Friday, December 05, 2008

திருந்திய மனம்

பள்ளி படிக்கும் வயதில், கதைகளும் ஜோக் என்ற பெயரில் ஒரு சில அறுவைகளும் எழுதியிருக்கிறேன், கவிதைகளோடுகூட! அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே எனது கஸின்ஸின் பெயர்கள்! நல்லவேளை, அப்போ அவங்கள்ளாம் இதை படிச்சிருந்தா என்னை பின்னியெடுத்திருப்பாங்க!! ஓக்கே..ஒன்னொன்னா ரிலீஸ் பண்றேன்..இது எழுதினப்போ நான் 11வது படிச்சிக்கிட்டிருந்தேன்னு என்னோட நோட்டு சொல்லுது!!

Photobucket

திருந்திய மனம்

கயல்விழி படித்துக் கொண்டிருந்தாள். ஐந்தரை மணியாகிக் இருந்தது. இன்று அவளுக்குப் பரிட்சை! பத்தாம் வகுப்புத் தேர்வு!பிளாஸ்க்கிலிருந்து ஊற்றப்பட்ட காபி ஆறிப் போய்விட்டிருந்தது. திடீரென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

அவள் மனம் திக் என்றது.இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்றெண்ணியவாறு நாற்காலியிலிருந்து எழுந்தாள். கதவைத் திறந்தபோது அங்கு அமுதமொழி நின்றிருந்தாள்.

கயல்விழி அவளை வரவேற்று என்னவென்று விசாரித்தாள். அமுதமொழி தன் கையிலிருந்த தாளைக் காட்டி ' “கயல்விழி, இதோ சயன்ஸ் கொசின் பேப்பர். அவுட்டாயிடுச்சி, அவா, நாம் ரெண்டு பேரும் படிக்கலாம். ஒரு கொசின்பேப்பர் 50 ரூபாய்னு நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கற கடையில வித்தாங்க. அதான் இப்ப வாங்கிட்டு நேரா இங்க வந்தேன்”.

கயல்விழி ஒன்றும் பேசாமல் மௌனித்தாள். பின்னர் அமுதாவிடமிருந்தது வினாத்தாளை வாங்கிக் கிழித்துப் போட்டாள். சொன்னாள்,” அமுதா, நாம் எப்பவும் நேரான வழியிலதன் போணும். குறுக்கு வழியில போகக் கூடாது. நாம உழைச்சதுக்கேற்ற பலன் கிடைக்கும். நநாம இப்ப இதைப் படிச்சு எழுதினா நம்ம உழைப்புக்கே, ஏன் நம்ம படிப்புக்கே மதிப்பில்லாம போய்டும். நேர்மையா படிச்ச பசங்கள்ளாம் எப்படி வேதனைப்படுவாங்க. நாம படிச்சதுக்கேற்ப மார்க் கிடைக்கும். வா, நாம ரெண்டு பேருமே படிக்கலாம்”, என்று இருவரும் படிக்கத் தொடங்கினர்.


(கயல்விழி, அமுதமொழி இருவரும் என் பெரிய மாமா, சின்ன மாமா பெண்கள். இருவருமே இப்போதைக்கு இதைப் படிக்க நோ சான்ஸ்! இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்!!)

30 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே.

ஆனா உங்க குடும்பப்பெயர்கள் எல்லாமே தமிழ்ப்பெய்ர்களா ரொம்ப நல்லா இருக்கு. உங்க பேரு மாதிரியே

அமுதா, நாம் எப்பவும் நேரான வழியிலதன் போணும். உறுக்கு வழியில போகக் கூடாது. //
இப்படியேவா டைரியில எழுதி வெச்சிருக்கீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லவேளை, அப்போ அவங்கள்ளாம் இதை படிச்சிருந்தா என்னை பின்னியெடுத்திருப்பாங்க!!

ஏன், இப்ப நாங்க பின்னூட்டத்தில பின்னி எடுப்போமே.

இப்ப இன்னா பண்ணுவீங்க

இப்ப இன்னா பண்ணுவீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

கயல்விழி, அமுதமொழி

இந்த இருவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
பின்னூட்டத்தில் பின்னியெடுப்போர் சங்கம்

தமிழ் பிரியன் said...

அப்பமே தங்கச்சி ஒரு டெரரா தான் இருந்திருக்கு போல...:))
இனி அடுத்தடுத்து வேற இருக்காமே? பதியுங்க.. படிக்கின்றோம்.

ஆயில்யன் said...

ஆச்சி!

இப்படித்தான் பீல் பண்ணி பீல் பண்ணி நாம பதிவுகளால் அட்டாக் பண்ணனும் ஒ.கே!

இன்னும் கொஞ்சம் டெரரா ஃபீல் பண்ணுனா நீங்க பப்பு வயசுல இருக்கும்போது செஞ்ச குறும்புகளெல்லாம் கூட கண்டுபுடிச்சிடலாம்

கண்டினியூ!
கண்டினியூ!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இப்ப என்னா கதையெல்லாம் புத்தமா போட்டு துணைப்பாடமா அரசை அறிவிச்சிட சொல்லலாமா..?

அதிரை ஜமால் said...

\\கயல்விழி, இதோ சயன்ஸ் கொசின் பேப்பர். அவுட்டாயிடுச்சி, அவா, நாம் ரெண்டு பேரும் படிக்கலாம். ஒரு கொசின்பேப்பர் 50 ரூபாய்னு நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கற கடையில வித்தாங்க. அதான் இப்ப வாங்கிட்டு நேரா இங்க வந்தேன்”.\\

இப்படித்தான் படிச்சியலா அப்படீன்னு கேட்கலாம்ன்னு நினைத்தேன்.

கயல்விழி ஒன்றும் பேசாமல் மௌனித்தாள்.

ஏங்க மொளனம்.
(மொளனம் சம்மதம்)

அதிரை ஜமால் said...

\\இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்!\\

சொல்லுங்க சொல்லுங்க

வித்யா said...

ஹி ஹி முல்லை நான் கூட இதுமாதிரி நிறைய எழுதியிருக்கேன். நோ நோ பினாத்திருக்கேன். இதுல கொடுமை என்னன்னா அதெல்லாம் ஸ்கூல் மேகசின்ல வந்துருக்கு. இப்ப படிச்சா எனக்கு சிரிப்புதான் வரும்:)

அமுதா said...

/*இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்*/

செய்ங்க... படிக்கிறோம். :-)

Anand said...

Sinna vayasula Siruvarmalarla padikira katha mathiri iruku ;)

புதுகைத் தென்றல் said...

ஏன், இப்ப நாங்க பின்னூட்டத்தில பின்னி எடுப்போமே.

இப்ப இன்னா பண்ணுவீங்க

இப்ப இன்னா பண்ணுவீங்க//

அதானே !!!!!!

ராமலக்ஷ்மி said...

கதை அருமை.

//இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்!!)//

காத்திருக்கிறோம். இப்படி ஒரு
நோட்டு[டைரி] என்னிடமும் இருக்கு, எந்தத் தேதியில் எழுதியது என்பதுடன் :)!

பிரேம்குமார் said...

முல்லை, உங்களுக்குள்ள ஒரு கதாசிரியை, ஒரு கவிஞர் இப்படி பல பேர் ஒளிஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு சொல்லவே இல்லை :)

முத்துலெட்சுமி அக்கா சொன்ன மாதிரி பேசாம ஒரு புத்தகம் போட்டுட வேண்டியது தான் :)

பிரேம்குமார் said...

//உங்க குடும்பப்பெயர்கள் எல்லாமே தமிழ்ப்பெய்ர்களா ரொம்ப நல்லா இருக்கு. உங்க பேரு மாதிரியே//

வழிமொழிகிறேன்

தாரணி பிரியா said...

நல்ல கதைங்க சந்தனமுல்லை. இதை அப்படியே பப்புக்கு சொல்லி குடுங்க. :)

புள்ளையும் நம்மள மாதிரி நல்ல பொண்ணு வளர்வா. :)


என் தம்பி பொண்ணு , என் ரங்கமணியோட அண்ணன் பொண்ணு இவங்க ரெண்டு பேரும் கயல்தான்.

குடுகுடுப்பை said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கயல்விழி, அமுதமொழி

இந்த இருவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
பின்னூட்டத்தில் பின்னியெடுப்போர் சங்கம்

//
சங்க உறுப்பினர்.

rapp said...

ஹா ஹா ஹா, அமுதமொழி என்னைய மாதிரி தில்லாலங்கடிக் கேரக்டரா:):):)

rapp said...

//இதை அப்படியே பப்புக்கு சொல்லி குடுங்க//

வழிமொழிகிறேன் :):):)

பாரதி said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இப்ப என்னா கதையெல்லாம் புத்தமா போட்டு துணைப்பாடமா அரசை அறிவிச்சிட சொல்லலாமா..?
/

ரிப்பீட்டேய்...!

சினேகிதி said...

\\கயல்விழி, அமுதமொழி

இந்த இருவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

\\

அதே அதே !!

ஜீவன் said...

எனக்கு கூட ஒருவாட்டி +1 படிக்கும் போது

பக்கத்து ஊர்ல ஒருத்தன் கிட்ட அவுட் ஆன

இங்கிலீஷ் பாட கொஸ்டின் பேப்பர் இருக்குன்னு

கேள்விப்பட்டு ஆறு கிலோமீட்டர் சைகிள்ல போய்

வாங்கியாந்து ஓவர் நைட் ல உக்காந்து படிச்சு

முப்பத்தி ஏழு மார்க் வாங்கினேன்!

ஆனா அது எவ்ளோ பெரிய தப்புன்னு

உங்க கதைய படிச்ச பிறகுதான் புரியுது !

;;;;))))

ஆகாய நதி said...

அப்புறம் என்னாச்சு அந்த கொஸ்டின் பேப்பர் தான் பரீட்சைக்கு வந்ததா?

cheena (சீனா) said...

கொசுவத்தி சுத்தீட்டீங்க - நாட்குறிப்பு எப்படி எல்லாம் பயன் படுது பாத்தீங்களா - மனது மகிழும்

cheena (சீனா) said...

http://naanpudhuvandu.blogspot.com/2008/12/10.html

பப்புவிற்குப் போட்டுக் காட்டவும்

மோனிபுவன் அம்மா said...

படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது.


யார் அந்த பப்பு
தெரியப்படுத்தவும்

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! ஆமா, எல்லார் பேரும் தமிழ்ப் பெயர்கள்தான்! அமுதமொழியின் தங்கை மட்டும் கார்க்குழலின்ற பேரை சுபா-ன்னு மாத்திக்கிட்டா! ;-)


//பின்னூட்டத்தில் பின்னியெடுப்போர் சங்கம்//

இது எப்போர்ந்து?? உட்கார்ந்து யோசிப்பீங்களோ? :-))

ஆமா, தமிழ்பிரியன். விடமாட்டோம் இல்ல!!அதான் படிக்க நீங்கள்ளாம் இருக்கீங்களே!!

நன்றி ஆயில்ஸ்! ஆகா, இப்படி ஒரு ஞாபகசக்தி மட்டும் எனக்கிருந்தா...ம்ம்..

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி! ம்ம்..உங்க ஆசை அதுவாயிருந்தா நான் வேண்டான்னா சொல்லப் போறேன்?! ;-))


நன்றி ஜமால்! ஆகா!! கதையவே மாத்துறீங்களே!!


நன்றி வித்யா! அப்போ அது பெரிய விஷயம், ஆனா இப்போ நினைச்சா செம சில்லியா இருக்கு இல்லை..என்னோட கதைகளையும் கவிதைகளையும் சேர்த்துதான் சொல்றேன்!!

நன்றி அமுதா! படிக்கத்தான் நீங்க இருக்கீங்களேன்ற தைரியம்தான்!


நன்றி ஆனந்த்! ஆம, அதெல்லாம்தானே அப்போ படிப்போம் அதோட இன்ப்ளூயன்ஸா கூட இருக்கலாம்! பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம்!! :-))

நன்றி புதுகை பின்னியெடுத்ததுக்கு! lol

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி! அப்போ உங்க கதைகளையும் போடுங்க சீக்கிரம்..கவிதைகளைத்டான் அப்போப்போ எடுத்துவிட்டு அசத்தறீங்களே! ;-)

நன்றி பிரேம்! ஆமா, என்னை யாருன்னு நினைச்சீங்க? lol! உங்க ஆர்வத்தைப் பார்த்தா புல்லரிக்குது!!

நன்றி தாரணி! அழகு பெயர் இல்லையா கயல்-ங்கறது!! :-) கண்டிப்பா சொல்லிக் குடுக்கறேன், தப்பிக்க முடியுமா என்ன!!
:-))


நன்றி குடுகுடுப்பை! ஆகா, நான் நல்லாருக்கறது பிடிக்கலையா உங்களுக்கு!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி ராப்!! ஆகா, வீட்டிற்கு ஒரு அமுதமொழி போல!! ;-)) கண்டிப்பா சொல்லி கொடுக்கறேன் ராப்!! விட்டுடுவோமா என்ன?!!

நன்றி பாரதி!!

நன்றி சிநேகிதி,ஆகா ஒரு க்ரூப்பாதான் கிளம்பியிருக்கீங்க போல!!

நன்றி ஜீவன். நீங்கதான் அந்த கடைக்காரருக்கே கொடுத்ததோ?! ;-))


நன்றி ஆகாயநதி! ம்ம்..கேட்டுச் சொல்றேன்ப்பா! :-)

நன்றி சீனா, கண்டிப்பா போட்டுக் காட்டறேன்! ஆமா, அது ஒரு சந்தோஷம்தான்!

நண்றி மோனிபுவன் அம்மா!பப்பு, என் மகள்!