Tuesday, December 23, 2008

12 விஷயங்கள் - பப்புவை பற்றி!

1. சந்தனச்சாலையில்
சின்ன சீதாப் போனாளே - என்று புத்தகத்திலிருந்த் வாசித்துக் காட்டினேன். சிலதினங்கள் கழித்து
என்னிடம் வந்து அந்த ட்யூனிலேயே பாடுகிறாள்,

ஆச்சி போனாளே
சந்தனமுல்லை வந்தாளே


2. நொண்டி அடிக்கிறாள். 2 அல்லது மூன்று ஸ்டெப்-கள் தான். ஆனால், பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..

3. தான் கற்ற/கேட்ட கதைகளின் பாத்திரங்கள், நிகழ்வுகளை தன்னுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறாள். திராட்சை வாங்கி கழுவிக்கொண்டீருந்தேன். அது கொத்தாக இருந்ததை பிரித்துக் எடுக்கும்போது, ”நரி இப்டி இப்டி ஜம்ப பண்ணுச்சு, ஆச்சி”, என்று சொல்லி குதித்துக்காட்டினாள். பின், நரி நல்லாருக்காதுன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு” என்று சொல்லி வட்டமடித்து ஓடினாள். எப்போது திராட்சை வாங்கினாலும் இந்தக் கதையை நினவுகூர்கிறாள், அந்த திராட்சைதானா இதுவென்ற கேள்வியுடன்!

அம்மா, மைக்ரோவனி வைக்க பௌல்கள் வாங்கி வந்திருந்தார், ஒவ்வொரு அளவுகளிலும். “இது குட்டிக் கரடியோட பௌலா” என்று எடுத்துக் கொண்டாள், கோல்டிலாக்ஸ் கதையை நினைவுகூர்ந்தபடி!

அதே போல் வடை செய்திருந்தபோதும், வடையை வாயில் வைத்து கடித்துக் கொண்டு, நரி கேக்குது என்று கற்பனை நரியை காட்டுகிறாள்.

4. அவள் கண்ட கனவுகளைப் பற்றி எங்களிடம் கேட்கிறாள்/சொல்கிறாள். ஏன் சிங்கம் ஓடுச்சு என்றும் பூனை ஆயாவின் கைத்தடியை எடுத்துக்கொண்டு சமயலறைக்குள் ஓடியதாகவும், அவள் பூனையிடமிருந்து அதை பிடுங்கிக் கொண்டு அதை விரட்டியதாகவும் என்று பலப்பல கனவுகள். சிங்கம் வந்து என் முதுகில் கடித்ததாகக் கூறி என் முதுகில் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இரண்டு மூன்று நாட்கள் வரையில். (அதுதான் அவள் எனக்குக் கூறிய முதல் கனவு)


5. அம்மான்னு கூப்பிடனுமா, மம்மியா?

மழையின் நிமித்தம் வீட்டில் இருந்த பப்புவிடம் விடைபெற எண்ணி 'பை சொல்லு" என்று கிளம்பும்போது எதிர்கொண்ட கேள்வி இது.எனக்குள் சில எண்ணங்களைக் கிள்றி விட்டது. அம்மா என்பதும் மம்மி என்பதும் என்னைத்தான் குறிக்கிறது என்று அறிந்திருக்கிறாள். பக்கத்துவீட்டினரோ, தண்னிர் எடுக்கும் பையனோ எவரோ ஒருவர் "மம்மி" யைக் குறித்து கேட்டிருக்கவேண்டும். அந்த வார்த்தையைக் கேட்பதொன்றும் புதிதல்ல பப்புவுக்கு. (எனினும், சிலசமயம் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு, "மம்மி,டாடின்னு இல்ல,
அம்மா,அப்பான்னுதான் பழக்கியிருக்கிறோமெ"ன்று.)சிலசமயம் மம்மி,மம்மியென்றும் விளித்திருக்கிறாள். ஆனால் இப்போது அவளுக்கு கேள்வி, அவள் எதைத் தொடரவேண்டுமென்று! உனக்கு எப்படி கூப்பிடபிடிக்குமென்றேன்.
"அம்மா"
சரி, அப்படியேக் கூப்பிடு!
பை,அம்மா!!

6. முன்பு டீவியில் நாம் வைத்ததைப் பார்ப்பாள், அல்லது டோரா வேணுமென்றும் பும்பா வேண்டுமென்றும் கேட்பாள். இப்போதோ, ரிமோடில் சுட்டி டீவியை கண்டுபிடித்து வைக்கத் தெரிகிறது.முன்பு வால்யூம் கூட்டத் தெரியும். இப்போது சானலும்..மக்கள் வேணுமா, விஜய் வேணுமா..என்றும், எனக்கு சுட்டிதான் என்று எந்த வரிசையில் இருந்தாலும் வைக்கிறாள்!
(is this a milestone??lol)

7.கச்சாமுச்சா என்ற வார்த்தை அவளுக்கு அவ்வளவு சிரிப்பாயிருக்கிறது. அந்த வார்த்தையை சொல்லி சொல்லி ஒரு ஜோக்-குக்கு சிரிப்பது போல் சிரிக்கிறாள். அவள் "தண்ணொளி" என்று கூப்பிடுவாளாம். ஆனால் சஞ்சய், "தண்ணு வளி" என்று கூப்பிடுகிறானாம். "தண்ணு வளி" என்று சொல்லிவிட்டு, laughing at her own joke.

8.ஆச்சி, எனக்கு அப்பாதான் பிடிக்கும்.
உடனடியாக,
எனக்கு உன்னைப் பிடிக்காது!

எனக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவதெனத் தெரியவில்லை.
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விட்டுவிடுவதா இல்லை குழந்தைகளுக்கேயுரிய அந்தந்த நேரத்து உணர்ச்சிகள் என்று விட்டு விடுவதா? கடமையிலிருந்து தவறிவிட்டேனென்று வருந்துவதா அல்லது முகிலைப் பார்த்து பொறாமைப் படுவதா?
அல்லது ஒரு காலத்தில் நானும் என் அம்மாவை ஒதுக்கினேனே என்று இயல்பாய் எடுத்துக் கொள்வதா?

9.சிலசமயங்களில் என்மீது படுத்துக்கொள்வாள் பப்பு...பாதுகாப்பு உணர்வுக்காகவோ அல்லது
தூக்ககலக்கதில் இதம் வேண்டியோ! அப்படியொரு பொழுதில் சொன்னாள், "உன் வாசனை வருது" என்றாள்.ஆச்சர்யத்துடன், எங்கேர்ந்து வருது என்றபோது, என் நெஞ்சைக் காட்டினாள். ஓ..அது என் வாசனையல்ல பப்பு, என் நெஞ்சில் நான் சேமித்து வைத்திருக்கும் உனக்கான அன்பின் வாசனை!!


10."எனக்கு ஒடம்பு சரியில்ல..பவுடர்பில் டாக்டரை வரச்சொல்லு"
- டாக்டர் பவுடர்பில்-லை சந்திக்க அவ்வள்வு ஆசையாயிருக்கிறாள்..அதேபோல் பீட்டர் பான் - ஐயும்! அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை,நானும் அவரை சந்திக்க அந்தவயதில் அவ்வளவு ஆவலாயிருந்தேனென்று!கதையென்று நினைத்துச் சொல்வது அவளுக்கு எவ்வளவு நிஜமாயிருக்கிறது!! probably, one fine day she will know the reality!

11.பப்பு தனிமையை உணர்கிறாள். அவள் வயதையொத்த ஒரு நட்பு அவளுக்கு தேவையாயிருக்கிறது இப்போது. தானாக கற்பனை செய்துக் கொண்டு பேசுவதும், பொம்மைக்குச் சொல்லிக் கொடுப்பதும், அதன் கையை பிடித்து இழுப்பதுமாக செல்கிறது அவளின் விளையாட்டு நேரங்கள். யாராவது குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றபின் "ஏன் போய்ட்டாங்க" என்ற வளின் கேள்வி ஓயாததாய் இருக்கிறது. சிறிது சிறிதாக அவள் ஒரு புதிய கட்டத்திற்கு செல்வதை உணர முடிகிறது..அவளுக்கு விளையாட இப்போது பெரியவர்க்ள்
தேவையில்லை..அம்மா,அப்பா..ஆயா..தாத்தா..அவளுடன் பேசவும்,சேர்ந்து விளையாடவும் அவளுக்குத் தோதான,அவள் ஈடான ஒரு சிறுமியோ/சிறுவனோ தான்!

12.என்னைப் போல் துப்பட்டா போட்டுக்கொள்வதும், என்னைப் போல் கண்ணாடி முன்நின்று தலைவாரிக் கொள்வதும், பையை கையில் எடுத்துக் கொள்வதுமாக...பப்பு என்னை பின் தொடரும் காப்பி கேட்டாகத்தான் இருந்தாள் இதுவரை! என்னைப் போலவே யாரும் செய்தால் ஒதுக்கும் நான், அவளின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கினேன், அதிலும் ஒரு பெருமிதம் இருக்கத் தான் செய்தது! என்னை நகலெடுத்த பப்பு இப்போது அவளது ஆன்ட்டியின் மேனரிசங்களை...அவர்களைப் போல் சிரிப்பதும், பொம்மைகளிடம் அவர்களைப் போல் பேசுவதும், "#$%#$%#$% கோ" என்று..."#$@#$ ஸ்னாக்ஸ் டைம்..கோ" என்றும் ஆங்கிலத்திலுமாக மோதி ஆன்ட்டி புராணமாயிருக்கிறது. சிரிப்பாயிருக்கிறது, சிலசமயத்தில் பொறாமையாயும் ;-)!!

41 comments:

கானா பிரபா said...

வளர்ச்சிப் படிகளை ரசித்தேன்

Thooya said...

so sweet.. :)

வித்யா said...

பப்புவோட அடுத்த பாட்டு "நான் வளர்கிறேனே அம்மா":)

புதுகை.அப்துல்லா said...

arumai....pappuvum, unga yeluththum
:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வேணும்ன்னே உங்ககிட்ட அப்பா பிடிக்கும்ன்னு சொல்லி டெஸ்ட் செய்யறாளா இருக்கும்.. :)

அதிரை ஜமால் said...

\\ஆச்சி போனாளே
சந்தனமுல்லை வந்தாளே\\

ஹா ஹா

இரசித்தேன்.

அதிரை ஜமால் said...

\\2. நொண்டி அடிக்கிறாள். 2 அல்லது மூன்று ஸ்டெப்-கள் தான். ஆனால், பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..\\

உங்களின் சந்தோஷம் வார்த்தைகளில் விளங்குகிறது.

அதிரை ஜமால் said...

\\"மம்மி,டாடின்னு இல்ல,
அம்மா,அப்பான்னுதான் \\

சந்தோஷமாய் உணர்ந்தேன்.

அதிரை ஜமால் said...

\\(is this a milestone??lol)\\

ஆம்.

நினைவாற்றல் மட்டுமல்ல.

கான்ஃபிடண்டும் வளருகிறது.

அதிரை ஜமால் said...

\\அல்லது ஒரு காலத்தில் நானும் என் அம்மாவை ஒதுக்கினேனே என்று இயல்பாய் எடுத்துக் கொள்வதா?\\

அட நிஜமாவா?

பெண் குழந்தைகளின் இயல்பா ?

தாமிரா said...

மிக மிக அற்புதமான பதிவுகளில் இதுவும் ஒன்று. மிகுந்த வேலைப்பளுவிலும் உங்கள் பதிவுகளை தொடர்கிறேன். படிக்க மிக எளிமையாக இருப்பதோ அல்லது பெருமபாலும் மிகச்சிறிய அளவில் இருப்பதாலும் அல்லது மிகப்பிடித்த சப்ஜெக்ட் என்பதாலோ அல்லது உங்கள் மீதான பொறாமையாகவோ அல்லது இன்னும் ஏதாவதாகவோ இருக்கலாம்.

நீங்கள் இந்தப்பதிவுகளை உங்கள் டைரியாக கருதுவீர்கள் என்றுதான் கருதுகிறேன். ஆனால் மிகச்சிறிய மாற்றங்களுடன் பத்திரிகைகளுக்கோ, இணைய இதழ்களுக்கோ அனுப்பிப்பாருங்களேன்.. அரிதான உட்பொருளாகவும், மிக எளிமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உள்ள‌ படைப்புகள் மிகுந்த வரவேற்பைப்பெறும். வாழ்த்துகள்.!

அதிரை ஜமால் said...

\\என்னைப் போல் துப்பட்டா போட்டுக்கொள்வதும், என்னைப் போல் கண்ணாடி முன்நின்று தலைவாரிக் கொள்வதும், பையை கையில் எடுத்துக் கொள்வதுமாக...பப்பு என்னை பின் தொடரும் காப்பி கேட்டாகத்தான் இருந்தாள் இதுவரை! என்னைப் போலவே யாரும் செய்தால் ஒதுக்கும் நான், அவளின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கினேன், அதிலும் ஒரு பெருமிதம் இருக்கத் தான் செய்தது! என்னை நகலெடுத்த பப்பு இப்போது அவளது ஆன்ட்டியின் மேனரிசங்களை...அவர்களைப் போல் சிரிப்பதும், பொம்மைகளிடம் அவர்களைப் போல் பேசுவதும், "#$%#$%#$% கோ" என்று..."#$@#$ ஸ்னாக்ஸ் டைம்..கோ" என்றும் ஆங்கிலத்திலுமாக மோதி ஆன்ட்டி புராணமாயிருக்கிறது. சிரிப்பாயிருக்கிறது, சிலசமயத்தில் பொறாமையாயும் ;-)!!\\

உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு

உண்மையானதும் கூட.

ஆயில்யன் said...

//பப்பு தனிமையை உணர்கிறாள். அவள் வயதையொத்த ஒரு நட்பு அவளுக்கு தேவையாயிருக்கிறது இப்போது. தானாக கற்பனை செய்துக் கொண்டு பேசுவதும், பொம்மைக்குச் சொல்லிக் கொடுப்பதும், அதன் கையை பிடித்து இழுப்பதுமாக செல்கிறது அவளின் விளையாட்டு நேரங்கள். யாராவது குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றபின் "ஏன் போய்ட்டாங்க" என்ற வளின் கேள்வி ஓயாததாய் இருக்கிறது.///


உண்மை

தனிமை தலை தூக்கும் வயதில் இது போன்ற எண்ணங்களும்,சில நேரங்களில் மட்டும் வந்து செல்லும் உறவுகள் கூட்டத்தின் உற்சாகத்தினையும் எப்பொழுதுமே எதிர்பார்த்திருக்க தோன்றும்!

(நானெல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப் பீலிங்ஸ்ஸ் :()

மிஸஸ்.டவுட் said...

உங்கள் எழுத்துக்கள் அருமை சந்தனமுல்லை.
மனதில் நினைப்பதை எல்லாம் அருமையான வார்த்தைகளாக்கி விட முடிகிறது உங்களால் மட்டுமே !!!
உங்களுக்கு யார் மீது வேண்டுமானாலும் பொறாமை இருக்கட்டும்...எனக்கு உங்கள் எழுத்துகளைப் பார்த்து தான் பொறாமையாக இருக்கிறது.

குடுகுடுப்பை said...

அவள் வயதையொத்த ஒரு நட்பு அவளுக்கு தேவையாயிருக்கிறது இப்போது. //

இது முற்றிலும் உண்மை, அவசியத்தேவை, இரண்டாவது குழந்தையின் அவசியத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ஒரு செய்தி

பிரேம்குமார் said...

இந்த அம்மாக்களால் மட்டும் எப்படித்தான் வளச்சு வளச்சு எழுது முடியுதோ போங்க ;)

பிரேம்குமார் said...

//மக்கள் வேணுமா, விஜய் வேணுமா..என்றும், எனக்கு சுட்டிதான் என்று எந்த வரிசையில் இருந்தாலும் வைக்கிறாள்!
(is this a milestone??lol)//

பின்ன இல்லையா?? ;)

ரொம்ப நாளைக்கு பிறகு நீண்ட பதிவு. நிறைய நேரம் எங்களை பப்புவோடு பழக வைத்ததற்கு நன்றி முல்லை :)

சின்ன அம்மிணி said...

//ஓ..அது என் வாசனையல்ல பப்பு, என் நெஞ்சில் நான் சேமித்து வைத்திருக்கும் உனக்கான அன்பின் வாசனை!!//

அப்பா ,கண்ணுல தண்ணி வருதுங்க

அமுதா said...

மிக அழகான பதிவு. இனிமையாக இருந்தது பப்புவின் வளர்ச்சியைப் படிக்க

புதுகைத் தென்றல் said...

arumai,

amma enna pasama pathukittalum appathan pillaygaluku. atukaga varutha padatheenga namma melayum oru oorama pasam irukkum.

அமிர்தவர்ஷினி அம்மா said...

12 விஷயங்கள் அல்ல, 12 முத்துக்கள் ஆம், நீங்கள் கோர்த்த விதம் அவ்வளவு அருமை.

சிங்கம் வந்து என் முதுகில் கடித்ததாகக் கூறி என் முதுகில் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இரண்டு மூன்று நாட்கள் வரையில். (அதுதான் அவள் எனக்குக் கூறிய முதல் கனவு)
முதல் கனவே முதல் கனவே...

சரி, அப்படியேக் கூப்பிடு!
பை,அம்மா!!
அடி செல்லம்


எனக்கு சுட்டிதான் என்று எந்த வரிசையில் இருந்தாலும் வைக்கிறாள்!
(is this a milestone??lol)
இருக்கலாம், இந்த பருவத்திற்கானதாய்.

"உன் வாசனை வருது" என்றாள்.ஆச்சர்யத்துடன், எங்கேர்ந்து வருது என்றபோது, என் நெஞ்சைக் காட்டினாள்.
ம், எனக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது, அம்மாவின் வாசனை தனிதான் என்றுமே, அதை இவ்வளவு சீக்கிரமே பிடித்த / படித்த பப்புவின் இச்செயல் மிக ஆச்சர்யமே....


ஓ..அது என் வாசனையல்ல பப்பு, என் நெஞ்சில் நான் சேமித்து வைத்திருக்கும் உனக்கான அன்பின் வாசனை!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


!கதையென்று நினைத்துச் சொல்வது அவளுக்கு எவ்வளவு நிஜமாயிருக்கிறது!! probably, one fine day she will know the reality!
:)))))
தெரியத்தொடங்கும் போது, அவளின் கைப்பிடியில் ஒரு ப்லாக்ஸ்பாட் இருக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னைப் போல் துப்பட்டா போட்டுக்கொள்வதும், என்னைப் போல் கண்ணாடி முன்நின்று தலைவாரிக் கொள்வதும், பையை கையில் எடுத்துக் கொள்வதுமாக...பப்பு என்னை பின் தொடரும் காப்பி கேட்டாகத்தான் இருந்தாள் இதுவரை! என்னைப் போலவே யாரும் செய்தால் ஒதுக்கும் நான், அவளின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கினேன், அதிலும் ஒரு பெருமிதம் இருக்கத் தான் செய்தது! என்னை நகலெடுத்த பப்பு இப்போது அவளது ஆன்ட்டியின் மேனரிசங்களை...அவர்களைப் போல் சிரிப்பதும், பொம்மைகளிடம் அவர்களைப் போல் பேசுவதும், "#$%#$%#$% கோ" என்று..."#$@#$ ஸ்னாக்ஸ் டைம்..கோ" என்றும் ஆங்கிலத்திலுமாக மோதி ஆன்ட்டி புராணமாயிருக்கிறது. சிரிப்பாயிருக்கிறது, சிலசமயத்தில் பொறாமையாயும் ;-)!!

நோ கமெண்ட்ஸ், உங்களின் பொறாமையில்

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமிரா said...
மிக மிக அற்புதமான பதிவுகளில் இதுவும் ஒன்று. மிகுந்த வேலைப்பளுவிலும் உங்கள் பதிவுகளை தொடர்கிறேன். படிக்க மிக எளிமையாக இருப்பதோ அல்லது பெருமபாலும் மிகச்சிறிய அளவில் இருப்பதாலும் அல்லது மிகப்பிடித்த சப்ஜெக்ட் என்பதாலோ அல்லது உங்கள் மீதான பொறாமையாகவோ அல்லது இன்னும் ஏதாவதாகவோ இருக்கலாம்.

நீங்கள் இந்தப்பதிவுகளை உங்கள் டைரியாக கருதுவீர்கள் என்றுதான் கருதுகிறேன். ஆனால் மிகச்சிறிய மாற்றங்களுடன் பத்திரிகைகளுக்கோ, இணைய இதழ்களுக்கோ அனுப்பிப்பாருங்களேன்.. அரிதான உட்பொருளாகவும், மிக எளிமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உள்ள‌ படைப்புகள் மிகுந்த வரவேற்பைப்பெறும். வாழ்த்துகள்.!

தாமிரா அவர்கள் சொல்வதை நான் வழிமொழிகிறேன் முல்லை, முயற்சி செய்து பாருங்களேன்.

ஆகாய நதி said...

//
பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..
//
தாய்மைக்கேயுரிய மகிழ்ச்சி :)

//
தான் கற்ற/கேட்ட கதைகளின் பாத்திரங்கள், நிகழ்வுகளை தன்னுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறாள். திராட்சை வாங்கி கழுவிக்கொண்டீருந்தேன். அது கொத்தாக இருந்ததை பிரித்துக் எடுக்கும்போது, ”நரி இப்டி இப்டி ஜம்ப பண்ணுச்சு, ஆச்சி”, என்று சொல்லி குதித்துக்காட்டினாள். பின், நரி நல்லாருக்காதுன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு” என்று சொல்லி வட்டமடித்து ஓடினாள். எப்போது திராட்சை வாங்கினாலும் இந்தக் கதையை நினவுகூர்கிறாள், அந்த திராட்சைதானா இதுவென்ற கேள்வியுடன்!

அம்மா, மைக்ரோவனி வைக்க பௌல்கள் வாங்கி வந்திருந்தார், ஒவ்வொரு அளவுகளிலும். “இது குட்டிக் கரடியோட பௌலா” என்று எடுத்துக் கொண்டாள், கோல்டிலாக்ஸ் கதையை நினைவுகூர்ந்தபடி!

அதே போல் வடை செய்திருந்தபோதும், வடையை வாயில் வைத்து கடித்துக் கொண்டு, நரி கேக்குது என்று கற்பனை நரியை காட்டுகிறாள்.
//

நல்ல நியாபக சக்தி இருக்கிறது பப்புவுக்கு :)

ஆகாய நதி said...

//
உனக்கு எப்படி கூப்பிடபிடிக்குமென்றேன்.
"அம்மா"
சரி, அப்படியேக் கூப்பிடு!
//

மிகச் சரியான முடிவு பப்பு :)

//
ரிமோடில் சுட்டி டீவியை கண்டுபிடித்து வைக்கத் தெரிகிறது.முன்பு வால்யூம் கூட்டத் தெரியும். இப்போது சானலும்..
//

இனி ரிமோட் அவள் வசம்தான் போல :) பப்பு அதிகம் டீவி பார்க்காதேடா செல்லம்... நல்லா ஓடி ஆடி விளையாடனும் கண்ணு :)

//
எனக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவதெனத் தெரியவில்லை.
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விட்டுவிடுவதா இல்லை குழந்தைகளுக்கேயுரிய அந்தந்த நேரத்து உணர்ச்சிகள் என்று விட்டு விடுவதா? கடமையிலிருந்து தவறிவிட்டேனென்று வருந்துவதா அல்லது முகிலைப் பார்த்து பொறாமைப் படுவதா?
அல்லது ஒரு காலத்தில் நானும் என் அம்மாவை ஒதுக்கினேனே என்று இயல்பாய் எடுத்துக் கொள்வதா?
//

தங்கள் குழப்பம் சரியானதே... எந்தத் தாயும் இப்படித் தான் குழம்புவாள் இந்த சூழ்நிலையில் :) ஆனால் குழந்தைகள் மனதில் இருவரும் ஒன்றே :)

ஆகாய நதி said...

//
"உன் வாசனை வருது" என்றாள்.ஆச்சர்யத்துடன், எங்கேர்ந்து வருது என்றபோது, என் நெஞ்சைக் காட்டினாள். ஓ..அது என் வாசனையல்ல பப்பு, என் நெஞ்சில் நான் சேமித்து வைத்திருக்கும் உனக்கான அன்பின் வாசனை!!
//

ஆழ் மனதின் தாய்மை உணர்வினை அழகிய வரிகளில் கூறிவிட்டீர்கள் :)

//
பப்பு தனிமையை உணர்கிறாள். அவள் வயதையொத்த ஒரு நட்பு அவளுக்கு தேவையாயிருக்கிறது இப்போது
//

அக்கம்பக்கத்தில் வேறு குழந்தைகள் இல்லையா? அப்படியானால் அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அழைத்து வாருங்கா இங்கு ஏகப்பட்ட குழந்தைகள் பப்பு வயதை ஒத்திருப்பர் :)

ஆகாய நதி said...

//
என்னைப் போலவே யாரும் செய்தால் ஒதுக்கும் நான், அவளின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கினேன், அதிலும் ஒரு பெருமிதம் இருக்கத் தான் செய்தது!
//

:)உண்மை தான் மற்றவர்கள் செய்வதற்கும் நாம் உருவாக்கிய மகள் செய்வதற்கும் நிறைய வேறுபாடு :)

ஆகாய நதி said...

//
இந்த அம்மாக்களால் மட்டும் எப்படித்தான் வளச்சு வளச்சு எழுது முடியுதோ போங்க ;)
//

ரொம்ப பெருமூச்சு விடாதீங்க :)
குழந்தையைப் பற்றி பேசச் சொன்னால் நீர் ஆகாரம் இன்றி பேசிக்கொண்டே இருக்கலாம்....

மங்களூர் சிவா said...

படிப்பதற்கே மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

வாழ்த்துக்கள் பப்பு & பப்பம்மா :))))

RAMYA said...

//
நொண்டி அடிக்கிறாள். 2 அல்லது மூன்று ஸ்டெப்-கள் தான். ஆனால், பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..
//

பப்பு நடப்பது கண்கொள்ளா காட்சியாக இருந்தாலும்
அதை நீங்க வர்ணிக்கும் விதம்
அதை விட அருமையா இருக்கு
எழுத்தில் உயிர் தாண்டவமாடுது
ரொம்ப அருமையா ரசித்து
எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்

RAMYA said...

குழந்தையை பற்றி நீங்க எழுதி இருப்பதை படிக்கும் பொது மனதில் சொல்ல முடியாத சந்தோசம் வந்து ஒட்டிக்கொள்கிறது உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது
ம்ம்ம் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை

அவ்வளவு அருமை! அருமை!

PoornimaSaran said...

அவர்களின் வளர்ச்சியும், செய்கையும் பிரம்மிக்க வைக்கிறது :)

PoornimaSaran said...

''பை அம்மா ''

cute:))

நசரேயன் said...

பப்புவுக்கும், பப்பு அம்மாவிற்கும் வாழ்த்துக்கள், எங்க வீட்டுலேயும் டோரா தான்

Anonymous said...

very nice to read the post.. God bless both of you!!!

cheena (சீனா) said...

அன்பின் முல்லை

பப்புவின் வளர்ச்சி - மனதின் மகிழ்ச்சி
இவ்வயதில் அவளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும். என்ன செய்வது ? முடியவில்லை. இருப்பினும் கலங்க வேண்டாம் - அவளின் ஒவ்வொரு வளர்ச்சியினையும் ரசித்து அனுபவித்து ஆவணப்படுத்தும் செயல் பாராட்டத்தக்கது.

பப்புவிற்கு எங்களின் ஆசிகளும் வாழ்த்துகளும்

தீஷு said...

//எனக்கு அப்பாதான் பிடிக்கும்//

இரண்டு நாளா எங்க வீட்டில ரிவர்ஸ்ல போய்கிட்டு இருக்கு. அம்மா பிடிக்கும். அப்பா பிடிக்காது.

காரூரன் said...

*\\எனக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவதெனத் தெரியவில்லை.
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விட்டுவிடுவதா இல்லை குழந்தைகளுக்கேயுரிய அந்தந்த நேரத்து உணர்ச்சிகள் என்று விட்டு விடுவதா? கடமையிலிருந்து தவறிவிட்டேனென்று வருந்துவதா அல்லது முகிலைப் பார்த்து பொறாமைப் படுவதா?\\*

உணர்ந்து குழந்தையின் கணங்களை அசை போடுகின்றீர்கள், இந்த பேட்டியை கேட்டுப் பாருங்கள்..
http://akathy.blogspot.com/2008/12/blog-post_20.html

தாரணி பிரியா said...

இந்த பதிவை படிச்சவுடனே உங்க பப்புவை பார்க்கணும் போல இருக்கு முல்லை :)

அம்மா இந்த வார்த்தையில இருக்கற அழகு வேற எதுலயுமே இல்லை. அப்படியே கூப்பிட வையுங்க. சில நேரங்கள்ல பெரிய வகுப்புகளுக்கு போகும் போது மாற கூடலாம். அந்த நேரத்தில கொஞ்சம் இயல்பா புரிய வெக்க வேண்டி இருக்கும்

அப்பா பிடிக்கும் நாமும் அப்படித்தானே இருந்தோம் :) ஆனா அம்மாவை பிடிக்காம போச்சா என்ன? ஒன்றை கவனிச்சு இருப்பிங்க எவ்வளவுதான் அப்பா கூட விளையாடினாலும் சாப்பிட்டாலும் சுத்தினாலும் அது எல்லாம் அந்த நேரம்தான். தூக்கம் வந்தாலும் சரி ஏதாவது துக்கம் வந்தாலும் சரி அம்மா மடிதான் வேணும். அதுதான் அம்மாவோட பெருமை.

வெயிலான் said...

பப்பம்மா!

இது என்னுடைய வலைச்சர பதிவின் தொடர்ச்சி மாதிரி இருக்குது.

ராமலக்ஷ்மி said...

//ஆச்சி போனாளே
சந்தனமுல்லை வந்தாளே//

அருமை:)!

//பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..//

எங்கள் கண்ணுக்குள்ளும் அந்தக் காட்சியைக் கொண்டு வர முடிகிறது:)!

//தான் கற்ற/கேட்ட கதைகளின் பாத்திரங்கள், நிகழ்வுகளை தன்னுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறாள். //

அவள் கற்பனை செய்து ரசித்ததை நாங்களும் கற்பனை செய்து ரசிக்க முடிகிறது:)!

’கச்சாமுச்சா’வுக்கும் தன் ஜோக்குக்கு தானாகவேயும் கச்சாமுச்சான்னு சிரித்துத் தள்ளி விட்டாளா:))))!

//
எனக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவதெனத் தெரியவில்லை.//

நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி இயல்பாவே எடுத்துக் கொள்ளுங்கள். அப்பாவை விட அம்மாக்கள் காட்டும் சில அதிகப் படியான கண்டிப்பைக் கவனத்தில் வைத்துக் கொண்டு உங்களை பிடிக்கலைன்னு சொல்லி தன்னை ஆற்றிக் கொள்கிறாள். அவ்வளவுதான். கடலளவு பிரியம் இல்லாமலா கனவில் சிங்கம் கடித்த உங்க முதுகை மூன்று நாட்கள் தடவிக் கொண்டிருந்தாள்?