Thursday, May 07, 2009

மே மாதம்...

கோடைவிடுமுறை. ஒரு மாத லீவுக்கு உறவினர் வீடு என்று ஊர் சுற்றுவது. அதுவும் ஒரு பத்து குட்டீஸ் ஒன்றாக சேர்ந்துவிட்டால், உற்சாகக் கூச்சலுக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவே வேண்டாம். லீவு விட்டால் நாங்கள் ஆம்பூரிலிருந்து வடலூர் செல்வோம், மாமா வீட்டுக்கு. வீட்டின் பின்னால் மாமரங்கள், நெல்லிமரங்கள், பனைமரங்கள், பலாமரங்கள் என்று நமது மரம் ஏறும் திறமைக்கு சவால் விட நிறைய மரங்கள்.

மாங்காயை மரத்திலேயே சாப்பிட்டு கொட்டை மட்டுமே மரத்தில் தொங்கவிட்டு வைக்க ஒரு போட்டி. சில்லி காம்படிஷன்ஸ். சீக்கிரம் யார் சாப்பிடுவது, கடைக்குப் போய்விட்டு யார வேகமாக வீட்டுக்கு வருவது etc. காலையிலேயே நுங்கு மட்டுமே உணவாக உண்ட நாட்கள். பைண்டு செய்து வைக்கப்பட்ட ஆனந்த விகடன் சிறுகதைத் தொகுப்புகள், தொடர்கதைத் தொகுப்புகள், கல்கியிலியிருந்து தொகுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் என்று எக்கச்சக்க கதைப் புத்தகங்கள். விளையாட பல்லாங்குழி, அதிலேயே எத்தனை வெர்ஷன்கள், ராஜா-ராணி-மந்திரி-திருடன் - போலிஸ்,கேரம் போன்ற வெயிலில் தலைக்காட்ட வேண்டியிருக்காத விளையாட்டுகள். காலை உணவிற்கு பின் பலாப்பழத்தை வெட்டி நாள் முழுவதும் பலாப்பழ வாசனையும், பிசுபிசிப்பும் சேர்ந்து உடையிலேயே துடைத்து என்று ஒரு மாதிரியாக வலம் வந்த நாட்கள். எல்லோரும் சேர்ந்து வள்ளலார் சத்தியஞான சபைக்கு செலும் மாலை நேரங்கள். (அட,ஞானத்துக்காக இல்லைங்க..அங்கே நிறைய மாமரங்கள் இருக்கும்!)பின் வடலூரிலிருந்து ஆம்பூருக்கு வருவோம், எல்லாக் குட்டீஸூம்! மாடியில் விளையாட்டு, மைதானத்தில் விளையாட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் டீவி, கதைப்புத்தகம் என்று பொழுது போகும். (எச்சி காம்படிஷன் - மாடியிலிருந்து எச்சிலை துப்ப வேண்டும், யார் எச்சில் சீக்கிரம் கீழே சென்றடைகிறதோ அவர்தான் வெற்றியாளர்.) முடியவே முடியாது என்ற எண்ணத்தில் ஒவ்வொரு தினத்தையும் கழித்த கோடை விடுமுறை நாட்கள்!

**sigh** எனது சிறுவயது கோடைவிடுமுறைகளை நினைத்துக் கொண்டேன், அம்மாக்களின் பகிர்வுகளில் சிறார் ஆக்டிவிட்டீஸை பதிவிட்டபோது!!

14 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டாய் வந்து ஃபீல் பண்ணிக்கிட்டிருக்கேன் ஆச்சி :((

ஆகாய நதி said...

நல்ல கொசுவர்த்தி! இந்த மேமாத கொசுவர்த்தி எல்லாருக்குமே அவரவர் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள்! :)

வித்யா said...

ம்ம்ம் மறக்க முடியாத விடுமுறை நாட்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மா சாப்பிடக்கூப்பிட்டாலும் போகாம பல்லாங்குழியும் சீட்டுக்கட்டுகளும் கேரம்போர்டும் ரிங்பாலும் கையுமா இருந்த காலம் ஹ்ம்... ரொம்ப ஃபீல் பண்ண வைச்சிட்டீங்களே.. முல்லை..

david said...

Ei enna kootan-choru maranthitiyaaa? wow Super.

Divyapriya said...

பப்பு லீவ்ல என்ன பண்றான்னு சொல்லவே இல்லையே? :))

நசரேயன் said...

ம்ம்.. கொசு வத்தி நல்லா சுத்துறீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

செம கொசுவத்திங்கோ..

(எச்சி காம்படிஷன் - மாடியிலிருந்து எச்சிலை துப்ப வேண்டும், யார் எச்சில் சீக்கிரம் கீழே சென்றடைகிறதோ அவர்தான் வெற்றியாளர்.) :))))))))

ஐடியாவில ஆச்சிய மிஞ்ச ஆளே இல்ல போங்க.........

G3 said...

:))))))

உங்க குட்டிக்கும் இந்த ஆப்ஷன் எல்லாம் குடுக்கறீங்களா ;-)))

அபி அப்பா said...

ஆஹா டைட்டானிக் ரேஞ்சில எல்லாரும் எச்சி துப்பி இருக்கீங்க!

அமுதா said...

நல்ல கொசுவத்தி ...

ஆயில்யன் said...

//Divyapriya said...
பப்பு லீவ்ல என்ன பண்றான்னு சொல்லவே இல்லையே? :))
/

அடுத்த பதிவுக்கு நல்லா எடுத்துக்கொடுக்குறீங்க போங்க !

வழக்கம்போல பப்பு ஆச்சி பெரிம்மா கொண்டுவந்த பொம்மையெல்லாம் அடுக்கி வைச்சி விளையாட,ஆச்சி பெரிம்மா கொண்டுவந்த ஆம்பூர் பிரியாணியை பிரிச்சு வைச்சு தின்னு விளையாடிக்கிட்டிருக்காங்க !

" உழவன் " " Uzhavan " said...

ஐயோ.. எல்லோரின் மனசுக்குள்ளயும் உள்ள பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்து விட்டீர்கள். இப்படியெல்ல்லாம் இருந்த மே மாதம் , இப்போது குழந்தைகளுக்கு அந்த கோச்சிங், இந்த கோச்சிங்... என்று ஃபுல் செடூல்ல போகுது போங்க..

விக்னேஷ்வரி said...

மாங்காயை மரத்திலேயே சாப்பிட்டு கொட்டை மட்டுமே மரத்தில் தொங்கவிட்டு வைக்க ஒரு போட்டி. //

ஹேய் வித்தியாசமா இருக்கு பா. நல்ல போட்டி, நல்ல கொண்டாட்டம், நல்ல நினைவுகள்.