Monday, May 11, 2009

குட் டச்/பேட் டச் - கருத்துரையாடல்!

1.private part-public part எது private part/public part என்று தெரியப்படுத்தவேண்டும். எதையெல்லாம் பொது இடத்தில் நாம் தொட முடியுமோ அது public part, எவையெல்லாம் தொடமுடியாதவையோ அது private part. சில சமயங்களில், அம்மாவோ அல்லது சீனியர் அம்மாவான ஆயாவோ அவர்கள் மட்டுமே தொட அனுமதி உண்டு. ஒரு சில சமயங்களில் மருத்துவர் மட்டுமே!

2. கண்,காது, மூக்கு என்று உடலின் பாகங்களை கற்றுக்கொண்டு சொல்ல முற்படும்போதே, vagina,penis என்றும் சொல்லிக்கொடுக்க வேண்டும். யாராவது அவர்களை தொட முற்படுவாராயின், ”அம்மாக்கிட்டே வந்துச் சொல்லு” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு சிறார்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே நல்ல bonding, நாம் பெற்றோரிடம் இதைக் குறித்துப் பேசலாம் என்ற நம் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

3. எதையெல்லாம் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் முன்னால் செய்ய மாட்டீர்களோ அதையெல்லாம் குழந்தைமுன் செய்யாதீர்கள்.

4. குழந்தைகளுக்கு விலங்குகள் கதைகள் மூலம் விஷயத்தை விளக்க முயலுங்கள். “ஒரு கெட்ட டினோசர் இருந்துச்சா, அது வந்து நல்ல டினோசரோட private part ஐ தொட்டுடுச்சாம்” - டாக்டர்.ஷாலினி சொன்னதிலிருந்து...


5. குழந்தைகளுக்கு உண்மையை சொல்லி பழகுங்கள். உம்மாச்சிக்கிட்டேயிருந்து வந்தே, பிடிச்சு வச்சதுலெர்ந்து குழந்தை வந்தது - நோ நோ! நாய் mating பற்றிக் கேட்டால் கூட
லேசாக சொல்லிவிட்டு டைவர்ட் செய்யலாம், எந்த வயதுக் குழந்தை என்பதைப் பொறுத்து.அதே போல், “சுச்சூ போ, மம்மு சாப்பிடு” என்பதெல்லாம். குழந்தைகள் அதைச் சொல்லவதில்லை, உண்மையில் அது நமது vocabulary.


6. அடிக்கடி நாம் இதைப்பற்றிப் பேசி ஒரு curiosity உண்டாக்கிவிட கூடும். எனவே, அவ்வப்போது, கதைகள் மூலமாக, டீவி-யில் வருவதைக்காட்டி கோடிட்டுக் காட்டினாலே போதும். குழந்தைகள் புரிந்துக் கொள்வர்.

7. ஆண் குழந்தைகள் உடல்ரீதியாக வயதுக்கு வருதலையும் நாம் கொண்டாட வேண்டும்.
அவர்களுக்குத்தான் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை...அப்பா உட்பட! அதேபோல் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் அப்பாக்கள் பெண் குழந்தைகளை குளிப்பாட்டுதலை தவிர்க்கலாம்.

8. நமது கவனத்தை தேவையான அளவுக்கு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். (தேவையான அளவு என்பது எதுவரை?!) வேறு எங்காவது அதுபோன்ற கவனம் அவர்களுக்குக் கிடைக்கும்போது, சில சமயங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் ஒரு அளவுக்கு மேல் வளர்ந்தப் பின், கட்டியணைத்தோ அல்லது உடல்தொடுகைகள் மூலம் அன்பைக் காட்டுவதும் தவறு. Give them the enough attention they need.

9. abuse-க்கு ஆளாவது பெண் குழந்தைகள் மட்டுமே என்பதும் தவறான எண்ணம். ஆண் குழந்தைகளும் அதற்கு இலக்காகிறார்கள். அதேபோல், abuse செய்பவர்களும் ஆண்கள் மட்டுமே என்பதும் தவறானதுதானாம்.பெண்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களது எண்ணிக்கைக் குறைவு.

10. unconditional love - நீ தவறு செய்தால் பேசமாட்டேன் என்பதுபோல் இல்லாமல், நீ எப்படி இருந்தாலும் உன் மேல் அன்பாக இருப்பேன் என்று குழந்தைகளுக்கு உணர்த்துவது அவசியம். மேலும், தவறு செய்யும்போதும் ஓரிரு முறைகள் மன்னித்து விடுவதும் நல்லது!

என் சின்னஞ்சிறு மூளைக்குள் ஏறியது இவ்வளவுதான். ஆனால் டாக்டர்.ஷாலினி பேசியதும், டாக்டர்.ருத்ரனின் கலந்துரையாடல்களும் இதைவிட பன்மடங்கு அதிகம். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக பயனுள்ள முறையில் அமைந்தது. அமித்து அம்மா, வித்யா, தீபா, ரம்யா (பதிவர் சார்பில் பொன்னாடை அணிவித்தார்), கிருத்திகா, உமாஷக்தி மற்றும் பல பெண் பதிவர்கள் வந்திருந்தனர். டோண்டு, லக்கி, அதிஷா, நர்சிம் இவர்களை அடையாளம் காண முடிந்தது(I think I could spot ஆதி/தாமிரா), நேரமின்மைக் காரணமாக நன்றித் தெரிவிக்கக் கூட இயலவில்லை. மன்னிக்கவும், ஏற்பாடு செய்த அனைவருக்கும், இடம் கொடுத்துதவிய கிழக்குப் பதிப்பத்தாருக்கும் நன்றிகள்! வழங்கப்பட்ட snack/coffee காகவும் நன்றிகள்! டாக்டர்.ஷாலினியை, இந்த கருத்தரங்கிற்கு அழைக்க முதல்முயற்சியெடுத்த SK/குமாருக்கு நன்றிகள்! இந்த உரையாடல் விரைவில் ஒலிக்கோப்பாக பதியப்படலாம்.

38 comments:

தமிழ் பிரியன் said...

கண்டிப்பாக கலந்து கொண்டிருக்க வேண்டிய கலந்துரையாடல்.. ஒலிக் கோப்பு வந்ததும் கண்டிப்பாக கேட்க வேண்டும்.

Suresh said...

வாழ்த்துகள் நல்ல விஷியம், நல்ல பதிவு, நேரில் கல்ந்து கொண்டது போல் இருந்தது... வாழ்த்துகள் டீம்க்கு

ஆயில்யன் said...

முதன் முதலாய் சமூகம் தொடர்பான எல்லோரும் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய விசயங்களை பற்றிய ஒரு நிகழ்ச்சியினை பதிவர்கள் ஒருங்கிணைத்து வெற்றிகரமாய் நடத்திமுடித்தமைக்கு நன்றிகளும்...! மேலும் இது போன்ற சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் நிறைய நடைபெற ஊக்கத்தினையும் அமைந்து தந்தமைக்கு வாழ்த்துக்களும்...!

வண்ணத்துபூச்சியார் said...

வெளியூர் சென்று விட்டதால் வர இயலவில்லை.

பகிர்விற்கு நன்றி.

ச.பிரேம்குமார் said...

கலந்துரையாடலில் பங்கு பெற்ற மற்றும் நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்

//ஆண் குழந்தைகள் உடல்ரீதியாக வயதுக்கு வருதலையும் நாம் கொண்டாட வேண்டும்.
அவர்களுக்குத்தான் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை...அப்பா உட்பட//

மிகச்சரி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிகழ்ச்சி நல்லபடி நடந்தது அறிந்து மகிழ்ச்சி..நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவர் பதிவும் படித்து பல விசயங்களை அறிந்துகொள்கிறோம்.. நன்றி.. முல்லை.

புதுகைத் தென்றல் said...

கருத்தரங்கின் சாரம்சத்தை அழகாக கொடுத்திருக்கீங்க.

விரிவான பதிவுக்கு வெயிட்டிங்.
நன்றி

வல்லிசிம்ஹன் said...

முல்லை, என்னால் வரமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வீட்டுக்கு வெகு அருகில்!!
நீங்கள் சொல்லி இருப்பயது அனைத்தும் சிறு குழந்தைகளில் இருந்து பதின்ம வயதுக் குழந்தைகள் வரை அனைவருக்கும் பயன்படும். அதெ சமயம் நல்லா மனைதர்களின் அரவணைப்பும் குழந்தைகளுக்கு வேன்டும். வெளிநாட்டில் நாம் ஒரு குட்டிக் குழந்தையைக் கூடத் தொடமுடியாது ,கொஞ்வச முடியாது.என் பெண் ணிடம் அந்தக் குழந்தையைப் பாரேன் எத்தனை ஸ்வீட்டா இருக்குன்னு சொன்னா,அம்மா ஸ்டேர் பண்ணாதேன்னு பல்லைக் கடிப்பாள்:)
அத்தனை மும்முரம் அந்த ஊர்ல விழிப்புணர்வு.

ஆகாய நதி said...

ம்ம்ம்ம்... நான் நேரில் வந்திருந்தால் கூட இது பற்றி இவ்வளவு கேட்டிருப்பேனா தெரியவில்லை :)

மக்கள்ஸ் போட்டு எழுதித் தாக்கிட்டீங்க!

டோண்டு ராகவன், நர்சிம், நீங்கள் என்று எல்லோரும் என்னைப் போல் வர இயலாத பெற்றோருக்கு உதவியமைக்கு நன்றி!நன்றி நன்றி!

ஆண்குழந்தைகளுக்கும் தாய் சொல்லிக்கொடுக்கலாம் தவறில்லை... பக்குவமாக எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லிவிட வேண்டும் விவரம் தெரியும் முதலில் இருந்தே!

அமுதா said...

நன்றி முல்லை. வர இயாலாததால் மிஸ் பண்ணியவற்றை இது போன்ற பதிவுகள் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகாக பகிர்ந்தளித்தீர்கள் முல்லை

பயனுள்ள சந்திப்பு

குடந்தைஅன்புமணி said...

thநல்லவிசயங்கள் நடந்தேறியிருக்கிறது. நிச்சயமாக ஒலிக்கோப்பை பதியுங்கள்.தங்களின் தொகுப்புக்கு நன்றி! நிக்ழ்ச்சியை ஏற்பாடுசெய்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி!

RAMYA said...

சகோதரி முல்லை! அங்கே என்னென்ன கேட்டோமோ, எதை எதை நான் மறுபடியும் அசை போட்டேனோ,அதை ஒன்று விடாமல் பதிவேற்றி இருக்கின்றீர்கள். உங்கள் நினைவு சக்திக்கு ஒரு சபாஷ்.

ஒவ்வொரு பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, மிகத் தெளிவாக அவர்களும் கூறினார்கள், கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு நீங்க அருமையா, தெளிவா கூறி இருக்கின்றீர்கள்.

வர முடியாமல் போன சகோதர்களே மற்றும் சகோதரிகளே! நம் சகோதரி முல்லை எழுதி இருப்பதை படித்தாலே நேரில் வந்து கலந்து கொண்ட நிறைவை உங்களுக்கு கண்டிப்பாகக் கொடுக்கும்.

நன்றி சகோதரி முல்லை!!

குசும்பன் said...

அருமையாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க!

வித்யா said...

பயனுள்ள சந்திப்பு முல்லை:)

Sasirekha Ramachandran said...

//குழந்தைகளுக்கு உண்மையை சொல்லி பழகுங்கள். உம்மாச்சிக்கிட்டேயிருந்து வந்தே, பிடிச்சு வச்சதுலெர்ந்து குழந்தை வந்தது - நோ நோ! நாய் mating பற்றிக் கேட்டால் கூட
லேசாக சொல்லிவிட்டு டைவர்ட் செய்யலாம், எந்த வயதுக் குழந்தை என்பதைப் பொறுத்து.அதே போல், “சுச்சூ போ, மம்மு சாப்பிடு” என்பதெல்லாம். குழந்தைகள் அதைச் சொல்லவதில்லை, உண்மையில் அது நமது vocabulary. //

இது எனக்குப் புரியவே இல்ல...:(


கதை மூலமாக குழந்தைகளுக்கு இவற்றைப் பற்றி கற்றுக் கொடுத்தல் என்பது மிகவும் உபயோகமான ஒன்றுதான்.ஆனால் நான் எந்த அளவிற்கு effective ஆக கதை சொல்லப் போகிறேன் என்றுதான் தெரிய வில்லை..:(((

அக்கா,ஆடியோவை சீக்ரம் publish பண்ணுங்க...waiting eagerly for that.

Deepa said...

மிக்க நன்றி முல்லை. அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். கண்டிப்பாக refer செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

தெளிவாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் முல்லை. நன்றி.

ஐந்தினை said...

சூப்பருங்க...

jackiesekar said...

நல்ல கவரெஜ் கறிப்பெடுக்காமல் இவ்வளவு என்றால் அப்ப அது சின்ன மூளையா????
நன்றி
ஜாக்கிசேகர் அங்கு எடுக்கப்ட்ட புகைப்படங்கள் பார்க்க இங்கே சென்று பார்க்கவும்http://jackiesekar.blogspot.com/2009/05/blog-post_10.html

அன்புடன் அருணா said...

நன்றிம்மா. வர இயாலாததால் மிஸ் பண்ணியவற்றை இது போன்ற பதிவுகள் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி வர முடியவில்லையே என்று வருத்தமும் உண்டு.....
அன்புடன் அருணா

மணிநரேன் said...

நன்றாக தொகுத்துள்ளீர்கள்.

"அகநாழிகை" said...

எதையும் விட்டுவிடாத சுருக்கமாகவும், தெளிவானதுமான பதிவு.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அபி அப்பா said...

அருமையான பதிவு! இன்னும் கொஞ்சம் விளக்கமாக இருந்திருக்கலாம்! யாராவது நிச்சயமா வீடியோ எடுத்து இருப்பார்கள்! அதை போட முடியுமா!

நசரேயன் said...

பயனுள்ள தகவல், பகிர்ந்து அளித்தமைக்கு நன்றி

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

நன்றி சந்தன முல்லை இதுபோல குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய காலம் வந்ததே என் நாம் நொந்துகொள்ள வெண்டியுள்ளது.காலம் இப்படி கெட்டுப் போய்விட்டமைக்கு நாகரிகம் வளர்ந்ததுதான் காரணமா? நம் கல்விமுறையில் ஏதோ குறைவதாக உணர்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

மிக அழகாக நிகழ்வின் கருத்துகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் தந்திருக்கிறீர்கள்.

நீங்கள் நினைப்பது சரிதான். (தொப்பையை வைத்து கார்க்கியையும், அவரது பக்கத்தில் நின்றிருந்ததால் என்னையும்) அடையாளம் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். முடிவில் தோழியருடன் சிறு அறிமுகம் செய்துகொண்டோம். அதற்குள் நீங்கள் கிளம்பிவிட்டீர்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

//முடிவில் தோழியருடன் சிறு அறிமுகம் செய்துகொண்டோம். அதற்குள் நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் //

நீங்கள் சென்ற பிறகுதான் நீங்களும் வந்திருந்தது பற்றி சகோதரிகள் என்னிடமும்,தாமிராவிடமும் சொன்னார்கள். நீங்கள் வந்திருந்தும் ஒரு வார்த்தைகூட உங்களிடம் பேசமுடியாமல் போனது வருத்தமே :(

மாதவராஜ் said...

கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்த்தை உங்கள் தொகுப்பு உணர்த்துகிறது. நிச்சயமாய் அர்த்தமுள்ள கருத்தரங்கம். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.

கவிதா | Kavitha said...

இது போன்ற நிகழ்ச்சிகளை ஏன் பள்ளிகளில் நடத்தக்கூடாது?!! ஆசிரியர்களுக்கு மட்டுமே தனியாக நடத்தினால் நன்றாக இருக்குமே. அம்மா, அப்பாவை விடவும் ஆசிரியர் இது போன்ற கருத்துரையாடல்களில் கலந்து கொள்வதின் மூலம் எத்தனை மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள்.

சங்கே முழங்கு said...

நல்லதொரு விழிப்புணர்வு முகாம், பெற்றோர்கள் சார்பில் எமது நன்றிகள் உங்கள் அனைவருக்கும்

KRICONS said...

வாழ்த்துகள் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது

குடுகுடுப்பை said...

நான் இந்தக்கலந்துரையாடல் படித்த உடன் ரொம்பதான் குழம்பி போய் உள்ளேன்.

மூன்றாவது வகுப்பு போகும் முன்னர் அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில சொல்லிக்கொடுத்துருவாங்களாம். அதுனால இப்ப நான் தேவையில்லாமல் எதுவும் உளர வேண்டாம் என்றிருக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

நல்ல முறையில் பதிவு செய்துள்ளீர்கள்.

ஒளி/ஒலி வடிவம் கிடைத்தால் இன்னும் பயன் பெறலாம்.

நன்றி சகோதரி.

SK said...

புள்ளி புள்ளியா விவரம் எழுதினதுக்கு நன்றி.

திருமதி. கவிதா,

நிச்சயம் நடத்தலாம். நடத்தனும். எங்கே ஆரம்பிப்பத்து என்று தான் யோசனை. உங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால் தெரிய படுத்தவும். இதை என் பதிவிலும் குறிப்புட்டுளேன்.

" உழவன் " " Uzhavan " said...

ஆமாங்க ரொம்ப பயனுள்ள கலந்துரையாடல். அந்த ஞாயிற்றுக்கிழமை பயனுள்ளதாக அமைந்தது.

அன்புடன்
உழவன்

விக்னேஷ்வரி said...

ரொம்ப பயனுள்ளதா இருந்திருக்கும் போல இருக்கே. நல்ல தொகுப்பு முல்லை.

பொன்ஸ்~~Poorna said...

இதை ஏன் அம்மாக்களின் வலைப்பூவில் போடாம விட்டுட்டீங்க!