Thursday, December 18, 2008

காலையில் தினமும் கண்விழித்தால்...

காலைநேரங்கள் பரபரப்பானவை. ”படுக்கையை விட்டு எழு, பப்பு பள்ளி செல்லவேண்டும்” என்பதுதான் என் மூளை எனக்குக் கொடுக்கும் முதல் கட்டளையாயிருக்கும். அதுவும் 7லிருந்து 8 மணிவரை ஒரு நிமிடம் கூட வீணாக்கக் கூடாது. பப்புவின் மனமும் கோணாதவாறு! 7 மணிக்கு எழுப்பி துப்புரவாகி பால் குடிக்கச் செய்து 8.05-க்கு வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் நாங்கள். அதிலும் எல்லாம் விளையாட்டாகவே செய்ய வேண்டும். எல்லாவற்றையும் தானாக செய்யவேண்டுமென்றும் பப்புவுக்கு! அதற்கேற்றவாறூ வளைந்து செய்து முடித்தல் வேண்டும். so, every minute is crucial for me.

பேஸ்ட் நானே வச்சிக்கறேன்,
ஓக்கே.
இல்லை, உனக்கும் நானே வைப்பேன்..
ஹ்ம்ம்..ஓக்கே!

நானே சோப் போட்டுக்கறேன்..
இந்தா உன் கையில்..பிடி..முகத்தில தேச்சிக்கோ!
நானே தண்ணி ஊத்திக்கறேன்!
இந்தா மக், தண்ணி மேலே எப்படி ஊத்திப்பே?!

இதன் நடுவில், குளிப்பாட்டி முடித்திருப்பேன்.

நானே ட்ரெஸ் போடறேன்..
சரி, பால் எடுத்துக் கொண்டு வர்றதுக்குள்ள..
ஆனால், பால் கொண்டு வந்திருந்தாலும், ஆற்றிக்கொண்டிருந்தாலும்...எந்தநிலையில் விட்டுச் சென்றோமோ அப்படியே இருக்கும்.
சட்டையைப் போட்டுவிட்டால்,

பட்டன் நானே போட்டுக்கறேன்..

சரி போடு..நான் உன் பேக் ரெடி பண்றேன்.
பேக் ரெடியாயிருந்தாலும்,பட்டன் ஒன்றுதான் மாட்டப்பட்டிருக்கும்!
மூட் ஸ்பாயில் ஆகக் கூடாது, அதே சமயம் உன்னால் முடியாது என்றும் தோணிவிடக் கூடாது!சோ, பொறுமை..பொறுமை..என்ன பப்பு போட்டுட்டியா?

”இது உள்ளே போகவே இல்லை”என்று அவளுக்கும் தன்னால் செய்யமுடியவில்லையே என்றும் ஒருவித அழுகை/கோபம் கலந்த உணர்ச்சியிலிருப்பாள். (பள்ளி செல்லவாரம்பித்தலிருந்து இதைக் காண்கிறேன்..அதாவது, அவளால் நினைத்தவாறு அல்லது அந்தப் பெர்பெக்‌ஷன் வரவில்லையென்றால் அந்த ஏமாற்றம்..அல்லது ப்ரஷ்ட்ரேஷன்!!)
உடனே, பாய்ந்துப் போய் காப்பாற்று..ம்..எங்கே இதோ உன்னாலே முடியுமே..நீ இதை பிடி, இங்க நேரா..ம்..அப்படிதான் இதோ வந்துடுச்சே!!

இப்படி நாலு பட்டன்களையும் போடச் செய்து..(நீதான் பவர்புல், அவளுக்கு செய்யும் திராணி இல்லை என்று உன் செய்கைகளால் மறந்தும் தோணிவிடும்படி செய்துவிடாதே!!)


பிறகு இருக்கிறது பாலுண்ணும் படலம்!
ஆகாஷ்தாஸ் கதை சொல்லு!
இது நானே உருவாக்கின ஒரு தொடர் கதை. ஆகாஷ் தாஸ் அவளது பள்ளித் தோழன்!
சாகசங்கள், விலங்குகள் நிரம்பிய ஒரு தொடர். பப்புவும் ஆகாசும் முக்கிய நபர்கள். வெண்மதி கெஸ்ட் ரோல். கண்டிப்பாக பப்பியும் சைக்கிளும் கூடவே வரும்! பின்பு இந்தக் கதைகளைப் பற்றி!

ஆகாஷ், பீச்-க்கு போனான்...பப்பி...பந்து..

பால் அப்படியே இருக்கும்.மணி 7.45 ஆகியிருக்கும்! கதையை நிறுத்தினால் குடிப்பாளென்று நினைக்கக் கூடாது!

நீ சொல்லல..என்று ஒரு ஸ்ட்ரைக் ஆகிவிடும்.

நோ, நோ.. உன் கோபம் எல்லாம் இங்கே வேலைக்காகாது! பொறுமை..பொறுமை..
ஒருவழியாய் குடித்து முடிக்கையில், மணி 8 ஆகியிருக்கும்.

தலைவாரி, காலணிகளைப் போடுகையில்,

நாந்தான் பக்கிள்ஸ் போடுவேன்..

ஓக்கே..ஓக்கே
குனிந்தப்படி, போட்டுமுடிக்கையில் மணி 8.05ஐ தாண்டியிருக்கும்!ஓ..8.15-க்கு வேன்!

வெரிகுட், சூப்பர் பப்பு, அழகா போட்டுட்டியே..(உள்ளுக்குள் பொங்கும் அவசரத்தை மறைத்துக் கொண்டு!)

“உச்சா வருது!”-இதுதான் பொறுமையின் எல்லை!!!

திரும்ப எல்லாம் கழற்றி, மாட்டி முடிந்து நிமிர்கையில், கண்கள் கடிகாரத்தை நோக்கி..ஆ 8.15 ஆக் போகுது!!

“ஆச்சி கோவமா இருக்கியா?!”

“ஆச்சி கோவமா இருக்கியா,சிரி..சிரி!!” --என்று அந்த பிஞ்சுக்குரலை நோக்கி, இல்லையே கண்ணா..என்று புன்னகைத்தபடி வேனை நோக்கி நடைபோடுவோம் அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!

45 comments:

அதிரை ஜமால் said...

\\"காலையில் தினமும் கண்விழித்தால்..."\\

good starting

அதிரை ஜமால் said...

\\”படுக்கையை விட்டு எழு, பப்பு பள்ளி செல்லவேண்டும்” என்பதுதான் என் மூளை எனக்குக் கொடுக்கும் முதல் கட்டளையாயிருக்கும்.\\

நல்லதொரு தாய்

அதிரை ஜமால் said...

\\பேஸ்ட் நானே வச்சிக்கறேன்,
ஓக்கே.
இல்லை, உனக்கும் நானே வைப்பேன்..
ஹ்ம்ம்..ஓக்கே!

நானே சோப் போட்டுக்கறேன்..
இந்தா உன் கையில்..பிடி..முகத்தில தேச்சிக்கோ!
நானே தண்ணி ஊத்திக்கறேன்!
இந்தா மக், தண்ணி மேலே எப்படி ஊத்திப்பே?!

இதன் நடுவில், குளிப்பாட்டி முடித்திருப்பேன்.\\

நல்ல பொருமை.

இதுவே தாய்க்கு பெருமை

அதிரை ஜமால் said...

\\(பள்ளி செல்லவாரம்பித்தலிருந்து இதைக் காண்கிறேன்..அதாவது, அவளால் நினைத்தவாறு அல்லது அந்தப் பெர்பெக்‌ஷன் வரவில்லையென்றால் அந்த ஏமாற்றம்..அல்லது ப்ரஷ்ட்ரேஷன்!!)\\

ப்ரஷ்ட்ரேஷன் -

மிக பெரிய வார்த்தை

இப்பொழுது குழந்தைகளிடமுமா

ம்ம்ம் ...

அதிரை ஜமால் said...

\\(நீதான் பவர்புல், அவளுக்கு செய்யும் திராணி இல்லை என்று உன் செய்கைகளால் மறந்தும் தோணிவிடும்படி செய்துவிடாதே!!)\\

hats off

ம்ம்ம் ... அருமை

குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை

சில சமயம்

நம்மை விட வயது முதிர்ந்துவிட்ட பெரிய குழந்தைகளிடமும்

அதிரை ஜமால் said...

\\ஆகாஷ்தாஸ் கதை சொல்லு!
இது நானே உருவாக்கின ஒரு தொடர் கதை. ஆகாஷ் தாஸ் அவளது பள்ளித் தோழன்!
சாகசங்கள், விலங்குகள் நிரம்பிய ஒரு தொடர். பப்புவும் ஆகாசும் முக்கிய நபர்கள். வெண்மதி கெஸ்ட் ரோல்\\

இந்த தாய்மாமனையும் சேர்த்துக்கோங்கோ

அல்லது அவரது சகோதரி ஹாஜரை சேர்த்துக்கோங்கோ

அதிரை ஜமால் said...

\\“ஆச்சி கோவமா இருக்கியா?!”

“ஆச்சி கோவமா இருக்கியா,சிரி..சிரி!!” --என்று அந்த பிஞ்சுக்குரலை நோக்கி, இல்லையே கண்ணா..என்று புன்னகைத்தபடி வேனை நோக்கி நடைபோடுவோம் அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!\\

superb

கானா பிரபா said...

பப்பு பஞ்ச் (கடைசி) கலக்கல், காலை நேர அவஸ்தையை சிறுகதை படிச்ச மாதிரி சொல்லி வச்சீங்க, அருமை

ஆயில்யன் said...

ஆச்சி கோவமா இருக்கியாகலக்கல் :))))

பப்பு

chooooooooooooooooo

sweeeeeeeeeeeeeeeeeet

அமுதா said...

:-) எங்க யாழ் பாப்பா கூட இப்படிதான்.

ஆயில்யன் said...

/பிறகு இருக்கிறது பாலுண்ணும் படலம்!
ஆகாஷ்தாஸ் கதை சொல்லு!
இது நானே உருவாக்கின ஒரு தொடர் கதை//


அடேங்கப்பா!


பட் ஆகாஷ்தாஸ் கொஞ்சம் பெரிய ரெண்டு பேரால்ல இருக்கு வேணும்னா ஆயில்யன் சிம்பிளாக்கிடுங்களேன்! :)))))

ஆயில்யன் said...

//அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!///

சென்னை மழை நொம்ப டெரரர் பண்ணியிருக்கு போல டெய்லி வானவில் வந்து செல்லுதோ :)

தமிழ் பிரியன் said...

You are great Achi!

SUREஷ் said...

அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!

வெரிகுட், சூப்பர் பப்பு, அழகா போட்டுட்டியே

அன்பு said...

“உச்சா வருது!”-இதுதான் பொறுமையின் எல்லை!!!

really Ultimate:)
வணக்கம் முல்லை. இதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம் என்றாலும்...
எப்பொழுது நேரம் கிடைத்தாலும் தொடர்ந்து வாசிக்கும் பதிவு உஙகளது ‍.
பப்பு இன்னிக்கு என்ன செஞ்சாங்கன்ற ஆர்வம் இழுத்துவருகிறது, என்றென்றும் தொடருங்கள்.

முன்னொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்... விரைவில் மேல்விபரங்களுடன் தொடர்புகொள்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

இம்புட்டு டென்ஷன் காலை நேரத்துல இருக்கும்னு எல்லோரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.

அதென்னவோ நான் அனுபிவித்தில்லை.
உங்களின் பதிவு அருமை முல்லை.


கோபத்தைக் காட்டாது பொறுமை காட்டினால்தான் நல்லது என்பதை பலருக்கு புரிய வைத்திருக்கிறீர்கள்.

rapp said...

சந்தனமுல்லை கலக்கலோ கலக்கல். நான் இதே மாதிரிக் காட்சிகளை அப்டியே எங்க வீட்ல செஞ்சிருக்கேன். பார்த்தும் இருக்கேன். அப்டியே அதை இவ்ளோ அழகான வார்த்தைகளில் வடித்ததற்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. மிக மிக அருமை. பப்பு பதிவுகளில் இது ஒரு மாஸ்டர் பீஸ்:):):) சூப்பர்:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முல்லை.. அப்படியே பாடுங்க..

"நான் பேச நினைப்பதெல்லாம் "
:) அந்த ஷூ இருக்கே அது வல்கரோ தான் ஆனாலும் அதை அந்த பக்கில்ஸ்லேர்ந்து வெளியே எடுத்து தானா மாட்டனும் உள்ளே..அது அப்படி எடுக்காமலே போடலாம் ..ஆனா எடுத்து தா ன் உள்ளே நுழைப்பேன்ன் கடைசி நேரத்தில் அடம்பிடிப்பான்.. ஊசியில் நூல்கோக்கற மாதிரி அது கொஞ்ச நேரம் ஓடும்.. அய்யோன்னு இருக்கும் எனக்கும்.. ஆனா அவன் சொல்லுவான் "நோம்மா.. குட் பாய் ஸ் ஏஸேஹீ கரேங்கே...வெயிட்.. ன்னா.."

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட்டகாசமா எழுதிட்டீங்க முல்லை.

மாஸ்டர் பீஸ் வழிகாட்டல் பதிவு.

எவ்வளவு பொறுமை, அதோட பப்புவின் மனம் கோணாமல், ஹைய்யோ

அமிர்தவர்ஷினி அம்மா said...

\\(நீதான் பவர்புல், அவளுக்கு செய்யும் திராணி இல்லை என்று உன் செய்கைகளால் மறந்தும் தோணிவிடும்படி செய்துவிடாதே!!)\\

எத்தனை ரோல் பாக்கவேண்டியிருக்கு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதிரை ஜமால் said...
\\(பள்ளி செல்லவாரம்பித்தலிருந்து இதைக் காண்கிறேன்..அதாவது, அவளால் நினைத்தவாறு அல்லது அந்தப் பெர்பெக்‌ஷன் வரவில்லையென்றால் அந்த ஏமாற்றம்..அல்லது ப்ரஷ்ட்ரேஷன்!!)\\

ப்ரஷ்ட்ரேஷன் -

மிக பெரிய வார்த்தை

இப்பொழுது குழந்தைகளிடமுமா

ரிப்பீட்டிக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆச்சி கோவமா இருக்கியா?!”
இல்லடா ஆச்சி சந்தோஷமா இருக்காங்க,
அவங்க மூலமா நாங்களும்.


“ஆச்சி கோவமா இருக்கியா,சிரி..சிரி!!” --என்று அந்த பிஞ்சுக்குரலை நோக்கி, இல்லையே கண்ணா..என்று புன்னகைத்தபடி வேனை நோக்கி நடைபோடுவோம் அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!
உங்கள் பொறுமையும், தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளும் வெற்றியையே சந்திக்கும், ஆம், நீங்கள் அதனை நோக்கித்தான் நடைபோடுகிறீர்கள்.

தமிழ் தோழி said...

நல்ல பதிவு.

தமிழ் தோழி said...

//பேஸ்ட் நானே வச்சிக்கறேன்,
ஓக்கே.
இல்லை, உனக்கும் நானே வைப்பேன்..
ஹ்ம்ம்..ஓக்கே! //

இது தான் குழந்தைங்க, பப்பு குட்டி செய்கிற சுட்டி தனத்த அழகா எலுதி இருக்கீங்க.

தமிழ் தோழி said...

நீங்க சொல்லி இருப்பது எல்லாம் என் வீட்டிலும் தினமும் நடக்ககூடியது தான்

ராமலக்ஷ்மி said...

//“ஆச்சி கோவமா இருக்கியா,சிரி..சிரி!!” --என்று அந்த பிஞ்சுக்குரலை நோக்கி, இல்லையே கண்ணா..என்று புன்னகைத்தபடி வேனை நோக்கி நடைபோடுவோம் அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!//

பொறுமைக்கும் தாயன்புக்கும் கிடைக்கிற பொன்னான பரிசு.

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல்...

தமிழன்-கறுப்பி... said...

அனேகமான வீடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களோட நடக்கிற சீன்தான் என்றாலும்...பப்புவோட சீன்ஸை கண் முன்னாடி நிறுத்தறிங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

பொறுமை பொறுமை...!

PoornimaSaran said...

பப்பு ஆச்சிக்கு இவ்ளோ பொறுமையா!!!!!!!!!!! எனக்கு சீக்கிரம் கோபம் வந்திரும்.. உண்மையிலேயே நீங்க பொறுமையின் சிகரம் தான்...

PoornimaSaran said...

நல்லதொரு பதிவு ரசித்துப் படித்தேன்..

PoornimaSaran said...

நல்லதொரு பதிவு ரசித்துப் படித்தேன்..

ஆகாய நதி said...

ஒரு சிறந்த தாய்க்கு உறிய அத்துணை குணங்களும் உங்களில் இருப்பதாக உணர்கிறேன்... இது தான் நம் முதல் கடமை :)

//
நீதான் பவர்புல், அவளுக்கு செய்யும் திராணி இல்லை என்று உன் செய்கைகளால் மறந்தும் தோணிவிடும்படி செய்துவிடாதே
//

இந்த சிறந்த எண்ணம் ஒரு சிறந்த நடைமுறைக் கல்வி குழந்தைகளுக்கு.... உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை... இந்தப் பதிவு அம்மாக்கள் வலைப்பூவிற்குரியது :)

PoornimaSaran said...

பப்பு செல்லம் பெரிய்ய்ய அறிவாளியா வருவாங்க என்ன மாதிரியே!! (முடிஞ்சா பப்பு கிட்ட அப்பப்போ சொல்லுங்க பூர்ணி அத்தை மாதிரி நல்ல புள்ளையா சமத்தா இருக்கணும்னு)

வனம் said...

வணக்கம் சந்தனமுல்லை

\\அதே சமயம் உன்னால் முடியாது என்றும் தோணிவிடக் கூடாது \\

இது இதுதான் வளர்ப்பு


\\ஆச்சி கோவமா இருக்கியா?! \\

இதை உங்ககிட்ட கேட்டாளா?

உங்க அவஸ்தை பப்புவுக்கும் புரியுது
ம்ம்ம்ம் நல்ல உரவு நல்ல உரம்

நன்றி
இராஜராஜன்

PoornimaSaran said...
This comment has been removed by the author.
தாமிரா said...

அதகளம் பண்ணிருக்கீங்க முல்லை, இதுபோன்ற பதிவுகளையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன், கிளாஸ்..கிளாஸ்.. வாழ்த்துகள்.! (எனக்கு வெட்கமாயிருக்குது, நான் இந்தப்பொறுப்புகளை கைக்கொள்வேனா? ரமாவின் தலையிலேயே கட்டிவிடுவேனா?)

தாரணி பிரியா said...

நல்ல பதிவு சந்தனமுல்லை. உங்க பொறுமை மலைக்க வைக்கது. எனக்கு பொறுமை அப்படின்ற விசயம் கொஞ்சம் கூட இல்லை.

உங்க பப்பு கிரேட். எல்லாம் தானே செய்யணுமின்னு நினைக்கிறா இல்லையா? என்னை பொருத்த வரை அதுதான் நல்ல வளர்ச்சி + வளர்த்தல் அப்படின்னு தோணுது.

காரூரன் said...

நன்றாக இரசித்து எழுதுகின்றீர்கள். குழந்தை வளர்ப்பை பற்றி ஒரு பேட்டி ஒலி வடிவத்தில் போட்டுள்ளேன். உங்களைப் போல் குழந்தைகளின் மேல் அக்கறை கொண்டவர்களின் விமர்சனத்தை கேட்க விரும்புகின்றேன்.

கவின் said...

“உச்சா வருது!”-இதுதான் பொறுமையின் எல்லை!!!

கவின் said...

ரொம்பவெ பொறுமைசாலிதங்க

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்! உங்கள் வாழ்த்துக்களுக்கு பொருத்தமானவள்தானா என்று எனக்குள்ளே ஒரு கேள்வியும் இருக்கிறது.

//ப்ரஷ்ட்ரேஷன் -
மிக பெரிய வார்த்தை
இப்பொழுது குழந்தைகளிடமுமா //

அவள் அப்படிச் சொல்லவில்லை..நான் எபப்டி அவ்வுணர்ச்சியை புரியவைப்பது என்று அவ்வார்த்தையை பயன்படுத்தினேன்! :-)


//ஹாஜரை சேர்த்துக்கோங்கோ//

கண்டிப்பா ஜமால்!

நன்றி கானாஸ், அமுதா!

நன்றி ஆயில்ஸ், மாத்திட்டா போச்சு..என்ன கொஞ்சம் கமெடி ஸ்டோரியா இருக்கும்!!

//
சென்னை மழை நொம்ப டெரரர் பண்ணியிருக்கு போல//

அதயேன் கேக்குறீங்க..ஹ்ம்ம்!


நன்றி தமிழ்பிரியன், சுரேஷ்!

சந்தனமுல்லை said...

நன்றி அன்பு!
இன்னும் எழுத ஆர்வம் வருகிறது தங்களின் பின்னூட்டத்தால்! பப்புப் பதிவுகளை வாசிக்கிறீர்கள் எனபதறிந்து மகிழ்ச்சி! மெயிலை தவறவிட்டுவிட்டேன் போல..மன்னிக்கவும்!

நன்றி புதுகை..ஆகா..உங்கள் ரங்கமணிக்கு சுத்தி போடவும்!!

நன்றி ராப்! எல்லா வீட்டுலயும் நடக்கரதுதான்.அதுவும் கிளம்பி போனதும் ஒரு நிம்மதி வரும் பாருங்க..:-))

நன்றி முத்துலெட்சுமி...ஆமா..பிடுங்கி நாமே போட்டுடலாமான்னு இருக்கும் இல்ல..ஆனா அப்ப்டி பண்ணா நாமே காரியத்தை கெடுத்த மாதிரி ஆகிடும்!! :-)) சேம் பிளட்!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! ம்ம்..சீக்கிரம் நீங்களும் சொல்வீங்க பாருங்க..:-))
அமித்துக்கு உடம்பு சரியாகிடுச்சா?

நன்றி தமிழ்தோழி..ஆமா..எல்லா வீட்டிலும் காலைக்காட்சிதான்! :-)

நன்றி தமிழன்-கறுப்பி! ஏதோ முயற்சி பண்ணேன்..:-)

நன்றி பூர்ணிமாசரண்..ரொம்ப புகழறீங்க..நான் அதுக்கெல்லாம் தகுதியானவளான்னு தெரியலை!

சந்தனமுல்லை said...

நன்றி ஆகாயநதி,ராஜராஜன்!

நன்றி தாமிரா! :-)

நன்றி தாரணி பிரியா..எனக்கும் பொறுமை சுத்தமா கிடையாது..ஆனா பப்புதான் சொல்லிக் கொடுத்தாங்க!

நன்றி காரூரன்..விரைவில் கேட்கிறேன்!

நன்றி கவின்!