நடுவுலே ஒரு சின்ன ஆக்டிவிட்டி பண்ணோம் - பப்புவுக்கு அந்த ஐடியா பிடிச்சிருந்ததாலே! பொதுவாவே பப்புவுக்கு 'ஐ ஸ்பை' (I Spy) புத்தகங்கள் பிடிக்கும். "அரை வட்டங்களை கண்டுபிடி" ன்னு ஒரு புத்தகம். நாம தினந்தோறும் பார்க்கிற காட்சிகளில் தெரியும் அரை வட்ட உருவங்களை கண்டுபிடிக்கிறதுதான். ரொம்ப எளிமையான புத்தகம்.

புத்தகம் முழுக்க இது மாதிரி படங்கள்தான். பப்புவுக்கு வடிவங்களை பத்தி கத்துக்கிறப்போ ரொம்ப யூஸ் ஆச்சு.
வெள்ளைத் தாளில் அரைவட்டம் வரைஞ்சுட்டு அந்த வடிவத்தை மட்டும் வெட்டி எடுத்துட்டு ஹாலோ பேப்பரை தருவேன். பப்புவுக்கு அரைவட்ட வடிவிலே என்ன தோணுதோ அதை பப்பு வரையணும்.

எடுத்துக்காட்டுக்கு, அரைவட்ட வடிவத்துக்கு கீழே கோடுகள் வரைஞ்சு இழுத்து காட்டினதும் 'நான் பண்றேன், நான் பண்றேன்"ன்னு ஆர்வக்குட்டியாகிட்டா!
இது வந்து தொட்டிலில் பாப்பா தூங்குது. ஒரு தூண் மட்டும் கொஞ்சம் தள்ளி இருக்கு. இது புக்லேயே இருந்த படம்தான்.
இது ஆந்தை. பப்பு ஒரு தப்பு பண்ணியிருக்கா. :) கண்டுபிடிங்க பார்ப்போம்!படங்களை வரைஞ்சதும் ஓட்டையிலே நூலைக் கோர்த்து முடிச்சு போட்டு புத்தகமாக்கிட்டாங்க, மேடம்.
தீபம் எரியுது. சுபம்!
( பெயிண்ட் பிரஷ்லே சரியா இருக்கு, ஆனா அப்லோட் செஞ்சதும் படங்கள் ஏன் ரொடேட் ஆகி தெரியுதுன்னு தெரியலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ப்லீஸ்)
10 comments:
Soopper Pappuma.
Brilliant.
நூல் கோர்த்த விதம் அழகு
ஆந்தைக்கு டெயிலா ?
//படங்களை வரைஞ்சதும் ஓட்டையிலே நூலைக் கோர்த்து முடிச்சு போட்டு புத்தகமாக்கிட்டாங்க//
ஆஹா இப்பவே புத்தகமாக்கியாச்சா ரைட்டு :)
இது ஆந்தை. பப்பு ஒரு தப்பு பண்ணியிருக்கா. :) கண்டுபிடிங்க பார்ப்போம்!//
ஆந்தைக்கு கண்ணாடி போடல?
ஆந்தை அரைவட்ட தலை உல்டாவா இருக்கு..
புத்தகமெல்லாம் போட்டாச்சு இப்பயே.. ஹூய்..;)
\\ஆஹா இப்பவே புத்தகமாக்கியாச்சா ரைட்டு :)\\
பப்பு தப்பு பண்ணலை. ஆந்தைக்கு மண்டைல ஒண்ணும் இல்லைன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு :)
ஆந்தை, தொட்டில் குழந்தை, தீபம், நூல் கோத்துப் புத்தகம்!!
Pappu truly brilliant!
பப்பு புத்தகம் எழுத ஆரம்பிச்சாச்சா?
என்னக்கும் ஒன்னும் புரியாம பின்னூட்டம் வந்தேன். யப்பா! ;-)
தி ரைட் ஆன்சர் இஸ் 'ஆர்ட் பை பப்பு' போட மறந்துட்டாங்க. பப்பு டே, சரியா?
Post a Comment