Saturday, August 16, 2008

பப்பு என்றொரு பூ


இரவு நீண்ட நேரமாகியும் தூங்காததால், பப்புவோடு விளையாட மறுத்து
“எனக்கு முதுகு வலிக்குது, நான் தூங்க போறேன் பப்பு” என்று படுத்துவிட்டேன்.
கதவை திறந்து வெளியே சென்ற பப்பு என்ன செய்கிறாள் எனத் தொடர்ந்தபோது,
அவள் அத்தையிடம் “அம்மாவுக்கு முதுகு வலிக்குது, தைலம் எடுத்துக்குடு”
எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்!

இந்தப் பெண் என்னை பூரிப்பூட்டுகிறாள் !!

பப்பு, abcd சொல்லு!!

z வரைக்கும் சொல்கிறாளே, ரெக்கார்ட் செய்யலாம் என்று ரெக்கார்டை ஆன் செய்துவிட்டு கேட்டால்,

"abcd" !!

இந்தப் பெண் என்னை புன்னகைக்க வைக்கிறாள்!!

நான் வெளியில் கிளம்பும் போது பப்பு சொல்லத் தவறுவதேயில்லை..
“பார்த்து பத்திரமா போய்ட்டு வா”!!

தொலைபேசிவிட்டு வைக்கும்போது,
“சரி, ஓக்கே, பை!! ‘

பக்கத்துவீட்டு ஒன்றரை வயது சிறுவன் ஆதியை அவனது பாட்டி உணவு ஊட்டுவதற்கு
தூக்கிக் கொண்டு எங்கள் சன்னல் பக்கம் வருவது வழக்கம். பப்பு
கிரில் கதவின் மீதேறி, (ஒரு கதவை மட்டுமே திறக்கமுடியும்) அதை திறந்து
அந்த பக்கம் சென்று இறங்கி ”உள்ள தூக்கிக் கிட்டு வாங்க, உள்ள வாங்க!!” என்கிறாள்.

இந்தப் பெண் என்னை வியக்க வைக்கிறாள்!!

”என் செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லம்!

என் பட்டுக்குட்டி!

என் வைரம்!!

நான் உனக்கு முத்தம் குடுக்கறேன் "என்றென்னை கொஞ்சும்போது நெகிழவைக்கிறாள்!!

எல்லாவற்றுக்கும் மேல், உன்னோடு “வாரான் வாரான் பூச்சாண்டிக்கு” டான்ஸ் ஆட மிகவும் பிடிக்கிறதெனக்கு :-)!!


நன்றி பப்பு..என்னுள் மறைந்திருக்கும் சிறுமியை அடையாளம் காட்டத் தெரிகிறது..
என்னுள் இருக்கும் அம்மாவையும் வெளியே கொண்டு வரத் தெரிகிறது உனக்கு...!!!

14 comments:

ராமலக்ஷ்மி said...

பப்பு என்றொரு பூ.
அவள் அன்னை இன்னொரு (முல்லை) பூ. பூவும் பூவும் மலர்ந்து சிரிக்கையில் சந்தன மணம் வீசுகிறது.

வாழ்த்துக்கள்!

கலை said...

உணர்வுகளின் பிரதிபலிப்பு இங்கே. :)

இரவு கவி said...

manasa touch panniduchungaaa

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) அழகோ அழகு ....

நந்து f/o நிலா said...

பப்புவை பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம் எனக்கு நிலாவின் போட்டோக்களை மட்டுமே பதிவாக்குவதின் குற்ற உணர்ச்சிதான் வருகிறது.

ஆனால் ஒரு அம்மாவின் பார்வையில் உணர்வுகளை நீங்கள் பதிவது போல் என்னால் செய்யமுடிவது ரொம்ப கஷ்டம் என்றும் உணர்கிறேன்.

செம டச்சிங் போஸ்ட்

ஆயில்யன் said...

அழகா இருக்கு பப்புவும் உங்களின் மீதான அவளின் பாதிப்பின் விவரிப்பும் :))

ஆயில்யன் said...

//நந்து f/o நிலா said...
பப்புவை பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம் எனக்கு நிலாவின் போட்டோக்களை மட்டுமே பதிவாக்குவதின் குற்ற உணர்ச்சிதான் வருகிறது.

ஆனால் ஒரு அம்மாவின் பார்வையில் உணர்வுகளை நீங்கள் பதிவது போல் என்னால் செய்யமுடிவது ரொம்ப கஷ்டம் என்றும் உணர்கிறேன்.

செம டச்சிங் போஸ்ட்
//

அப்படியெல்லா ஃபீல் பண்ணகூடாது!

அப்புறம் எங்க நிலா குட்டி எப்படி இருக்கா? பார்த்து ரொம்ப நாளாச்சு!

அனுஜன்யா said...

நான் சொல்ல வந்ததை ராமலக்ஷ்மி சொல்லிவிட்டார்கள். குழந்தைகள் நம்மை எப்போதுமே வியக்க வைக்கிறார்கள். பரிவில், நேசத்தில், ஞாபகத்தில் மற்றும் மறப்பதில். நல்ல பதிவு.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி...நொடியில கவிதை பாடுறீங்களே!! உங்க மறுமொழியும் கவிதையாதான் இருக்கு!! :-)

கலை..நன்றி!!
உங்க ஸ்டிக்கர் சிநேகிதியை விசாரிச்சதா சொல்லுங்க!!

இரவுகவி : நன்றி!!

முத்துலட்சுமி : நன்றி..:-)

சந்தனமுல்லை said...

நந்து f/o நிலா : இதில் ஃபீல் பண்ணாதீங்க!!
நீங்க எல்லாத்தையும் காமிரால கொட்டிடறீங்களே..!!
வாழ்த்துக்கள் நிலாவுக்கு!!
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!!

சந்தனமுல்லை said...

ஆயில்யன் : மிக்க நன்றி!!

அனுஜன்யா : உண்மைதான்!!
நன்றி வருகைக்கும், கருத்துக்கும்!!

மங்களூர் சிவா said...

பப்பு என்ற குட்டி தேவதைக்கு மாம்ஸின் அன்பு முத்தங்கள்.

கானா பிரபா said...

அருமைம் வழக்கம் போல்

சந்தனமுல்லை said...

சிவா : சொல்லிடறேன் பப்புக்கு!!

கானாஸ் : நன்றி!!