Wednesday, March 28, 2007

நான் ரசித்த சில காட்சிகள் - பருத்திவீரனிலிருந்து!!

திரைப்படங்களுக்குரிய எவ்வித பிரம்மாண்டங்களும் இல்லாமல் இயல்பாக நகரும் கதை, அதைவிட இயல்பான நடிப்பு மற்றும் பாத்திர தேர்வு, மனதை கவரும் இசை என எல்லாவித்திலும் என்னை ரசிக்க வைத்த படம். மிகவும் ரசித்த சில காட்சிகளை பதிந்துவைக்க நினைத்தேன்!!

இதோ..

திருவிழாவில் குஸ்தி வாத்தியாரை குத்திவிட்டதற்காக பருத்திவீரனையும், செவ்வாழையையும் ஜெயிலில் வத்திருப்பார்கள்.பருத்திவீரன் ஜெயிலில் கம்பி வழியாக கையைவிட்டு தேடி, ஒளித்துவத்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தேடி எடுப்பான்.
ஜெயில் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடமென காட்ட அந்த ஒரு காட்சி போதும்.

பருத்திவீரனை சந்தித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் முத்தழகை அவள் தாய் திட்டிக்கொண்டிருப்பாள். அப்போது, பொன்வண்ணனும் வருவார். "ஏன் சத்தம் போடற ?" என்றதும், "வீட்டுல ஒரு வேலயும் செய்யமாட்டேங்குது, சொன்ன பேச்சையும் கேக்கமாட்டேங்குது..துணி துவைக்கரதிலேருந்து தண்ணீ எடுக்கற வரக்கும் நானே செய்ய
வேண்டியிருக்குது" என்று மகளை தந்தையிடம் மறைக்கும் காட்சி!!

போலீஸ்காரனை கட்டிப்போட்டுவிட்டு வீரவசனம் பேசும் செவ்வாழை,
போலீஸின் டி.வி.ஸ் 50 யில் மேலும் கீழும் ரவுண்ட் வரும் குட்டிசாக்கு!

பச்சைக் குத்திகொண்டு, முத்தழகுவிடம் காட்டும்போது, "சாஞ்சிக்கலாமில்ல" என்று சொல்லும்
காட்சி !!

இவையெல்லாவற்றையும்விட, பின்னனி இசை...

அதுவும் மனதையுருக்கும் இந்த மெல்லிய இசை..


அடுத்ததாக, பருத்திவீரனின் 'நாசூக்கான' குரலில்..


படம் பார்த்து இரண்டு நாட்களான பின்னும், முத்தழகையும் வீரனையும்,பருத்தியூரையும் விட்டு வெளியே வரமுடியாதபடி செய்துவிட்டது.

(உண்மைக்கதை என்று அமீரின் பேட்டியில் படித்த ஞாபகம். ஆனால் அந்த க்ளைமாக்ஸ் மட்டும்
உண்மையாயிருக்கக் கூடாது என்று அடித்துக்கொள்கிறது மனம். )

No comments: