என் பதின்மங்களில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தி பாப் உலகில்,
தடாலடியாக வந்து கலக்கியவர், ராகேஷ்வரி, இசையும் இளமையுமாக!!
எனர்ஜ்ட்டிக்கான இசை, இளமை துள்ளும் குரல், மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட
வீடியோ என எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தது துனியா!!
அதுவும், "மேனே தேக்கா ஹா சபி ரங்க் துனியா கே ", என் ஆல் டைம் ஃபேவரிட்!!
அவருடைய ஆல்பங்கள் கொஞ்சம் சமூக அக்கறை, குழந்தைகள் நலன், தேசப்பற்று
என எல்லா மசாலாக்களுடனும் இருக்கும். அதில் ஒருவர் வயதான தாத்தா (த்ரிலோக்?)
வருவார்..அப்பா என நினைக்கிறேன்!!
தொடர்ந்து இரு ஆல்பங்கள் கொடுத்த ராகேஷ்வரி, 2000-க்குப்பின்
உடல்நலக் குறைவு காரணமாக இசையை தொடரவில்லை.
இப்போது எப்படி இருக்கிறார், என்ன ஆல்பம் என ராக்ஸின் விசிறிகள் யாராவது
சொன்னால் மகிழ்ச்சியடைவேன்!!
RagZ..come back ..We all want you on the stage!! Come back Ragz!!
4 comments:
'பொப்பிசை' பற்றின உங்க பதிவுகள் வாசிச்சாலே எனக்கு கொசுவர்த்திதான்..
இதே காலகட்டத்துல வந்த2 பாட்டு தேடுறேன்.. ஞாபகம் வந்தா சொல்லுங்க:
1)தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுற ஒரு பாட்டு.. 'ஈஷ்வர அல்லா தேரே நாம்' கூட பாட்டுல வரும்னு நினைக்கிறேன்.
2)உஸ்தாத் படே அலி கானுடையது என்று நினைக்கிறேன்.. (இந்தப்பதிவில் விலாவாரியா விளக்கிக் கேட்டது.. ஞாபகம் இருக்குதுங்களா?)
எப்போவோ ஒரு முறை ஒரு ஹிந்தி தொலைகாட்சியில் தொகுத்துவழங்கினதா நியாபகம்.. முகத்தில் ஒரு மாதிரி ஆகி இருந்தது உடல்நலக்குறைவால்..நானும் அவரின் ரசிகை தான்..
உங்களுக்கு ஹிந்தி புரியுமா - இல்லை என்னைமாதிரி மொழி புரியாமலேயே ரசிக்கிற பார்ட்டியா ?
ஆகா, செம கொசுவர்த்தி போங்க.... ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே.
Post a Comment