2008 - தமிழ்மண நட்சத்திரமாகவும், வலைச்சர ஆசிரியராகவும் மட்டுமன்றி பல நண்பர்களையும், புதிய வலைப்பூக்களையும் சந்திக்க முடிந்தது! எனது முதல் Tag அளித்த காட்டாறுக்கும், என் பதிவுகளை வாசிக்கும், வாசித்து பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துகள்! என்னை தொடரும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்!
2008- பப்பு பள்ளி செல்வதையும் பள்ளி சூழலுக்கு செட்டிலானதையும் கண்டது. பப்பு புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாள்,பல விஷயங்களை கற்பித்தாள், எங்களுக்கு!
2008- எனக்கும் முகிலுக்கும் நிறைய தெளிவுகளை, குடும்பத்தின் அவசியத்தை, வாழ்க்கை பற்றிய புரிதல்களை தந்தது!திடநம்பிக்கையை, மன வலிமையை சற்றே அசைத்துப் பார்த்தது! எனக்குள் இருந்த எனது இன்னொரு பரிணாமத்தை அடையாளம் காட்டியது! சூழ்நிலைகள் எவ்வாறாயினும், தாங்கிடும் திடன் கொடுத்த கடவுளுக்கு நன்றி! முடிவாக, காலத்தைப் பார்த்து சூளுரைக்க முடிந்தது, "Tough times Never last, But tough people do!" Finally I have learnt the art of letting go things!
இதை தட்டச்சுக்கொண்டிருக்கும் நேரத்தில், சிறிது பின்னோக்கி பார்க்கையில், எனக்கு ஆதரவளிக்க ஒரு அன்பான குடும்பமும், ஊக்கமளிக்க உறவினர்களும் இருப்பதை உணரமுடிகிறது..நன்றிகள் ஆயாவிற்கும், அம்மாவிற்கும், பெரிம்மாவிற்கும், ஆன்ட்டி - அங்கிளுக்கும்!!
(படம்: நன்றி-கூகுள் உபயம்.) அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009!!
34 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நெறைய நன்றிகள் மிச்சம் வெச்சிருந்தீங்களா வருசக் கடைசியில் சொல்ல.
இன்னும் பதிவு பல காண வாழ்த்துக்கள்.
2008- எனக்கும் முகிலுக்கும் நிறைய தெளிவுகளை, குடும்பத்தின் அவசியத்தை, வாழ்க்கை பற்றிய புரிதல்களை தந்தது!திடநம்பிக்கையை, மன வலிமையை சற்றே அசைத்துப் பார்த்தது! எனக்குள் இருந்த எனது இன்னொரு பரிணாமத்தை அடையாளம் காட்டியது! சூழ்நிலைகள் எவ்வாறாயினும், தாங்கிடும் திடன் கொடுத்த கடவுளுக்கு நன்றி! முடிவாக, காலத்தைப் பார்த்து சூளுரைக்க முடிந்தது, "Tough times Never last, But tough people do!" Finally I have learnt the art of letting go things!///
சே! என்னங்க நீங்க!!! தைரியமாக இருங்க!!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
பப்புவிற்கும் உங்களுக்கும் உங்களுக்கு பக்க பலமாக எப்போதும் இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சிஸ்டர், உங்க புண்ணியத்தில் பப்புவின் ஆட்டோகிராப் படிக்க முடிஞ்சுது, தொடருங்கள் அன்று போல் என்றும்.
வாழ்த்துகள் முல்லை.!
/*"Tough times Never last, But tough people do!"*/
உண்மை. "இதுவும் கடந்து போகும். "
புத்தாண்டு அனைவருக்கும் இன்பம் தரட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்
//நெறைய நன்றிகள் மிச்சம் வெச்சிருந்தீங்களா வருசக் கடைசியில் சொல்ல.//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
//இதை தட்டச்சுக்கொண்டிருக்கும் நேரத்தில், சிறிது பின்னோக்கி பார்க்கையில், எனக்கு ஆதரவளிக்க ஒரு அன்பான குடும்பமும், ஊக்கமளிக்க உறவினர்களும் இருப்பதை உணரமுடிகிறது..நன்றிகள் ஆயாவிற்கும், அம்மாவிற்கும், பெரிம்மாவிற்கும், ஆன்ட்டி - அங்கிளுக்கும்!!///
:)
அருமை!
/இதை தட்டச்சுக்கொண்டிருக்கும் நேரத்தில், சிறிது பின்னோக்கி பார்க்கையில், எனக்கு ஆதரவளிக்க ஒரு அன்பான குடும்பமும், ஊக்கமளிக்க உறவினர்களும் இருப்பதை உணரமுடிகிறது..நன்றிகள் ஆயாவிற்கும், அம்மாவிற்கும், பெரிம்மாவிற்கும், ஆன்ட்டி - அங்கிளுக்கும்!!//
முன்னோக்கி பார்க்கையில் ஆபிஸ் மக்கள் ஆவலுடன் உங்களை பார்த்துக்கொண்டே இருப்பாங்களே !
(ச்சும்மா ஒரு கும்மி டச் இருக்கட்டும்மேன்னுத்தான்!)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :) நீங்க எல்லாருக்கும் நன்றி சொல்லும் நேரத்தில் நீங்கள் எனக்களித்த முதல் Tag மற்றும் "அம்மாக்கள் வலைப்பூ" வில் எழுதும் வாய்ப்பு இரண்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்! :)
அவ்வப்போது பப்பு பற்றி சொல்லி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கும் இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்த போவதற்கும் நன்றி! நன்றி! நன்றி! :)
புத்தாண்டு வாழ்த்துக்கள்:)
பப்புக்கு ஸ்பெஷலா சொல்லிடுங்க:)
மேலும் மேலும் பதிவுகள் எழுதி உங்கள் மகளின் குறும்புகளை எங்களையும் ரசிக்கச் செய்யுங்கள்.
நன்றிகளும், வாழ்த்துக்களுமாய் வருடக் கடைசி பதிவை முடித்திருக்கிறீர்கள்!
இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முல்லை,
பப்புவுக்கும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும், இன்னும் இங்க வரும் அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ம்ம்ம், ஒரு வருடத்தில் 145 பதிவுகள். கலக்குறீங்க முல்லை :)
2009ம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். பப்பு பாப்பாவுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் முல்லை.
உங்கள் பதிவுக்கு புதியவன்..
குழந்தையின் வளர்ச்சியையும், மாற்றங்களையும்...அனுபவித்து எழுதுகிறீர்கள். புதிய வருடத்திலும் எந்த தடங்களும் இன்றி தொடரட்டும் பதிவுகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் பப்புவுக்கும்
\\ஊக்கமளிக்க உறவினர்களும் இருப்பதை உணரமுடிகிறது..நன்றிகள் ஆயாவிற்கும், அம்மாவிற்கும், பெரிம்மாவிற்கும், ஆன்ட்டி - அங்கிளுக்கும்!!\\
நன்றி.
தாங்கள் பதிவை தொடர்கிறீர்கள் என்பதை விட பப்புவை நாங்கள் அதிகம் தெரிந்து கொண்டோம் என்பதே உண்மை.
பப்புவுக்கு எங்கள் அன்பு.
பப்புவுக்கும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும், என் பிரண்ட் பப்புவுக்கும், முகில் சாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் :)
happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது
பதிவு முழுதும் பதிவாகிவிட்டது... இப்போது வந்து பாருங்கள் :)
பப்புவுக்கும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பப்புவுக்கும்,பப்புவோட அம்மாவுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்பின் பப்புச் செல்லம், முல்லை, முகில்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி சொல்லும் நற்றமிழர் பண்பாக பதிவின் வாயிலாக நன்றி கூறியது பாராட்டத்தக்கது.
புத்தாண்டில் பொலிவுடன், நினைத்தது நடக்க, விரும்பியது கிடைக்க, சுற்றம் சூழ, நட்புகளுடன், பதிவுகளுடன் மகிழவாக இருக்க நல்வாழ்த்துகள்
பப்புவுக்கும், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தண்டு வாழ்த்துக்கள்!
புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.
புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!:)
வாழ்த்துக்களுக்கு நன்றி அமித்து அம்மா!
நன்றி தேவன்மயம்!
நன்றி ராமலஷ்மி!
நன்றி கானாஸ்..தொடரத்தான் ஆசை!
நன்றி தாமிரா!
நன்றி அமுதா!
நன்றி ஆயில்ஸ்...சைடுவைஸ் விட்டுட்டீங்களே!! :-))
நன்றி ஆகாயநதி! அழகா சிரிக்கறீங்க..அடிக்கடி!
நன்றி வித்யா...கண்டிப்பா சொல்றேன்!
நன்றி வெயிலான்!
நன்றி குடுகுடுப்பையார்!
நன்றி வல்லியம்மா!
நன்றி பிரேம்!!
நன்றி தீஷூ!
நன்றி கணினிதேசம்!
நன்றி நசரேயன்!
நன்றி ஜமால்!
நன்றி சின்ன அம்மிணி!
நன்றி அப்துல்லா!
வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு!
நன்றி ஜீவன்!
நன்றி சீனா சார்! தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி..
நன்றி அபிஅப்பா!
நன்றி அகநாழிகை!
நன்றி சுபாஷினி!
/
சூழ்நிலைகள் எவ்வாறாயினும், தாங்கிடும் திடன் கொடுத்த கடவுளுக்கு நன்றி!
/
அருமை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment