Monday, August 25, 2008

பப்பு டைம்ஸ்



வரிசையில் செல்லும் எறும்புகள்!! படம் :- பப்பு


எப்போதும் போகும் கிண்டி சிறுவர் பூங்கா/நங்கநல்லூர் பூங்காவிலிருந்து மாறுபட்டு, நாகேஸ்வரராவ் பார்க் மைலாப்பூருக்கும் சென்றோம், சனிக்கிழமை காலை 10 மணிக்கு!!
மருத்துவரை பார்க்க சென்று பின், வீட்டிற்கு போய் என்ன செய்வது என்று பூங்காவிற்கு சென்றோம். பப்புவுக்கு 101 டெம்பரேச்சர். ஆனால் பூங்காவினுள் ஓடியும், பிறர் நடப்பதை பார்த்து வேகமாயும் நடந்து, பூங்காவை இரண்டு முறை சுற்றியும், இன்னமும் பூங்காவினுள்
நடக்க விரும்பினாள் அவள்!!

நமக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லையென்றால் எவ்வளவு பாடுபடுத்தி விடுகிறோம் வீட்டில் இருப்பவர்களை!! ஆனால் குழந்தைகள், அந்த நேரம் மட்டுமே..படுத்திருப்பது கூட இல்லை...உட்கார்ந்துக் கொண்டு விளையாடும் விளையாட்டையாவது ஆடிவிடுகிறார்கள்!! குரோசின் உள்ளே சென்ற அரைமணிக்கெல்லாம், பப்பு ஓடவும், குதிக்கவும் ஆரம்பித்து விடுகிறாள்!! ரெஸ்ட் எடுப்பதற்காக மேடம் இன்று லீவ்!! (ஆனாலும் ரெஸ்ட் எடுக்கிற வழியைக் காணோம்!! சிரப் குடித்திருப்பதால், விரைவில் தூங்கி விடுவாள்..)


ரங்காச்சாரியில் பப்புவுக்கு சில ரெடிமேட் பாவாடைகள் எடுத்தோம்.
ரூ 200லிருந்து பாவாடை-சட்டைகள் குழந்தைகளுக்கு கிடைக்கின்றது, பட்டிலிருந்து பட்டு போன்ற
அபூர்வா வரை!! படங்கள் later!!

பப்புவை பார்த்துக்கொள்ளும் சரளாம்மா, பப்பு சாப்பிடவில்லையென்றால், "நான் ஊருக்கு போறேம்மா, பாப்பா சாப்பிட மாட்டேங்குது" என்பார்கள். அதிலிருந்து அவளுக்கு பிடிக்காததை அல்லது எரிச்சலூட்டும்படி யாராவது ஏதாவது செய்தால்,"நீ ஊருக்குப் போ" என்பாள்!! நேற்று என் பெரிம்மா வந்திருந்தப்போது, அவளுக்கு சாப்பாடு ஊட்ட முயற்சி
செய்துக்கொண்டிருந்தார்கள்!அதுதான் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத விசயமாயிற்றே!

முதலில் "நீ ஊருக்குப் போ" என்ற பப்பு, சட்டென்று உணர்ந்து "என்னைத் தூக்கிக்கிட்டு ஊருக்குப் போ" என்றாள்!!

6 comments:

கானா பிரபா said...

// படங்கள் later!! //

வெயிட்டிங்

பப்புவுக்கு இப்போ ஒகேவா?

சந்தனமுல்லை said...

பப்பு இப்போ ஓக்கே!!
நன்றி கானாஸ்!!

Anonymous said...

//சட்டென்று உணர்ந்து "என்னைத் தூக்கிக்கிட்டு ஊருக்குப் போ" என்றாள்!!
//

How cute...

சந்தனமுல்லை said...

thanx Anony!!

ராமலக்ஷ்மி said...

//முதலில் "நீ ஊருக்குப் போ" என்ற பப்பு, சட்டென்று உணர்ந்து "என்னைத் தூக்கிக்கிட்டு ஊருக்குப் போ" என்றாள்!!//

சட்டென விழித்துக் கொண்டது பப்புவின் பாசம்..!

பப்பு நன்றாகி விட்டது சந்தோஷம்.

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி!!
:-)