Sunday, April 12, 2009

Jungle Book


(Thanks - Image : google)

அண்மையில் ஜங்கிள் புக் படத்தை பப்புவிற்கு அறிமுகப் படுத்தினோம். நானும் இந்தப் படத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னவோ மிகவும் ஸ்பெஷலாக டைம்பாஸாக இருந்தது! யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானை!கிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! ;-)

பப்பு முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், பார்த்ததையே திரும்பத் திரும்ப பார்க்க விரும்பினாள். அடுத்து என்ன வரும் என்று சொல்லுமளவிற்கு! பலூவின் கேரக்டரும், குட்டி யானையும் மிகப் பிடித்தம். மோக்லி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படம் பார்க்கும்போது, அவள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை! :-)


இப்படத்திலிருக்கும் அருமையான பாடலின் நான் ரசிக்கும் வரிகள்..

Look for the bare necessities
The simple bare necessities
Forget about your worries and your strife
I mean the bare necessities
Old Mother Nature's recipes
That brings the bare necessities of life .


And don't spend your time lookin' around
For something you want that can't be found

When you find out you can live without it
And go along not thinkin' about it
I'll tell you something true

The bare necessities of life will come to you


வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??!
(Thanks: youtube)

24 comments:

நட்புடன் ஜமால் said...

பகீரா நமக்கு ரொம்ப தோஸ்த்து

பாவம் என்ன தான் அதுக்கு தெரியாது

கவிதா | Kavitha said...

//வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??//

:)) The bare necessities of life will come to you

மாதவராஜ் said...

குழந்தையின் கண்கள் உங்களுக்கு இன்னும் நிறைய கற்றுக்கொடுக்கும். நல்ல பதிவு. ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

//வள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை! :-)//

ஆச்சரியமாக இருக்கிறதே. முன்னெப்பவோ அவள் படம் பார்க்கையில் கூட இருக்க நீங்கள் கூட இருக்க வேண்டும் என்பாள் எனப் படித்த நினைவு.

அந்தப் பாடல் அருமை.

ஆயில்யன் said...

ஞாயிறு விடுமுறை :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)

மணிநரேன் said...

ஜங்கிள் புக் - மறக்கமுடியாத ஒருசில கேலிச்சித்திரங்களில் இதுவும் ஒன்று.
;)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல வரிகள்.. முல்லை....

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மிக அருமையான கார்ட்டூன். எனது குழந்தைகளும் அன்று ரசித்தார்கள். வாழ்க்கைக்குத் தேவையான பல அடங்கியுள்ளன.

பிரேம்குமார் said...

Jungle Jungle baath chali hai...patha chala hai!!

மறக்க முடியுமா அந்த பாட்டையும் அந்த தொடரையும் :)

நிலாவும் அம்மாவும் said...

உங்களோட வரிகள் எனக்கு பிடிச்ச இன்னொரு வரியை ஞாபக படுத்துது


Let it go..

If it is yours, it will come to you. If not , let it go..

அமுதா said...

/*தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! ;-)
*/
ம்.. ஆமாம்...
/*வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??!*/
கண்டிப்பா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிரேம்குமார் said...
Jungle Jungle baath chali hai...patha chala hai!!

மறக்க முடியுமா அந்த பாட்டையும் அந்த தொடரையும் :)

வழிமொழிகிறேன்.

இன்றும் போகோ சேனலில் பார்த்து ரசிக்கிறேன். அமித்துவுடன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! ;-)

ரொம்பவே சரி........

சென்ஷி said...

//தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! ;-)//

நல்ல விவரணம்..

தீஷு said...

தீஷுவிற்கு இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. அறிமுகப்படுத்த வேண்டும். நினைவூட்டியதற்கு நன்றி

" உழவன் " " Uzhavan " said...

எங்க கொட்டாம்பட்டியில் "ஜங்கிள் புக்" படிக்கிற/பார்க்கிற வாய்ப்பெல்லாம் இல்லைங்க.. இப்பதான் பார்க்கிறேன். ஆனா எங்க ஊரே ஜங்கிள் தானே.. நாங்க பிடிக்காத ஓணானா, முயலா, அணிலா .... இப்படி ஏராளம்.
ஜங்கிள் புக் படிக்கும் பப்புவுக்கு வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

good...

ஆகாய நதி said...

//வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??//

ஆமாம் :)

//
For something you want that can't be found

When you find out you can live without it
The bare necessities of life will come to you
//

நல்ல வரிகள் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே புரிய வைக்க வேண்டிய வரிகள்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசனை.!

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்..உங்கக்கூட படிச்ச பொண்ணு பேராங்க அது?

நன்றி கவிதா, மாதவராஜ்!

நன்றி ராமலஷ்மி..இப்போது மட்டுமென்ன அப்படித்தான்! நான் கொஞ்சம் தெளிவாய் சொல்லியிருக்க வேண்டும்..அதாவது ஒரு சில சீன்களில் ரொம்ப எக்சைட் ஆகி அவள் சிரிப்பதையும், கத்திக்கொண்டு குதிப்பதையும் நான் பார்த்துக்கொண்டு இருப்பதை அவல் விரும்பவில்லை!

சந்தனமுல்லை said...

நன்றி மை ஃப்ரெண்ட்..


நன்றி மணிநரேன்..உண்மைதான்..எந்தக்காலத்திலும் பார்க்கக்கூடிய நல்ல கார்டூன்!

நன்றி முத்து!

நன்றி டொக்டர்..உண்மைதான், சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

நன்றி பிரேம், அழகான பாட்டு அது!

நன்றி பொன்னாத்தா, சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா!

நன்றி அமித்து அம்மா, ஆமா பப்புவும் இப்போ அதுலயும் விடாம பார்க்கிறதா ஆயா சொன்னாங்க!

நன்றி சென்ஷி..விவரணம்-ன்னா என்னங்க?

நன்றி தீஷு...உங்க அனுபவத்தையும் சொல்லுங்க!

நன்றி உழவன், தமிழன் - கறுப்பி, ஆகாயநதி, ஆதி!

Anonymous said...

...please where can I buy a unicorn?