Tuesday, August 01, 2006

புத்தகக்கூட்டிலே.....

புத்தகங்கள் எனது நேசிப்புக்குரியவை..!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய், நான் புத்தகங்களோடு தான் வாழ்ந்திருக்கிறேன்....ஓய்வு நேரம் மட்டும் தான் என்றில்லை..railway queue-வில் நிற்பதானாலும் சரி..பிரயாணமானலும் சரி ..most of the times i hav spent my time with books....!

சதா எல்லா நேரங்களிலும் படித்துகொண்டிருப்பதால் சுயமாய் சிந்திக்கும்
சக்தியை இழந்து போவாய் என என் தோழி சொல்ல கேட்டதுண்டு..!
புத்தகங்கள் நம்மை ஒருபோதும் காயப்படுத்தா..அவை பாரபட்சம் காட்டா..
மாறாக புதிய அனுபவங்களை, தாக்கஙகளையே ஏற்படுத்தும் வல்லமை கொண்டது..!

'புத்தகப் புழு' எனும் அளவுக்கு புத்தகங்களின் பிடியில் கிடந்த நாட்கள் உண்டு.
என் பால்ய காலதில்! அவை என்னை ஒரு மாய உலகுக்கு என்னை கொண்டு செல்லும். வாசிப்பின் போதையில், அது தந்த ஈர்ப்பில், புத்தகங்களின் மடியில் துயில் துயில் கொண்டிருந்த நாட்கள் அவை..!

நான் வைத்திருக்கும் புத்தகங்களை விட படித்த புத்தகங்களின் எண்ணிக்கையே அதிகம்... (லென்டிங் லிப்ரர்ய்-இன் உபயம்).! சிறு வயதில், புதிதாக செல்லும் இடங்களிலிருந்து நினைவு பொருளாக ஒரு கல் எடுத்து வருவது எனது வழக்கம்..! (என் பெரிம்மா எனக்கு ஏற்படுத்தியது, வாசிக்கும் வழக்கத்தை அறிமுகபடுத்தியதும் அவர்கள்தான்..!)

அதே போல் எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்தை வாங்குவதை வழக்கமாக கொண்டுஇருக்கிறேன்..தற்போது! என்னதான் என் கணவர் மடிகணினியில் pdf இல் சேர்த்து வைத்து படிக்க சொன்னாலும்...புத்தகத்தின் பக்கத்தை புரட்டி, வாசித்ததை அசை போட்டு..that pleasure of reading...வாய்த்ததில்லை கணினியில் ஒருபோதும்!!

நான் படித்து, ரசித்து பாதுகாத்து வைதிருக்கும் புத்தஙகளின் list இதோ..!

1. அந்தோன் சேகவ்-இன் (anton chekav) சிறுகதைகள்
2. anna karenina - டால்ஸ்டாய் (Tolstoy)
3. rebecca -Daphne du Maurier
4. rasputin - author unkown
5. Malgudi days - r.k narayan
6. swami and his friends
7. waiting for mahatma
8. the financial expert
9. the guide
6. மௌனமே காதலாக - பாலகுமாரன்
7. பச்சை வயல் மனது
8. கரையோர முதலைகள்
9. tough time never lao but tough ppl do - robert schuller
10. you can win - shiiv kera
11. எண்ணங்கள் - எம்.ஸ் உதயமூர்த்தி
12. train to pakistan
13 kushmwantsingh jokes
14. master of the game - sydney sheldon
15. the love story - erich seigal
16. பஞ்சதந்திர கதைகள்
17. முல்லாவின் கதைகள்
18. திருக்குறள்
19. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை -அம்பை
20. சிவகாமியின் சபதம் - கல்கி
21. பொன்னியின் செல்வன்
22. சிவப்பு கல் மூக்குத்தி - கண்ணதாசன்
23 i dare - kiran bedi
24. அது ஒரு நிலா காலம் - ஸ்டெல்லா புருஸ்
25. மடிசார் மாமி - தேவிபாலா
26. பூக்குட்டி - சுஜாதா
27.அக்கினி சிறகுகள் - கலாம்
28. சத்தியசோதனை - காந்தி - never read fully.
29. பாரதியார் கவிதைகள்
30. பாரதிதாசன் கவிதைகள்
31. கடல் புறா - சாண்டில்யன்
32. நண்டு - சிவசங்கரி
33. The Bible

7 comments:

மகேந்திரன்.பெ said...

1
18
20
21
28
இதெல்லாம் என்னனு பாக்கறீங்களா உங்க பட்டியல்ல எங்கிட்ட இருக்க புத்தகம் வாங்க வந்து புத்தக ஜோதியில ஐக்கியமாகுங்க பட்டியலின் சுட்டியை சிவபாலனிடம் சேர்த்துவிடுங்கள்

மகேந்திரன்.பெ said...

http://paarima.blogspot.com/2006/07/blog-post_31.html
ADVT

Thekkikattan said...

சந்தனமுல்லை...

//5. Malgudi days - r.k narayan
6. swami and his friends
7. waiting for mahatma
8. the financial expert
9. the guide
8. கரையோர முதலைகள்
11. எண்ணங்கள் - எம்.ஸ் உதயமூர்த்தி
31. கடல் புறா - சாண்டில்யன்//

நானும் அவைகளை படித்திருக்கிறேன்... மீண்டும் பலப் பல எம்.ஸ். உதயமூர்த்தியின் படைப்புகள்...


***என் பால்ய காலதில்! அவை என்னை ஒரு மாய உலகுக்கு என்னை கொண்டு செல்லும். வாசிப்பின் போதையில், அது தந்த ஈர்ப்பில், புத்தகங்களின் மடியில் துயில் துயில் கொண்டிருந்த நாட்கள் அவை..!***

ஆர். கே. நாரயன் படித்த பொழுது எனக்கு நீங்கள் கூறிய படியே உணர்ந்திருக்கிறேன்...

நல்ல வாசிப்பு... வித்தியாசமான முறையில், சிந்தனை எந்த படைப்பாளியிடத்தும் இருக்கிறது... அதனை நீங்கள் புரிந்து வைத்திருக்கிற மாதிரி எனக்கு தோணச் செய்தது.

மகேந்திரன்.பெ said...

WECOME TO BOOK CLUB :)
Wait for Comments

dondu(#4800161) said...

பாலகுமாரனின் கரையோர முதலைகள் அருமையான கதை. சீரியஸும் கூட. ஆனால் அதையே நம்ம பாக்கியம் ராமசாமி அப்புசாமி சீதாபாட்டி கதையில் உபயொகித்து சிரிக்கப் பண்ணி விட்டார்.

ஒரு கதையில் சீதா பாட்டி வழக்கம் போல அப்புசாமியை கவுக்க ப்ளான் போட்டிருப்பார். அதில் இந்த வாக்கியம் வரும்: "அப்புசாமி தூக்கத்திலிருந்து கண் விழித்தபோது அவர் எதிரில் கரையோர முதலையாக சீதா பாட்டி உட்கார்ந்திருப்பதை பார்த்தார்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

G Gowtham said...

NOT TO PUBLISH
வணக்கம்.
தொந்தரவுக்கு மன்னிக்கணும்.
உங்கள் எழுத்துக்கள் வெகுஜன வாசகனையும் ஈர்க்கவல்லவை!
வாழ்த்துக்கள்
குங்குமம் வார இதழுக்காக எழுதுகிறீர்களா?
வலைப்பூவில் எழுதுபவர்களில் பலரை அல்லது வலைப்பூ மூலம் அறிமுகமான பலரை குங்குமத்தில் எழுத வைத்திருக்கிறேன். லக்கிலுக், என்.சொக்கன், பொன்ஸ், நிலா, பழூர் கார்த்தி. சிவஞானம்ஜி, ஜொள்ளுப்பாண்டி, பாலபாரதி, ஜெஸிலா, என்.சுரேஷ்.. இன்னும் பலர். நீங்களும் ஜமாவுக்கு ரெடியா?
உங்களுக்கு லயிப்பான தலைப்பை முன்மொழியவும். ஆசிரியர் குழுவின் அனுமதி வாங்கித் தருகிறேன். அல்லது நானே தலைப்புகொடுப்பதாக இருந்தாலும் சரி..

Kamalalayan said...

puthakak kootile padithen.unkal vaasippu aarvam makizchikku uriyathu.innum naam vasikkavum asai pottu makizavum ennatra puthakangal ullana.thodarnthu padippom.nam vaarisukalum puthakap piriyarkalaaka valarumaaru seivom.vaazthukkal............kamalalayan,chennai.