Wednesday, December 03, 2008

பப்பு டைம்ஸ்மழையின் காரணமாக பள்ளி செல்லமுடியாமல் பப்பு பள்ளியை மிகவும் மிஸ் செய்தாள்!
அதன் உச்சகட்டமாக, எல்லா பொம்மைகளையும் அவளைச் சுற்றி உட்கார வைத்து பாடல்கள் சொல்லித்தர ஆரம்பித்தாள். அப்புறம் இப்போ வொக் பண்ணனும் என்று பொம்மைகளைப் படுத்திக் கொண்டிருந்தாள். பொம்மைகள் என்று சொன்னால் கோபம் வரும். அவை அவளது பள்ளி நண்பர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயருண்டு. சஞ்சய், வெண்மதி, ஆகாஷ் என்று. அந்த பெரிய ஆரஞ்சு கலர் பொம்மை பவன் கார்த்தி (பவன் கார்த்தியின் பெற்றோர் இதை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும்.!) ஏனென்று பப்புவுக்குத் தான் தெரியும்!! அப்புறம், அவள் கை வைத்திருப்பதுதான் பப்புவாம். நாந்தான் மோதி ஆன்ட்டி என்று்ம் சொல்லிக்கொண்டாள்! அவளது வகுப்பறையில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறாள்..."கம் ஹியம்" என்பதும், "ஸ்நாக்ஸ் டைம்" என்பதும்!!

Photobucket


அன்றொரு நாள் பப்புவுக்கு அவள் யார் யாரோடு பழகலாம் அல்லது வெளியேச் செல்லலாமென்ற எல்லையை விளக்க எண்ணி பேச்சைத் துவக்கினேன். எப்போது தனியே செல்லலாமென்றும்!

"பப்பு, யாராவது புது ஆண்ட்டி அங்கிள்-ல்லாம் கூப்பிட்டா பேசக்கூடாது!

ஏன் பேசக்கூடாது?

ரைடிங் ஹூட் கதையில் என்ன சொன்னேன்? அந்த ஓநாய் வந்து ரைடிங் ஹூட்டோட
ஆயாவை கட்டிப் போட்டுச்சு இல்ல? ஏன்? பாப்பா ஓநாய்கிட்ட பேசுச்சு,
நான் எங்க ஆயாவை பார்க்கப் போறேன்ன்னு சொல்லுச்சு, அதாலதான்!

யாராவது உன்னை வா, தூக்கறேன் - ன்னு சொன்னா, வேணாம்-னு சொல்லிடனும்!

ஏன் தூக்கக்கூடாதுன்னு சொல்லனும்?

ஆமா பப்பு, அம்மா, அப்பா, ஆயா, தாத்தா-தான் உன்னைத் தூக்கணும்.

"முருகன் மாமா?" (பப்புவின் தாத்தாவின் கார் ஓட்டுனர், முகிலின் தூரத்து உறவினர்)

முருகன் மாமா தூக்கினா, நானே நடந்து வருவேன் - னு சொல்லணும்! நீதான் வளர்ந்துட்டே இல்ல, உன்னால நடக்க முடியும் இல்ல...ஃபாஸ்டா!!

"நான் தயிர் சாதம் சாப்பிட்டு, பெரிய பொண்ணாயிட்ட உடனே தனியா போலாமா?"

(ஆம் என்று சொன்னால், நாந்தான் பெரிய பொண்ணாயிட்டேனே, இப்போவே தனியா போறேன் என்று சொல்வாள் என்றெண்ணி, ம்..அம்மாகூட போலாம் என்று சொன்னேன்!)

அந்தப் பதில் அவளது தன்னம்பிக்கையை, செல்ப்-எஸ்டீமை காயப்படுத்திவிட்டது போல. she felt offended!

"நான் தனியாத்தான் போவேன் ", என்றாள் அதிகாரமான கோபத்துடன்!!


Photobucket

கடந்தவாரத்தில் மழையின்காரணமாக ஊர் கிளம்ப எத்தனித்து செல்லவியலாமல் ஆகிவிட்டது பெரிம்மாவுக்கு. பப்பு அவளது துணிகள் வைக்கப்பட்டிருந்த கூடையினை கொண்டுவந்து வைத்து அவளது பையில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள். ”எங்கே போறே”? என்றதற்கு,

நான் எங்க ஊருக்குப் போறேன்!!

ஆகா, ஆரம்பித்துவிட்டதா என்று ஆச்சர்யத்துடன், எந்த ஊருக்கு என்று வினவ,

“நான் எங்க மாமியார் ஊருக்கு போறேன்!”

நாங்கள் எல்லாரும் எங்கிருந்து கற்றிருப்பாள் என்ற ஆச்சர்யமும், அப்படின்னா யார் என்று அவள் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறியும் நோக்குடனும் ”யார்டா மாமியார்?” என்று கேட்க,

“இதோ, எங்க ஊர்ல எங்க மாமியார் இருக்காங்க, அவங்களைப் பார்க்க போணும்” என்றால் ஹாலின் அந்த மூலையை காட்டியவாறு! நாங்கள் சிரிப்பதைப் பார்த்து தான் ஏதோ நகைச்சுவையாக சொல்லிவிட்டோமென்று புரிந்து அவளுக்கும் ஒரே சிரிப்பு!

(அதாவது ஹாலின் ஒரு பகுதி ஊர் என்றும், கடை எனறும், மெயின் ரோடு என்றும் மாறிக்கொண்டே இருக்கும் அவளது கற்பனைக்குத் தக்கவாறு)

மாமியார் என்றொரு காரெக்டர் "வீட்டுக்கு வீடு லூட்டி" எனும் தொடரில் வருவதாம். ஆனந்தம், கோலங்கள் மட்டும்தான் பார்ப்பதாக ஆயா சொன்னது இரவில் மட்டும் பார்க்கும் தொடர்கள் என்பதும் நிருபணமாகியிருக்கிறது! ;-)

Photobucket

25 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன சம்பந்தியம்மா

மாமியார் வீட்டை ஹாலின் மூலைக்கே கொண்டு வந்திட்டீங்க போல.

"நான் தனியாத்தான் போவேன் ", என்றாள் அதிகாரமான கோபத்துடன்!!
ம். பார்ப்போம் இனிமே எப்படி சமாளிக்க போறீங்கன்னு. (எனக்கு உதவுமில்ல)

"நான் தயிர் சாதம் சாப்பிட்டு, பெரிய பொண்ணாயிட்ட உடனே தனியா போலாமா?"
cho chweeet


"பப்பு, யாராவது புது ஆண்ட்டி அங்கிள்-ல்லாம் கூப்பிட்டா பேசக்கூடாது!
ஏன் பேசக்கூடாது //
அதானே ஏன் பேசக்கூடாது. சொல்லுங்க பப்பு ஆச்சி சொல்லுங்க.

மாமியார் என்றொரு காரெக்டர் "வீட்டுக்கு வீடு லூட்டி" எனும் தொடரில் வருவதாம். ஆனந்தம், கோலங்கள் மட்டும்தான் பார்ப்பதாக ஆயா சொன்னது இரவில் மட்டும் பார்க்கும் தொடர்கள் என்பதும் நிருபணமாகியிருக்கிறது! ;-)
குழந்தை ரொம்ப சீரியல் பார்க்குது. இதெல்லாம் நல்லதில்ல, கூடவே நீங்களும் உக்காந்து பாருங்க. அப்ப புரியும் பப்புவோட கஷ்டம்.

இந்தப் பதிவு ஃபுல்லாவே கொஸ்டின் ஆன்ஸர் மாதிரியே இருக்கு.

அப்புறம் அந்த பவன் கார்த்தி - ஆரஞ்சு பொம்மை - நல்ல கற்பனை தான்.
பப்பு - எப்பம்மா ப்லாக் ஆரம்பிக்கப் போற.

அமிர்தவர்ஷினி அம்மா said...

i think "me the first"

if not me the செகண்டோ, தேர்டாவோ இருக்கும்.

கடைசி பக்கம் said...

//அந்தப் பதில் அவளது தன்னம்பிக்கையை, செல்ப்-எஸ்டீமை காயப்படுத்திவிட்டது போல. she felt offended!

"நான் தனியாத்தான் போவேன் ", என்றாள் அதிகாரமான கோபத்துடன்!! //

:-))

தமிழன்-கறுப்பி... said...

பப்பு கலக்கறாங்க...

தமிழன்-கறுப்பி... said...

\
"நான் தயிர் சாதம் சாப்பிட்டு, பெரிய பொண்ணாயிட்ட உடனே தனியா போலாமா?"
\

பப்புவுக்கு தயிர்சாதம் பிடிக்குமோ...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
“நான் எங்க மாமியார் ஊருக்கு போறேன்!”
\\

அது சரி..!! :)

வல்லிசிம்ஹன் said...

நல்லாப் போனா போ:)

அழகுப் பொண்ணே பப்பு, நான் வந்தா என்னடா கொடுப்பே செல்லம்.
முல்லை, ரொம்ப அழகா பதிவு செய்து வரீங்க. நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எல்லார் குட்டையும் உடைக்கிறாளா? சம்பந்தியே இன்னும் சிரிச்சு முடிக்கல நான்.அதுக்குள்ள மாமியார் வேறயா.. பரவாயில்லை .. அவ இருக்கற லெவலென்ன அது தெரியாம நீங்க என்னவோ ..சின்னப்பிள்ளைன்னு உக்காத்தி வச்சு அட்வைஸ் செய்துட்டு இருக்கீங்க..:))

அமுதா said...

:-)

ராமலக்ஷ்மி said...

கிளம்பிட்டாய்யா பப்பு கிளம்பிட்டா!
சீர் செனத்தி எல்லாம் ரெடியா:)))?

படத்தில் பப்புவின் தோரணையும் பம்மிப் போய் ரவுண்டு கட்டி உட்கார்ந்திருக்கும் நண்பர்களும்
ஏ ஒன்!

தமிழ் பிரியன் said...

பப்புக்கும், ஆச்சிக்கும் இனி அடிக்கடி விவாதங்கள் நடக்கும் போல இருக்கே..;))) சவாலே சமாளி!

rapp said...

சூப்பர்:):):) பப்பு பாக்கற சீரியல் எல்லாம் அவங்க அப்பப்ப சொல்ற க்யூட் டயலாக்ல இருந்து தெரிஞ்சிடுதா:):):)

நீங்க சொல்லிக்கொடுக்கறது ரொம்ப நல்ல விஷயம். இதை அவங்க மனதில் நன்றாக பதியும்படி சொல்லிக்கொடுங்க.

தாமிரா said...

ரசித்தேன்..

SK said...

உங்களுக்கு இனி தான் அதிகம் பொறுமை தேவை படும்னு நினைக்குறேன் :-)

ஆயில்யன் said...

///நான் தயிர் சாதம் சாப்பிட்டு, பெரிய பொண்ணாயிட்ட உடனே தனியா போலாமா?"//

ச்சோஓஓஓஓஒ சுவிட்

வித்யா said...

\\ அமிர்தவர்ஷினி அம்மா said...
"நான் தனியாத்தான் போவேன் ", என்றாள் அதிகாரமான கோபத்துடன்!!
ம். பார்ப்போம் இனிமே எப்படி சமாளிக்க போறீங்கன்னு. (எனக்கு உதவுமில்ல)\\

ரிப்பீட்டுக்கிறேன்:)

ஜீவன் said...

//“இதோ, எங்க ஊர்ல எங்க மாமியார் இருக்காங்க, அவங்களைப் பார்க்க போணும்” என்றால் ஹாலின் அந்த மூலையை காட்டியவாறு!//ஆகா!

சினேகிதி said...

இந்த வயசில பள்ளியை மிஸ் பண்ணுவா..வளர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமா boreஅடிக்கும். அப்புறம் கல்லூரி திரும்ப மிஸ் பண்ணுவம்.

பவான்ட அம்மா பாவம்.

ஆகாய நதி said...

ம்ம்ம்... நேற்று இரவு எங்கள் வீட்டில் பப்பு பற்றிய பேச்சு தான்... பப்புவைக் காண வேண்டும் போல இருக்கிறது :)

கானா பிரபா said...

;-)

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! ஒருநாள் நாங்க பாட்டியோட டாக்டர்கிட்ட போயிருந்தப்போ, பப்பு யார் கையையும் பிடிக்க மாட்டேனுட்டா! "நான் தனியா போறேன்"ன்ன்னு பையை எடுத்துக்கிட்டு போறாப்பா!!

ப்லாக்-தானே..வருவா சீக்கிரம்!!
ஆமா, நீங்க்தான் ப்ர்ஸ்ட்டும், செகண்ட்டும்!

நன்றி கடைசிப் பக்கம்!

நன்றி தமிழன் - கறுப்பி, உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு!

சந்தனமுல்லை said...

தமிழன் - கறுப்பி, தயிர் சாதம் பிடிக்காது. அதனால், தயிர்சாதம் சாப்பிட்டாதான் வளரமுடியும்னு சொன்னாலும், ம்ஹூம்..:(

நன்றி வல்லியம்மா! அவ டீ கொடுப்பா, ஏன்னா அதுதான் எல்லாருக்கும் எப்பவும் அவ கொடுக்கறது, அவளோட விளையாட்டு கப்-களில்!!

நன்றி முத்துலெட்சுமி!!ம்ம்..

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா!

நன்றி ராமலஷ்மி! ஆமா, அப்படிதான் அவங்க ஸ்கூல்ல உட்கார்ந்துப்பாங்க போல வகுப்பறையில்!

நன்றி தமிழ்பிரியன்! ம்ம்..சமாளிச்சிதானே ஆகணும்! :-)

நன்றி ராப்! ஆமா, அதுவும் எங்க பாட்டி எனக்கு பயந்துக்கிட்டு பப்பு தூங்கும் போது பார்ப்பாங்க இல்லன்னா பார்க்கமாட்டாங்க! :-))இவ எல்லாத்தையும் காட்டிக் கொடுத்துடுவா! ஆமா ராப், இப்படி சொல்றதுக்கும் கஷ்டமாதான் இருக்கு, ஆனா வர்ற நியூஸ்ல்லாம் கேட்டா, பயமாருக்கு! :(

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா!

நன்றி sk!! ஆமா, அதுதான் scarcity!! :-)

நன்றி ஆயில்ஸ்!

நன்றி வித்யா!!

நன்றி ஜீவன்!

சந்தனமுல்லை said...

நன்றி சினேகிதி! அதுதானே வாழ்க்கைச் சக்கரம்?!! :-) பவா-வையும் ஆகாஷையும் வெண்மதியையும் நேரில் பார்க்க ஆவலாயிருக்கேன் நானும்! பேரண்ட்ஸ் மீட்-ல பர்க்காமயா போய்டுவோம்!!

நன்றி ஆகாயநதி! ஆகா, பப்புவைப் பற்றியா, என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

நன்றி கானாஸ்!