Friday, July 18, 2008

பதிவுலகத்திற்கு...

வணக்கம்,


”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை...! 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!


நம்ம ஓமப்பொடியார் சுதர்சனின் வலைப்பூவின் வழியாக நான் வந்து இறங்கிய இடம் தமிழ்மணம், தேன்கூடு!. ஃப்ரீயா இருக்கும்போது படிக்கலாம்னு புக்மார்க்கிட்டு, அப்பப்ப படிச்சிகிட்டிருந்தது போய், பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!

என்னோட சிறு வயது நினைவுகள்,நிகழ்வுகளை பதிந்து வைத்துக்கொள்வதற்காக ஆரம்பித்த வலைபதிவு இப்போது என் மகள் பப்புவின் குறும்புகளையும், மழலை பேச்சுகளையும் சுவாரசியமான நிகழ்வுகளையும் படம் பிடிக்கிறது!வளர்ந்தப்பின், அவள் ஒரு நாள் இதை படிக்கையில், அவள் எவ்வள்வு சுவாரசியமானவளாயிருந்திருக்கிறாளென்பதை
அவளுக்கு உணர்த்தக்கூடும், இந்த வலைப்பூ! (போதுமா முன்கதை சுருக்கம்!!)


ம்ம்..திங்கள் காலையில் ஆபிஸ் லாகின்-ஆனதும் செய்யும் முதல் வேலை, யாரு இந்த வார ஸ்டார்ன்னு பார்க்கறதுதான்!! எனக்கு அது ஒரு த்ரில்!!
அநேகமா, நிறைய பேரு அப்படிதான்னு நினைக்கிறேன்...

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் என்னால் எழுத இயலாமல் போகலாம்!
மனப்பாடம் செய்துக்கொண்டு, மேடையில் ஏறிய அந்த சிறுமி இன்னும் என்னுள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது வெளிப்படலாம்!!

பொறுமை காத்து ஆதரவு அளிக்கவும்!!

33 comments:

கயல்விழி முத்துலெட்சுமி said...

வாழ்த்துகள் சந்தனமுல்லை..

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சந்தன முல்லை

மங்களூர் சிவா said...

/
பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!
/

வேகமா படிக்கிறப்ப டாஸ்மாக்கில் நிரந்தரமாகிவிட்டது தமிழ்மணம்னு படிச்சி பேஜாராகீட்டேன். ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்

:)))))

Indian said...

Congrats on becoming the star of the week.

//டாஸ்க் பாரில்//

For a moment, I mistook it as டாஸ்மாக் பாரில் ;)

நிலா said...

பப்பு ஸ்பெஷல் போஸ்ட் எதிர்பார்ப்புடன் ஸ்டார் வாழ்த்துக்களும்

Amudhavalli said...

வாழ்த்துகள்..மேலும் மேலும் மின்ன...

rapp said...

வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

//பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!///

அட நம்ம கேரக்டரு :))

ஆயில்யன் said...

//உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் என்னால் எழுத இயலாமல் போகலாம்!
மனப்பாடம் செய்துக்கொண்டு, மேடையில் ஏறிய அந்த சிறுமி இன்னும் என்னுள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது வெளிப்படலாம்!!//

சில சமயங்களில் மனப்பாடத்தினையும் மீறிய,மேடையிலேயே அசத்தும் திறனும் பலருக்கு உண்டு!
ஸோ அசத்துங்க!
நட்சத்திர வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் said...

எழுத்தில் நகைச்சுவை துள்ளுகிறது, நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் !

//திங்கள் காலையில் ஆபிஸ் லாகின்-ஆனதும் செய்யும் முதல் வேலை, யாரு இந்த வார ஸ்டார்ன்னு பார்க்கறதுதான்!! //

இங்கே சிங்கை நேரப்படி அது தெரிந்து கொள்ள நண்பகல் ஆகிவிடும்.
:)

அனுஜன்யா said...

சந்தன முல்லை,

நட்சத்திரம் உயரத்திலிருந்து மினுமினுக்கும் என்று இப்பொழுதே தெரிகிறது. வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகளும் அழகாக உள்ளன.

அனுஜன்யா

நவீன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் !

//சுவாரசியமானவளாயிருந்திருக்கிளானென்பதை//

நாக்கு கொளறுது ! பிரிச்சு மேய்ங்க ;-)

சந்தனமுல்லை said...

கயல்விழி முத்துலெட்சுமி , மங்களூர் சிவா, Indian , நிலா, அமுதா ,
ஆயில்யன்,கோவி.கண்ணன்,அனுஜன்யா :

வாழ்த்துக்களூக்கும் வருகைக்கும் நன்றி

SP.VR. SUBBIAH said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி!
தயக்கமென்ன? அசத்துங்கள்!

மாயா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் . . .

லக்கிலுக் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் :-)

சந்தனமுல்லை said...

சுப்பையா வாத்தியார், மாயா, லக்கிலுக் : வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!!

Balaji said...

Vazthukal Thozhi.
Unadu pathivugal anaithum rasikakudiyavai.
And congrats for star of this week.

தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

தமிழன்... said...

வாழ்த்துக்கள்...:))

சந்தனமுல்லை..!

தமிழன்... said...

தொடர்ந்து அசத்துங்க..!

ஸ்டாருக்கு இல்லாத ஆதரவா...:)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கலக்குங்க!வாழ்த்துகள்

சந்தோஷ் = Santhosh said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முல்லை.. தூள் கிளப்புங்க..

Natty said...

சும்மா அடிச்சு ஆடுங்க அக்கா....

cheena (சீனா) said...

சந்தன முல்லை

நல்வாழ்த்துகள்

நல்ல பதிவுகளை அள்ளித் தருக

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

உங்களுக்கு ஒரு காஃபி வாங்கிக்கொடுக்கணும்.

லிஸ்ட்லே வெயிட்டிங்:-))))

சந்தனமுல்லை said...

பாலாஜி, தமிழன், புதுகை.எம்.எம்.அப்துல்லா, சந்தோஷ்,
Natty, சீனா : வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

சந்தனமுல்லை said...

துளசி மேடம்,

மிக்க நன்றி!
காஃபிதானே, இந்த முறை மிஸ் பண்ண மாட்டேன், கூட பப்புவையும் சேர்த்துக்கோங்க!! :)

சுரேகா.. said...

வாழ்த்துக்கள்ங்க!

இவ்வளவு நாள்
உங்களைப்படிக்காதது எவ்வளவு
தப்பாப்போச்சு?

நீங்க நிறைய எழுதலையா?
நான் நிறைய படிக்கலையான்னு தெரியலை!

நல்லா - அருமையா எழுதுறீங்க!
மீண்டும் வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

நட்சத்திரமே வருக நல்விருந்து தருக

பொழுதுபோக்கு: தமிழ்மண சண்டையை வேடிக்கை பார்ப்பதாம், க்கும் ;-)

Thangamani said...

உங்கள் பதிவுகள் சிலவற்றை இன்று படித்தேன். பதிவுகளுக்கே உரிய இலக்கணத்தோடு, போதுமான அளவில் பர்ஸனல் டச்சோடு, சுவாரஸியமாக இருக்கிறது.

நட்சத்திர வாழ்த்துகள்!