Monday, July 30, 2007

ஆசிரியர்களுக்காக....

மவுசை இப்படி பிடிங்க...
ஐயோ..இந்த விரல் பட்டன் மேல இருக்கனும்!! - மிரட்டலான தொனியில் நான்.

அந்த விரலால க்ளிக் பண்ணுங்க...
இல்ல...முதல்ல ஒழுங்கா மவுசை பிடிங்க..ம்ம்..இதோ..இப்படி.. - குரலை உயர்த்துகிறேன். அப்பதான் மனசில நிக்கும்.

ம்ஹம்..மேல..மானிட்டரை பாருங்க..மவுசை பிடிச்சுகிட்டே அந்த அம்பு எங்க இருக்குன்னு பாருங்க...எத்தனைதடவை சொல்லிகொடுத்தேன்..மறந்து மறந்து போயிடறீங்க! - சலிப்போடு!!

இப்போ.. ஈ ன்னு இருக்கு பாருங்க..அதை ரெண்டு தடவை க்ளிக் பண்ண்ணுங்க..

ம்ம்..உடனே உடனே பண்ணனும்..அப்பதான் ஓப்பன் ஆகும்!!

இல்ல..இருங்க..உங்க கைய பிடிச்சி நான் பண்றேன்..ப்பா..இது புரியலயா உங்களுக்கு!!
ம்ம்ஹீம்..ப்பா..உங்களுக்கு சொல்லி குடுக்கறதுக்குள்ள...சரி..இப்ப நீங்களே ஓப்பன் பண்ணுங்க..பார்க்கலாம். - மீண்டும் சலித்துக் கொள்கிறேன்.
பின்னே..ஒரு முறையா..இரு முறையா..!!

ம்ம்..ரெண்டு தடவை டக்டக்க்ன்னு க்ளிக் பண்ணாதான்..ஓப்பன் ஆகும்..எத்தனை தடவை சொல்றது??

ம்ம்..அப்பாடா..இதுதான் இன்டர்நெட் எகஸ்ப்ளோரர்....இதுலதான் வெப்சைட்-ல்லாம் ஓப்பன் ஆகும். இதோ..இங்க அந்த அம்புக்குறியை வைங்க பார்க்கலாம்..

ஹையோ..இப்பதானே சொல்லிகுடுத்தேன்..எனக்குத் தெரியாது..நீங்களே பண்ணுங்க..

சரி..இதான் கடைசி..இனிமே மவுசை எப்படி நகர்த்தனும்னு சொல்ல மாட்டேன்!! - கோபம் வருகிறது எனக்கு!

ம்ம்..இதுல..டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் யாஹு டாட் காம் ன்னு டைப் பண்ணுங்க..ம்ம்..
(இவ்ளோ மெதுவா அடிச்சா அவ்ளோதான்..)

ஐயோ..அது கமா..டாட் போடனும்..ம்..அதான்!!

சரி..உங்க ஐடி என்ன..சொல்லுங்க..ம்ம்..அதை யூசர் ஐடி ன்னு இருக்கு இல்ல..அங்க டைப் பண்ணுங்க..

ம்ம்..ஓக்கே..பாஸ்வேர்டு டைப் பண்ணுங்க..சொல்லாதீங்க..பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்லக்கூடாது..

ம்ம்....ஹப்பா..என்டர் அழுத்துங்க..ஓக்கே..

உங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்கரதுக்குள்ள..அவ்ளோதான்...

- என் பெரிம்மாவுக்கு சமீபத்தில் கம்ப்யூட்டர் இயக்கக் கற்றுக்கொடுத்தபோது நடந்தது இது.

23 வருடங்களுக்கு முன் அந்த கைகள் எனக்கு அ..ஆ எழுதக் கற்றுக் கொடுத்தன..ஆனால் .அன்போடும்..
பொறுமையோடும் எத்தனையோ முறைகள் நான் தவறாய் எழுதியபோதும்!!

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்!!

11 comments:

கண்மணி/kanmani said...

நன்றி.நல்லாருக்கு ஆசிரியருக்கே ஆசிரியரான நிகழ்வு சந்தன முல்லை

P Aravindan said...

You write so very well. Very enjoyable reading.

P Aravindan said...

Very well written. Enjoyed reading.

P Aravindan said...

மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். சரளமான நடை. எனக்கு முதன்முதலில் என் மகன் சொல்லிக்கொடுத்தது ஞாபகம் வருகின்றது.

Yogi said...

என்னங்க ஒரேயடியா ரெண்டு மாசம் மூணு மாசம் லீவு போட்டுட்டுப் போயிர்றீங்க??

அமுதா said...

ஆசிரியர்களின் பொறுமை, அதுவும் primary class ஆசிரியர்களின் பொறுமை மிகப் பெரியது. பெரியவர்கள் சிறார்க்கு கற்றுக் கொடுக்கும் பொழுது உள்ள பொறுமை வியக்கத்தக்கது. ஏன், நாம் பெரியோர்க்கு கற்றுக் கொடுக்கும் பொழுது பொறுமை இழக்கிறோம்? யோசிக்க வேண்டிய விஷயம்...

லக்கிலுக் said...

நல்ல பதிவு.

மங்களூர் சிவா said...

:-))))

மகி said...

என் மகள் அவள் அம்மாவிற்கு கற்றுக்கொடுக்கும் போது ம்ம்ம்ம்ம்
”நல்லா மாட்டிக்கிட்டயா” நான் சொன்னது.
ஏன்னா அவங்க வீட்டுப்பாடம் சொல்லிகொடுக்கும் போது பண்ணின பாவத்திற்கு பதிலை.
”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”

Deepa said...

I really admire you Mullai.
எவ்ளோ பொறுமையா சொல்லிக் குடுத்திருக்கீங்க. அப்படியும் குற்ற உணர்ச்சி உங்களுக்கு.

நீங்கள் பதிவு செய்தது அப்படியே அந்தக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறது.

//23 வருடங்களுக்கு முன் அந்த கைகள் எனக்கு அ..ஆ எழுதக் கற்றுக் கொடுத்தன..ஆனால் .அன்போடும்..
பொறுமையோடும் எத்தனையோ முறைகள் நான் தவறாய் எழுதியபோதும்!!//

கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

’அம்மா! வாம்மா கம்ப்யூட்டர் கத்து தர்றேன்!’

அமிர்தவர்ஷினி அம்மா said...

ச்சான்ஸே இல்ல ஆச்சி