்லாத்தை சாப்பிட்டு காலி செய்து சேரை உடைச்சுனு ஒரு வரி சேர்த்துப்பேன்.. என்ன செய்ய ? ரொம்ப யோசிக்கறோமோ நாம :)

ராமலக்ஷ்மி said...

உங்கள் கருத்து சரியே. நம் காலம் போல இல்லை. இந்தச் சின்ன வயதிலேயே குழந்தைகளும் ரொம்ப ஷார்ப். நீங்கள் சொல்ற மாதிரி நினைத்து கேள்விகள் கேட்பாங்க.

தாமிரா said...

உங்களின் ஒவ்வொரு பதிவுகளிலும் அழகும், மென்மையும், ரசனையும் பொங்கி வழிகிறது. ஆயிரமாயிரம் பப்புக்களுக்காக நீங்களே சிறந்த கதைகளை உருவாக்கலாம். உங்களால் செய்ய முடியும் என நம்புகிறேன், முயலுங்கள்.! சொந்த தேவைக்காகவும், திருப்திக்காகவும் செய்யப்பட்ட/கண்டுபிடிக்கப்பட்ட‌ விஷயங்கள்தான் காலத்தை வென்று உலகிற்கு உதவியவாறே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. யாரையும் இந்த அளவில் நான் பாராட்டியதில்லை, இதை கிண்டல் என எண்ணவேண்டாம்.

ரசிகன்

சந்தனமுல்லை said...

ஷ்ரேயா..கற்பனைக் கதைகள் நிறைய உண்டு! ஆனாலும் தேவதைக்கதைகளுக்கு ஒரு க்ரேஸ்...நன்றி சுட்டிகளுக்கு. என்னிடம் அந்த ரஷ்ய கதைகள் புத்தகவடிவிலே இருக்கிறது. சொல்லப் போனால், ஏழு நிறப்பூ எனது பேவரிட். பப்புவுக்கு ஷேன்யா எனப் பெயரிட வேண்டும் என ஆசைப்பட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!!

சந்தனமுல்லை said...

முத்துலெட்சுமி..:-)..ஆம் அப்படித்தான் நாம ஒரு இம்ப்ரெசன் கொண்டு வர வேண்டியிருக்கு!! ஆமா, ஏன்னா பசங்க ரொம்ப யோசிக்கறாங்களே?!

சந்தனமுல்லை said...

ராமலஷ்மி.. ஏன் ஏன்னு கேட்கறதுக்கே பதில் சொல்ல முடியல! ;-) புரிதலுக்கு நன்றீ!!

சந்தனமுல்லை said...

தாமிரா..மிக்க நன்றி!! என் வலைப்பூ எப்படியிருக்க வேண்டுமென விரும்பினேனோ அதை அச்சீவ் செய்திருப்பதில் மகிழ்ச்சி!! கதைகள்..ம்ம்..எழுதலாம்..யோசித்திருக்கிறேன்..;-)

குடுகுடுப்பை said...

கண்டிப்பாக உடன்படுகிறேன். டிஸ்னி என்ன நினைத்து இந்த கதைகளை எழுதினார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் தவறு பெருசுகளுக்கு படிக்க வேண்டியது.

mahi said...

நன்றி சந்தனமுல்லை,
என் மகளுக்கு பெப்பில்சின் தமிழ் கதைகள் (அக்பர்,பீர்பால்,தெனாலி,ஆத்திசூடி) கிட்டதட்ட 23 சிடிகள் வாங்கி கொடுத்தேன், இரண்டரை வயதில்.
நல்ல முன்னேற்றம் கதை சொல்வதில் இரவில் என்க்கு கதை சொல்லும் அளவிற்கு.

என் மகளுக்காக நான் செய்வது சரி என்ற நம்பிக்கை தந்தது உங்கள் வலைப்பக்கம்.

வல்லிசிம்ஹன் said...

நம்ம ஊரு தேவதைகளையே அழைக்கலாமே முல்லை!!
எத்தனையோ பஞ்சதந்திரக் கதைகள்,அமர்சித்ர கதா, எல்லாம் இருக்கு. நெகடிவ் இல்லாத தெனாலி ராமன் கதைகளும் அதில் அடக்கம்.
குழந்தைகளுக்குக் கதை சொல்வது அவ்வளவு எளிதில்லை. நாங்க
கேட்டுக் கொண்ட்ட மாதிரி எங்க பிள்ளைகள் இல்லை.
இப்ப அவங்க பீள்ளைகள் இன்னும் ஒரு படி மேல போய் கேள்விகேட்கிறார்கள்:)

சந்தனமுல்லை said...

நன்றி மஹி!
ம்ம்..பெபில்ஸ் சிடி நல்லாத்தான் இருக்கு...குழந்தைகளை கவரும் வண்ணம்..அனிமேஷனோட!! நானும் பப்புவுக்கு சிலது வாங்கியிருக்கேன்..உபயோகமாத்தான் இருக்கு!


நன்றி வல்லியம்மா,
உண்மைதான். அதெல்லாம் லிஸ்ட்டில் உண்டு! இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன்!!

Asokan said...

என்னுடைய மகனுக்கு புத்தகங்கள் தேடும்போது நானும் இந்தப் பிரச்சனையைச் சந்தித்தேன். தமிழ் சிறுவர் புத்தகங்களிலும்கூட.

20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிறுவர் நூல்களைத் தேடிப்பாருங்கள். ஸ்காண்டினேவிய எழுத்தாளர்கள் பலருடைய அருமையான புத்தகங்கள் இருக்கின்றன. உதாரணமாக
. தூவெ யான்சனின் மூமிக் கதைகள் http://en.wikipedia.org/wiki/Tove_Jansson
. ஸ்வென் நோர்ட்க்விஸ்டின் "Pettson/Findus" கதைகள் (http://www.amazon.com/exec/obidos/search-handle-url/ref=ntt_athr_dp_sr_1?_encoding=UTF8&search-type=ss&index=books&field-author=Sven%20Nordqvist)
. அஸ்ட்ரிட் லிண்ட்க்ரேனின் Pippi Longstocking (http://en.wikipedia.org/wiki/Astrid_Lindgren)


இவற்றைத் தவிர கனேடிய நவீன எழுத்தாளர் ராபர்ட் மன்ஷின் கதைகளும் என் மகனுக்கு மிகவும் பிடித்துக் கொண்டவை:
http://www.robertmunsch.com/

வேறு வழியில்லாமல் மகனுக்கு உரத்து வாசிப்பதற்காக இவற்றில் சிலவற்றை மினக்கெட்டுத் தமிழாக்கம் செய்ததும் உண்டு!

Layman said...

என் பெண்ணிற்கு ( 5 வயது முடிந்து 6 நடக்கிறது ) தினமும் ஒரு கதை சொல்லவேண்டும். ஆங்கில தேவதை கதைகளில் அழகு, செல்வம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தும், றும்பெல்ஸ்தில்த்ஸ்கிஎந் போன்ற கதையில் கதாநாயகியே கொடுத்த வாக்கை மீறுவதும், மற்றும் ஒரு கதையில் கதாநாயகன் பொய் சொல்லி தந்திரமாக ஏமாற்றுவதும் போல வருகிறது.
எனவே நான் என் கற்பனையில் தோன்றும் கதைகளையும், ஈசாப் குட்டி கதைகள் போன்ற கதைகளையும் சொல்வதுண்டு. ஆனால் சுட்டி டிவி யை பார்த்து அதில் வரும் வார்த்தைகளை என் பெண் பேசும் பொழுது கவலை அடைகிறேன்.

குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம்