Monday, December 22, 2008

நானும் மனிதர்களும்

(உபயம் : பள்ளிக்காலத்து கதை நோட்டு)

மு.கு: இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? (ஒரு சில வாக்கியங்கள் எனது மற்றும் என் கிளாஸ் தோழிகளின் அனுபவங்கள். )


நான் மாடியில் இயற்கையின் மடியில் போதையுற்று இருந்தேன். நான இலைகளின் இனிய கீதத்தில் மயங்கியிருந்தேன். கீழே, காற்றில் ஓடும் சருகுகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். மேகப்பட்டாடையை கிழித்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் நிலவின் குறும்பை ரசித்து மெய் சிலிர்த்தேன்.

கீழே, வீட்டில் சலசலப்பு. இன்று சன் டீவியில் “நீங்கள் கேட்ட பாடலாம்.”

ஓ, சொல்ல மறந்துவிட்டேனல்லவா!
நான் 16 வயதுடைய இளம்பெண்.

கீழேயிருந்து அம்மா கூப்பிட்டாள்.

”கேட்ட பாடல்”கூட கேட்காம என்ன பண்றா, மாடியில” - பக்கத்து வீட்டு பெண்ணின் சந்தேகம்.

“என்ன செய்றா மாடில் இவ்வளவு நேரம்”? - ஒரு அம்மாவின் கேள்வி.

“இந்த நேரத்தில என்ன வேல, மாடில? காலங் கெட்டுக் கிடக்கு, பொண்ணுங்களை அப்படியே
சுசந்திரமா விட்டுட முடியாது” - ஓசி டீவி பார்க்க வந்த ஒருவரின் லெக்சர்.

ஓ, உங்களுக்குத் தெரியுமா? தென்றலின் தீண்டுதலின் சுகம்? நீங்கள் அறிவீர்களா பிறைநிலவின் புன்சிரிப்பை?

பிறைநிலவு எனை நோக்கிச் சிரித்தது என்று நான் சொல்வேனாகில் நீங்கள் பக்கத்து விட்டு சந்திரன் உன்னை பார்த்து ஜொள்ளுவிட்டானா என்பீர்களே?

பறவைகளின் மோகனராக கொஞ்சலில் என மறந்தேன் என்றால் மோகன் உனைப் பார்த்து சீழ்க்கையடித்தது என் காதில் எபப்டி விழாமல் போயிற்று என்று கேட்பவராயிற்றே நீங்கள்?

பக்கத்துவீட்டு சரளா ஓடிப்போனதையும், அம்புஜத்தின வீட்டுக்காரன் சின்ன வீடு வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி பேசும் உங்களிடம் நான் என் ரசனைகளை எப்படி பகிர்ந்துக் கொள்வேன்?

சினிமாவிலே வாழ்ந்து, கனவிலே சஞ்சரித்துவிடும் உங்களிடம் என்னை எப்படி அறிமுகப் படுத்திக்கொள்வேன்?

என் வயதொத்த சக மாணவனுடன் பேசினாலும் சந்தேகக் கண்களுடன் பார்க்கும் உங்களுக்கு எங்கள் நட்பை எப்படி புரிய வைப்பேன்?

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தேன்.வராண்டாவில் மோகன் மாமா. உள்ளே நுழைகிறேன். அவர் பேசியது என் காதில் பாய்ந்தது, வஜ்ரமாக.

“உங்க பெண்ணை நான் கடைத்தெருவில் ஒரு பையனுடன் பார்த்தேன், காலங் கெட்டுக் கிடக்கு, என்ன இருந்தாலும் வயசுப் பொண்ணு. அடுத்த நிமிஷம் என்ன செய்வான்னு யாருக்கு என்னத் தெரியும்? நம்ப மானம் காத்தில பறக்கறதுக்கு முன்னாடி கண்டிச்சு வையுங்க”.

அப்பாவிற்கு கோபம் மூக்கின் மேல் வந்தது. “மாமா சொல்றாரே, உண்மையா”?

ஒருமுறை இருவரையும் தீர்க்கமாய் பார்த்துவிட்டு “மாமா, உங்க பெண்ண இப்பதான் அருண் ஐஸ்கிரீம் வாசலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதுக்கும் கண்டிச்சு வையுங்க, ஏதாவது தப்பு நடக்கற்துக்குள்ளே. உங்க தங்கச்சி காய்கறி காரன்கிட்டே கலகலன்னு அப்படி என பேசுவா? கொஞ்சம் கண்டிச்சு வைங்க, ஏடாகூடாம நடக்கறதுக்கு முன்னாடி” - என்றபடி செருப்பை காலிலிருந்து வீசியெறிந்துவிட்டு, மாடியில் சென்று கதவை படீரென சாத்திவிட்டு அழ ஆரம்பிக்கிறேன் நான்!!
தமிழ்பிரியன் அண்ணா, உங்க குழலோவியத்தில் இந்த கதையை கொஞ்சம் பரிந்துரைப்பீர்களா?:-))

37 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவ்வளவு தைரியமா பேசிட்டு ஏங்க அழுதீங்க.

அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?
அதானே, நம்பவா போறோம்
அப்புறம் எதுக்கு மு.கு, பி.கு இதெல்லாம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிறைநிலவு எனை நோக்கிச் சிரித்தது என்று நான் சொல்வேனாகில் நீங்கள் பக்கத்து விட்டு சந்திரன் உன்னை பார்த்து ஜொள்ளுவிட்டானா என்பீர்களே?
ஹி ஹி
ஹைய் புதுசா இருக்கே,

பர்வைகளின் மோகனராக கொஞ்சலில் என மறந்தேன் என்றால் மோகன் உனைப் பார்த்து சீழ்க்கையடித்தது என் காதில் எபப்டி விழாமல் போயிற்று என்று கேட்பவராயிற்றே நீங்கள்?
இந்த ஐடியா எனக்கு இதுவரைக்கும் தோணாம போச்சே, ச்சே

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஓ, சொல்ல மறந்துவிட்டேனல்லவா!
நான் 16 வயதுடைய இளம்பெண்.
இப்பவா ஆச்சி.

”கேட்ட பாடல்”கூட கேட்காம என்ன பண்றா, மாடியில” - பக்கத்து வீட்டு பெண்ணின் சந்தேகம்.

அவங்கதான் மாடியில இயற்கையின் மடியில் போதையுற்று இருக்குறாங்களே எப்படி கேட்கும்,
கொஞ்சம் கூட தெரியல இந்த பக்கத்து வீட்டு பொண்ணுக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று சன் டீவியில் “நீங்கள் கேட்ட பாடலாம்.”

கலைஞர் டி.விக்கு கை மாறிடுச்சே.

குடுகுடுப்பை said...

கதை நல்லாதான் இருக்கு, எங்க வீட்ல பொண்ணுங்க இல்ல இந்த மாதிரி கட்டுப்பாடு எங்களுக்கே உண்டு.8 மணிக்கு வீட்டுக்கு வந்துரனும். தேவையில்லாம யாருகிட்டயும் பேசக்கூடாது..........

அப்படியே வந்து ஓவியத்துல ஆடியோ சேத்துருக்கேன் கேளுங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் வயதொத்த சக மாணவனுடன் பேசினாலும் சந்தேகக் கண்களுடன் பார்க்கும் உங்களுக்கு எங்கள் நட்பை எபப்டி புரிய வைப்பேன்?

முடியாது முடியாது, புரிஞ்சிக்கவே முடியாது
ஆனா புரியுது புரியுது இப்ப நல்லாவே புரியுது, ஒரு அம்மாவா ஆன பிறகு
நம் அம்மாக்களின் அவஸ்தை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

"நானும் மனிதர்களும்"

அப்ப நான் யார் ஆச்சி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

குழலோவியம் அப்ப அடுத்த வாரம் வெளிவந்துடுச்சா.. பரவாயில்லையே பேசாம ஒரு இணைய இதழ் ஆரம்பிச்சிரலாமா ... :)உங்களமாதிரி பெரிய எழுத்தாளர்கள் இருக்கும் போது என்ன கவலை...

அமுதா said...

/*முடியாது முடியாது, புரிஞ்சிக்கவே முடியாது
ஆனா புரியுது புரியுது இப்ப நல்லாவே புரியுது, ஒரு அம்மாவா ஆன பிறகு
நம் அம்மாக்களின் அவஸ்தை.*/
ரிப்பீட்டு :-)

சின்ன அம்மிணி said...

//மு.கு: இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?//

எங்கள நல்லா புரிஞ்சு வைச்சிருக்கீங்க

சின்ன அம்மிணி said...

பதின்ம வயசு குழந்தைகள் தடம் மாற நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஒரு சில தவறுகள் திருத்தப்பட முடியாது. ஆனா அதுக்காக கண்கொத்திப்பாம்பா கவனிக்கறதும் தப்பு. எதிர்மறை விளைவையே உண்டாக்கும்.

அ.மு.செய்யது said...

"ம‌ங்கைய‌ராய் பிற‌ப்ப‌த‌ற்கே
ந‌ல்ல‌ மாத‌வ‌ம் செய்திட‌ல் வேண்டும‌ம்மா...."

இன்றோ நிலைமை வேறு.

அருமையான க‌ருத்துக‌ள் !!!!!

அதிரை ஜமால் said...

எங்கப்பா குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லச்சொன்னார்


மு.கு: இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

அதிரை ஜமால் said...

\\ஓசி டீவி பார்க்க வந்த ஒருவரின் லெக்சர்.\\

இது நல்லா நடக்கும் ம்ம்ம்

அதிரை ஜமால் said...

\\பிறைநிலவு எனை நோக்கிச் சிரித்தது என்று நான் சொல்வேனாகில் நீங்கள் பக்கத்து விட்டு சந்திரன் உன்னை பார்த்து ஜொள்ளுவிட்டானா என்பீர்களே?\\

ஹா ஹா ஹா

நல்லாதான் இருக்கு ஹாஸ்யம்.

அதிரை ஜமால் said...

\\ஒருமுறை இருவரையும் தீர்க்கமாய் பார்த்துவிட்டு “மாமா, உங்க பெண்ண இப்பதான் அருண் ஐஸ்கிரீம் வாசலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதுக்கும் கண்டிச்சு வையுங்க, ஏதாவது தப்பு நடக்கற்துக்குள்ளே. உங்க தங்கச்சி காய்கறி காரன்கிட்டே கலகலன்னு அப்படி என பேசுவா? கொஞ்சம் கண்டிச்சு வைங்க, ஏடாகூடாம நடக்கறதுக்கு முன்னாடி” - என்றபடி செருப்பை காலிலிருந்து வீசியெறிந்துவிட்டு, மாடியில் சென்று கதவை படீரென சாத்திவிட்டு அழ ஆரம்பிக்கிறேன் நான்!!\\

அருமை.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை:)))!
இந்த மனிதர்களே இப்படித்தாங்க!

அட, நான் சொல்ல நினைச்சதையே முத்துலெட்சுமி சொல்லிட்டாங்க. குழலோவியம் ஆரம்பிச்சிடலாமா? எடிட்டர் தமிழ் பிரியன். சரிதானா:)?

சுந்தரா said...

கட்டுப்பாடுகள் கூட சுகம்தான், நாமும் அம்மாவான பின்னால் யோசித்துப் பார்க்கையில்...
ஆனால், விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்காம,பேனைப் பெருமாளாக்கும் பெரிய மனுஷங்களின் தொந்தரவுதான் தாங்கமுடியாதது...

PoornimaSaran said...

//ஒருமுறை இருவரையும் தீர்க்கமாய் பார்த்துவிட்டு “மாமா, உங்க பெண்ண இப்பதான் அருண் ஐஸ்கிரீம் வாசலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதுக்கும் கண்டிச்சு வையுங்க, ஏதாவது தப்பு நடக்கற்துக்குள்ளே. உங்க தங்கச்சி காய்கறி காரன்கிட்டே கலகலன்னு அப்படி என பேசுவா? கொஞ்சம் கண்டிச்சு வைங்க, ஏடாகூடாம நடக்கறதுக்கு முன்னாடி//

நெத்தி அடி:)

மிஸஸ்.டவுட் said...

நிஜம் தான் சந்தனமுல்லை ...எனக்கும் உங்கள் ஆதங்கம் இருந்தது முன்பு ஒருநாள்...பாடிப் பறந்து திரியும் வயதில் யார் என்ன சொல்லி விடுவார்களோ? என்று அதீத கவனத்துடன் எல்லா விசயங்களையும் செய்வது வாழ்வை ஒரு வித செயற்கை தன்மை கொண்டதாக ஆக்கி விடுகிறது .
நாம் நாமாக வாழ முயன்றால் அதை இந்த சமூகம் ஒருநாளும் நேர்கொண்ட பொருளில் பார்க்கப் போவதே இல்லை.
"விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலே பறந்து திரிகுவை" அதுக்கெல்லாம் சாத்தியம் இல்லை பெண் குழந்தைகளுக்கு.
என்ன செய்ய ?இந்த சமூகம் சார்ந்தே எல்லா விசயங்களையும் முடிவு செய்யும் பட்சத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய நபர்கள் அளவுக்கு கடினமானவர்களாக இல்லாவிட்டாலும் கூட நாமும் கூட நம் குழந்தைகளிடம் வெகு சில இடங்களில் நம் பிடிவாதத்தை காட்டி இருப்போம் தானே?! ஒன்றும் சொல்வதற்க்கில்லை "இது தான் உலகம்"

தாமிரா said...

நல்ல கதை.!

நிஜமா நல்லவன் said...

நல்ல கதை:)

அனுஜன்யா said...

அனுபவங்கள்தானே புனைவுக்கு அடிப்படை! நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கள் சந்தனமுல்லை.

அனுஜன்யா

தமிழ் பிரியன் said...

நிதர்சனம்... நம்மை நம்பாதவர்களே நம்மை சுற்றி இருக்கும் உணர்வு வருகின்றது சில நேரங்களில்...:(

ஊரில் இருந்து வந்ததும் குழலோவியம் இணைய இதழ் ஆரம்பிச்சுடலாம்.... :)

ஆயில்யன் said...

மீ த லேட்டாய் வந்தேன்

வணக்கம் தந்தேன்!

KVR said...

இப்பொழுதென்றால், "ஆமாம்ப்பா பேசினேன். என்னோட க்ளாஸ்ல படிக்கிற பையனை தெருவிலே எதிர்ல பார்த்தா பேசறது தப்பா" என்று உணர்ச்சிவசப்படாமல் கேக்கத் தோன்றும். ஆனால், கதையின் நாயகிக்கு (நீங்க இல்லைன்னு நம்புறேன்) பதினாறு வயசாச்சே, அப்படி தான் பேசத் தோன்றும் :-). பொதுவாக இந்த அதீத உணர்ச்சிவசப்படலே நம் மீதான சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தும் என்பதை அந்த வயதில் நாம் அறிவதில்லை.

புதுகை.அப்துல்லா said...

nallaa kathai vudureenga :))

தீஷு said...

பல டைப் கதை எழுதியிருக்கீங்க போல..

பிரேம்குமார் said...

//இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?//

//ஓ, சொல்ல மறந்துவிட்டேனல்லவா!
நான் 16 வயதுடைய இளம்பெண்.
//
இப்போ நம்புறேங்க, இது கற்பனை தான் :)

பிரேம்குமார் said...

//படீரென சாத்திவிட்டு அழ ஆரம்பிக்கிறேன் நான்!!
//

அதானேங்க, எதுக்குங்க அழனும்? ஆனா இப்படி எதிர் கேள்வி கேட்டதுக்கு பதிலா, அது நல்ல நட்பு தான் என்று விளக்கியிருக்கலாம் :)

அன்பு said...

வைரமுத்துவின் 'சிகரங்களை நோக்கி' வாசித்திருக்கின்றீர்களா? இதில் வரும் பல இயற்கை நேசிப்புகள்தான் புத்தகம் முழுவதும்... எனக்கும் ஆசைதான் அந்த திருஞானம் போன்று சிலகாலம் அலைய:)

இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டுமோ!?

மிஸஸ்.டவுட் said...

நிஜம் தான் சந்தனமுல்லை ...எனக்கும் உங்கள் ஆதங்கம் இருந்தது முன்பு ஒருநாள்...பாடிப் பறந்து திரியும் வயதில் யார் என்ன சொல்லி விடுவார்களோ? என்று அதீத கவனத்துடன் எல்லா விசயங்களையும் செய்வது வாழ்வை ஒரு வித செயற்கை தன்மை கொண்டதாக ஆக்கி விடுகிறது .
நாம் நாமாக வாழ முயன்றால் அதை இந்த சமூகம் ஒருநாளும் நேர்கொண்ட பொருளில் பார்க்கப் போவதே இல்லை.
"விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலே பறந்து திரிகுவை" அதுக்கெல்லாம் சாத்தியம் இல்லை பெண் குழந்தைகளுக்கு.
என்ன செய்ய ?இந்த சமூகம் சார்ந்தே எல்லா விசயங்களையும் முடிவு செய்யும் பட்சத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய நபர்கள் அளவுக்கு கடினமானவர்களாக இல்லாவிட்டாலும் கூட நாமும் கூட நம் குழந்தைகளிடம் வெகு சில இடங்களில் நம் பிடிவாதத்தை காட்டி இருப்போம் தானே?! ஒன்றும் சொல்வதற்க்கில்லை "இது தான் உலகம்"

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! அது ஏதோ கதைக்காக எழுதினது..அப்ப்டிதான் கதையை முடிக்கனும்னு எழுதினேனோ என்னவோ! ;-))
மோகன்,சந்திரன்..இதெயெல்லாம் படிச்சு எனக்கே சிரிப்பு தாங்க முடியலை! எபப்டியெல்லாம் யோசிச்சிருக்கேன்னு..ம்ம்ஹ்ம்ம்..ஒரு பெரிய எழுதாளினி காணாமல் போயிட்டா!

நன்றி குடுகுடுப்பையார்..ஓகோ..இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதே! :-) கண்டிப்பா கேட்கிறேன்!

மங்களூர் சிவா said...

கதை அருமை.

/
நான் மாடியில் இயற்கையின் மடியில் போதையுற்று இருந்தேன்.
/

ஆல்ககால்????
:))))))))))))))))

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி..என்னங்க இவ்ளோ லேட்டாத் தெரியுது உங்களுக்கு..பெரிய எழுத்தாளர்கள்-ன்ன்னு! :-))

நன்றி அமுதா!

நன்றி சின்ன அம்மிணி! ம்ம்..ஆமா.உண்மைதான்..வேவு பார்த்தல், ஓவரா அறிவுரை செய்தல்-ல்லாம் கடுப்பாத் தானிருக்கும்! :-))

நன்றி செய்யது, ஜமால்!

//நல்லாதான் இருக்கு ஹாஸ்யம்.//

புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி!


நன்றி ராமலஷ்மி..ம்ம்..சூப்பரா ஆரமிப்பிக்கலாமே!

சந்தனமுல்லை said...

ஆமாம், சுந்தரா..அதுவும் பக்கத்து வீடு இலல் தெரிஞ்சவங்க..தொல்லை தாங்க முடியாது. நம்ம வீட்டுல ஒன்னும் சொல்லாட்டியும், இவங்க செய்வதுதான்..ஓவர்!

நன்றி பூர்ணிமாசரண்!

நன்றி மிஸஸ்.டவுட். ஆமாம், நாமும் சிலசமயங்களில் அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகீறோம்..ஆனா இப்போ ஜென்ரேஷன் கொஞ்சமாவது மாறியிருக்கும்னு நம்பறேன்! பார்ப்போம்!

நன்றி தாமிரா,நிஜமா நல்லவன்..நீங்க சொல்றதே குறும்பா சொல்றீங்களா இல்ல நிஜமான்னு தெரியலை..:-))

நன்றி அனுஜன்யா! தங்களின் வார்த்தைகள் ஊக்கமளிக்கிறது!

நன்றி தமிழ்பிரியன்..ஓக்கே..கண்டிப்பா..உங்களைத் தான் எடிட்டரா தேர்ந்தெடுத்திருக்காங்க பாருங்க!!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்!

நன்றி கேவிஆர்!ஆமா, ஏன்னா கோவம்தான் மூக்குக்கு மேலெ நிக்குமே! அதுவும் இல்லாம், ச்சே..புரிஞ்சுக்கமாட்டறாங்களேன்னு ஒரு ஆதங்கமும்தான்! அது இருக்கட்டும்..நிலா எப்படி இருக்காங்க?

நன்றி அப்துல்லா, தீஷு!


நன்றி பிரேம்! ஏதோ கதை எழுதனுமேன்னு எழுதிட்டேன்..சீரியசா எடுத்துக்காதீங்க!

நன்றி அன்பு! காலேஜ் டைமில் வாசித்திருக்கிறேன்! //நமக்காக வாழ்வது சுயநலமில்லையா //

இந்தக் கேள்விக்கு விடை சுலபமல்ல...இல்லையா?!