Friday, May 29, 2009

ஜமதக்னி

ஜமதக்னி - தாஸ் கேபிடலை தமிழில் மொழி பெயர்த்தவர். ஹிக்கின்பாதம்ஸ்-ல் டிஸ்பிளே பகுதியில் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்வார் பெரிம்மா, சென்னை சென்றுத் திரும்பும் தினங்களில்! என் ஆயாவின் சகோதரி லீலாவதியின் கணவர் - ஜம்தக்னி! இவரைப் பற்றிய சுவாரசியக் குறிப்பொன்று - ஆயாவின் தந்தை, விடுதலைப்போராட்டதில் கைதாகி ஜெயிலில் இருந்தபோது அதே ஜெயிலில் இருந்தவர் ஜம்தக்னி. ஜம்தக்னி பெரிய படிப்பாளி/ பட்டதாரி என்பதால் வேறு கிளாஸும், ஆயாவின் தந்தை C கிளாசிலும் இருந்திருக்கிறார்கள். உணவும் வேறு வேறு போல. C கிளாசில் இருப்பவர்களுக்கு சோளக்கஞ்சி/சோளக்களி. தாத்தாவிற்கு அது ஒவ்வாததினால், ஜமதக்னி தனது அரிசி உணவை தாத்தாவிற்குக் கொடுத்துவிட்டு, தாத்தாவின் உணவை எடுத்துக் கொள்வாராம். அப்போது லீலாவதி அம்மையார், 9 வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து அவரை தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு தாத்தாவிடம் உறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். விடுதலையான பின்பு அவ்வாறே திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார்!!

அவரது நாட்டுடமையாக்கப் பட்ட எழுத்துகளைப் பற்றிய பதிவினை RV-யின் தளத்தில் பார்த்தேன். பதிந்து வைக்கத் தோன்றியது!

பொதுவாக, இந்தத் தியாகிகளுக்கு இருந்த வேட்கையும், விழிப்பும் அவர்களது அடுத்தத் தலைமுறைக்கு இருந்ததா என்றால் சந்தேகமே! எங்கே தோல்வியுறுகிறார்கள் இவர்கள்?தமது அறிவைக் கடத்துவதிலும், தொலைநோக்கு சிந்தனை இல்லாமையும், கல்வியறிவுக் குறித்த சிந்தனையற்றிருப்பதும்?!(சுயநலமாக இருக்கத் தவறியதன் விளைவு என்றும் கொள்ளலாம்!) பெரும்பாலான தியாகிகளின் குடும்பங்களில் இந்தநிலையைக் காணலாம். தூத்துகுடியில் சாலையோரத்தில் வசித்துவந்த கப்பலோட்டிய தமிழனின் வாரிசுகள் - அனைவருக்கும் தெரிந்த உதாரணம். வாழ்வாதாரங்களுக்காகவும், தகவமைத்துக் கொள்வதுமே பெரும் சவாலாக இருக்கிறது பல தியாகிகளின் வாரிசுகளுக்கு! சில தியாகிகளின் வாரிசுகள் நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!

பி.கு : இப்படியாக கணினிக் கற்றுக் கொண்ட பெரிம்மா, இப்போது பின்னூட்டம் போடுமளவிற்கு
வந்திருக்கிறார்கள்! ;-)

18 comments:

தமிழ் பிரியன் said...

என்ன சொல்வது?... :( உலக அறிவை தமது சந்ததிகளுக்கு சொல்லித் தருவதில் தோல்வி அடைந்து விட்டார்கள் என்றா?

ஆயில்யன் said...

உறவுகள் பத்தி கிளியரா சொல்லியிருக்கலாம்ல அங்க போயிட்டு வந்தா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிடுச்சு அதை நான்
முதல்ல ஏன்னு கேக்குறேன்?

ஆயில்யன் said...

//நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!
//

:((

ச.முத்துவேல் said...

/என் ஆயாவின் சகோதரி லீலாவதி/

பெருமைக்குரிய லீலாவதி அம்மையாரின் உறவு நீங்கள் என அறிகையில் ஒரு மகிழ்ச்சி.

ஆகாய நதி said...

நீங்கள் கூறுவது போல் இப்போது தியாகிகளின் வாரிசுகளும் சரி, மன்னர் குடும்ப வாரிசுகளும் சரி பெரும்பாலானோர் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதாக ஒரு மாத இதழில் படித்திருக்கிறேன்...

:((((

ஜமதக்னி ஏதோ ஒரு வகையில் உங்கள் குடும்பத்துடன் நட்பு பாராட்டியது உண்மையில் பெருமைக்குரிய விஷயமே!

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ்பிரியன் அண்ணா, ஹ்ம்ம்ம் வேறு என்ன சொல்வது?!!


நன்றி ஆயில்ஸ், சாதாரணமா சொன்னேன்..ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலை!! :-)))


நன்றி ச.முத்துவேல்!

நன்றி ஆகாயநதி, //ஏதோ ஒரு வகையில் உங்கள் குடும்பத்துடன் நட்பு பாராட்டியது // என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் எங்கள் உறவினர்! ;-)

Deepa said...

நல்ல பதிவு. ஜமதக்னி அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

குடுகுடுப்பை said...

அவரவர் வாரிசுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கிறது, தியாகி வாரிசுக்கு தியாகி பட்டம் மட்டும்.

நசரேயன் said...

//சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!//

வருத்தப்படுவதை தவிர வேறு வழி இல்லை

நா. கணேசன் said...

தகவலுக்கு நன்றி!

மாதவராஜ் said...

சுருக்கமாக இருந்தாலும் சிறப்பான பதிவு.
/சில தியாகிகளின் வாரிசுகள் நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!//

உண்மைதான்

தீஷு said...

//சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!
//

வாரிசுகள் மட்டும் இல்லை முல்லை. சில தியாகிகளே முதுமையில் வறுமையில் வாடுகிறார்கள். மாதம் தோறும் கிடைக்கும் சொற்ப தியாகிகள் பணத்தில் காலம் தள்ளுகின்றனர். கொடுமை!!!!

Sukumar Swaminathan said...

வாழ்த்துக்கள்... உங்களது இந்த பதிவு குட் ப்ளாக் ஆக யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறது....

jackiesekar said...

பொதுவாக, இந்தத் தியாகிகளுக்கு இருந்த வேட்கையும், விழிப்பும் அவர்களது அடுத்தத் தலைமுறைக்கு இருந்ததா என்றால் சந்தேகமே! எங்கே தோல்வியுறுகிறார்கள் இவர்கள்?//

தெரியவில்லை அந்த தோல்வி ஒற்றுமையின்மையில் ஆரம்பிக்கின்றது

கானா பிரபா said...

//நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!//

:(

velji said...

நேரு குடும்பம் தவிர வேறு யார் 'லைம் லைட்டில்' இருக்கிறார்கள்?! வாரிசுகள் அரசியல் கற்றிருக்கவில்லை..தியாகிகள் வாரிசு அரசியல் கற்கவில்லை!

naathaari said...

அதானே பார்த்தேன்
"ஜமதக்னி"யின் லேசான காற்று உங்கள் பக்கமும் அடிக்கிறது

ஆகாய நதி said...

//
என் ஆயாவின் சகோதரி லீலாவதியின் கணவர் - ஜம்தக்னி!
//

மன்னிக்கவும் முல்லை :(

ஆயா என்றால் பாட்டி என்று இப்போது தான் தெரிந்துகொண்டேன்.. :(

அதன் பொருள் புரியாமல் தான் உங்களோடு நெருங்கிய நட்பு பாராட்டினார் என்று கூறிவிட்டேன் :)