நமது குழந்தைகளுக்கு, யார் அவர்களைத் தொடலாம் மற்றும் எப்போது தொடலாம் என்று புரிய வைக்க வேண்டியது அவசியம். குட் டச், பேட் டச் மற்றும் எது ரைட் டச் என்றும் அவர்கள் அறிய வேண்டியது அவசியம்.
ஒருசில வேளைகளில் மருத்துவர் தொட வேண்டி வரலாம். அல்லது நாம் அவர்களை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் தொட வேண்டி வரலாம். ஆனால், பள்ளியிலோ அல்லது மற்ற வெளியிடங்களிலோ யாரும் அவர்களை தொட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்த வேண்டும். அப்படி யாரும் தொட முயற்சிப்பார்களேயாயின், உடனடியாக அகன்று அவர்கள் பெற்றோர்களிடம்/முதலில் எதிர்படும் பெரியவர்களிடமோ சொல்ல வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் சொல்லி அநாவசியமாக குழந்தைகளை கலவரப் படுத்தி விடுவோமோவென்றும் தோன்றுவதுண்டு. பப்புவிடம் இதுவரை குட் டச் பேட் டச் பற்றி பேசியதில்லை. ஆனால் Stranger Safety குறித்து பேசியிருக்கிறேன். யார் அவளை பள்ளியிலிருந்து அழைத்து வரலாம், யாருடன் அவள் வெளியே/கடைகளுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், ஒருதடவை சொன்னால் பத்தாது. திரும்ப திரும்ப வாரத்திற்கு இருமுறையாவது! சொல்லும் முறையும் முக்கியம், சாதாரண பேச்சுகளின் போதோ அல்லது டீவி நிகழ்ச்சிகளின் போதோ, கதைகளினூடாகவோ, தன்னம்பிக்கையை குறைத்துவிடாதவாறு!
நம்மில் எத்தனைப் பேர் இதெல்லாம் பேசுகிறோம்? குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து இதை சொல்லலாம்? எப்படி ஆரம்பிப்பது? இந்த கருத்தரங்கில் விடை கிடைக்குமென்று நம்புகிறேன்!
டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி-யுடன் குட் டச் - பேட் டச் பற்றி கலந்துரையாடல்
இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
மேலும் விபரங்களுக்கு லக்கியின் பதிவை பார்க்கவும்! இந்த குட் டச்-பேட் டச் பற்றிய கருத்தை முன்வைத்த பதிவர் தீபாவிற்கு நன்றி!
குழந்தை வளர்ப்புக்கென்று தனியாக இன்ஸ்டிட்யூஷன்கள் இல்லை. நாமாக கற்றுக் கொண்டுதான் தேர்ச்சியடைய வேண்டியிருக்கிறது! :-)
youtube-ல் கிடைத்த அனிமேஷன் படங்கள் : உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
(thanks : youtube)
Edited to Add:
SK கேட்டுக்கொண்டதற்கிணங்க நர்சிமின் பதிவுக்கான சுட்டியை இங்கே பதிவில் இணைக்கிறேன்.
இ-மெயில் ஐடி மூலம் பதிவினை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
”இன்னுமொரு முக்கிய மேட்டர் : இதில் பங்குபெறவிரும்புவோர்... கீழே உள்ள மெயில் ஐடிக்கு ஒரு மடல் எழுதி வருகை தருவதை உறுதிப் படுத்தினால், ஏற்பாடுகள் செய்ய (இருக்கை,டீ,ஸ்நாக்ஸ்!) ஏதுவாக இருக்கும்.
weshoulddosomething@googlemail.com “ - நர்சிம்மின் பதிவிலிருந்து...
11 comments:
பள்ளி ஆசிரியை/ஆசிரியர்களே மாணவ/மாணவிகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று படிக்கையில் இப்படி ஒரு எச்சரிக்கை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது அவசியம்தான்
சகாதேவன்
நல்ல பகிர்வு
கள்ளங்கபடமற்ற குழந்தைகளுக்கு எதையெல்லாம் சொல்லித்தர வேண்டியிருக்கிறது என்பதை யோசிக்கும்போது வலிக்கிறது. எவ்வளவு சோகம் இது.
இதைப் பற்றிய விழிப்புணர்வு இக்காலக்கட்டத்துக்கு மிக அவசியமானது.
ம்ம்ம்ம். நானும் பதிவிடுகிறேன் முல்லை.
நானும் குழம்பி குழம்பி தான் இது பற்றி சொல்லிக்கொடுக்கிறேன்.. நீங்க கலந்துரையாடல் போய்வந்தால் விசயத்தைப் பதிவிட்டு பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தீபாவின் பதிவை பிரிண்ட் எடுத்து ஒரு இளம் பெண் குழந்தை இருக்கும் வீட்டில் கொடுத்தேன்.பெற்றோர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியது, அதை விட பெற்றோர்கள் நல்லவர்களாக இருப்பது கூட முக்கியம்.பெற்றோருக்கு யார் பாடம் எடுப்பது??
mulz Nice post..
I do talk with over phone or thro mail on this.. ok.. :)
முல்லை,
நன்றி பதிவிற்கு.
நர்சிம் அவர்களின் பதிவின் தொடுப்பையும், அங்கே குறிப்புட்டுள்ள முகவரிக்கு வருபவர்கள், அவர்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரமும் அனுப்பினால் அங்கே இருக்காய் குறித்த ஏற்பாடுகள் செய்ய எதுவாக இருக்கும். முடிந்தால் அந்த விடயத்தையும் இங்கே இணைக்கவும்.
நன்றி மீண்டும்.
nijamaave romba romba useful post mullai...
ராம்லஷ்மி மேடம் சொன்னது போல் இதைப் பற்றிய விழிப்புணர்வு இக்காலக்கட்டத்துக்கு மிக அவசியமானது. நல்ல பதிவு.
Post a Comment