Friday, May 22, 2009

ஆ ஃபார்...

ஆச்சி...வீட்டில் எனது செல்லப் பெயர்! ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் இந்தப் பெயரில் என்னை யாரும் அழைத்திருக்க வில்லை.ஆனால் மேனிலைப் பள்ளியில் ஆச்சி என்றுதான் பலரும் அறிவர். பெரும்பாலான ஆசிரியர்கள எனது சின்னவயதிலிருந்து அறிந்ததால் இருக்கலாம். ஆனால் வகுப்பறையில் முல்லைதான்! ஆச்சி என்ற இந்தப் பெயர் சிறியவயதில் ஒரு தொல்லையாகவே இருந்தது. அப்போதெல்லாம் திட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் தெரியாதே..பெயரை வைத்துத் தானே திட்டுவோம்!! விஜி பஜ்ஜி, புகழேந்தி..புழு, ராஜா கூஜா, பிரேமா கிரேமா..இப்படி அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, டீ ஆர் பாணியில் !!அதில் ”ஆச்சி..பூச்சி”யாக்கப்பட்டுவிடும் வெகு எளிதில்!!

கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்து இருக்காது, ஆனால் நமக்கென்று இருக்கும் ஒரு க்ளோஸ்ட் க்ரூப் மட்டும் அறிந்திருக்கும்..ஆனால் ஒரு சில நேரங்களில்தான் இந்தப் பெயர் உபயோகத்துக்கு வரும்.புதிதாகக் கேள்விப்படுபவர்களுக்கு பெயர் விளக்கம் சொல்லனும். தானாகத் தெரியாது, ப்ரெண்ட்சை வீட்டுக் அழைத்துவரும்போது தெரிந்துவிடும்!!
கல்லூரித் தோழிகள் வீட்டுக்கு வந்தால் அப்படியே மாறி விடுவார்கள், நமதுக் குடும்பத்தில் ஒருவரைப் போலவே! ஆச்சியென்றே அழைப்பது, நாம் யாரை என்ன உறவு வைத்துக் கூப்பிடுகிறோமோ அவ்வாறே அவர்களும் அழைப்பது!! கொஞ்சம் ஓவராத் தான் இருக்கும்! எல்லாம ரொம்ப பவ்யமாக இருப்பதுபோல சீனுக்காகத் தான்! அதில், லதா கொஞ்சம் அதிகமாகப் போய், பெரிம்மா காலில் வேறு விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்! (அசத்துவதாக நினைத்து செய்தாள் என்று நினைக்கிறேன்!அதுவுமில்லாம கால்ல விழுந்தா கண்டிப்பா காசுக் கொடுப்பாங்க வேற!) ஆனால் பெரிம்மா, ”கால்ல விழுந்தாத்தான் எங்க ஆசீர்வாதம்னு இல்லம்மா, எப்போவும் உங்களுக்கு எங்க ஆசீர்வாதம் இருக்கும்னு ”சொல்லிட்டாங்க! (ஹிஹி..நோ காசு!)அதுவும் இல்லாம க்ளோஸ் ப்ரெண்ட்சை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வர்றது பெரிய சந்தோஷம். ஒரு தடவை கூப்பிட்டுப் போனா போதும், எல்லா லெட்டர்லேயும் இவங்களை அவங்க நலம் விசாரிப்பாங்க,அவங்க இவங்களை நலம் விசாரிப்பாங்க, நமக்கு நாம யாரோட குடும்பம்னு ஒரு குழப்பமே வந்துடும்! நமக்கு வர்ற போன்கால்ல இவங்க வந்து ரெண்டு வார்த்தை வேற பேசிட்டு போவாங்க!! நமக்கும் அவங்க வீட்டுலேர்ந்து இதே கவனிப்புதான்! இப்படி ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறேன்னுதான் திண்டுக்கல், உடுமலைப்பேடை,ராமேஸ்வரம், கோயமுத்தூர்ன்னு சுத்தினதெல்லாம்! இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்! ஹ்ம்ம்....ப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் இருந்தாலும் வீட்டுலே யாரும் இல்ல!!


அ ஃபார் ....

25 comments:

ஆயில்யன் said...

ஆ ஃபார் ஆச்சி !

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//கால்ல விழுந்தாத்தான் எங்க ஆசீர்வாதம்னு இல்லம்மா, எப்போவும் உங்களுக்கு எங்க ஆசீர்வாதம் இருக்கும்னு ”சொல்லிட்டாங்க! (ஹிஹி..நோ காசு!)//

ஆச்சி இது என்ன பெரிம்ம்மாவுக்கு வஞ்சபுகழ்ச்சியணியா????

இருக்காதுன்னு நினைக்கிறேன் இருந்தா பிரியாணி கட் ஆகிடும் ஆச்சி சாக்கிரதை :)))))

ஆயில்யன் said...

//ப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் இருந்தாலும் வீட்டுலே யாரும் இல்ல!! //


ஆச்சி எவ்ளோ பெரிய ஃபீலிங்க்ஸ்!

சிம்பிளா சொல்லிட்டீங்க பாருங்க!

:(

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

ஆச்சி ! வாழ்த்துக்கள்

G3 said...

//நமக்கு நாம யாரோட குடும்பம்னு ஒரு குழப்பமே வந்துடும்! //

ரிப்பீட்டே.. அது ஒரு தனி சுகம் :))))

தீஷு said...

ப்ரெண்ட்ஸ் நம்ம வீட்டில் வந்து சீன் போட்டு, நம்மல கெட்டவங்க ஆக்கிட்டு போயிடுவாங்க முல்லை. பசங்க ரொம்ப மோசம். க்ளாஸ்ல என்ன என்னமோ செய்வாங்க.. ஆனா நம்ம வீட்டில வந்து ஓவர் பவ்வியம் தான்.

மணிநரேன் said...

//க்ளோஸ் ப்ரெண்ட்சை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வர்றது பெரிய சந்தோஷம். ஒரு தடவை கூப்பிட்டுப் போனா போதும்...//

அதிலே இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்...

என்ன ஒன்று, சமயத்தில் இவர்கள் இரண்டு பேர்களும் சேர்ந்துக்கொண்டு நம்மை ஒருவழி செய்துவிடுவார்கள்..

எம்.எம்.அப்துல்லா said...

ஆச்சி எனக்கு ஓரே ஒரு சந்தேகம்!!??!

ஏன் நீங்க இன்னும் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு போகாம இருக்கீங்க??

சகாதேவன் said...

எல்லோருக்கும் சொல்றேன்,

ஆச்சி சொல்லைத் தட்டாதே.

சகாதேவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்!

பாலகுமாரன் நாவலுக்கு பிறகு நான் இந்த விட்டேத்தி ங்கற வார்த்தைய இஙக்தான் பார்க்கறேன்பா..

எவ்ளோ காலமாயிடுச்சு விட்டேத்தியா இருந்து!!! ம்ஹூம்

அது ஒரு காலம் கண்ணே கார்காலம்.

நல்லா பகிர்ந்துகிட்டீங்க

லத்தா - குத்தா
சபரி - குபரி
எங்கக்கா பசங்கள சண்டை போடும்போது இப்படித்தான் சொல்வேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

!!அதில் ”ஆச்சி..பூச்சி”யாக்கப்பட்டுவிடும் வெகு எளிதில்!!

haa haa haa

ஆயில்ஸ் அண்ணன் நோட் பண்ணிக்குங்க, நாள பின்ன நமக்கும் யூஸ் ஆகும் இது...

ராமலக்ஷ்மி said...

//அதில் ”ஆச்சி..பூச்சி”யாக்கப்பட்டுவிடும் வெகு எளிதில்!!//

:))! உண்டு உண்டு ஒரு லிஸ்டே..!!

மாதவராஜ் said...

வலையுலகத்தில் எனக்குப் பிடித்த முக்கியப் பதிவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்வேன்.

நினைவுத் தெறிப்புகள் ஊடே, வாழ்வை அழகாக்கும் புதிய உறவுகளை, அதைக் கொண்டாடும் மனிதர்களை, அவர்கள் மீது நம்மைச் சார்ந்தவர்களும் காட்டும் நாம்பிக்கையை மிக இயல்பாகச் சொல்ல முடிந்திருக்கிறது. மிக நுட்பமான விஷயங்கள் நிறைந்ததாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஆச்சி!

வித்யா said...

:)))

நசரேயன் said...

//எம்.எம்.அப்துல்லா said...

ஆச்சி எனக்கு ஓரே ஒரு சந்தேகம்!!??!

ஏன் நீங்க இன்னும் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு போகாம இருக்கீங்க??
//

நானும் மறுபடி ௬விக்கிறேன்

♫சோம்பேறி♫ said...

/*இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்! ஹ்ம்ம்....ப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் இருந்தாலும் வீட்டுலே யாரும் இல்ல!! */

ஏன் இல்லை. இதோ நான் இருக்கிறேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆச்சி .. பெரிம்மாவை விசாரிச்சதா சொல்லுங்க...;)

ஆகாய நதி said...

//
இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்!
//

:) ஹும் அதெல்லாம் ஒரு காலம்... இனிமே பொழிலன் ஃபிரெண்ட்ஸ்கு வெயிட்டிங் :))))

வெங்கிராஜா said...

அண்ணன் மாதவராஜ் அளவுக்கெல்லாம் எழுத நமக்கு அறிவு பத்தாதுங்க.. இப்பதான் உங்க தளத்துல பதிவெல்லாம் வாசிச்சுகிட்டிருக்கேன்.. நடை இயல்பா.. மெல்லிய நகைச்சுவையோட அருமையா இருக்குங்க..

லதானந்த் said...

நெம்ப நல்லா இருந்துச்சுங்க ஆச்சி!

நர்சிம் said...

Good one

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசித்தேன்.. கூடிய சீக்கிரம் நீங்க தேர்ந்த எழுத்தாளியா ஆயிடுவீங்கன்னு நினைக்கிறேன். (அப்போ, இப்போன்னு கேட்கக்கூடாது)

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்கீங்களா ஆச்சி

Deepa said...

ரொம்ப ரசித்தேன்!
:-)

ராஜா | KVR said...

//நாம் யாரை என்ன உறவு வைத்துக் கூப்பிடுகிறோமோ அவ்வாறே அவர்களும் அழைப்பது!!//

கல்லூரி வாழ்க்கையில் ஜகஜம் :-). இதுல ஒரு கொடுமை என்னன்னா 74ல பொறந்த ஒருத்தன் அவனை விட 2 வருஷம் சின்னவங்களா இருந்த என் அக்காவை "அக்கா"ன்னு கூப்பிட்டான். மண்டைல போட்டு பேர் சொல்லி கூப்பிட வச்சேன்.

//நமக்கு வர்ற போன்கால்ல இவங்க வந்து ரெண்டு வார்த்தை வேற பேசிட்டு போவாங்க!! //

ஃபோன்காலாவது பரவாயில்லை. எங்க ஹாஸ்டல்ல திடீர்ன்னு அப்பா வர்றாங்க அப்பா வர்றாங்கன்னு பசங்க கத்திக்கிட்டு ஓடி வருவானுங்க, பார்த்தா வர்றது எங்க அப்பாவா இருக்கும். இவங்களும் அவ்ளோ தூரம் பஸ் பிடிச்சு வந்து என்னோட வெறும் ரெண்டு நிமிஷம் மட்டும் பேசிட்டு அவனுங்க கூட கதை அடிச்சிக்கிட்டு இருப்பாங்க. திரும்ப போறப்போ என் ரூம் வாசல்லேயே நான் கை காட்டி அனுப்பிடுவேன், இவனுங்க பஸ் ஸ்டாப்ல போய் பஸ் ஏத்திவிட்டு தான் வருவானுங்க.