Tuesday, December 16, 2008

நீங்கள் மடிப்பாக்கம் வழிச் செல்பவராயின், ஒரு வேண்டுகோள்...


மடிப்பாக்கத்தின் பாலையா கார்டன் பேருந்து நிறுத்தத்திற்கு அப்பால் மெயின் ரோடை ஒட்டி ஏரி முடிவடையும். சமீபகாலமாக, கடந்த பெருமழைக்குப் பின், மிக மோசமான் துர்நாற்றம் வீசுகிறது. குடலை பிடுங்கும் துர்நாற்றம் என்றால் அதுதான்! அந்த ஏரியின் கரை சிறிது மேடாக இருக்கும். உண்மையில் அந்த இடம், மண்பகுதியாக இருந்தது, இந்த மழையில் நீர் நிரம்பி, மட்காத கழிவுப் பொருட்கள் சேர்ந்து இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. அந்தக் கரையில் மேல் ஒரு கூடாரம். காற்றடித்தால் கூட சேர்ந்து பற்க்கும் படையான ஒரு கூடாரம். இரண்டு சிறுவர்கள், ஒரு சிறுமி மற்றும் கைக்குழந்தையுடன் தாய் மற்றும் தந்தை! அவர்களின் தொழில் வீட்டு அலங்கார பொருடகள் விற்பது. (அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பார்த்ததுதான். இன்னும் சிலரும் இருக்கலாம்.)


அவ்வீட்டு வாயிலில் காணக்கிடைப்பவை சுட்ட மண்ணினால் ஆன கலை வேலைப்பாட்டுப் பொருட்கள், அலங்கார வாயில் தொங்கல்கள் மற்றும் சில உருவ பொம்மைகள். காலையில் ஒரு பெண் அமர்ந்து அந்த பொருட்களுக்கு சாயம் பூசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பாதுகாப்பான நாலு சுவர் கூட இல்லாத ஒரு வீட்டில் இருந்துதான், ஒரு வீட்டை அழகாக்குவதற்கான, வீட்டின் எல்லா மூலைகளுக்கான அலங்காரப் பொருட்கள் தயாராகிறது.இதைப் படிக்கும் நீங்கள், அந்தப் பகுதியைக் கடக்க நேரிட்டால் என்னிடம் ஒரு வேண்டுகோள் உண்டு உங்களுக்கு! ஏதாவது ஒன்று அவர்களிடம் வாங்குங்கள்..தொங்கும் மணிகளோ, பூச்சாடியோ அல்லது யானையோ..உங்களால் முடிந்த ஏதாவதொன்று!! குளிர்காலத்துக்கேற்ற ஒரு ஆடையாவது, குழந்தைக்குப் பாலாவது அல்லது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையாவது அவர்களுக்கு கிடைக்கலாம் நம் மூலமாக!!


பி.கு : நெடுநாட்களாக நான் வாங்கவேண்டுமென்றிருந்த தொங்கும் மணிகளை வாங்கவியலாமல் போனது, இங்கு வாங்கவேண்டுமென்றுதான் போல!!!

37 comments:

அதிரை ஜமால் said...

வந்தேன் வந்தேன்

அதிரை ஜமால் said...

\\நாலு சுவர் கூட இல்லாத ஒரு வீட்டில் இருந்துதான், ஒரு வீட்டை அழகாக்குவதற்கான, வீட்டின் எல்லா மூலைகளுக்கான அலங்காரப் பொருட்கள் தயாராகிறது\\

சமூக சிந்தனை

ம்ம்ம்... நல்ல ஆரோக்கியம்.

அதிரை ஜமால் said...

\\அந்தப் பகுதியைக் கடக்க நேரிட்டால் என்னிடம் ஒரு வேண்டுகோள் உண்டு உங்களுக்கு! ஏதாவது ஒன்று அவர்களிடம் வாங்குங்கள்\\

இதுவும் தான்.

Shakthiprabha said...

வெள்ள நிவாரணம், சுனாமி நிவாரணம் என்று அரசாங்கம் மூலமாய் செயல்படுவதைப் போல், பொதுச்சேவை நிறுவனங்கள் மூலமாய் செயல்படுவதைப் போல்,

மழைக்குப் பின் அவதிப்படும் பொருளாதாரத்தில் அடிமட்ட மக்களுக்காக, குறிப்பாக இப்படிப் பட்டவர்களைக் கண்கூடாகக் கண்டால், நாமே பழைய துணிகள், (அல்லது மனம் வந்தால் புதிது வாங்கி?) பண்ட பாத்திரங்கள், முதலிய ஏதாவது கொடுத்து உதவலாம்.

துளசி கோபால் said...

உழைச்சுப் பிழைக்கறாங்களே அதைப் பாராட்டும் விதமாக வாங்கத்தான் வேணும்.

ஆயில்யன் said...

//வாழ்க்கையின் மீதான நம்பிக்கையாவது அவர்களுக்கு கிடைக்கலாம் நம் மூலமாக!!//

அருமை!

ஆயில்யன் said...

//நெடுநாட்களாக நான் வாங்கவேண்டுமென்றிருந்த தொங்கும் மணிகளை வாங்கவியலாமல் போனது, இங்கு வாங்கவேண்டுமென்றுதான் போல!!!
//

அட தம்பிக்கு கூட எதோ வாங்கணும்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தீங்கள்ல அதுவும் கூட வாங்கிடலாம் இங்கயே! :))))

பாபு said...

நல்ல எண்ணம், வாழ்த்துக்கள்

அமுதா said...

நல்ல கருத்து...

தமிழ் பிரியன் said...

///துளசி கோபால் said...

உழைச்சுப் பிழைக்கறாங்களே அதைப் பாராட்டும் விதமாக வாங்கத்தான் வேணும்.////
கரெக்டா சொல்லி இருக்காங்க.. :)

முபாரக் said...

வாழ்த்துகள். நல்ல பதிவு

பந்தர் அலி ஆபிதீன் said...

வாங்கும் போது பேரம் பேசிவாங்காதிங்க ,அவங்க உழைப்புக்கு விலையே இல்லை.

ராமலக்ஷ்மி said...

//குளிர்காலத்துக்கேற்ற ஒரு ஆடையாவது, குழந்தைக்குப் பாலாவது அல்லது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையாவது அவர்களுக்கு கிடைக்கலாம் நம் மூலமாக!!//

மிக நல்ல சிந்தனை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல உதவும் முயற்சி, அருமையான வேண்டுகோள்.

நானும் இத்தகவலை எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.

ஆகாய நதி said...

உங்கள் நல்ல எண்ணத்திற்கு என் பாராட்டுகள் :) நானும் அதைக் கவனித்தேன்; ஆனால் அன்று குழந்தைக்காக மருத்துவரைத் தேடி சென்று கொண்டிருந்தோம் அதனால் அதை அப்போது வாங்க வேண்டும் என்று எண்ணவில்லை.... மீண்டும் அவ்வழியே செல்லும் போது வாங்க வேண்டும்....

எப்படி இந்த மழையிலும் இவற்றைக் காய வைக்கிறார்கள்... அவர்கள் பிழைப்பு என்று எண்ணிக் கொண்டே சென்றேன்...

நானானி said...

நாம் வாங்கும் வீட்டு அலங்காரப் பொருள் அவர்களுக்கு ஒரு வேளை உணவளிக்கும் என்பது நல்ல சிந்தனை! சந்தனமுல்லை!!
ராஜஸ்தான், அஸ்ஸாம் போன்ற வடக்கு மாநிலங்களிலிருந்து வந்து மொழி தெரியாமல் சைகைகளாலாலேயே பிழைக்கும் அவர்கள் உழைப்பு எல்லோராலும் அறியப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஜீவன் said...

உங்களின் இந்த சிந்தனை
எல்லோருக்கும் வந்துவிட்டால்
நம் நாட்டில் ஏழ்மை ஒழிக்கப்பட
வாய்ப்பு உள்ளது!

'''நல்ல மனம் வாழ்க'''

மிஸஸ்.டவுட் said...

மிக நல்ல சிந்தனை
பாராட்டுக்கள் சந்தனமுல்லை...மடிப்பாக்கத்தில் மட்டுமில்லை இப்படி உழைத்துப் பிழைக்க நினைக்கும் எளிய மக்கள் எங்கே இருந்தாலும் கூட அவர்களது
கைவினைப் பொருட்களை வாங்கத் தான் வேண்டும்...இனி அப்படியே செய்து விடலாம்.

அனுஜன்யா said...

நல்ல உள்ளம் உங்களுக்கு. இங்கு மும்பையிலும் கூட இந்த மாதிரி ஏழை மக்கள் மழையிலும், வெய்யிலிலும் சாலை ஓரங்களில் குடிசையில் வசித்துக்கொண்டு விற்பதைப் பார்த்திருக்கிறேன். வாங்கிவிடலாம். :)

அனுஜன்யா

பிரேம்குமார் said...

//..உங்களால் முடிந்த ஏதாவதொன்று!! குளிர்காலத்துக்கேற்ற ஒரு ஆடையாவது, குழந்தைக்குப் பாலாவது அல்லது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையாவது அவர்களுக்கு கிடைக்கலாம் நம் மூலமாக!!//

கட்டாயம் வாங்கிடுறோம் முல்லை :-)

ச்சின்னப் பையன் said...

நல்ல எண்ணம், வாழ்த்துக்கள்...

வடகரை வேலன் said...

உழைக்கிறவங்களுக்கு உதவனுங்கிறதில மாற்றுக் கருத்தே இல்லை.

RAMYA said...

அருமையான் கருத்து
வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

வாழ்க வளமுடன் நல்ல எண்ணம் படைத்த நீங்களும், அந்த உழைபாளிகளும்...

rapp said...

சூப்பர் சந்தனமுல்லை:):):) எனக்கும் இப்டி வாங்கனும்னு ஆசை. தாம்பரம் ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்குக் கொஞ்சம் முன்னால் இதேப் போல இருக்கும். அவ்ளோ அழகா பெருசா இருக்கும். ஆனா அப்போல்லாம் எங்க அக்கா பையன் பயங்கர வால்தனம் பண்ணிக்கிட்டு இருந்ததால எங்க வீட்ல எல்லாருக்கும் இப்படிப்பட்ட அழகுப் பொருட்கள் வாங்க பயம்.

ஏகலைவன் said...

//குளிர்காலத்துக்கேற்ற ஒரு ஆடையாவது, குழந்தைக்குப் பாலாவது அல்லது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையாவது அவர்களுக்கு கிடைக்கலாம் நம் மூலமாக!!//

நல்லாத்தான் யோசிக்கிறீங்க
வாழ்க வளமுடன்

சுரேகா.. said...

கருணைநிறை மனமும் உண்மையும் வெளிப்படும்போது...

அழகு..!

வாழ்த்துக்கள்...நல்லா இருக்கணும்!


படிச்சவுடன் எனக்கு இது ஞாபகம் வந்தது..
http://surekaa.blogspot.com/2008/04/blog-post_06.html

(சுயவிளம்பரத்துக்கு மன்னிக்கவும் ) :)

புதுகைத் தென்றல் said...

வாழ்க வளமுடன் நல்ல எண்ணம் படைத்த நீங்களும், அந்த உழைபாளிகளும்...//

மனமார்ந்த பாராட்டுக்களுடன் ரிப்பீட்டிக்கறேன்.

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்! பாராட்டுகள் பெறுவதற்காக சொல்லவில்லை..இதனால் நாலு சாமான்கள் அவர்களுக்குக் கூட வியாபாரம் ஆனால் நல்லதுதானே என்ற எண்ணத்தில் எழுதினேன்! அவ்வளவுதான்!!

நன்றி சக்திபிரபா! நிச்சயமாக...

நன்றி துளசியம்மா..ஆமா, கண்டிப்பா, அதற்காகதான் சொன்னேன்!!


நன்றி ஆயில்ஸ்..ஓ..வாங்கிட்டாப் போச்சு! :-))

சந்தனமுல்லை said...

நன்றி பாபு, அமுதா!

ஆமா, தமிழ்பிரியன்...அதை பாராட்டணும்..தெரிஞ்சதை செய்றாங்களே!

நன்றி ஆபிதீன்! உண்மைதான்..

நன்றி ராமலஷ்மி!! கூச்சமாக இருக்கிறது, பாராட்டுகளை பார்க்கும்போது..பாராட்டப் படவேண்டியது அவர்களே..அந்த நிலையிலும் மனந்தளராது உழைக்கிறார்களே!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! நீங்க சொன்னா செய்வீங்க..எனக்குத் தெரியும்! lol!

நன்றி ஆகாயநதி..மருத்துவரை பார்த்தீர்களா? என்ன ஆயிற்று பொழிலுக்கு? பரவாயில்லை..அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள், மறுமுறை செல்லும்போது வாங்குங்கள்!!

நன்றி நானானி! ஆமாம், வேறு மாநிலத்தவர்தான்! உழைப்பைப் பாராட்டிதான் ஆக வேண்டும்!!

நன்றி ஜீவன்!

சந்தனமுல்லை said...

நன்றி மிஸஸ்.டவுட். அப்ப்டிதான் சிக்னலில் பிள்ளைகள் விற்கும் பொருடக்ளை வாங்குவேன்..தேவையில்லை என்றாலும்க்கூட...அதிகம் போனால் 10 ரூ. விளையாட்டுப் பொருட்கள்தான்..வீட்டிற்கு வரும் குட்டீஸ்-க்கு கொடுத்து விடுவேன்! இப்போது பப்புவிற்கே போய்வீடுகிறது!

நன்றி அனுஜன்யா..கவிஞராயிற்றே...உங்களுக்குத் தெரியாததா?

நன்றி பிரேம், ச்சின்ன பையன்!

சந்தனமுல்லை said...

நன்றி வடகரை வேலன்.ஆமா, கண்டிப்பா!

நன்றி ரம்யா!

நன்றி அப்துல்லா, உங்களுக்கும் அதே வாழ்த்துக்கள்..நீங்களும் உழைக்கும் வர்க்கம்தானே! lol

நன்றி ராப்! ஆமா, இங்கேயும் அதே கதைதான்..நிறைய இப்போதான் மேலேயிருந்து எடுக்கறோம்..ஆனா, பயந்தான்..ஒரு நேரம் போல் இல்லை...:-))


நன்றி ஏகலைவன்..எல்லோருக்குள்ளும் இந்த யோசனை இருக்கிறது..நான் பதிந்திருக்கிறேன்..அவ்வளதுதான்..:-)

சந்தனமுல்லை said...

நன்றி சுரேகா. ஓ பார்த்திருக்கிறேன்...ரசித்டிருக்கிறேன் உங்களது அந்தப் பதிவை!! முகவு ம்ம்கவர்ந்தது மிட்டாய் கடையும் அதன் வண்ணங்களும்!!

நன்றி புதுகை!!

gils said...

ipdiyum oru anglela atha pakalamnu ipo thaan thonuthu..ivlo thaba antha pakkam poiruken..thoninathulla..unga blog chitrakudam ileengo..pallikudamnu title vaikalam :D very interesting

ஆகாய நதி said...

பொழில் குட்டிக்கு சிறிது வயிற்றுப் பிரச்சினை... காலைக்கடனை சரிவர செய்யாமல் பாலும் சரியாகக் குடிக்காமல் அடம் பண்ணிக்கொண்டிருக்கிறான் :(

சந்தனமுல்லை said...

பொழில் இப்போது நலமா ஆகாயநதி? இது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடியதுதான்! விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்!