Thursday, October 18, 2007

இந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III

பாலி சாகு...இவருக்கு அறிமுகம் தேவையில்லை! நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்..!! இவரது ஒரிஜினல் பாடல்களை கேட்டால் உங்களுக்கே புரியும்..(காப்பி அடித்துதான்..)!
இவர் பாடகர் அல்ல..DJ..ரிமிக்ஸ் என்ற கான்செப்டை இந்தி இசையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்..இந்தி பாப் உலகை உயர்த்தியவர்..பாப் உலகின் முன்னோடி!

லூதியானாவில் பிறந்திருந்தாலும், இங்கிலாந்து வாழ் இந்தியர். ஆனாலும், அவரது வேர்களை தேடி இந்தியா வந்தவர். இந்திய பாரம்பரிய பஞ்சாப் பாங்ரா மீது இயல்பிலேயே நாட்டம்..ஒரிஜினல் பாங்ரா பாடல்கள் மட்டும் அல்லாது, இவரே பல ஆல்பங்களில் இசை கம்போஸ் செய்துள்ளார்.. இவரது ரீமிக்ஸ் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்..ஒரே பதிவில் இவரை பற்றி சொல்லிவிட முடியாது கண்டிப்பாக....சினிமாவில் அதிகபட்சமாக காதல், சந்தோஷம், துக்கம், இல்லையென்றால் ஏதாவது விழா/விசேஷங்களை வைத்து பாடல் காட்சிகள் அமையும்.ஆனால் வாழ்க்கை, இளம்பிராயத்து பிரச்சைனைகள்,
கனவுகள்..தத்துவம், மக்கள்,கலாச்சாரம், கவிதை..அரசியல்..இவை எல்லாவற்றையும்..இன்னும் பட்டியலிடாதவையும் கூட..பாப் ஆல்பங்களில் தொட்டிட முடியும்..வசீகரிக்கும் இசையின் துணையோடு!!


இந்த பாடலை கேட்டு பாருங்களேன்..இது கண்டிப்பாக தமிழுக்கு புதிதல்ல..ஆனால், உள்ளத்தை அள்ளித் தா வருவதற்க்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பே வந்து விட்டது..இவரது இந்த பாடல், எப்போது கேட்டாலும் உள்ளத்தை அள்ளும்.


Piche piche aaunda meri chal be na aaye

Mera Laung Gawacha - Bally Sagoo

Dil de pariyan aankh maar maar jande ve
milan main aayi tenu roti de khavane ve
roti de khavane veஇந்த பாடலும் நமக்கு புதிதல்ல என நினைக்கிறேன். விறுவிறுப்பான டான்ஸ்க்கு உத்திரவாதம்..
சில தாபாக்களில் கேட்கலாம். நம்ம ரேடியோகளில் பாப் இசையை ஊக்குவித்தால், அனைவரும் கேட்டு மகிழலாம்.இப்போழுது பாப் இசையே மங்கிக் கொண்டு வருகிறது.. இப்போவோ அப்போவோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பாப் உலகின் நிலை மாறலாம்.

Bally Sagoo - Aaja Nachle

1 comment:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஐயோ ஐயோ.. தவற விட்டுட்டனே.. இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காம இருந்த நாட்களிலே இவ்வளோ எழுதியிருக்கீங்களா? அதுவும் எனக்குப் பிடிச்ச & பெயர் மறந்து போன பாட்டுகளைப் பற்றி.. :O)

நீங்க போட்டிருக்கிறது தவிர எனக்கு இப்போதைக்கு ஞாபகமா இருக்கிறது:
- அமிதாப் 3 குட்டிசோட சேர்ந்து பாடுவாரே.. இர் பிர் பத்தே
- ஜுனூன் குழு பாட்டு
- நஸ்ரத் படே அலி கானுடைய ஒரு பாட்டு - காட்சியமைப்பு மட்டும் தான் ஞாபகமிருக்கு. ஊருக்கு வரும் பையன் ஒரு பெண்ணைக் காண்பான். (அவன் காயம் பட்டிருக்கிறதாயும் பெண் மருத்துவம் பார்க்கிற மாதிரியும் ஞாபகம்..வேறெதையும் போட்டு குழப்புறேனோ தெரியவில்லை)அவளுடைய கண்கள் மட்டுமே தெரிகிறது. அப்புறம் அந்தப் பெண்ணின் சகோதரகள்/உறவினர்கள் அடித்து விடுவார்கள்.. என்ன பாட்டென்டு சொல்லுங்களேன்? தேடுறேன் தேடுறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன்(அfரீன்/நfரீன் பாட்டு அல்ல)
- சுபா பாடிய வால்பாறை வட்டப்பாறை
- மேரி (மேரா?) இந்தியா
- அலிஷா பாடினவைகள்
- 3 பெண்கள் சேர்ந்து பாடுவாங்க.. ஒரு பாட்டுல வருங்காலம் என்று சொல்லி மனைவி பணி முடிந்து வீட்டுக்கு வர கணவன் பணிவிடை செய்வதாக காட்டியிருப்பார்கள். பெயர் மறந்து போச்!
- கடைசியா 'Chand' ஏதோ என்று ஒரு பாட்டு.. மெல்லிசை .. கொஞ்சம் chubbyயான ஆள் பாடுவார். again..பெயர் மறந்து போச்!

வீட்டே போய் ஆராய: http://www.dishant.com/pop-albums-index.html