Monday, May 04, 2009

ஒரு சிறுமியின் முதுகில் ஏழு செங்கற்கள்!!

பதினொரு வயதுச் சிறுமி ஆங்கில எழுத்துகளை சரிவர சொல்ல இயலாமல் அவளது வகுப்பாசிரியையால் தண்டிக்கப் பட்டிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறாள். போதாதென்று, கோழியைப் போல குனிய வைத்து இரு தோள்களிலும் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறாள். வாந்தியெடுத்து மயக்கமடைந்த அச்சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறாள். கடந்த 17-ஆம் தேதியன்று ஷன்னா காடுன் உயிரிழந்தாள். தில்லியின் முனிசிபல் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்திருக்கிறது இது.

இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்லவே நமக்கு...எத்தனை சிறார்களை ஆசிரியர்களின் தண்டனைகளால் மரணத்திற்கு கொடுத்திருக்கிறோம்! எத்தனை தடவை செய்திகளில் பார்த்திருக்கிறோம்! "என்ன வேணா பண்ணிக்குங்க டீச்சர், எவ்வளவோ வேணா அடிங்க, படிச்சா போதும்” என்று ஆசிரியரிடம் ஒப்படைக்கும் கடந்த தலைமுறை பெற்றோரைக் கொண்ட சமூகம்தானே இது! கடந்த மாதம், ஈரோட்டில் ஒரு சிறுமி ஆசிரியையால் தண்டிக்கப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் குப்புறக் கிடந்ததை நாம் பார்த்ததுதானே!! கற்பித்தலில் தவறா? அல்லது கற்றலை இனிமையாக்க முடியாத பாடத்திட்டத்தில் தவறா? மனப்பாடம் செய்ய முடியாதது தவறா?

கடந்த வாரம் இந்துவில், ஒரு குழந்தை மருத்துவர் ஷன்னாவிற்கு எழுதியக் கடிதத்தை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார், முனைவர் ரத்தினபுகழேந்தி! தயவு செய்து படியுங்கள். ஏதாவது சொல்வதற்கு இருக்குமாயின் அவரது பதிவில் சொல்லிச் செல்லுங்கள்!

**தலைப்பு - முனைவர் ரத்தினபுகழேந்தியின் பதிவிலிருந்து கடன்வாங்கியிருக்கிறேன்.

17 comments:

ஆகாய நதி said...

:(

இந்த ஆசிரியவர்க்கத்தில் பாதிக்கு பாதி இப்படிதான் :(

வகுப்புத் தலைவியாக இருந்த ஒரே காரணத்துக்காக வகுப்பில் யார் ஒழுங்கீனமாக நடந்தாலும் நான் தான் உடற்கல்வி ஆசிரியையிடம் அடி வாங்க வேண்டும் :(

குழு நடனத்திலும் பயிற்சியின் போது பசியில்,தாகத்தில் கொஞ்சம் ஆட்டம் தளர்ந்தாலும் முட்டியில் விழும் பிறம்பால் :( இத்தனைக்கும் அப்போது நாங்கள் 10ம் வகுப்பு!

கவிதா | Kavitha said...

முல்ஸ் ,

என்னுடைய சில ஆசிரியர்களின் தண்டனைகள்

அறிவியல் டீச்சர் - கரியை குழைத்து மீசை வரைவார்கள். அத்தோடு பள்ளியின் கிரவுண்டை இரு முறை சுற்றி வர வேண்டும். சில சமயம் மீசை ஒரு பக்கம் மட்டும் போடுவார்கள்.

ஹி ஹி.. இது நிறைய பெண் குழந்தைகளுக்கு சூப்பரா இருக்கும், நான் தண்டிக்கப்பட்டது இல்லை என்றாலும் என் நெருங்கிய தோழிகள் யாராவது மாட்டிக்கொள்ளும் போது கஷ்டமாக இருக்கும். அவர்கள் ரொம்பவும் அவமானமாக நினைக்கும் ஒரு தண்டனை இது.

தமிழ் டீச்சீர் : ஸ்கேல் வைத்து பிச்சி பிடல் எடுத்து விடுவார்கள்.

ஆங்கில டீச்சர் : க்ளாச் வெளியில் முட்டி போட வைப்பார்கள். அவ்வ்வ்வ்வ்.. இது ஒரு முறை எனக்கு கிடைத்தது. அதுவும் +1 படிக்கும் போது.. க்ளாஸ் கட் அடிச்சிட்டு விளையாட போனேன் னு.. ஆனா முட்டி போட்ட கொஞ்ச நேரத்தில் பிடி மாஸ்டர் திருப்பி வந்து என்னை அழைத்து சென்று விட்டார்... அப்ப பாக்கனுமே அந்த டீச்சர் என்னை முறைத்ததை.. யம்மா சந்தரமுகி கெட்டா.. !!

டியூஷன் கணித டீச்சர் : ஸ்கேலை திருப்பி வைத்து அடிப்பார்.

டியூஷன் ஆங்கில டீச்சர் : ரொம்ப நீளமாக ஒரு குச்சி அவர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து எல்லோரையும் தொடும் நீளத்திற்கு வைத்திருப்பார். ரொம்பவும் வாயாடுகிறேன்.. தலையில் அடிக்கடி இந்த குச்சியால் எனக்கு அடி கிடைத்திருக்கிறது.. அது தவிர்த்து, டியூஷன் விட்டு செல்லும் போது அவரை தாண்டி செல்லும் போது நான் வர காத்திருந்து முதுகில் வேறு வெச்சி விளாசுவார்.. :))) ஆஹா.. எல்லாம் ஒரு, இரு முறைதான்.. அதற்கு பிறகு நான் உஷாரா அவரை கிராஸ் செய்யும்.. ஓட்டமாக ஓடுவிட்டு.. தூரத்தில் நின்று அவரை பார்த்து சிரிப்பேன். கடுப்பாகி இரு நாளைக்கு உனக்கு இருக்கு என்று சொல்லுவார். அவர் காத்திருந்து என்னை சில நேரங்களில் செமத்தியாக பின்னி எடுத்ததும் உண்டு. :)))

கவிதா | Kavitha said...

வரலாறு புவியியல் டீச்சர் - கிரவுண்டில், ஸ்கூலில் இருக்கும் குப்பைகளை பொறுக்கி குப்பை தொட்டியில் போட்டு வர சொல்லுவார். இது சூப்பரான தண்டனை..

பி டி டீச்சர் :- காற்று போன எல்லா பந்துகளுக்கும் காற்றை நிரப்ப சொல்லுவார்கள். இதுவும் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

வேதியியல் டீச்சர் : இந்த ஆள் கொஞ்சம் ஓவர், பெண் பிள்ளைகளையும் கிள்ளுவார். பசங்க கிட்ட மூட்டி கொடுத்து.. தனியா கவனிச்சோம் இவரை !!

புவியியல் டீச்சர்.: ஹா ஹா.. சாக்பீஸை இடது கையில் பிடித்து.. சரியாக யாரை அடிக்க வேண்டுமோ கேரம் காயன் அடிக்கற மாதிரி அடிப்பார்.. சாக்பீஸ் பிச்சிக்கிட்டு வந்து ச்சும்மா ச்சுல்லுன்னு அடிக்கும்.. பசங்க நிறைய மாட்டுவாங்க.. ஹி ஹி.. நானும்.. எதுக்குன்னா. சார் நீங்க சாக்பீஸ் ரொம்ப வேஸ்ட் செய்யறீங்க.. சும்மா உங்களுக்காக சாக்பீஸ் வாங்கிவைக்க முடியாதுன்னு சொல்லியே அடிவாங்குவேன். விழுப்புரம் வாயை மூடுன்னு அடிப்பாரு.. :)))

கவிதா | Kavitha said...

ஆசிரியர்களுக்கு பள்ளிலேயே யோகா தியானப்பயிற்சி கொடுக்கலாம், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க காரணம் அவர்கள் பொறுமை இழப்பதும், மன அழுத்தங்களும் பிரச்சனைகளுமே. அதற்கான சரியான கவுன்சலிங் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மாற்றம் வரும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏற்கனவே பள்ளிக்கு அனுப்புவது அதும் பெண்குழந்தைகளை அனுப்பவது இன்னமும் ஏழைகள் மத்தியில் அத்தனை விருப்பமானது இல்லை.. அதிலும் இது போன்ற செயல்கள் அவர்களுக்கு தைரியம் இழக்க செய்கிறது.. :(

KVR said...

//கற்பித்தலில் தவறா? அல்லது கற்றலை இனிமையாக்க முடியாத பாடத்திட்டத்தில் தவறா? மனப்பாடம் செய்ய முடியாதது தவறா?
//

குழந்தைகளை குழந்தைகளாக நடத்தாது தான் தவறு. ஓரு நல்ல பதிவுக்கு வழிகாட்டியதற்கு நன்றி முல்லை.

தீஷு said...

நான் படிச்ச ஸ்கூல தண்டனையே கிடையாது.. செய்திகளைப் படிக்கும் பொழுது இப்படி கூட செய்வாங்களானு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு.

SK said...

:(

மாதவராஜ் said...

முக்கியமான விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகிறது. சட்டென்று ஆசிரியர்கள் மீது முழுப்பழியையும் சுமத்துவது சரியில்லையோ எனத் தோன்றுகிறது. கல்விமுறையில் இருக்கும் கோளாறுகளும் முக்கிய காரணமாகின்றன. இதன் தொடர்ச்சியாக ஒரு பதிவு எழுதுவேன்.
நன்றிங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அங்கே என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. ஏதோ கோளாறு.

மிகச்சிறப்பான படைப்பு, அதன் சிறப்பான மொழிபெயர்ப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள். உணர்வுப்பூர்வமான ஒரு படைப்பில் எழுத்துப்பிழைகள் கூடாது. நிறைய பிழைகள் இருந்தன..

விக்னேஷ்வரி said...

நானும் இச்செய்தி அறிந்தேன் முல்லை. இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டுமென தகவல்கள் சேகரித்து வருகிறேன். சீக்கிரமே இது பற்றிய பதிவு என் ப்ளாக்கிலும் இருக்கும்.

கோமதி said...

தீஷீ அம்மா சொன்ன மாதிரி நான் படிச்ச ஸ்கூல்லயும் தண்டனைலாம் கிடையாது. நான் கொஞ்ச நாள் மூணாம் க்ளாஸ் ஆசிரியரா வேலை பார்த்தேன் அந்த ஸ்கூல்ல ஒரு பொண்ணு எப்பவுமே ஹோம் ஒர்க் செய்யாம படிக்காம வரும் அப்போ பசங்க கிட்டயே என்ன தண்டனை கொடுக்கலாம்னு கேட்டப்போ ஒரு பொண்ணு ’எங்க பழைய டீச்சர் (இரண்டாம் க்ளாஸ்) மேல் சட்டையை கழட்டி இருட்டு அறைல அடைச்சி வைப்பாங்கன்னு’ சொன்னா கேட்கவே ரொம்ப கொடுமையா இருந்துச்சு.

கவிதா சொன்ன மாதிரி மன அழுத்தம் தான் இதுக்கெல்லாம் முக்கிய காரணம்னு தோணுது.

தமிழன்-கறுப்பி... said...

சீடியஸான விசயம்!
என்னதான் கண்டியுங்கள் என்று சொன்னதற்காக இப்படியா தண்டனைகள் கொடுப்பது ?

ச.பிரேம்குமார் said...

இதையெல்லாம் படிக்கும் போது ஒருவித பயம் மனதை கவ்விக் கொள்கிறது :(

eniasang said...

என் பிள்ளை 2ஆம் வகுப்பு படிக்கும் போது classஇல் teacher இல்லாத சமயம் பெல் அடித்து விட மொத்த classஉம் ஹோவென இரைச்சல் போட்டதிற்கு பிரம்பால் மொத்த class க்கும் அடி.principal இடம் போய் சொல்லி .....நான் டீச்சரிடமும் பேச அன்று முதல் அடி அந்த கிளாசில் இல்லை.
school going குழ்ந்தைகள் உள்ள அனைவரும் இது குறித்து சக பெற்றோருடன் பேசுங்கள்.டீச்சரிடமும் பேசுங்கள்.கண்டியுங்கள்.யாரையும் யாரும் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள்

Rithu`s Dad said...

அனைத்து பெற்றோர்களும் மிகவும் யோசிக்க வேண்டிய நிகழ்வு.. இன்னும் எத்துனை நிகழ்வுகல் இது போன்று நடக்கவேண்டும் நாம் விழித்துக்கொள்ள!!??


என் காலத்திலும் இது போன்று தண்டனைகள் உண்டு, உதாரனம் : மூங்கில் கம்பால் அடிப்பது, அடிக்கும் ஆசிரியர் ஆணோ பெண்ணோ - மாணவர்களுக்கு என்றால் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் அடி விழலாம், மாணவி என்றால் கையை திருப்பி, விரல்கள் மற்றும் முன் மணீக்கட்டு - என்று எழுதப்படாத ஒரு விதியில் அடி படலம் நடக்கும்.. அது இல்லாமல் வெயிலில் சுடும் மணலில் முட்டி போட விடுவதும் உண்டு..

எல்லாம் தவறை திருத்தாத / குறைக்க உதவாத தண்டனைகள் தான்.. !! இன்னும் தொடருகிறாது!!!

சந்தனமுல்லை said...

நேரம் எடுத்து வாசித்து, கருத்தை பதிந்த அனைவருக்கும் நன்றிகள்!