Monday, October 15, 2007

கற்றது கம்ப்யூட்டர்...

நான் ஏன் உனக்கு மெயில் டைப் செய்து எல்லாருக்கும் ஃபார்வர்டு பண்றேன்னா..உன் மெயில் ஐ.டி எனக்குத் தெரியாது. இது இப்படியே ஃபார்வ்ர்டு ஆகி என்னைக்காவது உன் கையில் வந்து சேரும்னுதான். நான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்னா...கஸ்டமர் முன்னாடி என் மானம் போச்சு..சொன்ன டெட் லைன்ல முடிக்க முடியல..அதானால என்ன.மானமே போச்சுன்னாலும், அடுத்த ப்ராஜ்கட்ட பார்க்க, ஆன்சைட் போறேன்.
இன்னும் நாலு வருஷத்தில, இந்த மெயில் நீ படிக்க நேர்ந்தா..பதில் போடு!

இந்த மெயில அனுப்பிட்டு, தூதரகத்துக்கு போலாம்னு கிளம்பறேன்...எங்க டேமெஜர் கூப்பிடறார்..என்னனு பார்த்தா, அந்த ப்ராஜ்கட் ஊத்தி மூடிட்டாங்களாம்..ஏன்னா, அமெரிக்கானோட வேலையெல்லாம் இந்தியனுக்குதான் போகுதுன்னு மக்கள் கலவரம் பண்றாங்களாம்..அதனால் அமெரிக்க அதிபர் H1B விசா-வை கட்டுப்ப்டுத்தி வச்சிருக்காராம்..ம்ம்..இந்த மாதிரி நேரத்தில நான் ஆன்சைட் கிளம்புனது..வேற என்ன..
என்னோட துரதிருஷடம்..!!

சரி..அதாவது போச்சுன்னு இன்னொரு ப்ராஜக்ட்-ல தூக்கி போட்டாங்க..2 வருஷம்...ஜப்பான் கஸ்டமர்....சரின்னு அங்க போனா..அவன்..ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்றானாம்..4 மணிநேரம் தான் தூக்கம்..அதுவும் lab-லயே படுத்து!! பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னு!!அது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-ல!!நான் அனுப்பின மெயில் உனக்கு கிடைச்சதான்..இல்ல..எனக்கே திரும்ப ஃபார்வ்ர்டு ஆகிடுச்சான்னும் தெரியல!!
அவன் மொழியும் புரியாம, சாப்பாடும் கிடைக்காம, அந்த ப்ராஜ்க்ட முடிச்சேன்! அங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசை வச்சு இங்க செட்டில் ஆகலாம்னு, கிடைச்ச ஏர்பஸ்-சை பிடிச்சி இங்க வந்தா....

முதல்ல ஒரு வாடகை வீட்ட பார்த்து குடியேறலாம்னு வீடு பார்க்கப் போனேன்..தெரியாம வீட்டு புரோக்கர் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது எப்ப்டை அவனுங்களுக்கு நம்ம மூஞ்சிய பார்த்தாலே தெரிஞ்சுடும் போல..என்ன...சாப்ட்வேர் எஞ்சினியரான்னான்.
ஆமான்னேன். எங்க வேலை பார்க்கற...TCS-ஆ...CTS-ஆ..விப்ரோ-வா..சத்யமா ன்னு கேட்டான். இவன் ஏன் இதையெல்லாம் கேட்கறான்னு மனசுல நெனச்சிகிட்டு..விப்ரோன்னு சொன்னேன். அப்போ ஒரு 30/35 வாங்குவியா..சரி..இந்த வீடுதான்..15ஆயிரம்
வாடகை..10மாசம் அட்வான்ஸ் ன்னு சொன்னான். இயோ..15ஆயிரமா...2 பெட்ரூம் வீடுதானே..ஏன் இவ்ளோன்னு 10 மாசம் அட்வான்ஸ் -ல்லம் அதிகம்ங்க..ன்னேன்.
யோவ்..35ஆயிரம் வாங்கறே..15ஆயிரம் வாடகை கொடுக்க மாட்டியான்னான் அவன்.
நான் எப்பங்க 35ஆயிரம் வாங்கறேன்ன்னு சொன்னேன்..என் சம்பளம் 25ஆயிரம்ரூபாதாங்க, எதுவாயிருந்தாலும் அவ்ளோ வாடகை கஷ்டங்கனேன்.இப்படி வீடு தேடி அலைஞ்சப்பதான் புரிஞ்சது..சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பேர்ல, மத்தவங்க எல்லாம் குளிர் காயரது..அதனால..எல்லா ரியல் எஸ்டேட்காரனையும் போட்டேன்.
அப்புறம்..பார்த்தா..departmant store..உளுந்து ஒரு கிலோ 30 ரூபான்னு வாங்கினது போய்..இப்போ கிலோ 98 ரூபா. அபுறம்..பால்..எலலா விலயும் ரெண்டு பங்கா இருக்கு! இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா..?சொல்லு..சொல்லு!!

ம்ம்..இல்ல சார்..- கருணாஸ் பயந்துகொண்டே!

ஏண்டா..எங்க அப்பா, ஒரு சாதரண கிளார்க். அவரு சம்பளத்துல என்னை +2 வரைக்கும் படிக்க வச்சாரு..கவர்மெண்ட் கோட்டால,BE படிச்சேன்..அதுக்கே அவரு கடன் வாங்கி..PFவாங்கின்னு கஷ்டப்பட்டாரு..எதுக்கு..நல்ல வேலைக்கு போனா, நாலு காசு
சம்பாரிக்கலாமேன்னு! அத முடிச்சு வெளில வந்தா அங்க படிச்ச பேசிக், ஃபோட்ரானு, கோபாலும் எங்கயும் வேலைக்கு ஆகல..நான் compiler design-la செய்ச ப்ராஜக்டயும் எவனும் மதிக்கல..மறுபடியும் ஒரு கோர்ஸ் படிச்சு, வாக்-இன் வாக்-இன்னா
ஏறி இறங்கி..ஒரு வேலைய வாங்குறதுக்குள்ள...தாவு தீர்ந்துடுச்சு!! வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான்!இதுகெல்லாம் என்ன காரணம்..சொல்லுடா..?

பே - கருணாஸ்!


இது நடுவில, எவனோ. என் மெயில ஹாக் செஞ்சு, ஆனந்திக்கு மெயில் ஃபார்வர்டு பண்றான்.
அத திரும்ப மீட்டு, நான் அவளை சந்திச்சேன்.அவளும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில HR-ஆ இருக்கா..20ஆயிரம் ரூபா சம்பளத்துல! அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன்.!! சரி..சரி..கேசட்டை குடு..நானே சன் டீ.வி ஆபிசிலே குடுத்திடறேன்.

ஓ..அப்படியா சார்..நீங்க செஞ்சதெல்லாம் கொலையா சார்..டாக்டருங்க சம்பாரிக்கலயா..இல்ல
சினிமாகாரங்கதான் லட்ச லட்சமா சம்பாரிக்கலயா..சாப்ட்வேர்-னாலதான்னு சொல்றது தப்புதான் சார்!! - கருணாஸ்.

டேய்..சொன்னத மட்டும் செய்..அந்த கேசட்ட மட்டும் குடுத்துட்டுக் கிளம்பு!!


கேசட் ஒளிபரப்பப்படுகிறது... மீதி பார்ட் -2இல்!!

இது ஒன் அண்ட் ஒன்லி ஜாலிக்காக!!

10 comments:

லக்ஷ்மி said...

நல்லா இருக்குங்க...

நந்தா said...

நல்லா இருக்குங்க.

வீடு வாடகை ஆட்டோ சார்ஜ் எல்லம் ஓ.கேதான்.

ஆனால் மளிகை ஐட்டம்ஸ் கூடவா சாஃப்ட்வேர்க் காரன்னுக்குன்னு தனி ரேட்ல விக்கிறான். அதுதான் உதைக்குது.

ஆனால் நீங்க சொல்ல வந்தது சூப்பர்.

கோபி(Gopi) said...

:-)))) நல்ல கற்பனை.. கதையை தொடருங்கள்.

//வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான்!இதுகெல்லாம் என்ன காரணம்..சொல்லுடா..?//

முக்கியமா வீட்டுக் கடனை (Housing Loan) விட்டுட்டீங்களே... அதையும் சேர்த்தா கையில ஒன்னுமே நிக்காது.

ரசிகன் said...

வாழ்த்துக்கள்.. நல்லாயிருந்தது.வாங்களேன் என் வீட்டுக்கு..நான் நாய்களிடம் த்னியா மாட்டின வீரக் கதையெல்லாம் சொல்லியிருக்கேன்.கண்டிப்பா,உங்க கருத்த சொல்லுங்களேன்..

Srikanth said...

Hilarious! And some of the points are really true... Software people are the once in truth, the victims :)

தேவ் | Dev said...

Hi, I wanted to put a post like this... The exact title on my mind..Nice work enjoyed reading it...Happy to say you have done a nice work

தேவ் | Dev said...

nandha,

maligai item ellaam ippo neraiya s/w companylley sodexho pass koduthuraanga athai avichu spencer maathiri kadiyilley thaan vaanga mudiyum angey obviousaa rate adhigam thaanae than normal provision stores

அசுரன் said...

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_23.html

Please read this and understand your Five digit salary and the welfare of Indian Masses is well connected in the negative sense.

The economy which gives the Minority yuppy people the luxory to enjoy is what depriving the vast majority of the people their fundamental needs.

Asuran

ஸ்ரீசரண் said...

பல்லுப் புடுங்க போனா software engineer னா சொத்தையே புடுங்குறாங்க

மங்களூர் சிவா said...

கற்றது தமிழ்க்கு எதிர் பதிவா.

நல்லா இருக்கு அடுத்த பகுதியும் படிச்சிட்டு வற்றேன்