Monday, December 08, 2008

ஒரு சோனி வாக்மேனும் சில சென்டிமென்ட்-களும்

ஸ்கூல் படிக்கும்போது எங்களிடம் ஒரு வாக்மேன் இருந்தது. எங்களிடம் என்றால் எனக்கும், என் தம்பிக்கும் சேர்த்து!வீடீயோகான் என்று நினைக்கிறேன். அதை எந்தளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்தளவுக்கு தேய்த்தாயிற்று. காலேஜ்-க்கு ஹாஸ்டலுக்கு போகும்போது கண்டிப்பாக அதை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், நான் வாங்கியிருந்த கேஸ்ட்-டுகளை எடுத்து பெட்டியில் போட்டுக் கொண்டேன். (என்ன ஒரு நல்லெண்ணம் பாருங்க, என் தம்பி கேட்டுடக் கூடாதாம், என்னோட கேஸ்ட்-களை!)

புது வாக்மேன் வேண்டுமெனக் கேட்டதற்கு, படிக்கத்தானேப் போறே, அப்புறம் வாங்கிக்கலாம் என்று வீட்டிலிருந்து பதில். நானும் ஓக்கே என்று ஒரு சோக முகத்தை காட்டிவிட்டு, பேக் செய்த காசெட்டுகளை எல்லாம் வைத்துவிட்டு சென்றேன், ஒரே ஒரு கேசட்டைத் தவிர.அது Khamoshi. ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் மதியம் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை வார்டன் வந்து பார்த்துட்டு போ என்று சொன்னபோது வழக்கம் போல் கடிதம் என்று நினைத்துப் போனவளை வரவேற்றது நீட்டாக துணியின் ஓரங்கள் தைக்கப்பட்ட ஒரு பார்சல். வாவ்! பெரிம்மாவிடமிருந்து! பிரித்த போது வந்து விழுந்தது, பேரிச்சம் பழ பேக்கட்டுகளும், காய்ந்த திராட்சையும், ஒரு சோனி வாக்மேனும், என் பேவரிட் கேசட்டுகளும் மற்றும் ஒரு லெட்டரும்.

dedicating this song to my perimma,The wonderful personality I have by myside!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பி.கு. அந்த வாக்மேன் இப்போது உபயோகிப்பாரற்று, பெட்டியிலிருந்தது ஹெட்போன்கள் பழுதடைந்து!. அதைப் பார்த்தபோது நினைவுக்கு வந்த கொசுவத்தி!

15 comments:

rapp said...

me the first?

rapp said...

சூப்பர்:):):) கலக்கலான நினைவுகள்:):):)எங்கக்காவும் இப்டி ஒரு வாக்மேன் வெச்சிக்கிட்டு ஒரு சீன் போடுவா பாருங்க:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அந்த சீசன்ல எல்லார் வீட்லயும் குறைந்தபட்சம் ரெண்டு கசின்சோ, இல்ல ரெண்டு அங்கிள் குடும்பங்களோ அமெரிக்கா, ஆஸ்திரேலியா இப்டின்னு இருப்பாங்க. அவங்கல்லாம் நம்ம வீட்டுக்கு வரும்போது எடுத்துட்டு வர்ற பரிசுகளில் இந்த வாக்மேன் கண்டிப்பா இருக்கும்:):):) ஒருசமயம் எங்க வீட்ல மூணு வாக்மேன் லோல்பட்டுக்கிட்டு இருந்துச்சு:):):)

அதிரை ஜமால் said...

\\பி.கு. அந்த வாக்மேன் இப்போது உபயோகிப்பாரற்று, பெட்டியிலிருந்தது ஹெட்போன்கள் பழுதடைந்து!. அதைப் பார்த்தபோது நினைவுக்கு வந்த கொசுவத்தி!\\

எங்க வீட்டு முகவரி தர்றேன் அனுப்பி வைங்க.

மிச்சத்த வந்து சுத்துரேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

super tortoise

PoornimaSaran said...

சென்டிமென்ட்:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல கொசுவத்தி எனக்கெல்லாம் வாக்மேன் கிடைக்கல அப்ப.. :(
ஆமா என்ன பாட்டு டெடிக்கேட் செய்திருக்கீங்க எனக்கு வரவே இல்லையே பாட்டு.. காலியா இருக்கு கருப்பு பாக்ஸ்

ஆயில்யன் said...

//dedicating this song to my perimma,The wonderful personality I have by myside!///

வாழ்த்துக்கள்

நேசம் பெற்றோர்களை

நேசமாய் பெற்றுள்ளமைக்கு!

அதிரை ஜமால் said...

\\பெரிம்மாவிடமிருந்து! \\

நல்ல விஷயம்.
நல்லாதான் சொல்லியிருக்கீங்க

அப்புறம் கொசுவத்தின்னு ...

தாரணி பிரியா said...

ஹீம் நம்ம வீட்டுல இருக்கற ஒவ்வொரு பொருளுக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கில்ல.
எனக்கும் வெறும் கருப்பு பெட்டிதான் வருதுங்க சந்தனமுல்லை

சின்ன அம்மிணி said...

நான் கூட வேலைக்கு சேந்ததும் எங்கப்பாவுக்கு வீடியோகான் வாக்மன் வாங்கிக்குடுத்தேன்.

சுரேகா.. said...

அந்த ஒற்றை வாக்மெனில் 6 பாட்டு கேட்டபோது இருந்த மகிழ்ச்சி இப்ப ஐ-பாடில் 1000 பாட்டை வச்சிருந்தாலும் இல்லையே? ஏன்..?
நம்ம பழசை விட்டு வெளில வரலையா?

இல்ல..
வயசாகிடுச்சா?

நல்ல பதிவுங்க !

சந்தனமுல்லை said...

நன்றி ராப்! நீங்கதான் ஃபர்ஸ்ட்!
ம்ம்..ஆமா, எனக்கு துபாலயும், சிங்கப்பூர்லயும் தான் இருந்தாங்க..அவங்க எப்பவும் கேமராவும், மத்த எலக்ட்ரானிக் கூட்ஸ்-உம் பானசானிக் டேப் ரிக்கார்டரும் தான் கொண்டு வருவாங்க! அந்தக் கேமரா வச்சிக்கிட்டு நாங்க பண்ற அலப்ஸ் தாங்க முடியாது! சிரிப்பா இருக்கு இப்போ நினைச்சா!!

நன்றி ஜமால்! நீங்களும் உங்க பங்குக்கு சுத்துங்க!!

நன்றி அமித்து அம்மா!

சந்தனமுல்லை said...

நன்றி பூர்ணிமா சரண்!

நம்றி முத்துலெட்சுமி! ஓ..பாட்டு கேக்க முடியலையா? அது கமோஷி-லேர்ந்து!

நன்றி ஆயில்ஸ்!

நன்றி சின்ன அம்மிணி! ஆகா... கொடுத்து வைச்ச அப்பா!

நன்றி தாரணி! ஆமா, அதுவும் பரணிலும், பெட்டியிலும் இருக்கும் பொருடகளின் பின் கண்டிப்பா ஒரு சுவரசியமான நினைவு/நிகழ்வு இருக்கும்!

சந்தனமுல்லை said...

நன்றி சுரேகா! நமக்கு சுலபமா கிடைச்சதைவிட, கொஞ்சம் காக்கவைச்சு கிடைக்கும் போது அதன் மதிப்பு அதிகமாகிடுது போல!! :-)))

Sumi said...

really touching!!!!!