Monday, October 08, 2007

கற்றது தமிழ்...

பிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு கஞ்சாக் கடத்தியதாக பொய்யாகக் குற்றசாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகிறார் ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரான பிரபாகர்.
காவல்துறையினரிடமிருந்து தப்பியோடி, வெளிமாநிலங்களில் சாதுக்களோடு அலைந்து திரிந்து நீண்ட முடி ம்ற்றும் வெட்டப்படாத தாடியுடன் உருமாறுகிறார். மீண்டும் சென்னை திரும்பும் பிரபாகர், அவரது இந்த நிலைக்குக் காரணமானவர்களைக் கொலைச் செய்கிறார்.
யுவான் சுவாங் கிடம் பத்தாயிரம் தருவதாக கூறி, அவரது தன்னிலை விளக்கத்தை ஒளிப்பதிவு செய்ய சொல்கிறார். அதில் சொல்லப்படுகிறது..அவரது சாவு துரத்தும் வாழ்க்கை..இளைம்பிராயம்...சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, பள்ளியிறுதி வரை விடுதியில் கழித்தது..தான் தமிழை தேர்ந்தெடுத்து படிக்க காரணமாய்ரிக்கும் அபிமான தமிழ் ஆசிரியர், பால்யத்தோழி ஆனந்தியிடம் ஈற்படும் ஈர்ப்பு...ஆனந்தியிடம் விட்டுப்போகும் கடிதத்தொடர்பு..ஒரு விலைமாதராக அவரைச் சந்திக்க நேர்ந்த அவலம்..தான் கொன்றவர்களின் விவரம்..


ஒளிநாடாவை சன் தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு, ஆனந்தியுடன் தான் வளர்ந்த வீட்டை காண அம்பாசமுத்திரத்திற்கு பயணப்படுகிறார். காவல்துறை அவரை கைது செய்யத் தேட தொடங்குகிறது....அம்பாசமுத்திரத்தில் கைதுச் செய்யப்படுகிறாரா பிரபாகர்..அவர்கள் இருவருக்கும் என்ன நேர்கிறது?

தயாரிப்பாளர்கள் பெயர் தவிர பெயர் மற்றும் படவிவரங்கள் அனைத்தும் தமிழிலேயே போடப்படுவது அருமை..படக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.

"என்ன சேரப்போறே?" என்ற கதாநாயகியின் கேள்விக்கு, தமிழ் படிக்கப்போவதாக சொல்கிறார் கதாநாயகன். உடனே "ஏன், மார்க் கம்மியா" என்ற கதாநாயகியின் கேள்வி "நச்".

"தட்டாமாலை சுத்தறது எனக்கு பிடிக்காது..ஆனா, எனக்கு பிடிக்குமா..ன்னு தெரியாம, பிடிச்சதா நெனைச்சு சுத்துவாரு. அவருக்கு அது பிடிச்சதானால, அதை நான் அவருக்கு சொல்லல!! " போன்ற கணங்கள்!!

கால் சென்டரில வேலை செய்பவரிடம் "உன் பேர் கௌசிக்..ஏன் உன் பேரை தாமஸ்ன்னு சொல்றே..என்பதும் 2000 வருஷத்து தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபாதான் சம்பளம்.ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பொட்டி, அதாண்டா கம்ப்யூட்டர் அதை படிச்சவனுக்கு 2 லட்சம் சம்பளம்..எப்படி எப்படி?? என்று கேட்பதும்...

நண்பனது சாப்ட்வேர் அலுவலகத்திற்குச் சென்று..."இவ்ளோ பெரிய ஆஃபிஸ், ஏ சி..உங்க எம். டி அமெரிக்காவுல உனக்கு வேற 2 லட்சம் சம்பளம்.." என்றுக் காட்டும் வியப்பு, நக்கல் தொனி..என்று...மிக நன்றாக நடித்திருக்கிறார் ஜீவா!

ஒப்பனை எதுவும் இல்லாமல், மிக எளியத் தோற்றத்தில், நம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண் போல அஞ்சலி."நெசமாத்தான் சொல்றியா?" என்று..நான்கு நார்த்தைகொருமுறைக் கேட்பதும்...இவரது அடையாளம்...மட்டுமல்ல..இன்னும் சிறிது நாட்களுக்கு நமது சானல்களுக்கும்தான்!

பின்னனி இசை..மற்றும் பாடல்கள்..நன்று!
தேடலின் இசையாய்.. இன்னும் ஒரு இரவு, துள்ளலின் இசையாய்..பற பற... பட்டாம்பூச்சி,
தனிமையின் இசையாய்..பறவையே எங்கு இருக்கிறாய்..!!

ஆனால் சில கொலைகள் மற்றும் வன்முறையை தவிர்த்திருக்கலாம்..!!

தமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா?

இங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ
மறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்?

- இது எனக்குள் எழுந்த கேள்விகள்!!

3 comments:

யோசிப்பவர் said...

படம் பார்த்து முடித்ததும், டைரக்டர் ராம் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்றுதான் எனக்குத் தோன்றியது. கதையும் அவ்வளவு சொதப்பல். காட்சிகளின் நீளம் அதிகம். எடிட்டர் வேலை செய்தாரா என்றே தெரியவில்லை

வே. இளஞ்செழியன் said...

ஏன், டாலர்களில் வந்தால்தான் ஊதியமா ... ம்ம்?? சமூகத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை, அதற்குக் காரணிகளாக விளங்கும் விபத்துகளை, மிகச்சிறப்பாகவே படம் சித்தரிக்கின்றது. பணம் உள்ள சிலருக்காக சமூகம் சுழல்கின்றது. இச்சூழலில் சிலர் (தற்குறிகள் உட்பட) பலனடைகின்றனர்; பலர் நசுங்கிப் போகின்றனர். பலனடைந்தோர் தங்களை ஏதோ அறிவாளிகள், திறமைசாலிகள் என்று நினைத்துக்கொள்வது கேவலம். நசீம் தலிப்பின் Fooled by Randomness என்ற நூல்தான் நினைவிற்கு வருகின்றது.

Lakshmi Sundar said...

// யோசிப்பவர் said...

படம் பார்த்து முடித்ததும், டைரக்டர் ராம் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்றுதான் எனக்குத் தோன்றியது. கதையும் அவ்வளவு சொதப்பல். காட்சிகளின் நீளம் அதிகம். எடிட்டர் வேலை செய்தாரா என்றே தெரியவில்லை

உங்களுடைய இந்த விமர்சனம் உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது.. அப்படி என்ன படத்தில் ராம் தவறாக காட்டியிருக்கிறார்? தமிழ் படித்து தமிழ் வாத்தியாராக வாழ ஆசைப்படும் ஒருவனுக்கு இந்த சமுதாயத்தில் நேரும் கசப்பான அனுபவங்களை தான் சொல்லி இருக்கிறார்.. இந்த கதைக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்க அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என எண்ணிப் பாருங்கள்.. நமிதாவையும் ரகசியவையும் வைத்து படம் எடுப்பவர்களுக்கு மத்தியில் இந்த ராம் ஒரு உன்னத படைப்பாளி தான்..

// சந்தன முல்லை..
தமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா?
ஒரு நல்ல போலீஸ் அதிகாரியை பார்த்து காவல் துறையில் சேர விருப்ப படுவது இல்லையா.. அது போலத்தான் தனக்கு பிடித்த தமிழ் வாத்தியாரை போல தான் வாழ வேண்டும் என்று விருப்பட்டு தமிழ் படித்து, பின்பிரபாகர் அதை காதலிக்க தொடங்கி இருப்பான்..
நம்மை போல software company ல் வேலை பார்த்து கொண்டு அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் வார இறுதியிலும் தமிழ் நாவல் படித்து கொண்டும் தமிழில் வலைபூக்கள் எழுதியும் வடிகால் அமைத்து கொள்ள பிரபாகருக்கு தெரியவில்லை.. அவன் தான் படித்த தமிழை தன் வாழ்க்கையோடு பிணைத்து கொண்டது தான் அவன் செய்த தவறு.. தமிழ் வாத்தியராக வேலை பார்த்து அந்த வருமானத்தில் வாழ நினைத்தவனுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் அவலங்கள் தான் அவன் மனநிலையை மாற்றி இருக்கிறது...

இங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ
மறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்?
உண்மை தான்.. நானும் ஒப்புக்கொள்கிறேன்..
அது யார் தவறு? தமிழின் தவறா?? இல்லை தமிழர்களின் தவறு..
அந்நிய நாடுகளில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என அவர்கள் கஷ்டப்பட்டு கண்டு பிடித்து கொண்டிருந்த போது, தமிழன் இங்கே தயிர் சதம் சாப்பிட்டுவிட்டு தம் கட்டி வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தான்..
அதன் விளைவு, இன்று அந்நிய நாடுகள் தரும் வேலையை பெற அவன் கண்டுபுடித்த டெக்னாலஜிகளை விழுந்து விழுந்து படித்து கொண்டுருக்கிறான்.. அதனால் இன்று அவனுக்கு தமிழும் பெரியதாக தெரியவில்லை.. தமிழ் படித்தவனுக்கும் பெரிய வாழ்க்கையுமில்லை..
இப்பவே இங்கே உள்ள மாணவர்கள் தமிழில் பாஸானால் போதும் என்று தமிழ் exam க்கு கிடைக்குற விடுமுறையில் கூட மற்ற எக்ஸாம் க்கு தான் படிக்கிறார்கள்.. இப்படியே போனால் இன்னும் 20 வருடம் கழித்து வரும் சமுதாயம் திருக்குறள் என்றால் என்ன என்று கேட்கும்?
அதற்காக உங்கள் குழந்தைகளை தமிழ் அசிரியராக்குங்கள் என்று நான் சொல்லவில்லை.. அவர்களுக்கு நம் மொழியின் இனிமையை அறிமுகம் செய்து வையுங்கள்.. அவர்கள் டாக்டர் ஆகட்டும் engineer ஆகட்டும் ஆனால் தமிழ் ஒரு அருமையான மொழி என்று அவர்கள் உணர்ந்துருக்க வேண்டும்..
இது தான் நம் தாய் மொழிக்கு இன்றைய சூழ்நிலையில் நம்மால் செய்ய முடிந்த கடைசி உதவி...

பி.கு : இப்படி எல்லாம் பேசுவதால் நன் ஒரு தமிழ் வாத்தியார் என்றோ இல்லை தமிழ் பட்டதாரி என்றோ என்ன வேண்டம்.. நானும் ஒரு சாப்ட்வேர் engineer தான்..