Thursday, April 09, 2009

கடிகாரத்தை நிறுத்துதல்- நன்றிகள்- நாஸ்டால்ஜிக்!

20-கள்...பற்பல கனவுகள்..திட்டங்கள்..கவலைகள்! வயதாகிறதேவென்ற கவலை இருந்ததேயில்லை..i.e. we are getting older! வாழ்வைக்குறித்து பயம் ஏதும் இல்லை!

மேற்கொண்டு படிக்க வேண்டும். நினைத்த பல்கலையில் கிடைக்கவேண்டும். உடனே வேலைக் கிடைத்து, நினைத்ததெல்லாம் வாங்க வேண்டும்! சம்பாரிக்க வேண்டும்..ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும், நமது விருப்பங்களுக்கேற்றவாறு. அழகான
பலகணிகளுடன் அமைந்த வீடு வாங்க வேண்டும். நிலைநிறுத்திக்கொண்டாக வேண்டும்.
ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

இப்படி கனவுகளை துரத்தும் வாழ்வில், you realise you are not as young as you thought you were. 30-களும் 40-களும் எனக்கு என்ன வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை..ஆனால், 20களின் கடைசி எனக்கு உணர்த்துவது, you can beat age with your attitude..;-)! 20-கள் எனக்குக் கொடுத்தது, முடிவெடுக்கும் உரிமைகள், செலவு செய்யும் பொறுப்புகள்..எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

so many random thoughts crossing my mind....and again I am in utter confusion as I was in 19!!மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் - இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !

எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! சுவரொட்டியில் வாழ்த்து சொன்ன G3, கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் - நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))கொஞ்சம் நாஸ்டால்ஜிக் - Rising from the east - Bally sagoo-வின் ஆல்பம். featuring suchitra pillai. நல்ல பாடல். வீடியோ மிகப் பிடிக்கும். வித்தியாசமாக இருக்கும்!

32 comments:

நட்புடன் ஜமால் said...

\எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் - நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))\\

நல்ல நட்பை பெற்று உள்ளீர்கள் சகோதரி.

கவிதா | Kavitha said...

//அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும்//

ஆம்பூர் பிரியாணி ?????

கவிதா | Kavitha said...

எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் - இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !
//

இன்னும் பத்மாக்கள் இருக்க்காங்களா???

:))))

கவிதா | Kavitha said...

நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))
//

ஆச்சி.. இப்படி நெகிழ்ந்துட்டா..???? போதுமா.. ட்ரீட் எங்க? எப்ப?

எங்க வீடுன்னு சொன்னா.. டெரர் ஆயிடுவேன் நானு.. சரியா?!! :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!

ரொம்ப சரி

யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

:)))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாசமழை பத்மாக்கள்


ஆச்சி
டி. ஆர். ரேஞ்சுக்கு எதுகை மோனைல பின்றீங்க.........

வித்யா said...

வயச மட்டும் கடைசி வரை சொல்லாதீங்க:)

தீஷு said...

தாமத பிறந்த நாள் வாழ்த்துகள் முல்லை.

நிஜமா நல்லவன் said...

:)

தமிழ் பிரியன் said...

பிறந்த நாளுக்கு கொடுப்பதாக சொன்ன ஆம்பூர் பிரியாணி இன்னும் வந்து சேரவில்லை என்பதை கண்ணியத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாமக்கல் சிபி said...

//வயச மட்டும் கடைசி வரை சொல்லாதீங்க:)//

அவங்களைக் கேட்டா சொல்லுவாங்களா!

56

நாமக்கல் சிபி said...

/எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் //

கவிதா - பத்மா?

அபி அப்பா said...

அழகான நன்றி பதிவு!!!

ஆயில்யன் said...

நன்றிகளுக்கு மீண்டும் நன்றிகள்

பை தி பை ஆம்பூர் பிரியாணியினை நேரில் வந்தால் வாங்கி தர மறக்க வேண்டாம் என் சகோ. தமிழ்பிரியன் அப்புறம் ரூம் போட்டு அழுவாரூ! - தமிழ்பிரியா ஆச்சிக்கிட்ட ரிக்வொஸ்ட் போட்டுட்டேன் உனக்கு கண்டிப்பா பிரியாணி கடிக்கலாம் ச்சே கிடைக்கலாம்!

(பயபுள்ள எம்புட்டு பிரியாணி தின்னுருக்கும் ஆனாலும் ஆம்பூர் பிரியாணி வேணும்ன்னு ஆட்டுக்கால் மேலயே நிக்கிது!)

ஆயில்யன் said...

//கவிதா | Kavitha said...
//அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும்//

ஆம்பூர் பிரியாணி ?????
//

என்னது ??????

அப்ப உங்களுக்கு முல்ஸ் பத்தி நிசமாவே தெரியாதா....???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ஆச்சி ஒளிச்சு வைச்சு தின்னுட்டிருந்திருக்கீங்களா பாவம் அக்கா இப்பத்தான் கேள்வியேபடறாங்க போல....!)

கவிதா | Kavitha said...

எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் //

கவிதா - பத்மா?
//

:) எப்ப யார் கிடைப்பாங்க முடிஞ்சி விடலாம்ம்னு காத்துக்கிட்டே இருப்பீங்களா சிபி????


//(ஆச்சி ஒளிச்சு வைச்சு தின்னுட்டிருந்திருக்கீங்களா //

ஆயில்ஸ்...இதுக்கும் நான் கேட்டதுக்கும் சம்பந்தம் இருக்கும்.. எப்பவோ எனக்க்கு ஆம்பூர் பிரியாணி தரேன்னு சொன்னாங்க.. சரி இப்ப அதை நினைவு படித்தி விடுவோம்னு.... முல்ஸ் ஞாபகம் வந்துவிட்டதா???? :)

விக்னேஷ்வரி said...

யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! //

ரொம்ப சரியா சொன்னீங்க.

Sasirekha Ramachandran said...

//ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

//
:((

en kanvellam poye pochu..........but still waiting for my dream..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)அந்தந்த வயசுக்குன்னு ஒரு குழப்பம் இருக்கத்தானே செய்யுது.. பப்பு மாதிரியே இது முல்லையின் வளர்ச்சிப்படிகள்.:)

தாரணி பிரியா said...

//யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்!//

நிறைய அனுபவபட்டு இருக்கோமில்ல‌

அன்புடன் அருணா said...

A very good nostalgic post!!!!
anbudan aruNaa

குடுகுடுப்பை said...

வாழ்க்கை நிறைய கற்றுக்கொடுக்கும்.என் அனுபவம் கரடுமுரடானது ஆனாலும் நான் முடிந்தேன் என்ற நிலையில் என்னையும் அறியாமல் மீண்டு வந்துள்ளேன்.

கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கும்.

gils said...

neenga FRIENDS serial papaengala..star worldla munnadi potuturunthan....athula oru episodela avanga elarukum 30 vayasanapao ena pananganu varum :)) athey polaruku unga post. :)

Divyapriya said...

//எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! //

:))

nallaa irukku indha padhivu :)

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!

கவி மேடம், எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி! :-) பத்மாக்கள் எந்த காலத்திலும் இருப்பார்கள், முல்லைகளும்தான்! அப்புறம் ட்ரீட், நானே சமைச்சுதான் தருவேன்..ஓக்கேயா! :-)

நன்றி அமித்து அம்மா..அதெல்லாம் தானா வருது..ஹிஹி!

நன்றி வித்யா..என்ன கேட்டீங்க?!!

சந்தனமுல்லை said...

நன்றி தீஷூ, நிஜமா நல்லவன் அண்ணா!

நன்றி தமிழ்பிரியன் அண்ணா, ஆயில்ஸ் கோரிக்கை ஏற்கப்பட்டது! :-)

நன்றி சிபி..வித்யா என் வயசைக்கேட்டாங்கன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..உங்க வயசை கரீக்டா சொல்லி வித்யா டவுட்-ஐ கிளியர் பண்ணதுக்கு நன்றி! :-)

நன்றி அபி அப்பா!

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ்..பத்த வச்சாச்சா கவிக்கிட்டே..! :-))

நன்றி விக்னேஷ்வரி

நன்றி சசி...கனவு விரைவில் நனவாகட்டும்..வாழ்த்துகள்!

நன்றி முத்துலெட்சுமி, முல்லைன்னு மட்டுமில்லேப்பா, பொதுவா துடிதுடிப்போட இருககற யாராயிருந்தாலும் இதே டெம்ப்ளேட்தானே..:-)

சந்தனமுல்லை said...

நன்றி தாரணிபிரியா...அதானே..சேம் பிளட்?!!

நன்றி அன்புடன் அருணா...:-)


நன்றி குடுகுடுப்பை..உண்மைதான்..வாழ்க்கைதானே பல்கலைகழகம்! உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

நன்றி கில்ஸ்..நான் பார்த்ததில்லை..உங்க பகிர்வுக்கு நன்றி!

நன்றி திவ்யா! :-)

அமுதா said...

அழகான பதிவு முல்லை...

ஆகாய நதி said...

//
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))
//
உண்மை தான் :)
//
so many random thoughts crossing my mind....and again I am in utter confusion as I was in 19!!

//
நான் இன்னமும் சில விஷயங்களில் அப்படித் தான் :)

நல்ல பதிவு 20-30 வாழ்க்கை மாதிரியே விறுவிறுப்பான பதிவு:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரி முல்லை.. நாந்தான் ரொம்ப லேட்டா வாழ்த்து சொல்றேன்னு நெனைக்குறேன்.. தம்பிமாதிரி மன்னிச்சு விட்டுருங்க.. மாதிரி என்ன மாதிரி.. நீங்க சொல்றத பாத்தா தம்பியேதான்.!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////////மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் - இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் ! ///////////


மறுக்கமுடியாத உண்மைகள்தான் . அருமையான பதிவு !
பகிர்வுக்கு நன்றி !