Friday, December 12, 2008

பப்புக் குறிப்புகளும், பப்புவுக்குக் குறிப்புகளும்!!(படத்தில் தெரியும் அந்தச் சின்னஞ்சிறு கைகள் செயதன, இந்த வட்டத்தை!)

பப்புவுக்கு இப்போது எல்லாமே ஷேப்ஸ்தான்! வட்டங்கள், முக்கோணங்கள் மற்றும் சதுரங்கள் ஆளுகின்றன அவளது கற்பனையை! முக்கோணம் செய்து எங்களைக் கூப்பிட்டு காட்டியவள், காமெரா எடுத்து வருவதற்குள் கலைத்து வட்டமாக்கி விட்டாள்! எழுதும் போதும் எழுத்துக்களால் ஒரு கட்டத்தை அமைக்கிறாள்.

இப்போது உணவில் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது அவளுக்கு. சாதத்தை தண்ணீரில் போட்டு, காயையும் சேர்த்து...பின் தம்ளருக்கு மாற்றியென. நானும் எந்த கட்டுபாடுகளை வீச வில்லை, இந்த முறை! அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது எனில், அதில் ஒரு புதிய முறையை கற்கிறாள் எனில், செய்வதில், செய்யும் முறையில் ஆழ்ந்து போகும் விஷயமெனில் அதைக் கலைப்பானேன்?!

ஜனகன மன பாடக் கற்றுக் கொண்டுள்ளாள். “பாக்ய விதாதா” வும், பஞ்ஞ்ஞாஆஆப சிந்துவும்” அடிக்கடி வரும், எந்த சீக்வென்ஸாயிருந்தாலும்! இப்போதுதான் ஜீரத்திலிருந்து மீண்டிருக்கிறாள், ஆனால் சளி இருப்பதால் குரல் பதிவு லேட்டர்!!

உண்மையில் இந்தப் பதிவை போட இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணவில்லை, ஆனால் அப்படி ஆகிவிட்டது. பப்புவின் பள்ளியில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அவளது முன்னேற்ற மறுபார்வைகள் (progress review - தமிழ்ல என்னப்பா??) நடந்தேறியது. இதோ பப்புவுக்கான ஒரு சின்னக் குறிப்பு:

பப்பு,

உனது பள்ளியின் ரெவ்யூ எனக்கு ஆச்சர்யங்களெதையும் தரவில்லை. நீயாகவே என்ன வொர்க் செய்ய வேண்டுமென்றும், அதை ”well co-ordinated hand movements"களிலும் செய்து விடுகிறாய். வேலை செய்யும்போது எதுவும் உன் கவனத்தை திசைத் திருப்புவதில்லை போலும்! நிறைய நேரங்களில் நானும் அதை உணர்ந்திருக்கிறேன், எப்போதும் இப்படி இருக்கவேண்டுமெனவும் ஆசைப்பட்டிருக்கிறேன்!

சப்தங்களை அறிந்துணர்வதிலும், பொருட்களை கண்டறிவதிலும் உனக்கு அதிக ஆர்வமே. பாடுவதிலும், பாடல்கள் கற்பதிலும் மகிழ்ச்சியாய் உணர்கிறாய், எப்போதும் போல்!! ஆனால் பப்பு, ஆங்கிலத்தில் பேச இன்னமும் நன்றாய் பழக வேண்டும். இனிமேல், முயற்சிக்கலாம் என்ன?!

முக்கியமாக, பள்ளியின் உனது சூழ்நிலையில் நீ பொருந்திவிட்டாய் என்றும் சொல்லப்படாத விதிகளை புரிந்துக் கொண்டாயெனவும் அறியும்போது கவலைகள் நீங்கியது. நீ கற்பது என்பது அடுத்த விஷயம், ஆனால் உனக்கான ஒரு இடத்தை, அந்த இடத்தில் நீயாக accomadate ஆவது..சுழல ஒரு மையத்தை உராய்வுகளின்றி நீயாகவே அமைத்துக் கொள்வதே என் விருப்பம்! I always want you to be independent, to be on your own!

100 நாட்கள் நடைப்பெற்ற பள்ளிக்கு, 60 நாட்கள் சென்றிருக்கிறாய். ஜூலையில் சேர்ந்ததால் ஒரு மாத வருகை தடைப்பட்டிருக்கிறது.

பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!

பல நேரங்களில் நாமிருவருமே பெருமை கொண்டவர்களாகி விடுகிறோம், சில நேரங்களில் உன்னாலும், சில நேரங்களில் என்னாலும். இந்ததடவை உன்னால்!! நன்றி, மகளே!

உன் அம்மா!

25 comments:

கானா பிரபா said...

rasithen

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)

தமிழ் பிரியன் said...

ஆச்சிக்கு பப்புவால் பெருமை. பப்புக்கு ஆச்சியால் பெருமை! குட் காம்பினேசன்! தங்கை, மருமகளால் எங்களுக்கெல்லாம் பெருமையாக்கும்... பீத்திக்குவோம்ல..;)

அமுதா said...

/*a well-mannered kid with smiling face */
very good pappu.

சின்ன அம்மிணி said...

ஒரு அம்மாவின் கவலை தெரிகிறது. கவலையை விடுங்கள். எல்லாம் விரைவில் கற்றுக்கொள்வாள் பப்பு, தமிழ் சுலபமாக வரும். ஏனென்றால் வீட்டிலும் அக்கம்பக்கத்தாருடனும் பேசுவதால். மற்ற மொழிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் வரும். :)

ஆகாய நதி said...

படிக்கும் போதே பப்புவை நினைத்து பெருமிதமாக இருக்கிறது... ஒரு தாயாக பப்புவின் முன்னேற்றத்தை நேரில் காணும் உங்கள் மகிழ்ச்சியை உணர முடிகிறது :) பப்புவுக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

நீங்கள் என்னை tag செய்ததற்கு மிக்க நன்றி விரைவில் பதிவிடுகிறேன்...

சுரேகா.. said...

அழகு...

பப்பு எது செய்தாலுமே க்யூட் !!

ஆமா..பப்புவுக்கு ரசிகர் மன்றம் வைக்க
அவங்ககிட்ட அனுமதி வாங்கணுமா?
இல்லை..உங்ககிட்டயா?
:))

ஆயில்யன் said...

//பல நேரங்களில் நாமிருவருமே பெருமை கொண்டவர்களாகி விடுகிறோம், சில நேரங்களில் உன்னாலும், சில நேரங்களில் என்னாலும். இந்ததடவை உன்னால்!! நன்றி, மகளே!
///


அழகாய் அமைந்திருக்கிறது வரிகள் !

சூப்பர் ஆச்சி!

அதிரை ஜமால் said...

ம்ம்ம் ...

நான் வளர்கிறேனே மம்மி

அதிரை ஜமால் said...

\\நானும் எந்த கட்டுபாடுகளை வீச வில்லை\\

நல்ல தாய்

நல்லதாய் செய்கிறீர்கள்

அதிரை ஜமால் said...

\\வேலை செய்யும்போது எதுவும் உன் கவனத்தை திசைத் திருப்புவதில்லை\\

பொதுவாய் பெண் பிள்ளைகள் இப்படித்தான் என்று என்னுடைய கருத்து.

ஒரு வேளையில் இருக்கும் பொழுது வேறு இடத்தில் கவனம் செல்லுவதில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி வரிகள் கொஞ்சம் நெகிழ்ச்சியைத்தருகின்றது.

பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!//
நாங்களும்தான்

சுழல ஒரு மையத்தை உராய்வுகளின்றி நீயாகவே அமைத்துக் கொள்வதே என் விருப்பம் //
கவிதை போன்ற வரிகள்
எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு
இது நீங்க பப்புவுக்கு சொன்னாலும், இது எல்லாருக்குமே பொருந்தும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சப்தங்களை அறிந்துணர்வதிலும், பொருட்களை கண்டறிவதிலும் உனக்கு அதிக ஆர்வமே. பாடுவதிலும், பாடல்கள் கற்பதிலும் மகிழ்ச்சியாய் உணர்கிறாய், எப்போதும் போல்!! ஆனால் பப்பு, ஆங்கிலத்தில் பேச இன்னமும் நன்றாய் பழக வேண்டும். இனிமேல், முயற்சிக்கலாம் என்ன?!//

I AM ALWAYS PROUD ON YOU & PAPPU, THIS TIME TOOO

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்போது உணவில் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது அவளுக்கு. சாதத்தை தண்ணீரில் போட்டு, காயையும் சேர்த்து...பின் தம்ளருக்கு மாற்றியென. நானும் எந்த கட்டுபாடுகளை வீச வில்லை, இந்த முறை! அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது எனில், அதில் ஒரு புதிய முறையை கற்கிறாள் எனில், செய்வதில், செய்யும் முறையில் ஆழ்ந்து போகும் விஷயமெனில் அதைக் கலைப்பானேன்?!

நானும் அமித்துவிடம் சில விஷயங்களில் இது போல நடந்துகொள்கிறேன்.
ஆனால் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு இது தப்பாய் படுகிறது
:)))))

வித்யா said...

\\ I always want you to be independent, to be on your own!\\

எல்லா குழந்தைகளும் இதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்.

நிஜமா நல்லவன் said...

/பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!/


நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

ஆச்சிக்கு பப்புவால் பெருமை. பப்புக்கு ஆச்சியால் பெருமை! குட் காம்பினேசன்! தங்கை, மருமகளால் எங்களுக்கெல்லாம் பெருமையாக்கும்.../

ரிப்பீட்டேய்..!

ஜீவன் said...

முன்னேற்ற மறுபார்வைகள் (progress review - தமிழ்ல என்னப்பா??)

நாமளா ஏதாவது வைச்சுக்க
வேண்டியதுதான்!

கொஞ்சநாள் போனா பப்புவே
சொல்லும்!

பிரேம்குமார் said...

// “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!//

நாங்களும் வேண்டிக்கொள்வோம் :)

அதிரை ஜமால் said...

\\ ஜீவன் said...
முன்னேற்ற மறுபார்வைகள் (progress review - தமிழ்ல என்னப்பா??)

நாமளா ஏதாவது வைச்சுக்க
வேண்டியதுதான்!

கொஞ்சநாள் போனா பப்புவே
சொல்லும்!\\

அண்ணா டாப்பு

ஏகலைவன் said...

நல்ல தாய், தந்தை இருந்தால் எல்லா குழந்தைகளும் அப்படித்தான்
// பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க //
சுழல ஒரு மையத்தை உராய்வுகளின்றி நீயாகவே அமைத்துக் கொள்ள//

வாழ்த்துக்கள் பப்பு

சந்தனமுல்லை said...

நன்றி கானாஸ், முத்துலெட்சுமி, தமிழ்பிரியன், அமுதா!

சந்தனமுல்லை said...

நன்றி சின்ன அம்மிணி,
//கவலையை விடுங்கள். எல்லாம் விரைவில் கற்றுக்கொள்வாள் பப்பு//
அப்படிதான் நம்பிக்கொண்டிருக்கிறேன்!

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆகாயநதி!
//விரைவில் பதிவிடுகிறேன்...//

போட்டாச்சா?

நன்றி சுரேகா..:-))

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்!!

நன்றி ஜமால்..

//நல்ல தாய்

நல்லதாய் செய்கிறீர்கள்// வார்த்தை விளையாட்டா!!

நன்றி அமித்து அம்மா!
சொன்னா நம்ப மாட்டீங்க..உங்க கவிதைகளின் ஏதோ ஒரு பாதிப்பு என்று நினைத்துக் கொண்டேன், அதை எழுதும் போது!!

//ஆனால் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு இது தப்பாய் படுகிறது//

:-) சிலசமயங்களின் அப்படித்தான்..கண்டுக் கொள்ளாதீர்கள்!

சந்தனமுல்லை said...

நன்றி நிஜமா நல்லவன்,வித்யா!!

நன்றி ஜீவன்! //கொஞ்சநாள் போனா பப்புவே
சொல்லும்!//

அதானே!!!

நன்றி பிரேம், ஏகலைவன்!!