
(image courtesy : google)
ஒரு குட்டிப் பாப்பா ஒருநாள் பூனைக்குப் பேசக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.
”பூனை, அம்மா சொல்லு”
பூனை சொன்னது “மியாவ் மியாவ்”
குட்டிப்பாப்பா சொன்னாள், “பூனை, அப்பா சொல்லு”
“மியாவ் மியாவ்”
குட்டிப் பாப்பா சொன்னாள், “பூனை, நிலா சொல்லு”
“மியாவ் மியாவ்”
குட்டிப்பாப்பா சொன்னாள், “பூனை, டாட்டா சொல்லு”
“மியாவ் மியாவ்”
பார்த்துக்கொண்டிருந்த குட்டிப்பாப்பாவின் புத்திசாலி அம்மா, “பூனைக்கு எது சொல்லத் தெரியுமோ அதையே சொல்லிக்கொடேன், அப்போ பூனை சொல்லுதா பார்ப்போம்” என்றார்.
குட்டிப்பாப்பாவும் “பூனை, மியாவ் மியாவ் சொல்லு”
இப்போது பூனை சொன்னது, “மியாவ் மியாவ்”
குட்டிப்பாப்பா, பூனையைப் பார்த்துச் சொன்னாள்,”வெரிகுட் பூனைக்குட்டி, ஒருவழியா நீ பேசக் கத்துக்கிட்டே!”
*குட்டிப்பாப்பா பெயர் பப்பு
**அந்த புத்திசாலி அம்மா, பப்புவோட அம்மான்னு சொல்லணுமா என்ன?!!;-)



28 comments:
படிக்க ஆரம்பிச்சதுமே நினைச்சேன்.. ;-))
ஆஹா! புத்திசாலி அம்மா தான் :)
சூப்பரா இருந்தது இந்த நிகழ்ச்சி அப்படியே பார்க்கிற மாதிரி படிச்சேன்... :)
WOWW.. Wonderful..
தெய்வமே...
தெய்வமே........
நன்றி சொல்வேன் தெய்வமே...!
தேடினேன்
தேடினேன்
கண்டுக்கொண்டேன் புத்திசாலியை
கண்டுகொண்டேன் புத்திசாலியை!
//அந்த புத்திசாலி அம்மா, பப்புவோட அம்மான்னு சொல்லணுமா என்ன//
ம்ம்ம்ம்
எலெக்ஷன் நேரமா இருக்குல்ல !
இது மாதிரி நிறைய எக்ஸ்ட்ரா பில்ட்-அப் கொடுத்துக்கோங்க பாஸ் :)
அடடே!!!
குழந்தைகளின் அழகான உலகம் ;)
நீங்க சொன்னா சரிதான், புத்தி சாலி அம்மா
தாய் எட்டடி பாய்ந்தால் குழந்தை பதினாறு அடி பாயும் என்னும் பழமொழி உண்மையானதைக் கண்டேன்.
குட் பூனைக்குட்டி.
வெரிகுட் குட்டிப் பாப்பா.
வெரிவெரிகுட் புத்திசாலி அம்மா.
அடக் கடவுளே:))
நான் மயங்கி விழுந்துட்டேன்..
//தமிழ் பிரியன் said...
படிக்க ஆரம்பிச்சதுமே நினைச்சேன்.. ;-))
///
புத்திசாலி தம்பி!
எனக்கு கடைசி வரிகளில்தான் இந்த டெரரரிசம் புரிஞ்சுது :(
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நான் மயங்கி விழுந்துட்டேன்..
//
அய்யோ பாவமே....!
(பரிதாபம்தானக்கா படமுடியும் நீங்க சுதாரிச்சுக்கல பாருங்க !)
நானும் மயங்கி விழுந்துட்டேன்!
//**அந்த புத்திசாலி அம்மா, பப்புவோட அம்மான்னு சொல்லணுமா என்ன?!!;-)//
**அந்த புத்திசாலி பாப்பாவோட அம்மா, பப்புவோட அம்மான்னு சொல்லணுமா என்ன?!!;-)
இப்படி வந்திருக்கனுமோ ;-)
//ஆயில்யன் said...
//தமிழ் பிரியன் said...
படிக்க ஆரம்பிச்சதுமே நினைச்சேன்.. ;-))
///
புத்திசாலி தம்பி!
எனக்கு கடைசி வரிகளில்தான் இந்த டெரரரிசம் புரிஞ்சுது :(//
எனக்கும் பாஸ் :(((
:-))
*குட்டிப்பாப்பா பெயர் பப்பு
**அந்த புத்திசாலி அம்மா, பப்புவோட அம்மான்னு சொல்லணுமா என்ன?!!;-)//
முடியல தாயே முடியல.. !!
பாவம் பப்பு.. !! பாவம் அந்த பூனைக்குட்டி !!
//தெய்வமே...
தெய்வமே........
நன்றி சொல்வேன் தெய்வமே...!
தேடினேன்
தேடினேன்
கண்டுக்கொண்டேன் புத்திசாலியை
கண்டுகொண்டேன் புத்திசாலியை!//
ஆயில்ஸ்..... நானும் கூட சேர்ந்து பாடறேன்..!!
ஸ்டார் மியூஜிக்..கு.....!!
ஆயில்யன் said...
தெய்வமே...
தெய்வமே........
நன்றி சொல்வேன் தெய்வமே...!
தேடினேன்
தேடினேன்
கண்டுக்கொண்டேன் புத்திசாலியை
கண்டுகொண்டேன் புத்திசாலியை
அய்யோ ஆயில்யன் அண்ணா
நீங்க ரொம்ப லேட்டு ...
நாங்க எப்பவோ கண்டுபுடிச்சிட்டோம்ல..
இனிமே அந்த பூனை உங்க வீட்டுப் பக்கமே வராதாமில்ல..
...
:)))))))))))
ஆச்சி, புத்திசாலித்தனமா ஆரம்பிச்சு, கடைசியில பதிவ காமெடி பீஸா ஆக்கிட்டீங்களே !!!!!!!!!!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-))
இனிமே அந்த பூனை உங்க வீட்டுப் பக்கமே வராதாமில்ல..//
:)))))))))) இது மேட்டரு !! :))))
//இனிமே அந்த பூனை உங்க வீட்டுப் பக்கமே வராதாமில்ல..//
:)))))))))) இது மேட்டரு !! :))))
//
அடப்பாவமே , உங்களுக்கு இவ்வளோ எதிரிகளா :)
அப்படியா? interesting !
தமிழ்பிரியன் அண்ணா, நீங்க பெரியவர்னு நிருபீக்கறீங்க..:-)
நன்றி ஆகாயநதி, ஆதி!
நன்றி சின்னபாண்டி, கொந்தளிச்சுட்டீங்க போல இருக்கே!! :-))
நன்றி மணிநரேன்!
நன்றி நசரேயன், இதுதான் சிலேடையோ?!!
நன்றி ராமலஷ்மி!
அட, இதுக்கே அசந்துட்டா எப்படி, வித்யா!!
நன்றி முத்து & அபி அப்பா..ஆகா.. மயங்கிவிழும்போதுகூட அடுத்தவங்களோட கவனம் தேவைப்படுது பார்த்தீங்களா!!;-)
நன்றி G3..பின்றீங்களே..:-)
வாங்க அமுதா!
நன்றி கவிதா..உங்க பாடலுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமேயில்ல..:-)
நன்றி அமித்து அம்மா..//புத்திசாலித்தனமா ஆரம்பிச்சு, கடைசியில பதிவ காமெடி பீஸா // நீங்க இப்படில்லாம் நினைச்சுக்கிட்டா நிர்வாகம் பொறுப்பாகாது..!!
வாங்க சின்ன அம்மிணி..பார்த்தீங்களா அநியாயத்தை! :-)
வாங்க தீஷு!
நன்றி ச.முத்துவேல்..:-)
:) Nice
இது நல்ல 'கதை'யால்ல இருக்கு. :)
Post a Comment